ராமாயணத்தில் சாபங்கள் (27) ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது! (Post No.13,343)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.343

Date uploaded in London – 16 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (27)

 ராமாயணத்தில் சாபங்கள் (27) ஶ்ரீ ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது!

ச.நாகராஜன் 

சீதையைத் தேடி ராமரும் லக்ஷ்மணரும் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே சென்றனர். அங்குள்ள மான்களைப் பார்த்து சீதை எங்கே என்று கேட்க அவை ஆகாயத்தைப் பார்த்து தென் திசையை நோக்கின.

இதனால் தென் திசை நோக்கி சீதை சென்றிருக்கிறாள் என்று ஊகித்த ராமர் அந்த திசை வழியே செல்லலானார்.

கோதாவரி நதியிடம் சீதை எங்கே என்று கேட்டார்; பதில் இல்லை.

ராவணனுக்கு பயந்து யாருக்கும் பதிலைச் சொல்ல தைரியம் வரவில்லை.

அங்கு உதிர்ந்து கிடந்த புஷ்பங்களைப் பார்த்த ராமர் தான் சீதைக்குக் கொடுத்த புஷ்பங்கள் போல இவை இருக்கின்றனவே என்று லக்ஷ்மணரிடம் கூறிப் புலம்புகிறார்.

பின்னர் அவர் அங்கிருந்த மலையைப் பார்த்துக் கூறலானார் இப்படி:

ததோ தாசரதி ராம உவாச ச சிலோச்சயம் |

ஆரண்ய காண்டம், 64-ம் ஸர்க்கம், 34-ம் ஸ்லோகம்

தத: – அப்போது

தாசரதி – தசரதரின் குமாரரான

ராம – ராமர்

சிலோச்சயம் – பர்வதத்தைப் பார்த்து

உவாச ச – பேசலானார்

மம பாணாக்னிநிர்தக்தோ பவிஷ்யஸி |

அசேவ்ய: சந்ததம் சைவ நிஸ்த்ருணதுமபல்லவ: ||

ஆரண்ய காண்டம், 64-ம் ஸர்க்கம், 35-ம் ஸ்லோகம்

மம – எனது

பாணாக்னிநி நிர்தக்த: – பாணங்களின் அக்கினியால் எரிந்ததாயும்

நிஸ்திருண தும பல்லவ: ச – புல், மரம், தளிர் எல்லாம் ஒழிந்ததாயும்

சந்ததம் – எக்காலத்திலும்

அசேவ்ய: ஏவ – ஒருவராலும் எட்டிப்பார்க்கப்படாததாகவும்

பஸ்மிபூத: – பஸ்மமாக

பவிஷ்யதி – நீ ஆகப் போகிறாய்

இமாம் வா சரிதம் சாத்ய ஷோஷயிஷ்யாமி லக்ஷ்மண |

யதி நாக்யாதி மே சீதாமத்ய சந்தைரிபானனாம் ||

லக்ஷ்மண – லக்ஷ்மணா!

அத்ய – இப்போது

சந்த்ர நிபானனாம் – சந்திரனை நிகர்த்த முகத்தை உடைய

சீதாம் – சீதையைப் பற்றி’

மே – எனக்கு

ஆக்யாதி ந யதி – தெரிவிக்காத பட்சத்தில்

அத்ய ச – இப்பொழுதே

இமாம் – இந்த

சரிதம் வா – நதியையும்

ஷோஷயிஷ்யாமி – வற்றும்படி செய்கிறேன்

ஆரண்ய காண்டம், 64-ம் ஸர்க்கம், 36-ம் ஸ்லோகம்

இப்படி ராமர் மலையையும் நதியையும் சபித்து விடுவேன் என்று கூறுகிறார். ஆனால் சபிக்கவில்லை. இதை நிபந்தனையுடன் கூடிய சாபம் (Condtional) என்றே சொல்லலாம்.

பின்னர் அங்கு கிடந்த சீதா தேவியின் ஆபரணங்களின் துணுக்குகள்,  இறைந்து கிடந்த புஷ்பங்கள், ரத்தத் துளிகள்  ஆகியவற்றைப் பார்க்கிறார். கோபத்தால் கொதித்த அவரை லக்ஷ்மணர் சமாதானப்படுத்தி கோபத்தை அடக்குமாறு வேண்டுகிறார்.

**

Leave a comment

Leave a comment