இரண்டாம் உலகப் போர் : முக்கிய நிகழ்வுகள் (Post No.13,383)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.383

Date uploaded in London – 27 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 24

                              பகுதி 27

இரண்டாம் உலகப் போர் : முக்கிய நிகழ்வுகள்!

ச. நாகராஜன்

இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளில் முக்கியமானவற்றைப் பற்றிய ஒரு சுருக்கம் இது:

இரண்டாம் உலகப் போர் ஆறு வருடம் ஒரு நாள் நடந்தது.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த தேதி : 1939, செப்டம்பர் 1-ம் தேதி

ஹிட்லர் அன்று தான் போலந்து மீதி படை எடுத்தார்.

உலகப் போர் முடிந்த தேதி : 1945, செப்டம்பர் 2-ம் தேதி

ஜப்பான் அன்று தான் சரணாகதி அடைந்தது.

5 கோடிப் பேர் இந்த யுத்தத்தினால் இறந்தனர்.

உலகத்தின் அனைத்து நாடுகளும் இதில் ஈடுபட்டன என்றே சொல்லலாம்.

முக்கிய நாடுகள் ; நேச நாட்டுப் படைகள் : பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், சிறிய அளவில் சைனா.

அச்சு நாடுகள் : ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்

இதற்கான காரணம் ; ஹிட்லரின் பேராசை தான் இதற்குக் காரணம்.

1-9-1939 – ஹிட்லர் போலந்து மீது படையெடுத்தார்.  நாஜிக்கள் 60 லட்சம் யூதர்களைக் கொல்ல குறி வைத்தனர்.  ஸ்டாலினும் சும்மா இருக்கவில்லை. 1940 மார்ச், ஏப்ரலில் 20000 போலந்து அதிகாரிகளைக் கொல்ல ஸ்டாலின் உத்தரவிட்டார்.

10மே, 1940 : ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம்நெதர்லாந்து ஆகிய நாடுகளைத் தாக்கியது. பிரான்ஸின் மீது படையெடுத்தது.

25ஜூலை 1940 : ஹிட்லர் நம் மீது படை எடுத்தே ஆக வேண்டும் என்பதை அறிவார் என்று சர்ச்சில் கூறினார். 10ஜூலை 1940 அன்று வான் வழித் தாக்குதலை ஜெர்மனி ஆரம்பித்தது.

29டிசம்பர் 1940 : 7-9-1940 கருப்பு சனிக்கிழமை என்று வர்ணிக்கப்படுகிறது. அன்று தான் லண்டனின் மீதான பெரிய தாக்குதல் ஆரம்பித்தது. 57 நாட்கள் தொடர்ந்து இரவு நேரத்தில் லண்டன் தாக்கப்பட்டது. 13650 டன்கள் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டது.

14நவம்பர் 1940 : லண்டன் மட்டுமல்லாமல் பிற நகர்களையும் ஜெர்மனி தாக்க ஆரம்பித்தது. 43000 பேர் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் வீழ்ந்ததைத் தொடர்ந்து 1941ஜூன் 22ம் தேதி ரஷியாவைத் தாக்கத் தொடங்கியது ஜெர்மனி.

7டிசம்பர் 1941 : பேர்ல் ஹார்பர் தாக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜப்பானிய சொத்துக்களை முடக்க ஆணையிட்டார்.

7டிசம்பர் 1941இல் ஜப்பானில் அதிகாரத்திற்கு வந்த ஜெனரல் ஹிடெகி டோஜோ அமெரிக்காவைக் கடுமையாக எதிர்க்க முடிவு செய்தார்.

7டிசம்பர் 1941 அன்று ஜப்பானிய விமானங்கள் ஹவாய் தீவுகளில் உள்ள பேர்ல் ஹார்பரையும் அமெரிக்க பசிபிக் பிராந்திய கடற்படையையும் தாக்கியது.

2500 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். ஜப்பானியர்களின் 29 விமானங்கள் சேதமடைந்தன.

11டிசம்பர் 1941 : ஹிட்லர் அமெரிக்காவின் மீது போர் என்பதை அறிவித்தார்.

15பிப்ரவரி 1942 : சிங்கப்பூர் வீழ்ந்தது. ஜப்பான் தனது படையெடுப்பை மலாயா மீது 8-12-1941 அன்று ஆரம்பித்தது.

4ஜூன் 1942 : பேர்ல் ஹார்பர் தாக்குதலைத் தொடர்ந்து ஹாங்காங்மலாயாபிலிப்பைன்ஸ் டச்சு கிழக்கு இந்தியாவை ஜப்பான்  கைப்பற்றியது.

25-10-1942 வடக்கு ஆப்பிரிக்காவில் செப்டம்பர் 1942-ல் போர் தொடங்கியது. 23-10-1942-ல் மாண்ட் கோமரி எல் அலமெய்னைக் கைவசப்படுத்தினார். இதனால் அவர் பிரிட்டனில் மிகவும் பிரபலமானார்.

பிப்ரவரி 1943 : ஸ்டாலின்கிராட் தாக்குதல் :

ஆகஸ்ட் 1942-லிருந்து செப்டம்பர் 12 முடிய தொடர்ந்தது போர். ஸ்டாலின் ஸ்டாலின்கிராட் தாக்குதலைத் தடுத்தார்.

91000 ஜெர்மானியத் துருப்புகள் கைதாகின. இவர்களின் 6000 பேரே போர் முடிந்தபின்னர் வீடு திரும்பினர். ஜெர்மனியின் மகத்தான தோல்வியாக இது அமைந்தது.

6ஜூன் 1944 : டி டே – D Day

அமெரிக்க ஜெனரல் ட்வைட் ஐஸன்ஹோவர் தலைமையில்  நார்மண்டி கடற்கரைப் பகுதிக்கு படை விரைந்தது. 1,58,000 பேர் அங்கு குவிந்தனர். உக்கிரமான போர்!

25ஆகஸ்ட் 1944 – பாரிஸ் விடுவிக்கப்பட்டது. ப்ரஸ்ஸல்ஸ் செப்டம்பர் 3-ம் நாள் விடுவிக்கப்பட்டது.

4மே 1945 : ஜெர்மானிய படைகள் மாண்ட்கோமரியிடம் சரணாகதி அடைந்தன.

23-26 அக்டோபர் 1944 : Battle of Leyte Gulf

பிலிப்பைன்ஸில் உக்கிரமான போர்.  அமெரிக்கா பசிபிக்கில் தனது வெற்றியை உறுதிப்படுத்தியது.

மூன்று கடற் போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றை ஜப்பான் இழந்தது.

1945பிப்ரவரி

பிரிட்டன் தனது நேச நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமானது. ரூஸ்வெல்ட்ஸ்டாலின் ஆகியோருடன் சர்ச்சில் மிகவும் நெருக்கமாகவேஇறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டது.

1945பிப்ரவரி 13, 14 தேதிகளில் ட்ரெஸ்டன் நகர் தாக்கப்பட்டது. இந்த நகரமே ஜெர்மனியின் தகவல் பரிமாற்ற கேந்திரமாகத் திகழ்ந்தது. பெர்லினுக்கு அடுத்தபடி முக்கியம் பெற்ற நகர் இது.

17ஏப்ரல் 1945

பிரிட்டிஷ் ராணுவத்தால் பெர்ஜன் – பெல்ஜன் சித்திரவதை முகாம் ஏப்ரல் 15-ம் நாள் விடுவிக்கப்பட்டது. யூதர்களை எப்படி ஹிட்லர் சித்திரவதை செய்து கொலை செய்தார் என்பதற்கு இந்த முகாம் பெரிய சான்று.

8மே1945

பிற்பகலில் வின்ஸ்டன் சர்ச்சில், “நேற்று காலை 2.41 மணிக்கு ஜெனரல் ஐஸன்ஹோவர் தலைமையகத்தில் ஜெர்மானிய உயர் அதிகாரிகள் சரணாகதி அடைந்தனர்.” என்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு செய்தியை வெளியிட்டார்.

6ஆகஸ்ட் 1945

ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டைப் போட்டது.

78000 பேர் அதே கணத்தில் உயிரிழந்தனர். 90000 பேர் காயமடைந்தனர்.

9ஆகஸ்ட் 1945

அமெரிக்கா ஜப்பானிய நகரான நாகசாகி மீது அணுகுண்டைப் போட்டது.

2செப்டம்பர் 1945

ஜப்பான் சரணாகதி அடைந்தது.

ஆறு வருடம் ஒரு நாள் நீடித்த இரண்டாம் உலக மகாயுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது!

***

இத்துடன் இந்தத் தொடர் முற்றும்.

Leave a comment

Leave a comment