Post No. 13.374
Date uploaded in London – —24 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 21
இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!!
ச.நாகராஜன்
பகுதி 24
இரண்டாம் உலகப் போர் பற்றிய மேலும் சில நல்ல திரைப்படங்களைப் பற்றிய குறிப்புகள் இதோ:
9. The Great Escape
தி க்ரேட் எஸ்கேப்
2 மணி 52 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1963
நேசநாட்டுப் படையைச் சேர்ந்த போர்க்கைதிகள் ஜெர்மானிய சிறை முகாமிலிருந்து தப்பிக்கத் திட்டமிட்டு தப்பிக்கின்றனர்.
இயக்குநர் : John Sturges
நடிகர்கள் : Steve McQueen, James Garner, Richard Attenborough
10. The Dirty Dozen
தி டர்ட்டி டஜன்
2 மணி 30 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1967
இயக்குநர் : Robert Aldrich
நடிகர்கள் : Lee Marvin, Ernest Borgnine, Charles Bronson
ஒரு வித்தியாசமான அமெரிக்க ராணுவ மேஜர் கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற பன்னிரெண்டு சிறைக் கைதிகளை பயிற்றுவித்து ஜெர்மானிய அதிகாரிகளைப் பெருமளவில் கொல்ல அனுப்புகிறார்.
11. Saving Private Ryan
சேவிங் ப்ரைவேட் ரையான்
2 மணி 49 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1998
இயக்குநர் : Steven Spielberg
நடிகர்கள் : Hanks Matt, Damon Tom Sizemore
நார்மண்டியில் தரை இறங்கிய பின்னர் அமெரிக்க ராணுவத்தினரின் ஒரு குழு ஒரு பாரா ட்ரூப்பரைக் காப்பாற்ற எதிரிகள் இருக்கும் இடத்திற்குச் செல்கின்றனர். அந்த பாரா ட்ரூப்பரின் சகோதரர்கள் சண்டையில் கொல்லப்பட்டவர்கள்!
12.Land of Mine
லேண்ட் ஆஃப் மைன்
1 மணி 40 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 2015
இயக்குநர் : Martin Zandvliet
நடிகர்கள் : Roland Moller, Louis Hofmann, Joel Basman
டென்மார்க்கில் இளம் ஜெர்மானிய போர்க்கைதிகள் ஒரு கடற்கரையைச் சுத்தம் செய்யுமாறு பணிக்கப்படுகின்றனர். அந்தக் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைக் கண்காணிக்கும் டென்மார்க் சார்ஜெண்ட் அவர்கள் படும் பாட்டை நன்கு புரிந்து கொண்டு பரிதாபப்படுகிறார்.
.
13. A Man Escaped
எ மேன் எஸ்கேப்ட்
1 மணி 41 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1956
இயக்குநர் : Robert Bresson
நடிகர்கள் :Francois Leterrier, Charles Le Clainche, Maurice Beerblock
ஒரு பிரான்ஸ் நாட்டு போராட்டக்காரர் ஜெர்மானிய சிறையிலிருந்து தப்பிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார்.
14. Army of Shadows
ஆர்மி ஆஃப் ஷேடோஸ்
2 மணி 25 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1969
இயக்குநர்: Jean- Pierre Melville
நடிகர்கள் : Lino Ventura, Paul Meurisse Hean- Pierre Cassel
நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸில் தலைமறைவாக இருந்து அவர்களை எதிர்க்கும் போராட்டக்காரர்களைப் பற்றிய படம் இது.
15. Rome, Open City
ரோம், ஓபன் சிடி
1 மணி 43 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 1945
இயக்குநர்: Roberto Rossellini
நடிகர்கள் : Anna Magnani, AldoFebrizi, Marcello Pagliero
1944-ம் ஆண்டு ரோம் நகரை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தபோது, போராட்ட வீரரான ஜியோர்கியோ மேன்ஃப்ரெடி நாஜிக்களால் துரத்தப்பட, அவர் தப்பிக்க ஒரு புகலிடத்தை நாடுகிறார்.
16. A Hidden Life
எ ஹிடன் லைஃப்
2 மணி 54 நிமிடங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டு 2019
இயக்குநர்: Terrence Malick
நடிகர்கள் : August Diehl, Valerie Pachner, Maria Simon
ஆஸ்த்ரிய நாட்டைச் சேர்ந்த ஃப்ரான்ஸ் ஜாகர்ஸ்டாட்டர் என்னும் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு பணியாளர் நாஜிக்களுக்காகப் போரிட மறுத்து விடுகிறார்.
மேலும் சில படங்கள் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
**