விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 7 (Post.13,352)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,352

Date uploaded in London – 18 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART 7  TAMIL

விஷ்ணுஹு — நாம எண் 2

எங்கும் வியாபித்தவர்

அந்தர்பஹிஸ்ச  தத் ஸர்வம் வ்யாப்ய  நாராயண ஸ்திதம்-நாராயண சூக்தம்

விஷ்ணு புராணம் 3-1-4-5 செல்கிறது,

யஸ்மாத் விஷ்டமித்தம் ஸர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மனஹ

த ஸ்மாத் விஷ்ணுரிதி க்யாதோ விசேர் -தாதோ ப்ரவேஸனாத்

பொருள்

பரம்பொருளின் சக்தியானது பிரபஞ்சத்தில் புகுந்துவிட்டது  விஸ் என்ற வேர்ச்சொல்லுக்கு நுழை, புகு என்று  பொருள்.

பகவத் கீதையும் 13-13 ஸர்வதஹ பாணி பாதம் தத் என்று வருணிக்கிறது

ரிக் வேத மந்திரமும் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடுகிறது: துதி பாடுவோரே ! சாசுவதமான, சத்தியமான

பரம்பொருள் பற்றி அறிந்து மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு முடிவு கட்டுங்கள் ; விஷ்ணுவின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

XXXX

வைகுண்டஹ – நாம எண் 405-

சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்சபூதங்களை சிதறிப்போகாமல் ஓன்று சேர்த்துக் கட்டுப்படுத்துபவர்..

மஹாபாராத சாந்தி பர்வத்தில் 362-15 சொல்வதாவது,

மயா  ஸம் ஸ்லேஷி தா பூமி-ரத்பிர்  வ்யோம ச வாயுனா

வாய்ஸ் ச தேஜஸா சார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம. 

பொருள்

நான் பூமியை நீருடன் சேர்த்து வைத்தேன் ஆகாயத்தைக் காற்றுடனும் , காற்றைத் தீயுடனுன் சேர்த்துவைத்தேன். அதனால் வைகுண்ட அந்தஸ்து பெற்றேன்  .

எல்லையற்றவர் எதிர்ப்பற்றவர. என்ற பொருளுமுண்டு.

பக்தர்கள் தம்மை அடைவதற்கு இடையூறு களையெல்லாம் விலக்கி  அவர்களை எளிதில் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுகிறவர்.

XXXX 

இஜ்யஹ — நாம எண் 446-

யாகங்களினால் ஆராதிக்கப்படுபவர்.

ஹரிவம்சம் 3-40-27 சொல்வதாவது –

ஆத்மான-மாத்மனா நித்யம் விஷ்ணுமேவ யஜந்தி தே  

பொருள்

தெய்வங்களையும் பித்ருக்களையும் யாக யக்ஞங்கள் மூலம் போற் றுவோர் விஷ்ணுவையே வழிபடுகின்றனர். அவனே ஆத்மாவில் உறைபவன்.

பகவத் கீதையிலும் 9-24 இது உள்ளது

xxxx

ஸுவ்ரதஹ நாம எண் –455

நாடியவர்களை ரக்ஷிக்கும் சிறந்த விரதமுடையவர்.

வால்மீகி ராமாயணத்தில் 6-18-33 வரும் ஸ்லோகம் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது-

ஸக்ருத் ஏவ ப்ரபன்னாய தவ அஸ்மி கே யாசதே

அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம்  மம

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३

अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

பொருள்

எவன் ஒருவன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று ஒரே ஒரு முறை சொல்லி சரண் அடைந்தாலும் அவனுக்கு நான் எந்த ஆபத்திலிருந்தும் அபயம் /பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய மாற்றமுடியாத உறுதி மொழி.

ராம பிரான் கூறும் இந்த உறுதி மொழி விபீஷண சரணாகதியின் முக்கிய பாடலாக விளங்குகிறது .

இன்னும் ஒரு விளக்கம்-

தனக்கு ஒரு கருமமும்  வேண்டமாயினும் தம்மைப்பார்த்து பிறர் தர்மத்தைக் கடைப்பிடித்து பலன் அடைவதற்காக தருமத்தை விடாமல் பின்பற்றுபவர் .

XXXX

த்ரிவிக்ரமஹ – நாம் எண் 530-

மூன்று அடிகளால் மூன்று உலகங்களையும் வியாபித்தவர்..

வேதம் சொல்கிறது-

த்ரீணி பாதா விசக்ரமே – அவரது பாதங்களால் மூன்று உலகங்களையும் வியாபித்தவர்…

(ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி – ஆண்டாள் திருப்பாவை )

ஹரிவம்சம் சொல்வதாவது-3-88-51

த்ரிரித்யேவத்ரயோ லோகாஹா கீர்த்திகா முனி சத்தமை ஹி

க்ரமதே தாம்ஸ்ரிதா ஸர்வாம்ஸ் த்ரிவிக்ரமோஸி ஜனார்தன

பொருள்

மூன்று என்ற சப்தத்தால் ரிஷிகள் மூன்று உலகங்களை குறிப்பிடுகின்றனர்.இறைவன் அவைகளை  மும்முறை க டந்தான் ; ஆகையால் அவனை த்ரி விக்ரம என்கிறார்கள்

XXXX

சக்ர- கதாதரஹ –நாம  எண் 546-

எவர் ஒருவர் கைகளில் சக்கரத்தையும், கதையையும் வைத்திருக்கிறாரோ அவர்.

மனஸ் தத்துவமாகிய சக்கரத்தையும்,புத்தி தத்துவமாகிய கதையையும் உலகங்களை ரக்ஷிப்பதற்காக தரித்துக் கொண்டிருப்பவர் என்று ஒரு ஸ்லோகம் சொல்கிறது-

மனஸ் தத்வாத்மகம் சக்ரம் புத்தி தத்வாத்மிகாம் கதாம்

தாரயன் லோக ரக்ஷார்த்த- முக்தஸ் சக்ர- கதாதரஹ

XXXX

நக்ஷத்ர நேமிஹி — நாம எண் 440-

நக்ஷத்ர  மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.

இதை விளக்கும் ஸ்லோகம் பின்வருமாறு-

நக்ஷத்ர தாரகைஹி சார்தாம் சந்த்ர சூர்யாதயோ க்ரஹாஹா

வாயுபாஸ- மயை ர் பந்தைர் நிபத்தா  த்ருவ சம்ஞிதே

பொருள் :

வானில் உலவும் சந்திரன், சூரியன் , விண்மீன்கள், ,கிரஹங்கள் முதலியன காற்று என்னும் பிணைப்புகளால் துருவத்துடன் / சிசுமார சக்ரத்துடன் கட் ப்பட்டுள்ளன. .அதை  இயக்குபவர் இறைவனே.

வேதங்களோ சிசுமார சக்ரத்தை விஷ்ணுவின் இருதயம் என்று துதி பாடுகிறது.

–SUBHAM—

 tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்- 

Leave a comment

Leave a comment