பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? – Part 2 (Post No.13,341)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,341

Date uploaded in London – 15 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பால் சாப்பிடுவது நல்லதா கெட்டதா–  நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

எச்சரிக்கை

இந்தக்கட்டுரையின் பிற் பகுதியில்  என் சொந்தக் கதையும் வரும்; தேவையானால், நேரம் இருந்தால் அதைப்படியுங்கள்! 

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ?  மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி! ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் தருகிறேன்.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா.– மஹா கவி பாரதியார்

xxx

மது பர்க்க என்றால் என்ன?

வேகன் Vegan என்பது இந்தியாவில் இல்லாத ஒரு கொள்கை. நம்முடைய ரிஷி முனிவர்கள் அனைவரும் பாலும் தேனும் சாப்பிட்டு வளர்ந்தார்கள். ஆனால் தேனீக்களின் உயிருக்கோ பசுமாட்டின் உயிருக்கோ ஆபத்து வராமல் அதைச் செய்தனர். புது மணத்  தம்பதிகளுக்கும் , வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கும், முனிவர்களின் ஆஸ்ரமத்தில் நுழைவோருக்கும்  மதுபர்க்கம் கொடுப்பது வழக்கம். இதை புராண இதிகாசங்களில் காண்கிறோம். இது ஆரோக்கியமானது; சக்தி கொடுப்பது; விருந்தாளியை இனிமையாக வரவேற்பதை ஒத்தது . இன்று நாம் காப்பி, டீ  கொடுப்பது போன்றது;  மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ, தயிரோ நெய்யோ  கலந்தது .

More About Madhuparka from Wisdomlib.com

Madhuparka (मधुपर्क) refers to “articles of homage” (i.e., “Madhuparka is a mixture of honey, butter, sugar, curd and water offered to a guest when he first comes to the house”)

Madhuparka (मधुपर्क).—An offering of milk and honey;1 Paraśurāma was treated with it by Agastya.2

Madhuparka (मधुपर्क) refers to the “reception of the bride-groom at the bride’s house” and represents one of the various Marriage Rites (saskāra) according to the Āpastamba-gṛhya-sūtra

Madhuparka (मधुपर्क).—

1) ‘a mixture of honey’, a respectful offering made to a guest or to the bridegroom on his arrival at the door of the father of the bride; (its usual ingredients are five:dadhi sarpirjala kaudra sitā caitaiśca pañcabhi | procyate madhuparka); समांसो मधुपर्कः (samāso madhuparka) Uttararāmacarita 4; असिस्वदद्यन्मधु- पर्कमर्पितं स तद् व्यधात्तर्कमुदर्कदर्शिनाम् । यदैष पास्यन्मधु भीमजाधरं मिषेण पुण्याहविधिं तदा कृतम् (asisvadadyanmadhu- parkamarpita sa tad vyadhāttarkamudarkadarśinām | yadaia pāsyanmadhu bhīmajādhara miea puyāhavidhi tadā ktam) N.16.13; Manusmṛti 3.119 et seq.

2) the ceremony of receiving a guest.

 A dish of curds, ghee and honey, to be offered to a respectable guest on his arrival. E. madhu honey, pc to sprinkle, aff. ghañ .

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள்?

வெள்ளைக்காரர்கள் போல பால் வற்றிய பசுக்களை இந்துக்கள் கொல்லவில்லை . அவைகளை கோ சாலையில் வைத்து இறுதிவரை காப்பாற்றினார்கள் .சாப்பாடு போட்ட அம்மாவை கிழவி யானவுடன் கொல்வது போல மேல் நாட்டினர்  வயதான பசுக்களைக் கொல்கிறார்கள். மேல் நாட்டில் பசு மாட்டை ஒன்றரை வருடத்துக்கு ஒரு முறை கர்பமாக்குவது போல இந்துக்கள் செய்யவில்லை. செயற்கைக் கருத்தரிப்பையும் கையாளவில்லை.

வேதத்தில் அடிக்கடி வரும் உவமை வாத்சல்யம். பசுவானது அதன் கன்றிடம் காட்டும் அன்பு வாத்சல்யம். வத்ச என்றால் கன்று. இதிலிருந்துதான் வாக்ஸீன் என்ற மருந்து தொடர்பான சொல்லும் வந்தது .இந்த வாத்சல்யம் என்பதை அன்புக்கு உவமையாக  பிற்கால சம்ஸ்க்ருத நூல்களும் கையாண்டன.

பசுவை தெய்வமாகப் போற்றியது இந்து கலாசாரம். இந்தியாவுக்கு வெளியே பிறந்த மதங்கள், பசுவை விலங்குகளாக கருதியதோடு அல்லாமல் அதை தெரு நாய்களுக்கும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். மாடுகளையும் பன்றிகளையும் கோழிக்குஞ்சுகளையும் அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அனிமல் ரைட்ஸ் Animal Rights  காரர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு டாக்குமென்டரியாகப் போட்டுக் காட்டியவுடன் வெள்ளைக்கார சிறுவர்களும் வெஜிட்டேரியங்களாக மாறி வருகிநின்றனர் .

மேலை நாடுகள் போல மிஷின்களை வைத்து,  ஒட்ட ஓட்ட பால் கறப்பது போல அல்லாமல், இந்துக்கள், கன்றுக்கு பால் கொடுத்த பின்னர்தான் கறந்தனர் அல்லது கன்றுக்குத் தேவையான பாலை  மிச்சம் வைத்தனர். பிறந்த கன்றினை அம்மா பார்க்கும் முன்பே பறித்துச் செல்லும் வழக்கமும் இல்லை.

இந்தியாவில் பசுக்களுக்கு வைக்கோல்/வைக்கல் அல்லது புல்  அகத்திக் கீரை முதலிய வெஜிட்டேரியன் Vegetarian உணவே கொடுக்கப்படுகிறது . மேலை நாடுகளில் எலும்பு பவுடர் Bone Meal) போன்ற அசைவ உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் ‘மேட் கவ் டிசீஸ்’ Mad Cow Disease என்னும் பயங்கர நோய் பரவியவுடன் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்த நோய் ஏற்பட்ட இடங்களில் பல்லாயிரம் பசுக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

என் சொந்தக் கதை  

டின்னர் லேடிகள் ஜாக்கிரதை !Dinner lady advice!)

என்னுடைய ஒரு பேரக்குழந்தைக்கு வயது 6. அவனுடன் பேச்சுக் கொடுத்தபோது ஒரு ரகசியம் வெளியானது.

தாத்தா ! டின்னர் லேடி சொல்றா; சிக்கன் CHICKEN  சாப்பிட்டா  நல்லது; உடம்பில பலம் வரும்னு.

உடனேயே நான் சொன்னேன்; அது தப்பு; மகாபாரதம் முதலிய கதைகளில் பிராமணர் துரோணர் போனர்வர்கள்தான் கமாண்ட ர்களாக இருந்தனர். அவர்கள் சிக்கன் சாப்பிட்டதாக சொல்லவில்லை. யானை, காண்டாமிருகம், குதிரை, காளை மாடு  எல்லாம் மாமிசம் சாப்பிடுவதில்லை . ஆகையால் டின்னர் லேடி சொல்லுவதை நம்பாதே என்றேன்.

(இந்தப் பள்ளிக்கூடத்தின்   தலைமை ஆசிரியை முஸ்லீம்; ஆகையால் முஸ்லீம் டின்னர் லேடிக்களை நியமித்திருக்கிறார் போலும். டினார் லேடி என்போர் பள்ளிக்குழந்தைகள் லன்ச் சாப்பிடும் பொது பகுதி நேர வேலை செய்வோர். இது நான் வசிக்கும் லண்டனில் சென்ற ஆண்டு நடந்தது; மேலை நாடுகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இது போல நிறைய பிரச்சனைகள் வருகின்றன. கல்வி அதிகாரிகளும் முஸ்லீம் பள்ளிகளை எச்சரித்து வருகின்றனர்.

Pupils at six small Muslim private schools in East London are at risk of extremist views and radicalisation, says Ofsted’s chief inspector. Sir Michael Wilshaw said the pupils’ “physical and educational welfare is at serious risk” following a series of emergency inspections.

பேரக் குழந்தையின் உதவி

நான் பிறப்பிலேயே வெஜிட்டேரியன் எங்கள் வீட்டில் கைலி கட்டும் ஆட்கள் கிடையாது; மது பாட்டில்கள் கிடையாது . மாமிசமும் கிடையாது என் குழந்தைகளையும் , பேரக்குழந்தைகளையும் பகுதி நேரமாக கவனித்த (Part Time Babysitters, Child minders ) பேபி சீட்டர்கள் சைல்ட் மைண்டர்கள்: — இரண்டு ஐரிஷ் பெண்மணிகள், 2 பிராமணப் பெண்மணிகள், ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. ஒரு பிராமண பெண்மணியைத் தவிர மற்ற எல்லோரும் நாங்கள் சொன்ன வெஜிட்டேரியன் வரைமுறைகளை தாண்டியதே இல்லை. ஒரு பிராமண பெண்மணி மட்டும், குழந்தைகளுக்கு சிக்கன், முட்டை எல்லாம் கொடுக்கலாமில்லியோ? என் பையன் பெண்ணுக்கு நான் கொடுக்கிறேன் அப்பத்தான் பலம் வரும் என்றாள் ; எனக்கும் என் மனைவிக்கும் தூக்கிவாரிப் போட்டது .

அடக் கடவுளே; எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம்  இல்லை. தயவு செய்து கண்ணில் காட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சாக் குறை யாக வேண்டிக்கொண்டோம் . பின்னர் லண்டனிலேயே மூன்று சிக்கன் பிராமணக் குடும்பங்களை சந்தித்து விட்டோம்!!!. மேலை நாட்டில் இந்துப் பண்பாட்டின்படி குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம்!

எனக்கு அசைவ உணவுகளை பார்க்கக்கூட பிடிக்காது ; இதனால் லண்டன் ரோட்டில் அந்தப்பக்கம் கண் செல்லாமல் நடந்து விடுவேன் . இரவு நேரத்தில் குக்கரி — உணவு சம்பந்தமான டாக்குமெண்டரிகளை (Cookery Documentaries) 6 வயதுப் பேரக்குழந்தையுடன் அமர்ந்து பார்ப்பேன். அப்போது ஒரு வெஜிட்டேரியன் ஐட்டம் வரும்; அடுத்ததாக நான் வெஜிட்டேரியன் டிஷ் வரும். உடனே கண்களை மூடிக்கொண்டு “ஐயோ இது போன வுடன் என்னிடம் சொல்லு” என்று என் பேரனிடம் வேண்டுவேன். அடுத்ததாக திடீரென்று ஒரு அசைவ உணவு வரும். அவன் “தாத்தா கண்ணை மூடு ,கண்ணை மூடு என்று சொல்லிச் சிரிப்பான். அவனுடன் நான் கண்ணா மூச்சி  விளையாட்டு விளையாடுவதாக அவனுக்கு நினைப்பு; எனக்கோ அருவருப்பு. சின்னக் குழந்தைகளுக்கு நம்முடைய பிலாசபி புரியுமா? இருந்த போதிலும் அவன் அவ்வப்போது எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.

என்னுடைய 3 (வேகன் VEGAN) கசப்பான அனுபவங்கள் !

நான் பிரென்ட் வட்டார (லண்டன் வெம்பிளி) சாக்ரே (Standing Advisory Council for Religious Education) அமைப்பில் இந்து மத பிரதிநிதியாக சேவை செயதேன் . ஆண்டு பொதுச் சபைக்கூட்டத்தில் வெஜிட்டேரியன் உணவு வேண்டும் என்ற பாக்ஸை டிக் செய் திருந்தேன். நீ வேகன் தானே என்று சொல்லி ஓரு லேடி ஓர் பாக்சை  கொண்டுவந்து வைத்தாள் ; அதாவது விமானத்தில் டயாபடீஸ் காரர்களுக்கு முதலில் உணவு பரிமாறுவது போல ஸ்பெஷல் மரியாதை. அந்த பாக்ஸில் பழத்துண்டுகளும் இலை தழை களும் மட்டுமே இருந்தன. அந்த லேடிக்கு வெஜிட்டேரியன் –வேகன் வேறுபாடு தெரியவில்லை . நான் நைசாக அதை ஒதுக்கிவிட்டு மெயின் க்யூவில் நின்று எனக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்துக்கொண்டேன்; தப்பித் தவறி விமானத்தில் வேகன் என்று சொல்லிவிடாதீர்கள்; அங்கும் இப்படித்தான் இலைதழைகளைக் கொடுப்பார்கள்.

குடும்பத்துடன் வியன்னா (ஆஸ்திரியா), மாட்ரிட் (ஸ்பெயின்) போயிருந்தோம். பெரிய பச்சை வர்ண  போர்டில் வேகன் ரெஸ்டாரண்ட் என்று எழுதியிருந்தனர் .மகிழ்ச்சி  பொங்க ஒரு பெரிய டேபிளைப் பிடித்து , நாக்கில் உமிழ் நீர் சுரக்க மெனு அட்டையைப் புரட்டினேன். Dad /டாட் என்று சொல்லிக்கொண்டு என் பையன் ஒரு பக்கத்தைக் காட்டினான். உலகிலுள்ள பிரபல நண்டு , மீன் , இறால் வகை உணவுகளைப் பட்டியல் போட்ட  ஐட்டத்தைக் கண்டு திடுக்கிட்டோம். அவர்கள் கணக்கில் வேகன் என்றால் பால் பண்ணை உணவுகள் கூடாது; கடல் உணவுகள் ஓ.கே  ஒரு வழியாக மனத்தைத் தேற்றிக்கொண்டு NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக் , நோ மீட், ஒன்லி  வெஜிட்டேரியன் என்று சொல்லி  வெஜிட்டேரியன் மட்டும் ஆர்டர் செய்தோம்.

இன்னொரு இடத்தில் இரவு 9 மணி ஆகிவிட்டது ; எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. இறுதியாக ஒரு தாய் (தாய் லாந்து) உணவு விடுதியைக் கண்டுபிடித்து வெஜிட்டேரியன் கிடைக்குமா ? என்று கேட்டோம். கிடைக்கும் என்றார்கள்; ஒரே சந்தோஷம். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டோம் என்று மகிழ்ந்தோம். வழக்கம் போல பல்லவி பாடினோம்- NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக், நோ மீட், நோ சிக்கன் என்ற பல்லவி பாடினோம். அந்தபெண்மணி சொன்னாள் :  நாங்கள் பிஷ் ஆயில் போட்டுத்தான் சமைப்போம் என்றாள் . தேங்க்  யூ; குட் நைட் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம் . ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காமல் இருந்ததற்காக கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்லி ரொட்டி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டோம்.   பேரக் குழந்தைகள் அதற்குள்த் தூங்கிவிட்டன.

—subham—

Tags-மதுபர்க்கம், என்றால் என்ன, வேகன், VEGAN எலும்பு பவுடர், பால் சாப்பிடுவது, நல்லதா கெட்டதா, வாத்சல்யம். கசப்பான அனுபவங்கள், டின்னர் லேடிகள், என் சொந்தக் கதை  , milking

Leave a comment

Leave a comment