திருமந்திரத்தில் பழமொழிகள் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 28(Post No.13,382)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,382

Date uploaded in London – 26 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கம்பன், அப்பர் போன்றே திருமூலரும் நிறைய பழமொழிகளையும் உவமைகளையும்  பாடல்களில் பயன்படுத்துகிறார். தமிழர்கள் பிறந்தநாள் முதலே தாய் தந்தையரிடம்  பழமொழிகளைக் கேட்டுப் பழக்கப்பட்டிருக்கிறார்கள் .அவர்கள் பேச்சுவாக்கில் பழமொழிகளை பயன்படுத்துவதில் வியப்பில்லை. ஆ னால் காஷ்மீரிலிருந்து வந்த ஒரு வடக்கத்தியரான  திருமூலர்  பழமொழிகலைப் படன்படுத்துவது வியப்பிற்குரியதே. தமிழர்கள் பழமொழி இன்றி பேச முடியாது 20, 000 தமிழ்ப் பழமொழிகளை தொகுத்த மூன்று வெள்ளைக்காரர்களே இது பற்றி ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள் . அதே போல சம்ஸ்க்ருத பண்டிதர்களும் எதற் கெடுத்தாலும் ஒரு சுபாஷித ஸ்லோகத்தை மேற்கோள் காட்டிக்கொண்டே  இருப்பார்கள். சம்ஸ்க்ருதத்தில் ஏழு சுபாஷித நூல்களில் மட்டும் 40,000 பலமொழிகள்/ பொன்மொழிகள் உள்ளன. ஏனைய நூல்களிலிருந்து தொகு த்தால் ஒரு லட் சதை மிஞ்சினாலும் வியப்பதற்கில்லை. மஹா பாரதத்தின் அ னுசாசன, சாந்தி பருவங்களிலும் கருட புராணத்திலும் மட்டுமே ஆயிரக்கணக்கில் பழமொழிகள் (சுபாஷிதங்கள்) உள்ளன.இதோ திருமந்திரத்தில் திருமூலர் தரும் பழமொழிகள்:-

xxx

திருமந்திரத்தில் உள்ளங்கை நெல்லிக்கனி

மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக்

கைத்தலஞ் சேர்தரு நெல்லிக்கனியொக்குஞ்

சுத்தனைத் தூய்நெறியாய் நின்ற  தேவர்கள்

அத்தனை நாடி அமைந்தொழிந்தேனன்றே -2949

2992: Yearn For Him

He of the Penance Pure;

Transparent as amla fruit

On palm of those who yearn for Him;

He the Pure One,

Whom Celestials seek in ways righteous;

Him, my Lord, I sought;

And thus ever remained.

கரவிந்யஸ்த பில்வ நியாயம்

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்பதை சம்ஸ்க்ருதத்தில் கரவிந்யஸ்த பில்வ நியாயம் . கரத்தில் உள்ள வில்வப்பழம் போல என்று சொல்லுவார்கள் .கையில் இருக்கும் வில்வப்பழம் போல வெளிப்படையாக எந்த வித விளக்கமும் தேவையின்றி இருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் வழங்கப்படுகிறது.

xxxx

யானை உண்ட விளங்கனி (விளாம்பழம்) போல  

2548. கரியுண் விளவின் கனிபோல் உயிரும்

உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்

அரிய துரியமேல் அண்டமும் எல்லாந்

திரிய விழுங்குஞ் சிவபெரு 1மானே.

யானை நோயால் பற்றப்பட்ட விளாம்பழம் ஓட்டில் ஒரு கேடுமில்லாதிருக்க, உள்ளே சதைப்பற்று ஏதுமில்லாமலிருக்கும் இயல்பினது. அதுபோல் உயிரும் உயிரைத் தாங்கிநிற்கும் திருவருளும், முன்னோதும் சிவனும், சொல்லுதற்கு அரிய துரியத்தின்மேல் அனைத்துலகங்களும் பின்னோதும் சிவனாம் செம்பொருளினால் மாறுதல் செய்து ஒடுக்கப்படும்.

(அ. சி.) கரி – யானை (யானையுண்ட விளங்கனி) – விளாமரத்து நோய்க்கு யானை என்று பெயர். திரிய – மாறுபட.

2593: Beyond Siva Turiya

As unto the wood-apple

By “elephant” disease consumed,

So are Jiva and Para before Siva;

In the rare state beyond Siva Turiya

Is Supreme Siva

That engrosses worlds all.

ஒரு ஸம்ஸ்க்ருத  ஸ்லோகம் சொல்கிறது:–

பணம் வரும் போது தேங்காயிலுள்ள நீர் (இளநீர்) போல வரும்; போகும் போது யானை உண்ட விளாம் பழம் போலவும் போய்விடும் (யானை, விளாம்பழத்தை ஓட்டோடு சாப்பிட்டுவிட்டு வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும்; ஆனால் உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; சிலர் இது தவறு; ஒரு நோயின் பேர் யானை என்றும் அந்த நோய் கண்ட மரங்களின் பழங்களுக்குள் ஒன்றுமே இராது என்றும் சொல்லுவர்) .உண்மையில் பணம் வருவதும் போவதும் தெரியாது என்பதே பாட்டின் பொருள்:–

ஆஜகாம யதா லக்ஷ்மீர் நாரிகேல பலாம்புவத்

நிர்ஜகாம ததா லக்ஷ்மீர் கஜ புக்த கபித்தவத்

(கபித்த= விளாம்பழம், நாரிகேல = தேங்காய்)

—subham—

Tags–விளாம்பழம், யானை, நெல்லிக்கனி உள்ளங்கை, , திருமந்திரத்தில் ,பழமொழிகள், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை 28

Leave a comment

Leave a comment