ராமாயணத்தில் சாபங்கள் (31) மதங்க முனிவர் வாலியை சபித்தது! (Post.13,360)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.360

Date uploaded in London – 20 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (31) 

ராமாயணத்தில் சாபங்கள் (31) மதங்க முனிவர் வாலியை சபித்தது! 

ச.நாகராஜன்

கிஷ்கிந்தா காண்டத்தில் பதினோராவது ஸர்க்கமாக அமைவது சுக்ரீவன் வாலியின் பராக்ரமத்தை வர்ணிப்பதோடு அவன் சாபம் பெற்றதைக் கூறும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமரை வணங்கிய சுக்ரீவன் வாலியின் பராக்ரமத்தைப் பற்றி விவரிக்கிறான்.

துந்துபி என்ற ஒரு அசுரன் போரில் விருப்பம் உடையவனாகி சமுத்திரராஜனிடம் சென்று அவனைப் போருக்கு அழைத்தான். தன்னால் போர் செய்ய இயலாது என்று கூறிய சமுத்திரராஜன் இமயமலையுடன் போர் செய்யலாம் என்று யோசனை கூறினான். துந்துபி இமயமலையைப் போருக்கு அழைக்க இமயமலையோ தன்னால் போர் புரிய முடியாது என்று கூறி, வாலியுடன் போர் புரியுமாறு ஆலோசனை கூறியது.

உடனே அவன் கிஷ்கிந்தை சென்று எருமை வடிவம் எடுத்து வாலியைப் போருக்கு அழைத்தான்.

வெகு உக்கிரமாக போர் நடந்தது.

துந்துபியைத் தரையில் அடித்த வாலி அவனை அப்படியே பிசைந்து  உருட்டி ஒரே மூச்சில் ஒரு யோஜனை தூரத்தில் ( (8 மைல்) கடாசி எறிந்தான்.

துந்துபியின் வாயிலிருந்து ரத்தத் துளிகள் காற்றினால் அடிக்கப்பட்டு அங்கிருந்த மதங்க முனிவரது ஆசிரம பிரதேசத்தில் தெறித்தன.

இதைப் பார்த்த மதங்க முனிவர் வெகுண்டார்.

யார் இப்படிச் செய்தது என்று எண்ணிய அவர் மலை போல விழுந்து கிடக்கும் எருமையைக் கண்டார்.

தனது தவ மகிமையால் இப்படிச் செய்தது வாலியே என்பதை அவர் அறிந்தார்.

கோபம் கொண்ட அவர் வாலியை உத்தேசித்து பின்வரும் சாபத்தை இட்டார்.

இஹ தேனாப்ரவேஷ்டவ்யம் ப்ரவிஷ்டஸ்ய வதோ பவேத்!

வனம் மத்சம்ஸ்ரயம் யேன தூஷிதம் ருதிரஸ்ரவை |\

சம்பக்னா: பாதபாஸ்சேமே க்ஷிபதேஹாசுரீம் தனும் |

யேன – எவனால்

மத்சம்ஸ்ரயம் – நான் வசிக்கும்

வனம் – வனமானது

ருதிரஸ்ரவை: – ரத்தப் பிரவாகத்தால்

தூஷிதம் – கெடுக்கப்பட்டதோ

ஆசுரீ – அசுரனுடைய

தனே – உடலை

இஹ – இவ்விடத்தில்

க்ஷிபதா ச – எறிந்த எவனால்

இமே – இந்த

பாதபா: – விருக்ஷங்கள்

சம்பக்னா: – முறிக்கப்பட்டனவோ

தேன – அவனால்

இஹ – இவ்விடம்

அப்ரவேஷ்டவ்யம்- புகத் தக்கதன்று

ப்ரவிஷ்டஸ்ய – மீறிப் புகுந்தால் அவனுக்கு

வத: – மரணம்

பவேத் – உண்டாகக் கடவது

சமந்தாத்யோஜனம் பூர்ணமாஸ்ரமம் மாமகம் யதி |

ஆக்ரமிஷ்யதி துர்வித்திர்வ்யக்தம் ஸ ந பவிஷ்யதி ||

மாமகம் – எனது

ஆஸ்ரமம் – ஆஸ்ரமத்தை

சமந்தாத் – நாற்புறத்திலும்

பூர்ணம் – பூர்ணமாய்

யோஜனம் – எட்டு மைல் தூரம் வரையில்

துர்புத்தி: – துஷ்டனாகிய

ஸ: – அவன்

ஆக்ரமிஷ்யதி யதி – நுழைந்தான் என்றால்

வ்யக்தம் – நிச்சயமாய்

பவிஷ்யதி ந – அவன் உயிரிழக்கக்கடவன்

யே சாஸ்ய சுசிவா: கேசித் சம்ஸ்ரிதா மாமகம்வனம் |

ந ச த்ஜஒரொஜ வஸ்தவ்யம் ச்ருத்வா யாந்து யதாசுகம் |\

மாமகம் – எனது

வனம் – வனத்தை

சம்ஸ்ரிதா: – அடைந்தவர்களான

அஸ்ய – இவனது

சஸிவா: – தோழர்கள்

யே கேசித் – எவர்களோ

தை: ச – அவர்களாலும்

இஹ – இவ்விடத்தில்

வஸ்தவ்யம் ந – வசிக்கப்படக் கூடாது

ச்ருத்வா – விஷயத்தை அறிந்து கொண்டு

யதாசுகம் – இஷ்டப்படி

யாந்து – வெ:ளியில் போய்விடக் கடவீர்கள்

யதி தேபீஹ திஷ்டந்தி சபிஷ்யே தானபி த்ருவம் |

வனேஸ்மின்மாமகே நித்யம் புத்ரவத்பரிரக்ஷிதே ||

பத்ராங்குர்விநாஷாய பலமூலாபவாய ச |\

நித்யம் – எப்போதும்

புத்ரவத் – குழந்தையைப் போல்

பரிரக்ஷிதே – பரிபாலித்து வரப்பட்ட

மாமகே – எனது

அஸ்மின் – இந்த

வனே – வனத்தில்

பத்ராங்குர் விநாஷாய – இலை, தளிர் ஆகியவற்றின் அழிவின் ஹேதுவாயும்

பல மூலா பவாய ச – பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றின் அழிவின் ஹேதுவாயும்

தே அபி – அவர்கள் இன்னும்

இஹ – இவ்விடத்திலேயே

திஷ்டந்தி யதி – இருக்கின்றார்கள் என்றால்

தான் அபி – அவர்களையும்

க்ருவம் – நிச்சயமாய்

சபிஷ்யே – பின்வருமாறு சபித்து விடுவேன்

திவசஸ்சாத்ய மர்யாதா யம் த் ரஷ்டா வானரம் |

பஹுவர்ஷ ஸஹஸ்ராணி ஸ வை ஷைலோ பவிஷ்யதி |\

அத – இப்போது

மர்யாதா – நடைபெறும் நடவடிக்கை

திவஸ: ச – இன்று மட்டும் தான்

ஸ்வ: – நாளை

யம் – எந்த

வானரம் – குரங்கை

த்ரஷ்டா அஸி – நான் பார்ப்பேனோ

ஸ: – அவன்

பஹுவர்ஷ ஸஹஸ்ராணி –  அநேக ஆயிரம் வருஷம்

ஷைல: வை- கல் மயமாக

பவிஷ்யதி – ஆகக் கடவன்!

கிஷ்கிந்தா காண்டம் 11-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 54 முதல் 58 முடிய)

இந்த சாபத்தைக் கேட்ட வானரர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டனர்.  வாலி நடந்த விஷயத்தை அவர்கள் மூலம் அறிந்து கொண்டு முனிவரைப் பார்த்து வணங்கினான்.

அவரோ அவனைச் சிறிதும் கவனியாது தனது ஆஸ்ரமத்திற்குள் புகுந்து விட்டார்.

அன்றிலிருந்து மதங்க ஆசிரமத்தின் பக்கமே வாலி செல்வதில்லை.

சுக்ரீவன் வாயிலாக இந்த சாப வரலாற்றை ராமர் கேட்டறிந்தார்.

**

Leave a comment

Leave a comment