
Dr Jyotika Virmani
Date uploaded in London – 17 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Wedding day, from the left: Yogesh, Bhim, Jyotika, Benjamin and Shashank Virmani. Jotika Married Benjamin Alpi.
கடலுக்கு அடியில் மலைகள் உள்ளன, கடலில் நெருப்பு உள்ளது என்று அதர்வண வேதம் முதல் பல முனிவர்களும் புலவர்களும் பாடியது உண்மையே என்று மேலும் மேலும் நிரூபணம் ஆகி வருகிறது உலகம் முழுதும், கடல் அடியில் மலைகள் உள்ளன ;அதன் பெயர் சக்கரவாளம் என்று முனிவர்களும் புலவர்களும் பாடினர் . கடலுக்கு அடியில் நெருப்பு உள்ளது; அதன் பெயர் வடமுகாக்கினி அல்லது படவாக்கினி (குதிரைமுகத் தீ) என்றும் அவர்கள் செப்பினார்கள். இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் இயம்பியது எப்படி என்று எண்ணி வியக்கத் தோன்றுகிறது !
பஞ்சாபிய பெண்மணி டாக்டர் ஜோதிகா விர்மானி தான் கண்டுபிடித்த புதிய கடலடி மலைகள் பற்றிய புதிய செய்திகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாத நியூ சைன்டிஸ்ட்(DR JYOTIKA VIRMANI IN NEW SCIENTIST MAGAZINE ) இதழில் வெளியிட்டிருக்கிறார். அவர் தென் அமெரிக்க கண்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் 4 புதிய கடலடி மலைகளைக் (Sub Marine Mountains) கண்டுபிடித்து இருக்கிறார் .
ஜோதிகா JYOTIKA மான்செஸ்டர் (இங்கிலாந்து) நகரில் குடியேறிய பீம் விர்மானி- யோகேஷ் விர்மானி தம்பதிகளுக்குப் பிறந்து, லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயின்று, அமெரிக்காவில் கடலியல் ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிவருகிறார்.
Four new underwater mountains have been discovered in the high seas off the west coast of South and Central America. “The tallest is over one-and-a-half miles in height, and we didn’t really know it was there,” says Jyotika Virmani at the Schmidt Ocean Institute in California.8 Feb 2024
Data suggests there are between 45,000 and 100,000 underwater mountains still to be found because most of the seafloor that lies beneath the open ocean remains unmapped. “The fact that we don’t have maps of our seafloor is crazy,”

இதில் மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால் இவைகள் உலகம் முழுதும் கடலுக்கு அடியில் உள்ளன; இதை சக்கரவாளம் — அதாவது உலகம் முழுதும் வட்ட வடிவில் இருக்கும் மலை —- என்று இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்க்ருதத்தில் பாடிவிட்டனர். இப்போது ஒரு லட்சம் மலைகள் கடலுக்கு அடியில் இருப்பதாக என்சைக்ளோபீடியாக்கள் பகர்கின்றன. மேலும் அவை எரிமலைக் குழம்புக்களால் உண்டானவை என்றும் கூறுகின்றன ; இதையும் அதர்வண வேதம் சொல்லிவிட்டது . இன்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவிலும் ஐரோப்பாவில் ஐஸ்லாந்து நாட்டிலும் கடலடி எரிமலைகளைக் காணலாம். அவை எப்போதும் தீயைக் கக்கிக் கொண்டு இருக்கின்றன.
இதைப் படிக்கப் படிக்க மனிதர்களுக்கு கடல் பற்றி ஒன்றுமே தெரியாது என்றே சொல்லத் தோன்றும். ஏனெனில் ஒரு லட்சம் மலைகளில் ஒரு சதவிகிதத்தையே ஆராய்ந்துள்ளனர்!
கடலுக்கு அடியிலுள்ள சில மலைகள் இமயமலையை விட உயர்ந்தவை 30,000 அடிகளுக்கு மேல் உயரமுள்ள மலையும் கடலுக்கு அடியில் இருக்கிறது. அதாவது எவரெஸ்ட் சிகரத்தை தோற்கடித்துவிடும்.
கடலடி மலைகளை பல வகைகளாக பிரிக்கின்றனர். சில ஆயிரம் மலைகள் பெரிய தீவு போல சம நிலப்பரப்பைக் கொண்டவை (seamounts) . அதாவது அவை கடலுக்கு மேலே எழும்பினால் மனிதர்கள் வீடுகட்டி, ரோடு போட்டு சுகமாக வாழலாம்

There are more than 14,500 seamounts. In addition to seamounts, there are more than 80,000 small knolls, ridges and hills less than 1,000 m in height in the world’s oceans. Most seamounts are volcanic in origin, and thus tend to be found on oceanic crust near mid-ocean ridges, mantle plumes, and island arcs.
மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால் 200 வகை புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர் ; இவைகளில் மீன்கள், கடல் நண்டுகள் மட்டுமின்றி பவளங்களும் அடங்கும். பவளம் என்னும் பூச்சிகள் கடல் மட்டத்துக்கு அருகில் சூரிய ஒளி ஊடுருவும் அளவுக்கே வளரும் என்று இதுவரை சொல்லி வந்தனர். ஆனால் அதிசயம் என்னவென்றால் 600 மீட்டருக்கு அடியிலும் பவளப் பாறைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் சிலி என்னும் நாடு இருக்கிறது; அந்த நாட்டு கடலியல் விஞ்ஞானிகள் பல புதிய செய்திகளை வெளியிட்டுள்ளனர் .
அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் புதிய மீன், நண்டு வகைகளை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர் .
பூமியின் 70 சதவிகிதக் கடலின் அடிப்பகுதியில் இதுவரை ஒரு சதவிகிதம் மட்டுமே ஆராய்ந்துள்ளனர் புதிய கடலடி கப்பல்கள் கண்டுபிடிப்பதால் இது சாத்தியமாகும். கடலுக்கு அடியில் செல்லச் செல்ல அதிக அழுத்தம் உண்டாவதால் ஏழு மைல் ஆழம் வரை சென்று ஆராய்வது மிகவும் கடினம். பல விஷயங்களை தொலைவிலிருந்து இயக்கும் கருவிகள் ( Remote Sensing ) அல்லது ரோபாட் எனப்படும் இயந்திர மனிதர்களை வைத்தே அறியலாம்.!
VALPARAISO, Chile – An international group of scientists, led by Dr. Javier Sellanes of the Universidad Católica del Norte, may have discovered more than 100 new species living on seamounts off the coast of Chile. The recent Schmidt Ocean Institute expedition resulted in identifying deep-sea corals, glass sponges, sea urchins, amphipods, squat lobsters, and other species likely new to science .
The team explored seamounts along the Nazca and Salas y Gómez Ridge, both inside and outside Chile’s jurisdiction, to collect data that could support the designation of an international high-seas marine protected area. The Salas y Gómez Ridge is a 2,900-kilometer-long underwater mountain chain comprising more than 200 seamounts that stretch from offshore Chile to Rapa Nui, also known as Easter Island.
During the expedition, scientists used an underwater robot, capable of descending to depths of 4,500 meters, to collect data from ten seamounts that will be used to advance Chile’s marine protection efforts.
“Full species identification can take many years, and Dr. Sellanas and his team have an incredible number of samples from this amazingly beautiful and little-known biodiversity hotspot,” said Schmidt Ocean Institute Executive Director Dr. Jyotika Virmani. “
Schmidt Ocean Institute is a partner with the Nippon Foundation – Nekton Ocean Census Program, which has set a target of finding 100,000 new marine species in the next ten years

கடலுக்கு அடியில் மலைகள் இருப்பதை இந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவார்கள்.
மைநாக பர்வதம் கடலுக்குள் சென்ற கதை, கம்ப ராமாயணம் சுந்தர கண்டத்தில் அனுமன் கடல் தாவு படலத்தில் வருகிறது .
அனுமனைத் தடுத்த மைநாக பர்வதம் தனது கதையைச் சொல்கிறது:
4901. ‘வேற்றுப் புலத்தோன் அலன், ஐய!
விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை என்று, அரி, வச்சிரம்
மாண ஓச்ச,
வீற்றுப்பட நூறிய வேலையின்,
வேலை உய்த்துக்
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன்,
அன்பு காந்த. ‘—கம்ப ராமாயணம்
என்னைப் பகைவன்என்று கடியற்க; இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்த காலத்து உன் தந்தையால் கடலுக்கு அடியில் பாதுகாக்கப் பெற்றவன் என்று மைந்நாகமலை கூறியது.

— to be continued
Tags–சக்கரவாளம் ,கடலுக்கு அடியில் மலைகள், புதிய கண்டுபிடிப்பு, ஜோதிகா விர்மானி