Post No. 13.371
Date uploaded in London – —23 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 20
இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!!
ச.நாகராஜன்
பகுதி 23
இரண்டாம் உலகப் போர் பற்றிய பிரமிப்பூட்டும் உண்மை நிகழ்ச்சிகளை அப்படியே தத்ரூபமாகப் பார்க்க வகை செய்பவை ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள உலகப் போர் பற்றிய திரைப்படங்களாகும்.
சுமார் 200 திரைப்படங்களும் ஏராளமான டாகுமெண்டரி படங்களும் பார்ப்பதற்கு உள்ளன.
திரைப்படங்களின் ஒருசிறிய பட்டியல் இதோ:
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
3 மணி 15 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1993
நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து நாட்டில் யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆஸ்கார் ஷிண்ட்லர் என்ற தொழிலதிபர் தனது பணியாட்களில் யூதர்கள் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்து மனம் நொந்தார்.
படத்தை இயக்கியவர் :Steven Spielberg
நடிகர்கள்:
Liam Neeson, Ralph Fiennes, Ben Kingsley
2. Black Book
ப்ளாக் புக்
2 மணி 25 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1993
நெதர்லாந்தை நாஜிக்கள் ஆக்கிரமித்தபோது யூத பாடகர் ஒருவர் கெஸ்டபோவின் தலைமையகத்தில் ஊடுருவி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கும் படம் இது.
படத்தை இயக்கியவர் : Paul Verhoeven
நடிகர்கள்: Carice van HoutenSebastian KochThom Hoffman
3. The Bridge on the River Kwai
தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்
2 மணி 41 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1957
மிகப் பிரபலமான இந்தப் படத்தில் பரபரப்பூட்டும் காட்சிகள் உண்டு.
பிரிட்டிஷ் ப்ரிஸனர் ஆஃப் வார்ஸ் – போர் சிறைக்கைதிகள் – க்வாய் நதியின் குறுக்கே ஒரு ரெயில் பாலத்தைக் கட்டுமாறு பணிக்கப்படுகின்றனர். நேச நாட்டுப் படையினர் அதைத் தகர்க்க திட்டம் தீட்டுகின்றனர்.
இயக்குநர் : David Lean
நடிகர்கள் : William Holden Alec Guinness Jack Hawkins
4. Play Dirty
ப்ளே டர்ட்டி
1 மணி 58 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1969
உலகப் போரின் போது பிரிட்டிஷ் கமாண்டோக்களின் ஒரு குழு இத்தாலிய போர்வீரர்கள் போல வட ஆப்பிரிக்காவில் எதிரிகள் இருக்குமிடத்தில் ஊடுருவி ஒரு ஜெர்மானிய எண்ணெய் டெப்போவை அழிக்க வேண்டும்.
இயக்குநர் : Andre De Toth
நடிகர்கள் : Michael Caine, Nigel davenport Nigel Green
5. The Guns of Navarone
தி கன்ஸ் ஆஃப் நவ்ரோன்
2 மணி 38 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1961
நேசநாட்டுப் படைவீரர்களின் ஒரு குழுவினர் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரேக்கத் தீவில் உள்ள இரண்டு பீரங்கிகளை அழிக்கத் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். அங்கு மாட்டிக் கொண்ட 2000 பிரிட்டிஷ் படைவீரர்களைக் காப்பாற்றுகின்றனர்.
இயக்குநர்: J. Lee Thompson
நடிகர்கள் : Gregory Peck, David Niven, Anthony Quinn, Stanley Baker
6. The Longest Day
தி லாங்கஸ்ட் டே
Comelius Ryan எழுதிய நாவலின் அடிப்படையில் 1944, ஜூன் 6- ம் தேதி நார்மண்டியில் D-Day-ல் நடந்த உண்மை நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் புகழ் பெற்ற படம் இது.
2 மணி 58 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1962
இயக்குநர்; Ken Anna too Andrew MartonGerd Oswald
நடிகர்கள் : John Wayne, Robert Ryan, Richard Burton
7. The Train
தி ட்ரெய்ன்
2 மணி 13 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1964
1944-ம் ஆண்டு ஒரு ஜெர்மானிய கர்னல் பிரெஞ்சு கலைப் பொக்கிஷங்களை ஒரு ரயிலில் ஏற்றி ஜெர்மனிக்கு அனுப்புகிறார். கலைப்பொருள்களுக்குச் சேதமின்றி அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
வெளியிடப்பட்ட ஆண்டு 1964
இயக்குநர்; John Frankenhimer
நடிகர்கள் : Burt Lancaster, Paul Scofield, Jeanne Moreu
8. Dunkirk
டன்கிர்க்
1 மணி 46 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 2017
பெல்ஜியம், பிரிட்டிஷ் காமன்வெல்த் அண்ட் எம்பயர், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நேசநாட்டுப் படைகள் ஜெர்மானிய ராணுவத்தால் சூழப்பட ஒரு உக்கிரமான போர் நடக்கிறது. முடிவு என்ன?
இயக்குநர் :Christopher Nolan
நடிகர்கள் : Fionn Whitehead, Barry Keoghan, Mark Rylance
இன்னும் சில படங்களை அடுத்துக் காணலாம்!
**