ராமாயணத்தில் சாபங்கள் (30) லக்ஷ்மணன் ஹனுமானுக்கு கபந்தன் சாபம் பற்றிக் கூறியது! (Post.13,354)


Picture of Ravana 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.354

Date uploaded in London – 19 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (30)

ராமாயணத்தில் சாபங்கள் (30) லக்ஷ்மணன் ஹனுமானுக்கு கபந்தன் சாபம் பற்றிக் கூறியது!

ச.நாகராஜன்

இது வரை பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று காண்டங்களில் வால்மீகி முனிவர் விவரித்த 29 சாபங்களைப் பற்றிப் பார்த்தோம்.

அடுத்து கிஷ்கிந்தா காண்டத்தில் உள்ள நான்கு சாபங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சீதையைத் தேடி வந்த ராம லக்ஷ்மணரை ஹனுமான் பிராமண வேடம் தரித்து சந்திக்கிறார். சுக்ரீவனைப் பற்றிச் சொல்கிறார்.

ராமர் ஹனுமனின் சொல்லின் ஆற்றலைக் கண்டு வியக்கிறார்.

“மதுரை: வாக்யை: வாக்யஞம்” – இனிய சொல் கொண்டு பேசுவதில் சமர்த்தர் என்று ஹனுமனை ராமர் புகழ்கிறார்.

கம்பன் ‘சொல்லின் செல்வன்’ ஹனுமான் என்று புகழ்வதை இங்கு நினைவு கூரலாம்.

ஹனுமான் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று ராமரைக் கேட்க லக்ஷ்மணர் விடை அளிக்கிறார்.

“தசரத சக்ரவர்த்தியின் புதல்வரான ராமர் இவர். நான் இவரது தம்பி லக்ஷ்மணன். தனியாக இருந்த சமயத்தில் இவரது தர்ம பத்தினியை நினைத்த உருவம் எடுக்க வல்ல அரக்கன் ஒருவன் அபஹரித்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை” என்று கூறிய லக்ஷ்மணன் மேலும் இவ்வாறு கூறுகிறான்

தனுர்நாம திதே: புத்ர: சாபாத் ராக்ஷசதாம் கத: |

ஆக்யாத்ஜஸ்தேன சுக்ரீவ: சமர்தோ வானராதிப: ||

திதே: – திதியின்

புத்ர: – புத்திரனாகிய

தனு: – தனு (கபந்தன்)

நாம- என்ற பெயரைக் கொண்டவன்

சாபாத் – சாபத்தினால்

ராக்ஷசதாம் – குரூரத்தன்மையை

கத: – அடைந்திருந்தான்

தேன – அவனால்

வானராதிப: – வானரத்தலைவரான

சுக்ரீவ: – சுக்ரீவன்

சமர்த: – காரியசித்திக்கும் வேண்டிய குணங்கள் நிறைந்தவராய்

ஆக்யாத: – பின் வருமாறு தெரிவிக்கப்பட்டார்.

ச ஞாஸ்யதி மஹாவீர்யஸ்தவ பார்யாபஹாரிணம் |

ஏவமுக்த்வா தனு: ஸ்வர்க ப்ராஜமானோ கத: சுகம் ||

மஹாவீர்ய: – மகா வீர்யவானான

ச: – அவர்

தவ – உமது

பார்யாபஹாரிணம் – மனைவியைத் திருடியவனை

ஞாஸ்யதி – அறிவார்

தனு: – தனு (கபந்தன்)

ஏவம் – மேற்கண்டவாறு

உக்த்வா – சொல்லி விட்டு

ப்ராஜமான: – தேஜோமயனாய் விளங்கிக்கொண்டு

சுகம் – சுகமாய்

ஸ்வர்கம் – ஸ்வர்க்கத்தை

கத: – அடைந்தான்

-கிஷ்கிந்தா காண்டம் நான்காம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 15 & 16

இப்படிக் கூறிய லக்ஷ்மணன், “எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி சொல்லி விட்டேன். ஶ்ரீ ராமரும் நானும் சுக்ரீவரின் உதவி நாடி வந்துள்ளோம்” என்கிறான்.

கபந்தன் யாரிடம் சாபம் பெற்றான் ஏன் பெற்றான் என்பது இங்கு  கூறப்படவில்லை.

சாபம் பற்றிய விவரத்தை ஆரண்ய காண்டம் 71-ம் ஸர்க்கம் விவரிப்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

கிஷ்கிந்தா காண்டத்தில் சாபத்தைப் பற்றி வரும் முதல் விஷயம் இது.

**

Leave a comment

Leave a comment