Date uploaded in London – 16 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
உலகம் உருண்டை என்ற கருத்து அதர்வண வேதம் முதல் எல்லா தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் பூமியை வருணிக்கும் இடத்தில் காணப்படுகிறது . பூமியைச் சொல்லும்போது கட,,,,,,யோ நிலத்தையோ வட்டம் என்று வருணிப்பதைக் காணலாம். இதை வேத கால மனிதர்களே சொன்னதுதான் அதிசயம். புவியியல் பாடத்துக்கே நாங்கள் படிக்கும் காலத்தில் பூகோளப் பாடம் தான் .கோளம் என்றால் என்ன என்று விளக்கத் தேவை இல்லை .
சிறுவயதில் பூமி உருண்டை வடிவம் என்பதை எப்படி அறிவாய்? என்ற மூன்று மார்க் கேள்விக்கு நாங்கள் எழுதும் பதில்- கடலில் நின்று பார்த்தால் கப்பலின் அடிப்பாகமும் நடுப்பாகுதியும் கொஞ்சசம் கொஞ்சசமாமாக மறையும். பின்னர் தான் கொடி மரம் மறையும்; இத்திலி ருந்து பூமி வட் டமானது என்பதை அறியலாம்.
கிரகண காலத்தை கணக்கிடுவோருக்கும் பூமி உருண்டை வடிவமானது என்று தெரியும் ; அண்டம் என்றால் முட்டை, பிரபஞ்சம் என்று இரு பொருள் இப்போதெல்லாம் விண்வெளியிலிருந்து பார்த்ததால், பெரிய நீல நிறக் கோலிக் குண்டு தான் என்று இப்போது பார்க்க முடிகிறது
இதோ திருவாசகப் பாடல்:–
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்
–திரு அண்டப் பகுதி, திருவாசகம்
இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.
இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.
திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல்கள்
உலகம் உருண்டை –
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே.
(ப. இ.) எண்புலமாகிய எட்டுத் திசைகளிலும் ஆருயிர்கட்கு இன்பம் எய்துதற்பொருட்டு வழங்குவது காற்றெனப்படும். உலகை வட்டமாக ஆடைபோல் சூழ்ந்திருக்கும் கடல் ஈண்டு வட்டத்திரை எனப்பட்டது.. மாநிலம் – பெரிய நிலம். ஆகாயம் – விசும்பு. எனவே, காற்று, நீர், தீ, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதக் கூட்டரவால் ஆயது உயிர் நிலை. இதனைக் காயப்பை என்ப. இவ்வுடல்களைப் படைத்து அருளால் கட்டிப் பிணைப்பவன் சிவபெருமான்.
இருவினையொப்பு உற்ற காலத்து அப் பெரும் கட்டினை அவிழ்த்தருள்பவனும் அவனே. அவன் அருள் வடிவாம் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் என்க.
441 : Life and Death are Acts of God
He is the Wind that Blows in Directions Eight
He is the wavy ocean that girdles the earth,
He is fire, earth and sky;
Know this:
He is the One that binds and unbinds
The body that holds life precious.
(அ. சி.) வட்டத்திரை – கடல்.
xxxx
இந்தப் பாடல் சிறிய வேறுபாடுகளுடன் இரண்டு இடங்ககளில் வருகிறது
522. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.
2068. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2
2068 Speak Truth
He who this sea-girt world created
He knows all;
Men falsehoods many utter,
Let them the Truth speak;
He will make Celestials revere them
–He, that is of the lustrous dark throat.
Or
The Truth of Lord’s Blue-Throat
Ye men!,
Who in this sea-girt globe live
In falsehood and flattery!
Why His throat gleams dark,
He knows who made it so;
When you realize the truth
He will make,
Celestial beings bow to you.
xxxxxx
பூமியில் பெரும்பகுதி கடல் என்பதும் இந்துக்களுக்குத் தெரியும் ; இப்போது புவியியல் புஸ்தககங்களில் 70 சதவிகிதம் கடல் 30 சதவிகித நிலப்பரப்பில்தான் 200க்கும் மேலானநாடுகளள் இருக்கின்றன என்று படிக்கிறோம். தமிழர்களும் சம்ஸ்க்ருத அறிஞர்களும் எப்போதும் பூமியை ஆழி சூழ் உலகு, சமுத்திர வசனே தேவி समुद्रवसने देवि पर्वतस्तनमण्डले ।
विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्वमे ॥
Samudra-Vasane Devi Parvata-Stana-Mannddale |
Vissnnu-Patni Namas-Tubhyam Paada-Sparsham Kssamasva-Me ||
Meaning:
1: (Oh Mother Earth) O Devi, You Who have the Ocean as Your Garments, and Mountains as Your Bosom,
2: O Consort of Lord Vishnu, Salutations to You; Please Forgive my Touch of the Feet (on Earth, which is Your Holy Body).
என்றுதான் பாடுவார்கள். திருமூலரும் இந்த இரண்டு உண்மைகளை பாடல்கள் மூலம் விளம்புகிறார்.
சமுத்திர வசனே தேவி! கடல் ஆடையை உடுத்திய பூமித் தாயே! பர்வதங்களே உன் மார்பகங்கள் . விஷ்ணுவின் துணைவியே! உன் புனித உடல் மீது (நிலம்/ தரை) கால்களை வைத்து எழுந்திருக்கிறேன். மன்னிக்கவும்; உடனக்குநமஸ்காரம் என்று சொல்லித்தான் இந்துக்கள் படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள் . இன்றும் பல லட்சம் ஆர் எஸ் எஸ் காரர்கள் இதைச் சொல்லித்தான் காலையில் பூமியில் காலை வைக்கிறார்கள்
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று, இயம்பினன் அரசன்’ என்றாள்
— இது கைகேயி , ராமபிரானிடம் சொன்னது; கம்பராமாயணப் பாடல்
ஆழி சூழ் உலகம் எல்லாம்== கடல் சூழ்ந்த இந்த நிலப்பரப்பை
ஆகையால் பூமி வட்ட வடிவம், கடல்தான் பெரும் பகுதி என்பன எல்லாம் இந்துக்குழந்தைகள் இளம் வயதிலேயே கற்ற்றுக்கொண்டு விடுகின்றன
—subham—
Tags- திருமூலர், திருமந்திரம் , பூமி வட்டம், கோளம் , கடல் ஆடை , உருண்டை , பெரும்பாகம் , சமுத்திரம்