கடல் மலைகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முன்னரே அறிவித்தனர் இந்துக்கள்!-Part 2 (Post.13,351)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,351

Date uploaded in London – 18 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நேற்றையகட்டுரையில் உலகம் புகழும் பஞ்சாபிய பெண்மணி டாக்டர் ஜோதிகா விர்மானி கடலுக்கு அடியில் 4 புதிய மலைகலைக் கண்டுபிடித்ததையும் இந்துக்கள் இந்த மலைகள், கடல் தீ பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னதையும் கண்டோம். இதோ மேலும் சில சான்றுகள்:

கடலுக்கு அடியில் மலைகள் இருப்பதை நேஷனல் ஜியாக்ரபிக் மாகசின் National Geographic Magazine போன்ற பத்திரிகைகள் கடந்த 50 ஆண்டுகாலமாகத் தான்  வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மத புராணங்கள் கடலடி மலைகள் பற்றிச்  சொல்லி வருகின்றன.

ராமாயணத்தில் இலங்கை நோக்கிச் சென்ற அனுமனை  மைனாக பர்வதம் தடுத்ததை நாம் அறிவோம். ஒரு காலத்தில் மலைகள் பறந்து கொண்டிருந்ததாகவும் அவைகளின் இறக்கைகளை இந்திரன் வெட்டியபோது பல மலைத்துண்டுகள் கடலில் விழுந்ததாகபும் அகில் ஒன்றுதான் மைநாக பர்வதம் என்றும் சொல்லுவார். அதாவது இது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த புவியியல் நிகழ்ச்சி (Geological Events)! .

பெரிய விண் கல் (Asteroid or Meteor) விழுந்து பூமியின் வெட்பதட்பத்தை மாற்றியதால் டைனோஸரஸ் என்ற ராட்சத மிருகங்கள் அழிந்ததை அறிவோம். அது போல விண் கற்கள் பறந்து வந்ததை இந்திரன் வெட்டியதாக பாமர மக்களுக்கு கதை சொல்ன்னார்கள் . கிரகணம் பற்றித் துல்லியமாக கணக்குப்போட்டு பஞ்சாங்கத்தில் எழுதினாலும் பாமர மக்களுக்கு கதை போல சொல்வதற்காக ராகு–கேது பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் கவ்வுவதே கிரகணம் என்று சொன்னது போல மலைகள் பறந்ததை இந்திரன் வெட்டியயதாகச் சொன்னார்கள்

அது மட்டுமல்ல பூமியைச் சுற்றி எல்லா இடங்களிலும் கடலில் மலை இருப்பதையும் சொல்லி அதற்குச் சக்கரவாளம் என்று பெயரும் சூட்டினர்.  வால்மீகி ராமாயணம் , புராணங்கள், தமிழில் பழமொழி நானூறு நூல்களில் கடலுக்கு அடியிலுள்ள மலைகள் பற்றிப் பாடியுள்ளனர்.

 கம்பனும் பாடியுள்ளளான் .

இந்துக்களின் மகத்தான புவியியல் அறிவுக்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகள் .

கம்பன் சொல்லும் உவமை:

தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து

ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்

நேமி மால் வரைநெருக்குகின்றதே

ஆம் எனல் ஆய கைம்மதிட்குள் ஆயினார்

-கவந்தன் படலம், ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 பொருள்: சக்கரவாளம் என்று பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு கவந்தன் என்னும் ராட்சசனின் கைகள் ராம, லட்சுமண சகோதரர்களைச் சுற்றி வளைத்தது. தேன் போல இனிய மொழி பேசும் சீதையின் பொருட்டு அரக்கர் சேனை வந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தனர்.

  சீதையைத் தேடி வருகின்ற இராமலக்குவரை எதிர்த்து
ஒழிப்பதற்காக அரக்கர்களின் சேனை வந்துவிட்டதாக இராமலக்குவர்
கருதினர். எதிரியைத் தாம் சென்று அடையுமுன் அவனே தன்
படைகளை அனுப்பியிருப்பதாக நினைத்து வீரர் இருவரும்
மகிழ்ந்தனர்.

கம்பனுக்கு முன் தோன்றிய பழமொழி நானூறு என்னும் நூலிலும் இதோ ஒரு உவமை:-

கெடுவலெனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்று நீராழி வரையகத் தீண்டிய

கற்றேயும்தேயாது சொல்

-பழமொழி

பொருள்:-  பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லையாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஆனால் வடுச்சொல் தேயாது. ஆகையால் தான் கெடுவோம் என்று தெரிந்தாலும்,தனக்கு பழி உண்டாகத செயல்களையே செய்தல் வேண்டும்.

NEW CORAL SPECIES DISCOVERED

சக்ரவாள மலைத்தொடர் பற்றிய ஒரு குறிப்பு

சம்ஸ்க்ருதத்தில் சக்ரவாளம் வரும் இடங்களில் எல்லாம் பூமியைச் சுற்றியுள்ள மலைக்  தொடர் என்றும் ஒளியை பிரகாசமான பகுதி ,இருளான பகுதி என்று பிரிக்கும் மலை இது என்றும் சொல்லி நிறுத்தி விடுகின்றனர். நமக்குத் தெரிந்தவரை பூமியினை  வளைக்கும் மலை எதுவும் இல்லை.அக்கா னால் கடலுக்கு அடியில் மலைகளும், மேடுகளும் முகடுகளும்  ஒரு லட்சம் என்ற அளவில் இருக்கின்றன. கட லுக்கு அடியில்  சிறிது தூரம் சென்றால் இருள் சூழ்ந்து விடும். சூரிய ஒளி புகாது. மேலும் அங்கு உலகம் நெடுகிலும் கடலடி மலைகள்  உள்ளன. மேலும் இந்திரன் வெட்டிய பறக்கும் மலைகளுக்கு கடல் அடைக்கலம் கொடுத்தது என்ற புராணக் கதையுடன் இணைத்துப் பார்க்கையில் கடலடி மலைகளேச க்கரவாளம் என்பது எனது துணிபு.

xxxxx

My old Article

பூமிக்குள் நெருப்பு – வேதம் சொல்லும் அதிசய விஞ்ஞானம் (Post No.10,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,547

Date uploaded in London – –    10 JANUARY   2022        

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 8

NEW FISH DISCOVERED

அதர்வண வேதம் (அ .வே.) சொல்லும் அற்புத அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து காண்போம் .

சென்ற கட்டுரையில் ‘முனிவர்களா விஞ்ஞானிகளா ?’ என்ற தலைப்பில் பூமியின் வேகம் பற்றி கண்டோம். இன்று பிரபஞ்சம் முழுதும் உள்ள தீ (fire) பற்றி முனிவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதை ஆராய்வோம்.

பூமிக்கு நடுவில் சுமார் 4000 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்பும் நிக்கலும் கொதித்துக் கொண்டு இருக்கிறது.

சுனாமி TSUNAMI என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்குகிறது. அதாவது கடல் நீரில் தீ மிதந்து வருகிறது.

ஹவாய் (SUBMARINE VOLCANOES IN HAWAI island) முதலிய இடங்களில் கடலுக்கு அடியில் எரிமலைகள் தீயைக் கக்கிய வண்ணம் உள்ளன.

கடலில் தோன்றும் வட முகாக்கினி (Horse shaped Vadamukhagni) , ஆந்திரப் புயலின்போது பிரம்மாண்டமான கடல் அலையில் தோன்றிய தீ (Fire  on top of Giant Waves in 1977 storm), மற்றும் கடலுக்கு அடியில் உள்ள சக்ரவாள மலைகள்  (submarine mountains around the world called Chakravala in Sanskrit) பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே கட்டுரைகளை எழுதியுள்ளேன். புராணம் சொல்லும் விஷயங்களை எப்படித் தமிழர்களும் பாடல்களில் யாத்தனர் என்பதையும் இயம்பினேன்.

தீ கக்கும் எரிமலையே இல்லாத இந்தியாவில் வாழ்ந்த அ .வே. புலவன் பாடிய 19, 20 (HYMN TO EARTH- BHUMI SUKTAM) மந்திரங்களை படியுங்கள்.

மந்திரம் 19 (AV Book 12; Bhumi Suktam; Hymn to Earth)

அக்னிர் பூம்யா மோஷதீஷ்வக்னிமாபோ பிப்ரத்யக்னி ரஸ்மஸு

அக்னிரந்த புருஷேஷு  கோ ஷ்வஸ்வே ஷ்வக்னயஹ —19

பொருள்

பூமிக்குள்தீ இருக்கிறது

தாவரங்களிலும் உளது ,

நீரும் அதை ஏந்திச் செல்கிறது;

கல்லில் தீ உளது .

மனிதர்களின் உடலின் உள்ளே அக்னி உண்டு.

மாடுகளில் தீ, குதிரைகளிலும் தீ இருக்கிறது – 19

XXXXXX

SUB MARINE MOUNTAINS- SURMOUNT

மந்திரம் 20

அக்னிர் திவ ஆ தபத்யக்னேர் தேவஸ் யோர்வ  அந்தரிக்ஷம்

அக்னிம் மதார்ஸ இந்ததே ஹவ்யவாஹம் தூதப்ரியம்  -20

பொருள்

அதே தீதான்  வானத்தில் எரிகிறது

இடைவெளியும் இந்த தெய்வீக அக்னியுடையதே .

மனிதர்கள் அவி கொடுப்பதற்காக தீ வளர்க்கிறார்கள்

உருகிய நெய் விரும்பும் அவி சுமக்கும் தூதன் அவன் (20)

—–subham—-

Tags–சக்கரவாளம் ,கடலுக்கு அடியில் மலைகள், புதிய கண்டுபிடிப்பு,  ஜோதிகா விர்மானி, அதர்வண வேதம்,SURMOUNT

Leave a comment

Leave a comment