திருமூலர் தரும் நோய்கள் பட்டியல்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -26 (Post.13,368)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,368

Date uploaded in London – 22 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரத்தில் திருமூலர் பேசாத பொருளே இல்லை. நீண்ட நாள் வாழும் ரகசியங்களையும் மனிதனை  வருத்ததும் நோய்களையும் பட்டியலிடுகிறார் . மாணிக்கவாசகர் திருவாசகத்தில் செப்பியது போல கரு முதல் குழந்தை பிறப்பு வரை பாடுகிறார். ஆண் குழந்தை பெறுவது எப்படி என்று பகர்கிறார் ; மனித மூத்திரத்தைக் குடித்து ஆரோக்கியமாக வாழலாம் என்று புகல்கிறார் . ; உடலியல் கூறுகளை எம் பி பி எஸ் டாக்டர் படிப்புக்கு  படிப்போருக்கு எடுத்து இயம்புகிறார். உண்டி சுருக்கு என்று ஆலோசனை வழங்குகிறார் இது நீண்ட ஒரு பட்டியல் . ஒவ்வொன்றாகக்  காண்போம் 

xxxx

முன்னர் எழுதிய நோய்கள் பற்றிய கட்டுரைகள்

1.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை! Get Out!! (Post No.3276)

2.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

3.தமிழ் இலக்கியத்தில் டாக்டர்! சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!! (Post No.3540)

XXXX

இதோ  திருமந்திர மருத்துவ விஷயங்கள் ; ஓவ்வொரு  பாடலையும் தனித் தமிழில் விளக்குவேன்

DISEASES -120,635/6 நோய்கள்

ANATOMY,  HEART ATTACK 190, 192 உடற்கூறு,  இருதய நோய்

BRAIN, PREGNANCY-207 கருவுறுதல்

BACTERIA – 239 கிருமிகள்

CALORIES- 766 கலோரி

URINE THERAPY- 825 YO 830 சிறு நீர் மருத்துவம்

26,000 BREATHINGS- 2137 சுவாச அதிசயம்

CUT DOWN UR FOOD/ EAT LESS-714, 2318, 583 உண்டி சுருக்கு

LONG LIFE- 463, 702, 2137 நீண்ட நாள் வாழ்வது எப்படி

BODY IS TEMPLE-704/705 உடம்பு ஒரு ஆலயம்

EIGHT SPAN BODY- 2088 எண் சாண் உடம்பு

NINE DOOR BODY – ஒன்பது வாசல் கோட்டை

FOOD 2732 உணவு

EGG FORMING – FROM 436 கரு உருவாகும் விதம்

இவற்றில் ஆண் குழந்தை பெறுவது எப்படி, சிறுநீர் மருத்துவம், ஒன்பது வாசல் கோட்டை  முதலியவற்றை அண்மையில் எழுதிவிட்டேன்; ஏனைய விஷயங்களை ஆராய்வோம்.

120. இருமலும் சோகையும் ஈளையும் வெப்புந்

தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்

உருமிடி நாக முரோணி கழலை

தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.

263: All Ailments Assail, If in Charity You Fail
Consumption and anaemia, asthma and colic pain–
Such the lot of those who nothing in charity give;
Snake and thunder, sore throat and fleshly ills,
Approach not them that others’ needs relieve.

நீங்காத் துன்பத்தினைத் தரும் குத்திருமலும், குருதிக் குறைவாம் சோகையும், கோழையும், உடம்பெலாம் கொதிக்கும் உட்சூடும் இவை போன்ற பிறவும் நிலைபெற்ற நல்லறஞ் செய்யார்பால் நிகழ்வன. அச்சத்தைத் தரும் இடியும், கொடுநஞ்சுடைய நாகப்பாம்பும், உரோகிணி முதலிய விண்மீன்களும், பிளவைக் கட்டி முதலிய நோய்களும் நல்லறஞ் செய்வார்பால் வந்து சாரமாட்டா.

(அ. சி.) சோகை – இரத்தமின்மை. ஈளை – கோழை. வெப்பு – உட்சுரம்.

ரோகிணி நட்சத்திரம் : இது கண்ணனுடைய நட்சத்திரம். அவரோ 120 ஆண்டுகள் வாழ்ந்தார் சங்கத் தமிழர்களும் வடக்கத்திய இந்துக்களும் இந்த நட்சத்திர தினத்தில் கல்யாணம் செய்ததாக 2000 ஆண்டுக்கு முன் சொல்லியுள்ளனர் . இது நோயை உண்டாக்குமா ?

சில நட்சத்திரங்களில் , சில ராசிகளில் பிறந்தோருக்கு  சில வகை  நோய்கள் உண்டாகும் என்று ஜோதிட நூல்கள் விளம்புகின்றன. இது பொதுவான ஒரு விதி. எல்லோருக்கும் அப்படி நிகழாது. அந்த ராசிக்காரருக்கு இந்த நட்சத்திரம் அல்லது கிரகம் எந்த அளவுக்கு, எப்போது மட்டும் பாதிப்பைத் தரும் என்பதை கணக்கிட்டு அறிய வேண்டும் ; இப்போதெல்லாம் கம்பியூட்டர் படிப்பு படித்தால் உடனே வெளிநாட்டுக்குப் போய்விடலாம் என்று ஒருவர் சொன்னால் உண்மையா ?பொய்யா ? இரண்டும்தான். ஆனால் அதில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். அது போலத்தான் 12 ராசி, 27 நட்சத்திர பலன்களும் !

நல்லோர்க்கு நோய்கள் வராது தீயோருக்கு நோய்கள் வரும் என்பது திருமூலர் கூற்று; இன்றைய மருத்துவர்கள்  இந்தக்கூற்றை ஏற்க மாட்டார்கள். ஆனால் ஆழமாகப் பார்த்தால் இது விஞ்ஞான பூர்வ விளக்கமே என்பது விளங்கும் .

நல்லோர் யார் ? எப்போதும் நல்ல  பாசிட்டிவ் எண்ணங்கள் positive outlook  உடையவர்கள். மேலும் குடி ,குட்டி  அதாவது மது, மாது வழக்கங்கள் இரா. மேலும் இறை நாட்டமிருப்பின் வெஜிட்டேரியனாகவும் இருப்பார்கள் . மேலும் மறு பிறப்பு, பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இருக்கும். அப்படியே மகான்கள் ராமகிருஷ்ண  பரமஹம்சர், ரமண மகரிஷி , ர் எஸ் எஸ் இயக்க தீர்க்கதரிசி குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் போன்றோருக்கு ஏற்பட்ட புற்றுநோய் வந்தாலும் அதை எள்ளி  நகையாடும் ஆன்ம பலம் இருக்கும் ; உடல் என்பது ஒரு சட்டை ; என்றோ ஒரு நாள் கழட்டிப்போட வேண்டும் அதில் அழுக்கு  இருந்தால் யார் கவலைப்படுவர்? என்று ராம கிருஷ்ண  பரமஹம்சர்  போல ஆன்ம பலமும் ‘எதையும் தாங்கும் இதயமும்’ இருக்கும் பாரதியார் போல ‘காலா என் காலருகே வாடா’  என்று ஆனந்தக் கூத்தாடுவோம்

xxxx

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

ராகம்-சக்கரவாகம்

தாளம்-ஆதி

பல்லவி

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்

காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

சரணங்கள்

௧)

வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்

வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்

[துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்

முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட,

[மூடனே?அட (காலா)

௨)

ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன

தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை

[யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி

நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட

(காலா)

இந்த வித நம்பிக்கை இருந்தால் அனந்த ராம தீட்சிதர், நாராயணீயம் யாத்த மேல் பத்தூர் நாராயண பட்டதிரி  போல பாடியே நோய்களை விரட்டி விடலாம்.

நம்பிக்கை மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம் Faith Cures  என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.

xxxx

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்

வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்

வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்

வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.

655: Diseases Appear When Dhananjaya Does not Function
Boils, itches and leprosy
Anaemia, and like diseases
That swellings show
Paralysis, hunchback, arthritis
And diseases of eye that bulging show
All appear
When Dananjaya in disorder functions.

xxxx

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்

கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்

கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்

கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

656: Importance of Kurma Vayu for Eye
When Dananjaya malfunctions
The eye gets diseases like cataract and glaucoma
But Kurma is goodly to the eye;
If Kurma permeates not the eye,
It receives light none.

xxxx

அட்டமா சித்தி என்னும் எட்டு வகை அற்புத சக்திகள் பற்றிய பகுதியில் இந்தப்பாடல்கள் வருகின்றன. உடலில் பத்து வித வாயுக்கள் உண்டு என்றும் அதில்  தனஞ்ஜெயன் என்னும் வாயு சரியாகச் செயல்படாதபோது சில நோய்கள் வரும் என்றும் திருமூலர் சொல்கிறார். மேலை நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத ஒரு விஷயத்தை இந்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் தமிழிலும் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர். இதைச் செய்வதற்கு கடுமையான பயிற்சி வேண்டும்; சந்திரனுக்கு மனிதர்கள் போக முடியும் என்று அமெரிக்கா  காட்டியது. ஆ னால் 50 ஆண்டில் எத்தனை பேர் போனார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். கடுமையான பயிற்சி, மிகப் பெரிய பொருட் செலவு , அதி வேக சூப்பர் பாஸ்ட் கம்ப் யூட்டர்கள், ஆயிரம் விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு இவ்வளவும் தேவை. அது போலத்தான் அஷ்டமா சித்திகளும். நமது காலத்தில் இதைச் செய்து கட்டியவர்கள் எவருமிலர். ஏனெனில் ஆன்மீக முன்னேற்றத்துக்கு இது அவசியமில்லை. பெட்ரோலியத்திலிருந்து  பெட்ரோல் எடுக்கும்போது நிறைய உப பொருட்கள் – பயனுள்ள பை ப்ராடக்ட்ஸ் கிடைப்பது போல இவை.

Over 6,000 items are made from petroleum waste by-products, including: fertilizer, flooring (floor covering), perfume, insecticide, petroleum jelly, soap, vitamins and some essential amino acids.

உடலில் பத்து வித வாயுக்கள் ஓடுவதாகவும் அவை ஒவ்வொன்றும் ஒரு பணியைச் செய்வதாகவும் இந்துக்கள்கண்டு பிடித்துள்ளனர் . அதில் தனஞ்ஜெயன் என்னும் வாயு பற்றியது இவை .

தச வாயுக்கள்: 1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 6. ஞாகன் 7. கூர்மன் 8. கிருகரன் 9. தேவ தத்தன் 10 தனஞ்செயன்.

இவற்றின் பணிகளை சித்தர்கள் இயற்றிய பாடல்கள் விரிவாக்கக் கூறுகின்றன மேல் நாட்டு மருத்துவப் படிப்பு படிப்போருக்கு இவை பற்றி ஒன்றும் தெரியாது  மதுரையிலிருந்து சென்னைக்குப்போக எவ்வளவு வலிகள் உண்டோ அது போல உடல் ஆரோக்கியத்தை அறிய , வளர்க்க மருத்து வத்திலும்  பல வழிகள் உண்டு

தொடரும்

–SUBHAM—

TAGS– திருமூலர், திருமந்திரம், நோய்கள் பட்டியல், தச வாயுக்கள், நம்பிக்கை,  காலா என் காலருகே வாடா , பாரதியார், புற்று நோய் , மகான்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 26

Leave a comment

Leave a comment