யானைகளுக்கும் பெயர் உண்டு! இந்துக்கள் கண்டுபிடிப்பை உலகம் ஏற்றது! (Post No.13,338)

Sri Sathya Saibaba with SaiGita.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,338

Date uploaded in London – 14 JUNE 2024                                    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

யானைகள் பற்றி இந்து மத புராணங்கள் என்ன சொல்லிற்றோ பஞ்ச தந்திரக் கதைகள்  என்ன சொல்லிற்றோ கஜேந்திர மோட்சக் கதை என்ன சொல்லிற்றோ  அதை இப்போது விஞ்ஞானிகள் சொல்லி ஏதோ புதிதாக கண்டுபிடித்ததாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் . எல்லா பத்திரிகைகளும் இதைச் சிறப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன

சங்கத் தமிழ்  நூல்களும் அதற்கு முன்னதாக சம்ஸ்க்ருத நூல்களும் பிராணிகள் கனவு காண்பதை பாடல்களில் செப்பின. வெள்ளைக்காரர்கள் அண்மைக்காலத்தில் இதை பெரிய ஆராய்ச்சியாக வெளியிட்டனர் .

விலங்குகளும் பறவைகளும் கூடு கட்டுவது முதல் உணவுப் பண்டங்களைத் தேடுவது வரை பல கருவிகளை பயன்படுத்துகின்றன என்று நாம் சொன்னதை அண்மைக்காலத்தில்தான் மேலை நாட்டு அறிவியல் சஞ்சிகைகள் வெளியிட்டன .

சந்திரனும் தாவரங்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று இந்துக்கள் சொன்னதை இதுவரை அவர்கள் சொல்லவில்லை. கொஞ்ச காலம் கழித்துச் சொல்லுவார்கள்; அப்போது நாம்   மார் தட்டிக்கொள்ளலாம் .

நவ கிரக ஸ்தோத்திரத்தில் நாம் என்னென்னெ கிரகங்களுக்கு என்ன உறவுமுறை என்று சொல்லியுள்ளோம். இன்னும் நாஸா NASA  அதைச் சொல்லவில்லை. பாதியயை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .

ஆல்ப்ரெட் ஐன்ஸ்டைன் சொன்னார்- ஒளியின் வேகம்தான்; அதை பிரபஞ்சத்தில் யாரும் விஞ்ச இயலாது; அப்படிப் போனால் அந்த ராக்கெட்டில் செல்லுவோர் என்றும் 16 வயது மார்கண்டேயனாக இருப்பர் என்று. ஆனால் நாமோ மனோவேகம் அதைவிட வேகமானது அதன் மூலம் வேற்றுலகங்களுக்குச் செல்லலாம் என்று நம்மாழ்வார் , சுந்தரர் , சம்பந்தர் பாடல்கள் மூலமும் , ரேவதி நட்சத்திரக் கதை மூலமும்- அர்ஜுனன் மாதலி தேரில் விண்ணுலகம் சென்று திருப்பிய   மஹாபாரத வன பர்வக் கதை மூலமும் காட்டிவிட்டோம்.

எண்ண அலைகள் மூலம் இயங்கும் அதிவேக புஷ்பக விமானத்தை ராமாயணத்தில் காட்டிவிட்டோம் .

யானைகளும் நம்மைபோல பெயர் சொல்லித்தான் உறவினர்களையும் நண்பர்களையும்  அழைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

யானைகள் தனது சகயானைகளை பெயர்ச்சொல்லி அழைப்பதாக சபத்திரிகைகள் பெரிய செய்திகளை வெளியிட்டு  ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததாகப் பெருமை பேசுகின்றன.

கஜேந்திர மோட்சக்கத்தை 2000 ஆண்டுக்கு முந்தைய புராணக் கதைகளிலும் குப்தர் கால சிற்பங்களிலும் உள்ளன. அதில் கஜேந்திரன் என்ற பெயர்கொண்ட யானை விஷ்ணுவை அழைத்தவுடன் அவர் வந்து அதை முதலையிடமிருந்து காப்பாற்றினார். இதில் யானையின் பெயர் உள்ளது; யானையின் பேச்சு உள்ளது.

அஸ்வத்தாமா

அஸ்வத்தாமா செத்துப்போச்சு என்று தர்மன் சொன்ன பொய் மஹாபாரதப் போரின்  போக்கையே மாற்றி,  கெளவர்களைப் படுதோல்வி அடைய வைத்தது. அஸ்வத்தாமா என்ற பெயர் யானைக்கும் உண்டு; படைத்த தளபதி பிராமணன் துரோணரின் மகனுக்கும் உண்டு.. வழக்கம் போல கிருஷ்ணர் தனது ராஜ தந்திரத்தைப் பயன்படுத்தி அஸ்வத்தாமா யானையைக் கொன்று அதை உரத்த குரலில் அறிவிக்க தருமன் என்னும் யுதிட்டிரனை   வேண்டினார் . ஆனால் அஸ்வத்தாமா எனும் யானை என்பதை தாழ்ந்த குரலில் சொல்லச் சொன்னார் ; இதுதான் ராஜ தந்திரம் ! நமக்கு இந்தக் கதையில் வேண்டிய விஷயம் 5200 ஆண்டுகளுக்கு முன்னரே யானைக்கு பெயர் இருந்தது என்பதாகும்.

நாம்  நம் வீடுகளில் வசிக்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் பெயர் வைத்து அதைச் சொன்னவுடன் ஓடி வருவது போல அந்தக் காலத்தில் யானைகளுக்கும் பெயர் வைத்தனர்..

அது சரி ; மிருகங்கள் தமக்குள் பேசிக்கொண்டனவா? அதற்கு எங்கே சான்று? பஞ்சதந்திரக்கதைகளில் எல்லா மிருகங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவைகளை ஒன்றுக்கொன்று பேசியதை எல்லாக் கதைகளிலும் காணலாம்.

சத்ய சாயிபாபா வளர்த்த சாயிகீதா  என்ற யானையுடன் அவர் பேசிய கதை பாபா வெப்சைட்டில்  உள்ளது

இது தவிர புத்தர் அடக்கிய யானையின் பெயர் நளகிரி; இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம் அஷ்ட திக் கஜங்கள் எனும் எட்டு திசை யானைகளுக்குப் பெயர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்  சங்க இலக்கியத்தில் வரும் காரி, ஓரி என்பன அவர்கள் வளர்த்த குதிரைகளுக்கு உன்டு அலெக்ஸ்சாண்டர் கூட தனது குதிரைக்கு பூ செபலஸ்  என்று பெயர் வைத்தார்.

கிருஷ்ணன் கொன்ற யானையின் பெயர் குவலயாபீடம்;

முருகன் பயணம் செய்யும் யானையின் பெயர் பிணி முகம்

குருவாயூரில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் பெயர் உண்டு.

Karikal Choza

உதயனின் கதையில் வரும் யானை, சந்திர காந்தா என்ற யானை கரிகால் சோழனுக்கு மாலைபோட்டு அரசனாக்கிய யானை , மூர்த்தி நாயனாருக்கு மாலை போட்டு பாண்டிய மாமன்னனாக்கிய யானை எல்லாம்– யானையின் அறிவினைக் காட்டுகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.ஸா . சொன்ன உண்மைக்கதைகள் முதலியனவும் யானை அறிவினை விளக்கும்

ஆகையால் யானைக்குப் பெயர் இருந்தது, அவை பேசியது  முதலிய ஒவ்வொன்றையும் நமது இலக்கியங்கள் முன்னரே செப்பிவிட்டன .

xxxx

இனி பத்திரிகைச்  செய்தியைக் காண்போம்

டால்ஃபின், கிளி போன்றவை சில உயிரினங்கள், சில நேரம் குறும்புத்தனமாக சக டால்ஃபின் அல்லது கிளி எழுப்பும் ஒலியைக் கேட்டு அதேபோல் ஒலியெழுப்புவதுண்டு. அதிலும்கூட சில கிளிகள் நாம் பேசுவதை தெளிவாக திரும்பவும் நம்மிடையே பேசும். ஆனால், இவையாவும் வெறும் ஒலி மட்டுமே. அதாவது, சுயமாக அவை யோசித்து பேசுவதில்லை. மொழியாக அவற்றுக்கு தெரியாது. வெறுமனே நாம் எழுப்பும் ஒலியை, திரும்பவும் அவை நம்மிடமே எழுப்புகின்றன.

ஆனால் இவை போல இல்லாமல், மனிதர்களை போலவே யானைகள் தங்களின் சக யானைகளை தங்கள் மொழியில் பெயர் சொல்லி அழைக்கும்.

இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் “மனிதர்கள் பெயர் வைத்து அழைப்பது போலவே, ஒவ்வொரு யானையும் தனது சக யானைக்கு குறிப்பிட்ட அழைப்பு ஒலியை எழுப்புகின்றன. தங்களுக்கான அழைப்பொலியை தவிர மற்ற யானைகளுக்கான அழைப்பொலியை யானைகள் நிராகரித்து விடுகிறது என்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமீபத்திய ஆய்வு ஒன்று இதை கண்டறிந்துள்ளது.

கென்யாவில் உள்ள அனைத்துலக ஆய்வாளர் குழு ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், அம்போஸ்லி தேசிய பூங்காவைச் சேர்ந்த இரண்டு யானை மந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தி கார்டியன் The Guardian  பத்திரிகையின்படி, 36 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. யானைகளை பொறுத்தவரை பலவிதமான சப்தங்களை அவை எழுப்பக்கூடும். அதிக ஒலியை எழுப்பும் எக்காளங்கள் முதல் தாழ்வான சத்தம் வரை அவற்றில் பலவகைகள் உள்ளன. ஆனால், அனைத்து சத்தங்களும் மனிதர்களின் செவிகளுக்கு கேட்பதில்லை.

1986-2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், யானைகள் எழுப்பும் சிறிய அளவிலான அழைப்பொலிகளின் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். யானைகள் எழுப்பும் பேரொலியானது பிளிறல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் 468 தனிப்பட்ட அழைப்பொலிகள் அடையாளம் காணப்பட்டன. அதில், 101 யானைகள் அத்தகைய அழைப்பொலிகளை எழுப்பியுள்ளன, 117 யானைகள் அந்த அழைப்பொலிக்கு பதிலளித்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் முடிவுகளானது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் இளம் யானைகளை வயதில் முதிர்ந்த யானைகளே பெயர் சொல்லி அழைக்கிறார்களாம். மேலும், இதை பழக இளம் யானைகளுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

Elephants call out to each other using individual names that they invent for their fellow pachyderms, according to a new study.

While dolphins and parrots have been observed addressing each other by mimicking the sound of others from their species, elephants are the first non-human animals known to use names that do not involve imitation, the researchers suggested.

For the new study published on Monday, a team of international researchers used an artificial intelligence algorithm to analyse the calls of two wild herds of African savanna elephants in Kenya.

The research “not only shows that elephants use specific vocalisations for each individual, but that they recognise and react to a call addressed to them while ignoring those addressed to others”, the lead study author, Michael Pardo, said.

“This indicates that elephants can determine whether a call was intended for them just by hearing the call, even when out of its original context,” the behavioural ecologist at Colorado State University said in a statement.

The researchers sifted through elephant “rumbles” recorded at Kenya’s Samburu national reserve and Amboseli national park between 1986 and 2022.

Using a machine-learning algorithm, they identified 469 distinct calls, which included 101 elephants issuing a call and 117 receiving one.

Elephants make a wide range of sounds, from loud trumpeting to rumbles so low they cannot be heard by the human ear.

—subham—

Tags-யானைகள் பெயர்கள், அழைக்கும் , புதிய கண்டுபிடிப்பு , கென்யா, சாயிகீதா

Leave a comment

Leave a comment