நாஸா விண்வெளி ஸ்தாபனத்தில் ஸம்ஸ்க்ருதத் துறை (Post No.13,344)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,344

Date uploaded in London – 16 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பெங்களூரு ஜூன் 14, 2024,

கர்நாடக கவர்னர் ஜெலோட்,  பெங்களூருவிலுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சொற்பொழிவு ஆற்றுகையில் அமெரிக்காவிலுள்ள நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அட்மினிஸ்டரேஷன் செர்வீஸ் எனப்படும்  NASA /நாஸா அமைப்பில் சம்ஸ்க்ருத ஆராய்ச்சிக்காகவே தனிப் பிரிவு இருப்பதாக கூறினார் .

கர்நாடக கவர்னர் Thaawarchand Gehlot  கர்நாடக சம்ஸ்க்ருத பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் மேலும் கூறியதாவது,

“மாநில மொழியுடன் ஸம்ஸ்க்ருதத்தையும் படிப்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.சம்ஸ்க்ருத மொழியிலுள்ள ஓலைச்சுவடிகளை ஆராய் வதற்கென்றே அமெரிக்காவில் நாஸா விண்வெளி ஸ்தாபனத்தில் ஒரு பிரிவு துவங்கப்பட்டுள்ளது . சம்ஸ்க்ருத மொழிதான் இந்தியாவின் ஆன்மா.அதுதான் இந்தியாவின் பாரம்பர்யத்தைப் கற்பிக்கும் மொழி. ஸம்ஸ்க்ருதம் மேல் எனக்குள்ள பற்றினால் ராஜ்ய சபையிலும் லோக சபையிலும் நான் மெம்பரானபோது சம்ஸ்க்ருத மொழியிலேயே உறுதி மொழி எடுத்தேன். மேலும் முன் காலத்தில் அறிஞர்கள் அனைவரும் சம்ஸ்க்ருத மொழியிலேயே கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர். விவாதம் நடத்தினார்கள்”.

“மேலை நாடுகள் சம்ஸ்க்ருத மொழியின் சிறப்பினை அறிந்துள்ளன . அமெரிக்காவிலுள்ள ரிக் பிரிக்ஸ் Rick Briggs என்ற விஞ்ஞானி இம்மொழியின் இலக்கணம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். கம்பியூட்டரில் பயன்படுத்தும் கணித மொழிக்காக 60,000 சம்ஸ்க்ருத ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வருகிறார். அமெரிக்கா, ஜெர்மனி போனற நாடுகள் இம்மொழியின் அருமை பெருமைகளை அறிந்துள்ளன ; உத்தரகண்ட் மாநிலத்தில் இது இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் மத்தூரில் இது பேச்சு மொழியாக இருக்கிறது உலகெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களும் இதைக் கற்பிக்கின்றன. சம்ஸ்க்ருத மொழி ஒரு அறிவுக் களஞ்சியம். அதில் எல்லா விஷயங்களும் உள்ளன.”

XXXX

பெங்களூருவிலுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1004 மாணவ மாணவிகள் பல்வேறு பட்டங்களைப்  பெற்றனர். சம்ஸ்க்ருத பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அஹல்யா சர்மா மற்றும் பல சம்ஸ்க்ருத அறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

44 மாணவர்கள் பி எச். டி . பட்டம் பெற்றனர்  90 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.  ஆறு பேருக்கு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

—SUBHAM—

TAGS- NASA , நாஸா , சம்ஸ்க்ருத ஆராய்ச்சி   , தனிப் பிரிவு , கர்நாடக கவர்னர், ரிக் பிரிக்ஸ், Rick Briggs, சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம்

Leave a comment

Leave a comment