Date uploaded in London – 23 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கோவிந்தஹ- நாம எண் 187
கோ எனும் பூமியைத் தூக்கியவர்.
அல்லது பசுக்களுக்குத் தலைவர்.
அல்லது கோ எனும் வாக்கு தன்னை அடையும்படி செய்பவர்.
ஆதி சங்கரரின் பாடல் — பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூடமதே
மஹாபாரதம் சாந்தி பர்வம் சொல்வதாவது,
நஷ்டம் வை தாரிணீம் பூர்வம் அவிந்தத்யத் குஹாகதாம்
கோவிந்த இதி தேனாஹம் தேவைர் வாக் அபிஸ்துதகஹ
பொருள்
புராதன காலத்தில் புதைந்துபோன பூமியை நான் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொடுத்தேன்.. இதனால் என்னை எல்லா தேவர்களும் கோவிந்தா என்றனர்.
ஹரிவம்சம் 2-19-45 சொல்கிறது,
அஹம் கிலேந்த்ரோ தேவானாம் த்வம் கவ்மம் இந்த்ரதாம் கதஹ
கோவிந்த இதி லோகாஸ் த்வாம் ஸ்தோஸ்யந்தி புவி சாஸ்வதாம்
பொருள்
நான் இந்திரன் அல்லது தேவர்களின் தலைவன் . நீ பசுக்களின் தலைவனாக ஆகிவிட்டாய். ஆகையால் மக்கள் உன்னை எப்போதும் கோவோதான் என்கின்றனர்.
***
ஹரிவம்சம் 3-88-50 சொல்லுவதாவது,
கெளர் ஈசா து யதோ வாணி தாம் ச விந்த்யதே பவான்
கோவிந்தா து ததோ தேவ முனிபிஹி கத்யதே பவான்
பொருள்
கெளஎன்றால் சொற்கள்; நீயே எல்லா சொற்களையும் வியாபித்துள்ளாய் அதற்கு சக்தியும் அளிக்கிறாய். . ஆகையால் முனிவர்கள் உன்னை கோவிந்த என்று அழைக்கிறார்கள்
xxxx
நாராயணஹ – நாம எண் 245
உண்டான அனைத்துக்கும் உறைவிடமாகியவர்.
நாராயண சூக்தம் சொல்லுவதாவது ,
யச்ச॑ கி॒ஞ்சிஜ்ஜக³த்ஸ॒ர்வம்॒ த்³ரு॒ஶ்யதே᳚ ஶ்ரூய॒தேபி॑ வா ॥அன்த॑ர்ப॒³ஹிஶ்ச॑ தத்ஸ॒ர்வம்॒ வ்யா॒ப்ய நா॑ராய॒ண: ஸ்தி॑²த: ।
यच्च किञ्चित् जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा ।
अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणः स्थितः ॥
yacca kiñcijjagatsarvaṁ dṛśyate śrūyate’pi vā,
antarbahiśca tatsarvaṁ vyāpya nārāyaṇaḥ sthitaḥ.
இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் நாராயணன் வியாபித்துள்ளார் ..நாம் பார்ப்பதும் கேட்பதும் அவரேதான்
மஹாபாரதம் சொல்லுவதாவது ,
நராத் ஜாதானி தத்வானி நாராணீதி ததோ விதுஹு
தானி ஏவ சா‘யணம் தஸ்ய தேன நாராயணஹ ஸ்ம்ருதஹ
நாரா என்னும் ஆத்மாவிடமிருந்து உண்டானவை எல்லாம் நாராயணி எனப்படும். அவர்கட்கு அயனம்/ இருப்பிடம் ஆதலால் நாராயண .
தைத்ரீய உபநிஷத் சொல்கிறது,
யத் ப்ரயந்தி அபிசம்விசந்தி –உயிர்கள் எல்லாம் மரணமடைந்த பின்னர் அவனையே அடைகின்றன
நரசிம்ம புராணம் சொல்கிறது,
நாராயணாய நாம இதி அயம் ஏவ ஸத்யஹ
ஸம்ஸார கோரவிஷ ஸம்ஹரணாய மந்த்ரஹ
ஸ்ருண் வந்து பவ்யமதயோ ‘ஸ்தராகா
உச்சை ஸ்தரா உபதிஸாம் யஹமூர்த்வபாஹுஹு
பொருள்
மோட்சத்தை நாடும் குணவான்களான ரிஷி முனிவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள். கைகளை உயரத்தூக்கிய வண்ணம் நான் அறிவிப்பதாவது – நாராயணாய நமஹ என்னும் மந்த்ரம்.
நாராயணன் பற்றி மனுஸ்ம்ருதியும் பேசுகிறது,
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரசூணவஹ
தா யத் அசி அயணம்பூ ர்வம் தேன நாராயணாயஹ ஸ்ம்ருதஹ
பொருள்
தண்ணீர் என்பது நாரா அல்லது பரமாத்மனின் குழந்தை ஆதலால் நாரா எனப்படும்.பரமாத்மன் முதலில் பள்ளிகொண்ட இடமும் தண்ணீர் தான். ; ஆகையால் அவரை நாராயண என்பார்கள்.
आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।
ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥
āpo nārā iti proktā āpo vai narasūnavaḥ |
tā yadasyāyanaṃ pūrvaṃ tena nārāyaṇaḥ smṛtaḥ || 10 ||
என் கருத்து
தண்ணீர் என்னும் சொல் ரிக்வேதத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ் நூல்களுக்கு முற்பட்ட கிரேக்க புராணக் கதைகளில் நீர் தேவதைகளை நெரெய்ட்ஸ் NEREIDES என்று அழைக்கின் றனர். கிரேக்க மொழியில் ஒரு சொல் இருக்குமானால் அது ஸம்ஸ்க்ருதத்துட்ன் தடர்புடையது என்பது அர்த்தம் ஆகையால் அது திராவிட மொழிச் சொல்லாக இருக்கமுடியாது . ஆனால் கிரேக்க மொழியில் நூற்றுக் கணக்கிலும் ஆங்கில மொழியில் ஆயிரக் கணக்கிலும் தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
ஸம்ஸ்க்ருதமும் தமிழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே. ஆகையால் முன்காலத்தில் இந்தச் சொல் புழங்கியது
இரண்டாவது காரணம் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே மூல மொழியிலிருந்து வந்தன மாக்ஸ் முல்லர், கால்ட் வெல் கும்பல்கள் சொன்னதெல்லாம் தவறு இவ்விரண்டும்தான் இன்றுவரை சந்தி விதிகளை பின்பற்றி சொற்களை இணைத்துப் பேசுகின்றன எழுது கின்றன.
நாரா+அயண என்றால் நீரை வீடாகக் கொண்ட நாராயணன் என்று பொருள்.
–SUBHAM-
Tags- நாராயணன், பஜ கோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்