
இருதய நோய் பற்றி திருமூலர்; திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -27 (Post No.13,376)
Date uploaded in London – 24 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Heart attack
148. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
மனைவி அறுசுவை உணவு சமைத்திருந்தாள் . சாப்பிட்டவர் மனைவியுடன் சுகமாகப் படுத்திருந்தார் ; ஐயோ இடப்பாலம் வலிக்கிறதே என்றார் ; அவருடைய கதை முடிந்தது
இந்த இருதய நோய் பற்றிய வருணனை இரண்டு விஷயங்களை நமக்கு தெரிவிக்கிறது
1.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் நிறைய தமிழ் மக்களை காவு கொண்டுள்ளது .
2.இருதய நோய் என்றால் என்ன என்ற மருத்துவ விஷயம் நன்றாகத் தெரிந்திருக்கிறது . மனித உடலில் இதயம் என்ற உறுப்பு இடப்பக்கத்தில் உள்ளது. அங்கு வலி ஏற்பட்டு, அது முதலில் இடது கையில் பரவும். உடனே சிகிச்சை தாராவிடில் மரணம் சம்பவிக்கும் .
148: Death Comes Sudden
The rich repast was laid and he dined and joyed,
With damsels sweet in amorous dalliance toyed;
“A little little pain–on the left” he moaned
And laid himself to rest to be gathered to dust.
xxx

CALORIES- 766 கலோரி
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியார் அறிவறிந் தேனே
இப்போதெல்லாம் வெளிநாட்டில் உணவு வாங்கினால் அதன் மீது எவ்வளவு கலோரி சக்தி உடம்பில் சேரும் என்று எழுந்திருப்பார்கள் .
கலோரி என்றால் என்ன?
ஒரு கிராம் எடையுள்ள நீரை ஒரு டிகிரி வெப்பம் உயர்த்த தேவைப்படும் சக்தி ஒரு கலோரி ஆகும். நிறைய கலோரி உடைய உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு அந்த அளவுக்கு சக்தி கிடைக்கும். அதிக கலோரி சாப்பிட, சாப்பிட உடம்பில் எடை கூடிக்கொண்டே இருக்கும். எடை கூடினால் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் வரும். இதை திருமூலரும் சொல்கிறார் .
The definition of a calorie is the amount of energy necessary to raise the temperature of 1 gram (g) of water through 1° Celsius. The type and amount of food people eat determine how many calories they consume. If a person consistently consumes more energy than they require, they will gain weight.
அகத்தில் ஏற்படும் தீயை (வன்னி) யாரும் அளப்பது இல்லை. வெப்பம் என்பது இன்றைய வழக்கில் கலோரி எனப்படும் ; உடம்பில் ஏற்படும் சுவாசத்தை யாரும் அளப்பது இல்லை. அதிகம் ஓடினால் அதிக சுவாசம் ஏற்படும் . செக்ஸ் செயல்களில் ஈடுபட்டால் அதிக சுவாசம் வெளியேறும். இதே போல கோப ப்பட்டு கத்தினால் , பயந்தால் சுவாசம் அதிகரிக்கும். சாதாரண நல்ல ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21 6000 முறை சுவாசிப்பான் ..யோகிகள் போல அமர்ந்து இறைவனை சிந்தித்தால் சுவாசம் குறையும். பிராணாயாமம் செய்தால் இன்னும் குறையும். இப்படிக்கு குறைத்து, குறைத்து யோகிகள் நீண்ட காலம் வாழ்ந்தனர்.
வெள்ளைக்காரர் கணக்கு 22, 000 சுவாசம்.
How much breaths do we take every day?
Each day we take some 22,000 breaths, about 7.5 million breaths each year. This work is all done by an organ that resembles a sponge, with a thin lacy structure, the alveoli under constant stress from being in direct contact with the environment and all its pollutants, bacteria and viruses
Greatness of Kundalini Yoga
None knows Kundalini that spans high
None knows the science of breath control
They who know it not perish away
I knew the truth that none know.
xxxx
உண்டி சுருக்கு 311
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே-311
Continence Leads to God-hood
If the seminal seed thickens by sexual absention
It shall never be destroyed;
If the body is lightened by austere discipline
Long shall the life be;
If food is eaten sparingly
Many the good that flow;
You may verily become
The Lord of Dark-Hued throat-311
நாம் உலகில் பிறக்கும்போதே நமது நுரையீரல் பாங்கில் / வங்கியில் ( Lungs Bank) உனக்கு இவ்வளவு சுவாசம் என்று பிரம்மா, டெபாசிட் Deposit செய்து விட்டார். புத்தி சாலிகள் இதை ஜாக்கிரதையாக செலவழித்து ஆயுளை அதிகரிப்பர் ஊதாரிகளோ காம, க்ரோத, லோபங்களில் அதிகம் செலவிட்டு ஆயுளைக் குறைப்பார்கள் . இதனால் திருமூலர் சுவாசக கணக்கைச் சொல்லி சேமியுங்கள் என்று அட்வைஸ் தருகிறார் .
பொருள்
செக்ஸ் / உடலுறவு விஷயங்களைக் குறைத்துக்கொண்டால் உயிர்ச் சக்தி அதிகம் ஆகும்.உணவு குறைந்தாலும் உடம்பில் இன்பம் அதிகரிக்கும்
எல்லோருக்கும் 10 விரல் மூச்சு உள்ளே போகிறது; 12 விரல் வெளியே போகிறது
பின்வரும் கணக்கினை மனத்திற் கொள்க –
நடந்தால் – 24
ஓடினால் – 42
உண்டால் – 18
உறங்கினால்- 50
செக்ஸ் செய்தால் – 60 விரல் வெளியே போகிறது . அதாவது பெருமூச்சு வாங்கும். இது நமது சித்தர்கள் போட்ட ஆவரேஜ்/சராசரி கணக்கு.
சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவும் இது போல ஒரு கணக்கினை வெளியிட்டது தினமணிக் கதிர் பத்திரிகையில் வந்தது
xxxxx
21,600 BREATHINGS- 2137 சுவாச அதிசயம்
விளங்கிடு முந்நூற்று முப்பதோ டொருபான்
தளங்கொ ளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு மைம்மலம் வாயு வெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே–2137
பொருள் –
300+ 30 X 10=300=600 இரட்டியது ஆறு 6X 6=36 (600X 36= 21,600)
இதில் உடம்பில் தங்குவது 7200.; பாக்கி 14,400 தினசரிச் செலவு.. பிராணாயாமத்தால் சேர்த்துவைக்கத் தெரிந்துகொண்டால் ஐந்து வகைப் பாசங்களும் விலகி சிவபெருமானை தரிசிக்கலாம்
Breath Control For Ridding Malas
If ten times three hundred and thirty
The breath twelve finger-length
As Prana ascends upward,
The Malas Five subdued are;
So do the Tattvas, according.
–subham—-
Tags- மூச்சு, சுவாசம், சேமிப்பு, கலோரி, இதய நோய், 21600