
Date uploaded in London – 20 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் புகழ் பெற்று விளங்கிய நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு முஸ்லீம் படை எடுப்பாளர்கள் தீ வைத்து எரித்து அழித்தனர் ; அப்போது அந்த லைப்ரரி/ நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து பல்லாயிரம் ஓலைச்சுவட்டிகளை எரித்துக் கரி யாக்கியது. பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழகம் எரி ந்த இடத்தில் புதிய பல்கலைக் கழகம் உயிர்பெற்று எழுந்து நிற்கிறது பீனிக்ஸ் பறவை போல , சாம்பலிலிருந்து உயிர் பெற்றுவிட்டது. புதிய பல்கலைக் கழகத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி புஸ்தகங்களை எரித்து விடலாம். அறிவினை எரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
உலகின் முதல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான நாளந்தா பல்கலைக்கழகம், பீகாரில் உள்ள ராஜகிருகம் தலைநகர் பாட்னாவுக்கு தென் மேற்கே, 95 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக நாளந்தா நூலகம் உருவாக்கப்படும் என்றும் அதில் மூன்று லட்சம் புஸ்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருக்கும் என்றும் துணை வேந்தர் பேராசிரியர் அபய குமார் சிங் Prof. Abhay Kumar Singh அறிவித்தார். துவக்க விழா நிகழ்ச்சியில் வெளிநாட்டுத் தூ தர்கள் பங்கேற்றனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கல்வி அமைச்சர் முதலியோர் கலந்துகொண்டனர் .
பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பத்ம விபூஷன் மறைந்த பி.வி. தோஷி வடிவமைத்திருக்கிறார். பழங்கால வாஸ்து கொள்கைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடக்கலையை இணைத்து, பசுமையான 100 ஏக்கர் நீர்நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1,900 மாணவர்கள் தங்கக்கூடிய 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வித் தொகுதிகள், இரண்டு நிர்வாகத் தொகுதிகள், 300-க்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய அரங்குகள் மற்றும் 550 மாணவர்கள் தங்கும் விடுதிகள், மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த வசதிகளுடன் கூடிய பிரத்யேக குடியிருப்புப் பகுதிகள் இந்த வளாகத்தில் உள்ளன..
xxxxx
நாளந்தா பல்கலைக் கழகம் அழிந்தது எப்படி?

இந்துக்களின் பொற்கால ஆட்சியை அமைத்தவர்கள் குப்தர்கள். சம் ஸ்க்ருத மொழிக்கு பேராதரவு கொடுத்தவர்கள் அவர்களது காலத்தில் பெளத்தர்களுக்காக இந்து மத ஆட்சியினர் அமைத்துக் கொடுத்த பல்கலைக் கலக்கம் இது .இதன் துணை வேந்தர் பதவி வகித்த தத்துவ வித்தகர் நாகார்ஜுனா பெரிய மந்திர வாதி; உலக ரசாயன பாடத்தின் மூலகர்த்தா; இரும்பைத் தங்கமாக்கி ஏழை எளிய மக்களை வாழ வைத்தவர். அவர் எழுதிய புஸ்தகங்களை அங்கு படிக்க வந்த சீன அறிஞர்கள் மொழி பெயர்த்து எடுத்துச் சென்றனர். முஸ்லீம்கள் அழித்த புஸ்தகங்களை நாம் இப்போது சீன மொழியிலிருந்து மீண்டும் இந்திய மொழிகளுக்கு கொண்டு வருகிறோம் .
(இந்த பிளாக்கில் அவர் வரலாறும் அவருடைய யோக ரத்ன மாலா என்ற மந்திரவாத நூலும் வெளியாகியுள்ளன.)
புத்த மத, இந்து மத விஷயங்களைப் பயின்றவர்கள் இந்தப் பலகலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பினர் கி.பி 450 முதல் கி.பி.1200 வரை கொடிகட்டிப் பறந்த இடம் இது
நமது காலத்திலேயே ஆப்கானிஸ்தானில் பாமியன் என்னும் இடத்திலிருந்த உலகபுகழ் பெற்ற அதி பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை வெடிவைத்ததுத் தகர்த்த பயங்கர வாதிகள் நாளந்தாவை நாசமாக்கியத்தில் வியப்பில்லை .
குஜராத்தில் சோமநாத புரம் சிவன் கோவிலைக் கொள்ளையடித்தான் கஜினி முகமது . தமிழ் நாட்டிலுள்ள அத்தனை கோவில்களையும் சேதப்படுத்தி , டன் கணக்கில் தங்கத்தைக் கொண்டு சென்றான் மாலிக்கா பூர். பாபர் முதல் அவங்க சீப் வரை காசி, மதுரா, அயோத்தியா முதலிய இடங்களில் இந்துக்களை அவமானப்படுத்த கோவில் மீது மசூதி கட்டினார்கள் பயங்கர வாதிகள்.
இரண்டாம் சந்திரகுப்தரின் மகனான, குமார குப்தரால், கிபி 5 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை “மகாவிஹாரா” என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கின்றனர்.
சிறந்த கல்வி நிறுவனமாக மட்டுமில்லாமல் சிறந்த புத்த மடாலயமாகவும் நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்திருக்கிறது. உலகின் முதல் தங்கிப் படிக்கும் பல்கலைக்கழகமாகவும், உலகின் முதல் சர்வதேச பல்கலைக்கழகமாகவும் நாளந்தா விளங்கியது.

கி.பி 1193ம் ஆண்டில் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் முதன்மை படைத் தலைவரான பக்தியார் கில்ஜியால் நாளந்தா
பல்கலைக்கழகம் எரித்து அழிக்கப் பட்டது.. மாற்று மத புஸ்தகங்களை வெறுத்த , மத வெறியர்களில் அவனும் ஒருவன்.
இந்து மத வேதத்தின் அனைத்து அறிவையும் அழிக்கவும், இந்து மற்றும் புத்த மதத்தை அழித்து இஸ்லாத்தை நிலைநாட்டவும் நாளந்தாவை அழித்த கில்ஜி, சுமார் 90 லட்சம் ஓலைசுவடிகள் மற்றும் கைப்பிரதிகள் இருந்த நாளந்தாவின் நூலகங்களுக்குத் தீ வைத்தான்.. மேலும் அறிஞர்களிடமிருந்து பண்டைய வேத அறிவு பிறருக்கு செல்வதை விரும்பாத கில்ஜி நாளந்தாவில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான துறவிகளையும் அறிஞர்களையும் கொன்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங், இந்தப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து பாடம் கற்றுள்ளார். தனது பயணக் குறிப்புக்களில், யுவான் சுவாங், நாளந்தாவில் 10,000-க்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் 2000-க்கும் ஆசிரியர்கள் இருந்ததாகவும்,சீனா,திபெத்,கொரியா, இந்தோனேசியா, பாரசீகம் (இப்போது ஈரான் என்று பெயர் ), துருக்கி மத்திய ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், தங்கியிருந்து கல்வி கற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு தனித்தனி பாட சாலை வளாகங்கள், 10 கோவில்கள், பல தியான மண்டபங்கள், வெவ்வேறு பாடங்களுக்கான தனித் தனி வகுப்பறைகள், 3 ஒன்பது அடுக்கு நூலகங்கள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில், பல லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் இருந்தன.
ஹர்ஷவர்தனா, நாகார்ஜுனா, வசுபந்து போன்ற சிறந்த அறிஞர்களை உருவாக்கிய இந்த நாளந்தா பல்கலைக்கழகம் 800 வருட பாரம்பரியத்தின் அடையாளமாக இன்றும் விளங்குகிறது.

1915ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியின் போது 11 மடாலயங்களும்,6 செங்கல் கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பழங்கால நாணயங்கள்,செப்பேடுகள்,,சிற்பங்கள் போன்ற பல்வேறு அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. எனவே 1980 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக நாளந்தா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது.
நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுமலர்ச்சி 2006ம் ஆண்டில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முயற்சியில் துவங்கியது , பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரையின் பேரில், 2010 ஆம் ஆண்டு, நாளந்தா பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நாளந்தாவின் புதிய வளாகத்திற்கு 455 ஏக்கர் நிலத்தை பீகார் மாநில அரசு ஒதுக்கியது . புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவின் முதல் தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இருந்தார்.
—subham—
Tags நாளந்தா, பல்கலைக் கழகம் , முஸ்லீம்கள் தாக்குதல் , நூலகம் எரிப்பு, பக்தியார் கில்ஜி, மோடியின் பொன்மொழி, நாகார்ஜுனா , யுவாங் சுவாங்
Hariharan
/ June 20, 2024The approaching Railway Station or Airport has to be renamed after NALANDA University.