7 கடல்,  8 மலை, 9 கண்டம் பற்றி திருமூலர் பாடல்கள் (Post No.13,365)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,365

Date uploaded in London – 21 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -25

ஏழு கடல்,  எட்டு மலை, 

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் நிறைய பூகோள விஷயங்களை தத்துவ உபதேசத்திற்குப் பயன்படுத்துகிறார். யோகா செய்தி களைத் தருவதற்கு அவர் பின்பற்றும் இந்த உத்தியால் அந்தக் காலத்தில் தமிழில் எந்த அறிவுக்கு புராணத்தில் சொல்லப்பட்ட பூகோளம் பரவி இருந்தது என்பது தெரிகிறது . திருமூலர் சொன்ன ஏழு மாகடல், எட்டு குலவரை/ மலைகள் மற்றும் ஒன்பது கண்டங்கள் இன்றைய அட்லாஸ் வரைபடத்தில்  காணும் இயற்கை வரை படங்களுடன் ஒப்பிட்டால் ஏறத்தாழ சரியாகவே இருக்கிறது. நாம் பெரிய மலைகள் , பெரிய கடல்கள், பெரிய கண்டங்கள் என்று எடுத்துக்கொண் டால் சரியாகவே இருக்கிறது ஆனால் அவர் புவியியலைப் போதிக்க இதைச் சொல்லவில்லை. இவை மூலம் யோக, ஞான கல்வியையே போதிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏழு கடல்,  எட்டு மலை, ஒன்பது கண்டம் பற்றி திருமூலர் பாடல்கள்

2707. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

யாழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே. 42

2907: Reach the Holy Temple of Sahasrathala

Seven the circling Seas, eight the Mountain ranges

In the depths of Space is Fire, Rain and Wind

And the Land expansive;

Visioning it, if you dwell in it

That verily a Holy Temple is.

பொருள்

இந்தப் பூவுலகில் ஏழு கடல்களும் எட்டு  புனித மலைகளும் உள . நமது உடலும் உலகமும் நிலம், நீர், நெருப்பு, காற்று , வானம் ஆகியவற்றால் ஆனதை உணர்ந்து செயல்படவேண்டும். அவை சிவன் உறையும் திருக்கோயில்கள். . அதை உணர்ந்து பயன்பெறுக

திருக்குறள் 27 பாடலிலும் இக்கருத்து உளது

குறள் 27:

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

பொருள்

பரிமேலழகர் உரை

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை – சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு – ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்

அதாவது

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

xxxxxx

423. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்

உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்

குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்

விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே- திருமந்திரம்

பொருள்

பிரளயம் வந்தவுடன் அழிவுக்காலத்தில் உலகிலுள்ள ஏழு  கடல்களும் எட்டு மலைகளும் அழிகின்றன .அப்போது சிவன் எல்லோருக்கும் அருள் புரிகிறான்; இதை அறிந்தவர்களுக்கு இது வியப்பை உண்டாக்காது. பதஞ்செய்யும் பார் என்று திருமூலர் செப்பியதைக் கவனிக்கவும்; இங்கு பிறப்போர் பக்குவம் பெற்று  உய்வு பெறுவதற்கு உதவும்  உலகு இது.

423: The Fire Spreads*

The earth on which we tread

The snow-clad mountains eight.

The seven seas whose ebbing tides roar,

Over all these and else

The Fire that resides in Muladhara spreads;

And the spreading conflagration turned

Earth and sky seem alike;

–This the truth, imagination none.

xxxx

9 கண்டம்


1425. கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்

கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 3

பொருள்

நாவலந்தீவு முதலிய ஒன்பது தீவுகளையும் வலம் வருவோர் சிவா பெருமானின் அருவம் நான்கு  ,உருவம் நான்கு  , அருஉருவம் ஒன்று ஆகிய ஒன்பது திருமேனிகளையும் கண்டவராவார். அவர்களே கடுஞ்சுத்த சைவர்..

1425 Pure Suddha Saivam (Jnana)

They who transcended the nine spiritual Centers

Verily saw God,

Whom the nine continents seek;

They saw the Continent beyond all continents

They, indeed, are the Pure Suddha Saivas.

xxxx

3014. ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின

ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி

தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்

வாச மலர்போல் மருவி நின் றானே. 33

பொருள்

சிவபெருமான் எட்டுத் திசைகளிலும் உள்ளான். அவனது நறுமணம் / பெருமை ஒன்பது கண்டங்களிலும் வீசுகிறது. எல்லா  நாதங்களும் அவனிடமிருந்தே  வருகிறது (சிவனின் உடுக்கை ஒலியிலிருந்தே தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தோன்றின என்று சிவஞான முனிவர், பரஞ்சோதி முனிவர் கூறுவர் . பாணிணி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சிவன் உடுக்கை ஒலியின் மூலம் கிடைத்த எழுத்துக்களை மஹேஸ்வர சூத்ராணி என்று எழுதி வைத்துள்ளார் )

3014: He Spreads Like Flower’s Fragrance

The Lord is the Light that moves directions eight;

He is the source of all Sound;

He is the eternal;

As on one land,

The nine universes He pervaded;

Unto the flower’s fragrance,

He spread everywhere.

xxx

கடலும் மலையும் அவனே

தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்

தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்

தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்

தானே உலகில் தலைவனு மாமே.- திருமந்திரம்

412: He is the Totality

Himself as space and celstials stands,

Himself as body, life and matter stands,

Himself as sea, hill and dale stands,

Himself–all worlds’ Lord Supreme.

கடலும் மலையும் அவனே ;விண்வெளியும் அதற்கப்பாலும் வியாபித்து நிற்கிறான் சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.

XXXX

பிரளய காலம்

362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்

திருவருங் கோவென் றிகல இறைவன்

ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி

அருவரை யாய்நின் றருள் புரிந் தானே- திருமந்திரம்

பொருள்

பிரளய காலம் வந்தது; கடல் பொங்கிற்று; மலைகள் மூழ்கின. பிரம்மாவும் திருமாலால் திகைத்து நின்றனர் ; சிவபெருமான் பேரொளிப் பிழம்பாகத் தோன்றி அஞ்சற் க  என்று சொல்லி அருள் புரிந்தனன்

362: The Lord Blesses the Two Who for Primacy Contended

When the swelling deluge at the end of Time

Swallowed the black mountain tops

Hari and Brahma fought

For primacy contending;

And then from amidst the floods arose

As an immeasurable mountain of Light

The One Lord, manifesting the Truth,

And thus blessing both.

xxxx

கடல் சூழ்ந்த உலகு என்ற செய்தியை அளிக்கும் பாடல்கள் – 45, 1013, 1338, 1992, 2248, 2988, (சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திர நூலின் கண்ட எண்கள் )

-SUBHAM—

TAGS–ஏழு கடல்,  எட்டு மலை, ஒன்பது கண்டம் பற்றி திருமூலர் பாடல்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -25

Leave a comment

Leave a comment