விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-12 (Post No13,384)
Date uploaded in London – 27 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Part 12
அறிவியல் ரகசியங்கள்
கடவுளை ஆயிரம் நாமங்கள் மூலம் துதிப்பது இந்துமதத்திலுள்ள சிறப்பு அம்சம் ஆகும். இது 2000 ஆண்டுகளுக்கு மேல் வழக்கத்திலுள்ளது. தமிழ் இலக்கியத்திலுள்ள மேற்கோள்களால் இதை அறிய முடிகிறது. ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம். தமிழ்ச் சொல் ஆயிரம் என்பதே சம்ஸ்க்ருத சொல்லிலிருந்து வந்தது என்பதை மொழியியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ரிக் வேதத்தில் இந்தச் சொல், அதிக இடங்களில் வருகிறது. இந்துக்கள் பூஜ்யம் மற்றும் இக்காலத்தில் வழங்கும் 1, 2, 3 , 4 முதலிய எண்களைக் கண்டுபிடித்ததால் தான் கம்பியூட்டர் மொழி உருவாக்கப்பட்டது.
ஆயிரம் நாமங்கள் பல கடவுளர்க்கும் உண்டு.அவைகளில் மிகவும் பழமையானது விஷ்ணு சஹஸ்ர நாமம் (வி.ச.) தான்.
வி.ச.வில் தாவர இயல், விலங்கியல், வானவியல், உலோகங்கள் , கிமு. 1400 ஆண்டு பெயர்கள், வேத கால சொற்கள், காலம், உலகத் தோற்றம் , மருந்துகள், எல்லா கடவுளரின் பெயர்கள், வரலாற்று வம்சாவளிகள் , கொடிகள், நட்சத்திரங்கள் முதலிய பல விஷயங்கள் வருகின்றன. பக்தியோடு படிப்பவர்களுக்கு இவை தெரிவதுமில்லை; புரிவதுமில்லை. பல இடங்களில் திருக்குறள், கீதை , இதிஹாசம், புராண விஷயங்கள் வருகின்றன. ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யத்தில் இவைகளைக் குறிப்பிடுகிறார்.
xxxx
பிக் பேங் எனப்படும் பிரபஞ்சத் தோற்றம்
BIG BANG THEORY
ஒரு புள்ளியிலிருந்துதான் இந்தப் பிரபஞ்சமே விரிவடைந்தது என்பது விஞ்ஞானிகளின் கொள்கை. திடீரென்று வெடித்து அது இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு பலூனில் பேனாவால் புள்ளிகளை வைத்துவிட்டு அதை ஊத ,ஊத புள்ளிகள் எப்படி ஒன்றை விட்டு ஒன்று விலகுமோ அதுபோல பிரபஞ்சமும் விரிவடைகிறது என்பார்கள். ஆனால் ஏன் இப்படி திடீரென்று மாபெரும் வெடிப்பு BIG BANG ஏற்பட்டது ; அந்தப் புள்ளி எங்கிருந்து வந்தது? என்பதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை; வி.ச. பதில் சொல்கிறது.
நாஸா (NASA) என்னும் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் இது பற்றி சொல்லுவதாவது :
13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புள்ளியிலிருந்து வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சம் விரிவடைந்தது. பலூன் போல இன்னும் விரிவடைகிறது. வெடித்த துகள்கள் மிக அதிக வெப்பத்தில், ஒன்று சேர்ந்தன. ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்லவும் குளிர்ச்சி அடைந்து ஒன்று சேர்ந்து அணுக்கள் உருவாயின. அவை இணைந்து நட்சத்திரங்கள், காலக்சிக்கள் உண்டாயின. அதிலிருந்து கிரகங்கள் சிறிய கிரகங்கள் தோன்றின.
ஆனால் ஏன் இப்படி ஒரு புள்ளி வெடித்தது என்று நாஸா சொ ல்லவில்லை.
எனது கருத்து
வி.ச.வில் இரண்டு சொற்கள் இதற்குப் பதில் தருகின்றன.
ஆத்ம யோனி, ஸ்வயம் ஜாதோ (985, 986)
ஆதிசங்கரர், ஆத்ம யோனி பற்றி சொல்லுவதாவது:
விஷ்ணுதான் மூல காரணம் அவர் தன்னைத் தானே பிறப்பித்தார்.. இந்த உலக உற்பத்திக்கு அவரே காரணம் என்று பிரம்ம சூத்திரமும் கூறுகிறது என்கிறார்.
இது போல பிக் பேங் BIG BANG பேச்சுக்கள் எல்லாம் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் அடிபடுகிறது. ஆனால் உலகின் தோற்றம் பற்றிய சிந்தனைகள் ரிக்வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. அதைச் சிந்தித்த ரிக்வேத கால புலவர்கள் வியப்பு மேலிட்டு பாடியுள்ளனர். அந்த காஸ்மாலஜி COSMOLOGY / பிரபஞ்சப் பிறப்பியல் பாடல்கள் எல்லோரையும் வியக்க வைக்கும் பாடல்கள் ஆகும். அதுமட்டுமல்ல உலகமும் மனித இனமும் கி.மு 4000 வாக்கில் பிறந்தது என்று நம்பிய மாக்ஸ் முல்லர் கும்பல்களை திணறடிக்கும் கணித எண்கள் இந்துக்களின் பஜனைப் பாடல்களிலேயே இடம்பெற்றன ஒரு சதுர் யுகம் என்பதே 432,000 ஆண்டுகள் என்று நம் புராணங்கள் செப்பியபோது விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகள் இறைவனை சஹஸ்ரகோடி யுகதாரினே என்று போற்றின – ஆயிரம் கோடி யுகத்தை தாங்கி நிற்பவனே- அதாவது இறைவன் 1000X கோடி X 4,32,000 ஆண்டுகள்.
ரிக் வேதத்தின் காலம் கி.மு.2000 ஆண்டு என்று பேராசிரியர் வில்சன் கூறினார். இவர் மாக்ஸ் முல்லரை வெளுத்துக் கட்டியதோடும் நில்லாமல் , நல்ல ஆங்கில ரிக்வேத மொழிபெயர்ப்பையும் தந்துள்ளார். சிவன் என்னும் பெயர் ரிக்வேதத்தில் இருப்பதைக் காட்டியவர் இவர்.
வேதகால பிரபஞ்ச இயல்/ காஸ்மாலஜி பாடல்கள் RV. 10-129, 10-121, 10-90 etc முதலியவற்றில் இருக்கின்றன. இந்த மாதிரி சிந்தனைகளை எகிப்திய பாபிலோனிய, சுமேரிய, கிரேக்க, மாயன் கலாசாரத்தில் காண முடியாது .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மாபெரும் பிரபஞ்ச வெடிப்புக்கு காரணம் சொல்ல முடியாமல் இன்றுவரை வானவியல் அறிஞர்கள் திணறும்போது விஷ்ணு சஹஸ்ரநாமமோ இது இறைவனின் செயல் என்று ஆத்மயோனி, ஸ்வயமஜாத என்ற இரண்டு சொற்களால் வரையறுக்கிறது
xxxx
பூத , பவ்ய, பவத் பிரபுஹு
கடந்த கால, நிகழ் கால, வருங்காலம் ஆகியவற்றின் அதிபதி விஷ்ணு ; இதன் பொருள் அவன் இந்த முக்காலத்தையும் தாண்டி நிற்பவன் . இதனால் இறைவனுக்கு தேய்மானம் கிடையாது. காலத்தைக் கடந்து நிற்பதால் அவர் சாஸ்வதமானவர்.- வேதம் அவரைக் காலத்திரயாதீதஹ – காலத்திற்கும் அப்பாற்பட்டவன்– என்று புகழ்கிறது
இவ்வாறு காலம் பற்றிச் சிந்தித்தவர் ஐன்ஸ்டைந்தான். அதற்கு முன்னர் காலத்தைப் பற்றிச் சிந்தித்தவர் இல்லை அதை சமய புஸ்தகத்தில் யாரும் சொன்னதுமில்லை. கடந்த-நிகழ்- வரும் காலம் என்பது இலக்கண புஸ்தகத்தில் மட்டுமே வந்த சொற்கள் ஆகும்.
இந்துக்கள் காலப் பயணத்தில் நம்பிக்கை உடையோர். அதை சில சம்பவங்களில் காட்டியுள்ளனர் .இதன் மூலம் ஐஸ்டைன் கொள்கை பாதி சரி பாதி தப்பு என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.
—subham—
Tags- பிக் பேங் ,பிரபஞ்சத் தோற்றம், காலம் , ஐன்ஸ்டைன்