
Date uploaded in London – 15 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஸர்வ ப்ரஹரணாயுதஹ — நாம எண் 1000
விஷ்ணு ஸஹஸ்ரநாம பராயணம் செய்வோர் ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று இரண்டு முறை சொல்ல வேண்டும்.
எய்துவது எல்லாம் ஆயுதமாய்க் கொண்டவர் .(ஆயுதங்களாக நினைக்கப்படாத அவருக்கு நரசிம்மாவதாரத்தில் ஆயுதமாக மாறியதை நாம் அறிவோம்)சத்திய சங்கல்பரும் சர்வேஸ்வரரும் ஆவதை இது குறிக்கும் என்கிறார் சங்கரர். அவர் காட்டும் மேற்கோள் – ஏஷ ஸர்வேஸ்வரஹ (மாண்டூக்ய உபநிஷத் 6).
பிருஹன் நாரதீய உபநிஷத் 1-51-10 சொல்வதாவது :
ஓம்காரஸ் ச ‘தா -ஸப்தஸ் ச த்வவ் ஏதெள பிரஹ்மணஹ புரா
கண்டம் பித்வா விநிர்யாதெள தஸ்மாத் மங்களிகா உபெள
பொருள்
ஓம் என்ற சப்தமும் அதஹ என்ற சப்தமும் பிரம்மாவின் வாயிலிருந்து வந்தன ஆகையால் அவ்விரண்டும் மங்களம் வாய்ந்தவை.நமஹ என்பது வணங் குதலைக் குறிக்கும்.
ஈஸா வாஸ்ய உபநிஷத் சொல்கிறது: பூயிஸ்ட்டாம் தே நாம உக்திம் விதேம – நாங்கள் மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறோம்.
ஹரியை வணங்குவது எவ்வளவு புனிதமானது என்பதை கீக்கண்ட ஸ்லோகங்களும் விளக்கும்.
தன்யம் தத் ஏவ லக்னம் தன் நக்ஷத்ரம் ததேவ புண்யம் அஹஹ
கரணஸ்ய ச சா சித்திர் யாத்ரா ஹரிஹி ப்ராங் நமஸ் க்ரித்யே
பொருள்
எந்த லக்கினத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., எந்த நட்சத்திரத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., இது மனதிற்கு சந்தோசம் அளிக்கிறது
இதில் வரும் பிராக் என்பது முதல் என்ற பொருள் தரும் . ஆயினும் இறுதியிலும் வணக்கம் சொல்லப்படும்.
வணங்குவதன் மூலம் கிடைக்கும் பலன் பற்றி மஹாபாரதம் சாந்தி பர்வமும் 47-91 கூறுகிறது,
ஏகோபி க்ருஷ்ணஸ்ய க்ருத ப்ரணாமோ
தசாஸ்வமேதா வப்ருதேன துல்யஹ
தசாஸ்வமேதி புணரேதி ஜன்ம
க்ருஷ்ண ப்ரணாமி ந புனர் பவாய
பொருள்
கிருஷ்ணனுக்குப் போடும் ஒரு கும்பிடு பத்து அஸ்வமேதம் செய்து அதன் முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்ததற்குச் சமம். பத்து அஸ்வமேதம் செய்தவனுக்கு மறுபிறப்பு உண்டு. கிருஷ்ணனுக்கு ஒரு நமஸ்காரம் செய்தவனுக்கோ மறு பிறப்பே கிடையாது.
XX
சாந்தி பர்வம் 47-90
அதசீ புஷ்ப -ஸங்காசம் பீதவாஸஸ -மச்யுதம்
ஏ நமச்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம்
ஒரு குறையுமில்லாத கோவிந்தனை வணங்குவோருக்கு பயம் என்பதே இராது. அவர் உடுத்தும் உடை மஞ்சள் ; அவருடைய வண்ணமோ நீலம்.
லோக த்ரயாதிபதீம் அப்ரதிம ப்ரபாவ
மிசத் ப்ராணாம்யசிரஸா ப்ரபவிஷ்ணும் இஸம்
ஜன்மாந்தர- ப்ரளய – கல்ப- ஸஹஸ்ர ஜாத
மாஸு ப்ரசாந்திம் உபயாதி நரஸ்ய பாபம்
பொருள்
மூவுலகங்களுக்கு அதிபதியும் உலகத்தை தோற்றுவித்தவனுமான, எல்லையற்ற சக்தி உடையவனுமான இறைவனை, ஒருவன் கும்பிட்டால் அவன் எண்ணற்ற பிறப்புகளில் செய்த மற்றும் கல்ப காலங்களில் செய்த பாவங்களும் அழிந்துபோகும்
XXXX
தாமோதரஹ – நாம எண் 367
உதார குணமுள்ள மனதைப் பெற்றவன்.நல்ல மனக் கட்டுப்பாடு (தர்மம்) உடையவன் .
பிரம்மாண்ட புராணத்தில் 76-13-14 வரும் ஸ்லோகம்
ததர்ஸ சால்ப தந்தாஸ்யம் , ஸ்மித ஹாஸம் ச பாலகம்
தயோர் மத்யகதம் பத்தம் தாம்னா காதம் ததோதரே
பொருள்
கோகுலவாசிகள் சிரித்த முகமுடைய பாலனைப் பார்த்தனர்.இரண்டு மரங்களுக்கு இடையில் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தான் உதரத்தில் தாம/கயிறு கட்டப்பட்டு இருந்ததால் அவனை தாமோதரன் என்கிறார்கள்.
வியாசர் சொல்கிறார்,
தாமானி லோக நாமானி தானி யஸ்யோதரந்தரே
தேனை தாமோதரோ தேவஹ ஸ்ரீதரஹ ஸ்ரீ ஸமாச்ரிதஹ
பொருள்
தாம என்றால் உலகங்கள் ; யார் வயிற்றில் இந்த உலகங்கள் இயங்குகின்றனவோ அந்த ஆண்டவனுக்கு தாமோதர, ஸ்ரீதர, ஸ்ரீனிவாச என்ற பெயர்களுமுண்டு .
என் கருத்து
புறநானூற்றிலும் சங்க நூல்களிலும் செய்யுள் இயற்றிய புலவர்களில் தாமோதரன், கேசவன் , விஷ்ணு முதலிய பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டன. விஷ்ணு தாசன் என்பதை விண்ணன் தாயன் என்றும் காமக் கண்ணியார் என்பதை காமாட்சி என்றும் எழுதினர். கண்ணதாசன் என்பதை தாயங் கண்ணன் என்று எழுதினார்கள்
XXXX
க்ஷோபணாஹா — நாம எண் 374-
சிருஷ்டி காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் .விஷ்ணு புராணம்1-2-29 சொல்வதாவது:-
பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிஸ்யாத் மேச்சயா ஹரிஹி
க்ஷோபயாமாஸ பகவான் சர்ககாலே வ்யாயாவ்ய யெள
பொருள்
சிருஷ்டி காலத்தில் என்றுமுள்ள ஹரியானவர், மாறக்கூடிய ப்ரக்ருதி மாறாத புருஷன் ஆகியவற்றில் நுழைந்து கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறார்
(இதை மாபெரும் வெடிப்பு- பிக் பேங் — என்று நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்)
Xxxxx
ஹவிர் ஹரிஹி — நாம எண் 359-
யாகங்களில் ஹவிர் பாகத்தை ஏற்றுக் கொள்கிறவர் ; பகவத் கீதை 9-24:
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||
நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வர்.
புருஷோத்தமனே ஹவிஸ்ஸாகவும் இருப்பதால் ஹவிஹி ; புருஷஸூக்தமும் அபத்னன் புருஷம் பஸூம் – என்கிறது.
மனிதர்களின் பாவத்தையும் பிறவிப்பிணியையும் போக்குவதால் ஹரிஹி அல்லது ஹரி என்றால் நீலவண்ண கண்ணன் என்றும் பொருள்.
இதை ஹரி, ஹவி என்ற இரண்டு சொற்களாகவும் கொள்ளலாம்
மஹாபாரதம் சாந்தி பர்வம்352-3 கூறுவதாவது:
ஹராம் யகஞ் ஸ்மர்த்ரூணாம் ச ஹவிர்பாகம் க்ரதுஷ் வஹம்
வர்ண ஸ் சமே ஹரிர்-வேதி தஸ்மாத் தரிரஹம் ஸ்ம்ருதஹ
பொருள்
என்னை நினைப்போரின் பாவங்களை நான் அழிக்கிறேன் ;நான் யாகத்தில் வரும் ஹவிஸ் என்னும் சோற்றையும் எடுத்துக்கொள்கிறேன் . என்னுடைய வர்ணம் மகிழ்ச்சியூட்டும் நீலம் ஆகும். ஆகையால் என்னை ஹரி என்கிறார்கள் .
XXXX
அதுலஹ — நாம எண் 355-
ஒப்பற்றவர்.
ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸஹ — ச்வேதஸ்வைத்தாரா உபநிஷத் 4-19.
பரமாத்மனுக்கு சமமானவர் எவருமிலர் அவருடைய நாமம் பெருமைமிக்கது.
****
பகவத் கீதை 11-43 சொல்வதாவது,
पितासि लोकस्य चराचरस्य
त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो
लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥११- ४३॥
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |
ந த்வத்ஸமோऽஸ்த்யப்⁴யதி⁴க: குதோऽந்யோ
லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா⁴வ || 11- 43||
சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
xxxx
க்ருஷ்ணஹ — நாம எண் 550
கிருஷ்ணர் எனப்பெயர்கொண்ட வியாசர்
க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
குகோஹ்யன்யஹ புண்டரீகாக்ஷான் மஹாபாரதக்ருத் பவேத் — விஷ்ணு புராணம் 3-4-5
பொருள்
க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர்கொண்ட வியாஸர் நாராயணனே ஆவார் மஹாபாரதம் போன்ற ஒரு நூலை தாமரைக்கு கண்ணன் ஆன கடவுள் தவிர வேறு யார் செய்ய முடியும்?
To be continued……
TAGS-
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 6