காடு வளர்ப்போம் கவின் சோலை அமைப்போம்- திருமூலர் (Post.13,355)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,355

Date uploaded in London – 19 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

காடு வளர்ப்போம் கவின் சோலை அமைப்போம்திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -24

இந்துக்களுக்கு சொல்லப்பட்டுள்ள 32 அறங்களில் ஒன்று தோட்டம்நந்தவனம்சோலைகள் அமைப்பது ஆகும் . சோலை அமைப்பது பற்றி திருமூலர் பாடியுள்ளார். அத்தோடு இந்த பூமியிலுள்ள ஜீ வராசிகளின் எண்ணிக்கை 840 000 என்றும் கூறியுள்ளார். அவருடைய கணக்கு ஏறத்தாழ இன்றைய விஞ் ஞானிகள் கூறுவதற்கு  இணக்கமாக இருக்கிறது

காடு வளர்ப்போம் என்று பாரதியாரும் சோலை வைப்போம் இரு அம்பலவாண தேசிகரும் பாடியதை நாம் அறிவோம் .

இதோ திருமூலர் பாடல்

 பரவப் படுவான் பரமனை ஏத்தார்

இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்2

கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்

நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி4 னீரே.

(ப. இ.) மண்ணவர் விண்ணவர் முத்தேவர் முதலிய யாவர்களாலும் தொழப்படுவான் சிவபெருமான் ஒருவனே. அச் சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியவும் மாட்டார். அற்றாராய் உற்று இறந்தவர்க்கு ஈயின் தலை யளவு சிறுபொருளைக்கூட ஈயவும் செய்யார். நீர்க்குட முதலியவற்றான் நீர் முகந்து எல்லார்க்கும் நல்ல பல பயன் தரும் சோலைகளை வளர்க்கார். அத்தகையோர் பெறும்பயன் யாதெனின் இருளுலகத் துன்பமேயாம். நெஞ்சினீரே நீரும் இவ்வகை நல்லறம் புரியாது நரகத்திடை நிற்றிரோ? நாள் எஞ்சினீரே என்பதற்கு நல்லறம் புரியாது நாளை வீணாளாக்கிச் சாவை நெருங்கினீரே என்க.

End is Nigh; Do not Deny
The Lord adored by all the world, yet they praise not,
To the needy poor, even the smallest bit ye deny,
Nor’ll ye tend the garden e’en with one potful of water;
Will ye for ever stand in Hell? Ye whose end is nigh.

xxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 94

 முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்

     பிள்ளைகள் அருந்தி டும்பால்,

  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்

     பெண்போகம், நாவிதன், வணான்,

மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு

     வாயின்உறை, பிணம்அ டக்கல்,

  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்

     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,

சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்

     செய்தல், முன் னூலின் மனம்,

  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,

     தேவரா லாயம்,அ வுடதம்;

அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்

     அன்னைசெயல்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

32  அறங்கள் அறப்பளீசுர சதகம் 

32 வகை தர்மங்கள்

32 தர்மங்களின் பட்டியலை அறப்பளிச்சுர சதகத்தில்,   ஒரே பாடலில், அம்பலவாணக் கவிராயர்  அழகாகக் கொடுத்துள்ளார்

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் (Choultries; free lodging and boarding) கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு (Free Hostels for students or Food Distribution)  உணவு வசதி அளிப்பது.

3. அறுவகைச் சமயத்தார்க்கும் (food for Mendicants) உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு வைக்கோலும் (fodder for cows) புல்லும் வழங்குவது.

5. சிறைச் சாலையில்(Food for prisoners துன்புறுவோர்க்கு சோறளிப்பது

6. வீடு தேடி வரும் ஆதரவற்ற (Giving alms) ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.

7. தின்பண்டம் (Anna Dhanam) நல்கல்.

8. மகப்பேறு மருத்துவ (Setting up Maternity Homes) மனைகள் அமைத்தல்

9. தாய்மைப் பேறுபெற்ற (Helping pregnant women; pre-natal and post natal care) பெண்கட்கு உதவி செய்வது.

10. குளம் வெட்டுதல் (Excavating Tanks, Lakes for Irrigation)

11. அனாதைப் பிணங்களை (cremating dead bodies of orphans or the poor) அடக்கம் செய்வது.

12. சுண்ணாம்பு tamilandvedas.com, swamiindology.blogspot.com

 (giving lime for betel-nut chewers) அளிப்பது.

13. நோயாளிகட்கு மருந்துகள் (Free distribution of medicines; setting up of hospitals for men and animals) கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் (Providing laundry service) தொழிலாளர் சேவை செய்து கொடுத்தல்

15. நாவிதர் (providing barber shops) சேவை செய்து கொடுத்தல்

16. காது குத்தி (Piercing ear for both boys and girls; also provide them ear studs) காதோலை/தோடு கொடுத்து உதவுவது.

17. மறைமொழி , தர்ம சாத்திரம் (Setting up schools to teach them Vedic Hymns and Morals ) கற்பித்தல்; பிள்ளைகளுக்கு கல்வி சாலைகள் அமைப்பது

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com (helping children to take oil bath).

19. ஆலயம் கட்டல் (Building Temples)

20. பிறர் துன்பம் தீர்ப்பது.(Helping the downtrodden and the bereaved)

21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.(Setting up sheds for water distribution)

22. மடம் கட்டிச் சமய அறிவை வளர்ப்பது (Setting up Mutts for religious teachings).

23. அறைதல் = சாலைகளை அமைத்துக் கொடுப்பது அல்லது  தமுக்கு முதலியன (Communication facilities) மூலம் செய்தி வழங்குவது. 

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது (Creating gardens and parks for general public).

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது (Constructing pillars and water holes for animals; they come there to relieve their itching).

26. விலங்கினங்கட்கு உணவளிப்பது (Giving food to animals and birds; both domestic and wild). tamilandvedas.com, swamiindology.blogspot.com

27. வெற்றிலை பாக்கு (distributing betel-nuts) கொடுத்து உதவுவது.

28. விலை கொடுத்து (saving lives) உயிரைக் காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல். திருமணமாகாத ஏழை களுக்குத் திருமணம் (Helping boys and girls to get married; Free Matrimonial Service) செய்து வைப்பது.

30. குழந்தைகட்குப் (Provision of Free Milk to Children) பால் வழங்குதல்.

31. கண்ணாடி (distributing mirrors for women to help with their look) வழங்குதல்.

32. விலைமாதர் (setting up brothels for the amorous so that common women are not disturbed) சேவை நல்குதல் tamilandvedas.com,

xxxx

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்

    கலைவளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்

    உலகத்தொழிலனைத்தும் உவந்து செய்வோம்

–சுப்பிரமணிய பாரதியார்

xxxx

பூமியில் வாழும் உயிரினங்கள் எத்தனை?

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்

மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்

பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்

கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.

He Pervades All Creation as Life Within

And so,

Through creations four and eighty lakhs of species

He filled as life within;

Then men who in doubt ask: How is it?

Are verily to enveloping darkness condemned.

எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப்படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங்களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனாகின்றான்.

இந்தக் கருத்தும் 32 அறங்கள் பற்றிய கருத்தும்  சம்ஸ்க்ருத நூல்களிலும் உளது

–சுபம்—

Tags- காடு வளர்ப்போம் கவின் சோலை  அமைப்போம்திருமந்திர , ஆராய்ச்சிக் கட்டுரை 24, பூமியில் வாழும், உயிரினங்கள், எத்தனை?

Leave a comment

Leave a comment