Latest Tamil Book by London Swaminathan மேலும் :அறுபது தலைப்புகளில் 600 கேள்வி-பதில்கள் !!

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முன்னுரை

தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் என்ற தலைப்பில் 600 கேள்விகளும் அதற்கான பதில்களும் முதல் பகுதியாக வெளியானது. அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் 60 தலைப்புகளில் பத்து,  பத்து கேள்விகள் வீதம் சுமார் 600 கேள்வி- பதில்கள் உருவாயின. ‘சுமார்’ என்று சொன்னதற்கு காரணம் என்னவென்றால் சில தலைப்புகளை பத்து கேள்விக்குள் அடக்க முடியவில்லை. ஆகையால் ‘போனஸ்’ கேள்விகளையும் சேர்த்தேன். மேலும் சில தலைப்புகளை 3, 4 பகுதிகளாக வெளியிட்டபோது பத்துக்குப் பதிலாக 40 கேள்விகள் கூட ஒரே  தலைப்பில் வந்துவிட்டன.

இந்த நூல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் QUIZ -க்விஸ் போட்டிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சில கேள்விகளுக்கு ஒரு வரி பதில் இல்லாமல் பத்தி ,பத்தியாக மேல் விவரமும் இருக்கிறது . ஒரு எடுத்துக் காட்டு மட்டும் தருகிறேன் . சந்தனத்தை முழங்கைகளால் அரைத்த நாயனார்  யார்? என்றால் ஒரே வரியில் மூர்த்தி நாயனார் என்று சொல்லிவிடலாம். அடுத்த கேள்வியாக அவர் ஏன் அப்படிச் செய்தார்? என்று கேட்கும்போது மூர்த்தி நாயனாரின் கதை முழுவதையும் சுருக்கமாகச் சொல்லவேண்டி நேர்ந்தது. ஆகவே இதை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எவரும் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

இரண்டாவது பகுதி என்பதால்,  மேலும் அறுபது  தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் ! என்று நூலுக்குப் பெயர் சூட்டியுள்ளேன் . பொருளடக்கத்தைப் பார்த்தாலே நூலின் வீச்சு எத்தகையது என்பது விளங்கி விடும். காடு , மலை பறவை, விலங்கு , சாமி, பூதம் , அரக்கர், தேவர், தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியம் என்று பல தலைப்புகளை அலசும் கேள்விகள் உள்ளன.

ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில்களைச் சொல்லமுடிந்தது என்று ‘மார்க்’ போட்டுக்கொண்டால் உங்கள் அறிவை நீங்களே சோதித்த பலனும் கிட்டும். படியுங்கள் ; பலனடையுங்கள் !

இளைஞர்களுக்கு இதுபோன்ற நூல்களை அறிமுகப்படுத்தி  நம்முடைய கலாசாரத்தையும் சமயத்தையும் இலக்கியத்தையும் வளருங்கள் !

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

பொருளடக்கம்

1..QUIZ தேன் பத்து QUIZ

2.QUIZ மாதப் பத்து QUIZ

3.QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ

4.QUIZ தமிழ் இலக்கண பத்து QUIZ

5.QUIZ செய்நன்றி பத்து QUIZ

6.QUIZ வில்லி பாரதம் பத்து QUIZ

7.QUIZ சங்கீத முத்திரை பத்து QUIZ

8.QUIZ பகவத் கீதை பத்து (Part 2) QUIZ

9.QUIZ ராமேஸ்வரம் பத்து QUIZ

10. QUIZ சங்கீதத்தில் ஊர்கள் பத்து QUIZ

11. QUIZ ரிஷிகேஷ் பத்து QUIZ

12. QUIZ திரு ஓணம் பத்து QUIZ

13. Quiz பாரதி பத்து Quiz

14. Quiz பெயர் மாறிய நாடுகள் பத்து quiz

15. Quiz நட்சத்திரப் பத்து quiz

16. QUIZ  வெந்நீர் ஊற்றுகள் பத்து QUIZ

17. QUIZ பிரம்மா பத்து QUIZ 

18. QUIZ நவராத்திரி பத்து QUIZ

19. QUIZ சரஸ்வதி பத்து QUIZ

20. QUIZ  தீபாவளி பத்து  QUIZ

21. QUIZ அதிசய முதலைப் பத்து QUIZ  

22.QUIZ எவரெஸ்ட் பத்து QUIZ

23.QUIZ இமயமலை பத்து QUIZ

24. QUIZ கார்த்திகை பத்து QUIZ

25.QUIZ விந்திய மலை பத்து QUIZ

26. QUIZ காஷ்மீர் பத்து QUIZ

27. QUIZ புத்தர் பத்து QUIZ

28. QUIZ மஹாவீரர் பத்து QUIZ

29. QUIZ குரு நானக் பத்து QUIZ

30. QUIZ  விநாயகர் பத்து QUIZ

31.QUIZ யானைப் பத்து QUIZ

32. QUIZ  முருகன், கந்தன் QUIZ

33. QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ

34. QUIZ  சிவலிங்கம் பத்து QUIZ

35. QUIZ மதுரா பத்து QUIZ

36. QUIZ வாரணாசி / காசி பத்து காசி QUIZ

37. QUIZ ஹரித்வார் பத்து QUIZ 

38.QUIZ உஜ்ஜைனி பத்து QUIZ

39. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12,940) 21/1

40. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 2

41. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 3

42. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 4

43. QUIZ  புரி பத்து QUIZ

44. QUIZ துவாரகா பத்து QUIZ

45. QUIZ  யமுனோத்ரி, கங்கோத்ரி பத்து QUIZ

46. QUIZ பத்ரிநாத் பத்து QUIZ

47. QUIZ வைஷ்ணவ தேவி கோவில் பத்து QUIZ 

48. QUIZ பஞ்சப் பிரயாகை பத்து QUIZ

49. QUIZ  பஞ்ச கேதார் பத்து QUIZ

50.QUIZ அதிசய காமாக்யா கோவில் பத்து QUIZ

51.QUIZ சிம்லா பத்து QUIZ

52. QUIZ ஜெய்ப்பூர் பத்து QUIZ                                               

53.QUIZ  மயில் பத்து QUIZ

54. QUIZ குயில் பத்து QUIZ

55.QUIZ கிளி பத்து QUIZ               

56.QUIZ அன்னம் பத்து QUIZ

57.QUIZ கருடன் பத்து QUIZ

58.QUIZ ஆந்தை பத்து QUIZ

59. QUIZ பல்லி பத்து QUIZ

60. QUIZ நாமக்கல் பத்து QUIZ

***************************

அட்டைப் படத்தில் பிரம்மா , ஸ்கந்தாஸ்ரமம் , சென்னை

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  மேலும் அறுபது  தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – April  2024

Subject – General Knowledge (Tamil Quiz)

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles in English and Tamil and 117 Tamil and English Books

Visited 15 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy and Greece

*****

tags-மேலும் அறுபது தலைப்புகளில், 600 கேள்வி–பதில்கள் !!

ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது! (Post13,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.303

Date uploaded in London – 4 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (20)

ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

ச.நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் உள்ள 5 சாபங்களில் இரண்டாவதாக வரும் சாபம் பற்றி இனி பார்க்கலாம்.

அயோத்யா காண்டத்தில் 42-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதவிலாபம்’

சோகத்தின் உக்கிரம் தாக்க, படுத்துக் கொண்டிருந்த படுக்கையை விட்டு தசரதர் எழுந்திருக்கவே இல்லை.

மன வேதனை அதிகரிக்க சோர்வடைந்தவராய் அவர் பூமியில் விழுந்து விட்டார்.

அப்போது கோசலை அவரது வலது பக்கத்தில் வந்து நிற்க கைகேயி இடது பக்கத்தில் வந்து நின்றாள்.

கைகேயியைப் பார்த்த தசரதர் பின்வருமாறு உரைக்கலானார்:

கைகேயி ,மா மமாங்கானி ஸ்ப்ராக்ஷீஸ்த்வம் துஷ்டசாரிணீ |

ந ஹி த்வாம் த்ருஷ்டமிச்சாமி ந பார்யா ந ச பாந்தவி ||

கைகேயி – கைகேயி

துஷ்டசாரிணீ – பாபத்திற்குத் துணிந்து விட்டவளே

த்வம் – நீ

பாந்தவி – இதத்தைச் செய்கின்றவளாய்

ந – இல்லை

ஹி – என்கின்றபடியால்

பார்யா – என் மனைவியாக

ந – இருக்க வேண்டாம்

மம – எனது

அங்கானி – அங்கங்களை

மா ஸ்ப்ராக்ஷீ – நீ இனி தொடாதே

த்வாம் – உன்னை

த்ருஷ்டம் ச – கண்ணெடுத்துப் பார்க்கவும்

இச்சாமி ந – விரும்பவில்லை

யே ச த்வாமனுஜீவந்தி நாஹம் தேஷாம் ந தே மம |

கேவலார்தபராம் ஹி த்வாம் த்யக்ததர்மாம் த்யஜாம்யஹம் ||

த்வாம் ச – உன்னையும்

யே – எவர்கள்

அனுஜீவந்தி – பொறாமை இன்றிப் பார்க்கிறார்களோ

தேஷாம் – அவர்களுக்கு

அஹம் – நான்

ந – வேண்டாம்

தே – அவர்கள்

மம – எனக்கு

ந – வேண்டாம்

கேவலார்தபராம் – அற்பமாகிய பொருள் ஒன்றையே சர்வமுமாய்க் கொண்டு விட்டவளாய்

த்யக்த தர்மாம் – தர்மத்தை முற்றிலும் துறந்து விட்டொழித்தவளாய்

ஹி – இருப்பதால்

த்வாம் – உன்னை

அஹம் – நான்

த்யஜாமி – விவாஹ பந்தன நிவிர்த்தி செய்து விலக்கி இது முதல் வைத்திருக்கிறேன்.

அக்ருஹாம் யச்ச தே பாணிமக்னே பர்யாயம் ச யத் |

அனுஜானாமி தத்ஸர்வமஸ்மின்லோகே பரத்ர ச ||

அஸ்மின் – இந்த

லோகே – உலகிலும்

பரத்ர ச – மறு பிறப்பிலும் (அல்லது இதர லோகத்திலும்)

தே – உனது

பாணி – கையை

அக்ருஹாம் – பற்றியதாகியது

யத் ச – எதுவோ

அக்னி – அக்னியை

பர்யாயம் – வலம் வந்து விவாஹம் செய்து கொண்டது

யச் ச – எதுவோ

தத்ஸர்வம் – அந்த சம்பந்தத்தால் உண்டான எல்லாவற்றையும்

அனுஜானாமி – நான் துறந்து விடுகிறேன்.

பரதஸ்சேத்ப்ரதீத: ஸ்யாத்ராஜ்யம் ப்ராப்யேதமவ்யயம் |

யன்மே ச த்தாத்ப்ரீதீத்யர்தம் மாம் மா ததத்தமாகமத் ||

ப்ரதீத: – பெரியோர்களிடத்தில் அசைக்க முடியா பக்தியை உடைய

பரத: – பரதன்

இதம் – இந்த

ராஜ்யம் – ராஜ்யத்தை

அவ்யயம் – அழிவில்லாத பலனை அளிக்க வல்லதாய்

ப்ராப்த – ஏற்றுக் கொண்டு

ச்யாத் சேத் – விடுகின்றான் என்ற பக்ஷத்தில்

ச: – அவன்

மே – எனது

ப்ரீத்யர்தம் – ஹிதத்தின் காரணமாய்

யத் தத்தாத் – எந்த சரம கைங்கரியத்தைச் செய்கின்றானோ

தத் தத்தம் – அந்தை கைங்கரியம்

மாம் – என்னை

மா ஆகமத் – சேராது ஒழியக் கடவது

அயோத்யா காண்டம் 42-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 6,7,8)

இவ்வாறு தசரதர் மொழிந்தார்.

இங்கு தசரதர் கைகேயியைப் பார்த்துக் கூறியவற்றில் சாபம் இடுகிறேன் என்ற வார்த்தை வரவில்லை. என்றாலும் கூட அவர் மனம் வருந்திக் கூறியதைப் பின்னால் சாபம் என்று ஶ்ரீ ராமர் கூறுவதை யுத்த காண்டத்தில் பார்க்க முடிகிறது.

மஹாதேவரின் ஆக்ஞையால் ஸ்வர்க்கத்தில் இருந்த ராஜா தசரதர் விமானத்தில் வந்து ராமரையும் லக்ஷ்மணரையும்  பார்த்து அவர்களைத் தன் மடியில் அமர வைத்துக் கொள்வதை யுத்த காண்டம் 119-ம் ஸர்க்கத்தில் பார்க்கிறோம்.

ராமரை நோக்கி, “நீண்ட ஆயுளுடன் தம்பிமார்களுடன் கூட அரசாள்வாயாக” என்று கூறி ஆசீர்வதிக்கிறார் தசரதர்

அப்போது ராமர் கூறுவது இது :

குரு ப்ரஸாதம் தர்மக்ஞ கைகேய்யா பரதஸ்ய ச |

சபுத்ராம் த்வாம் த்யஜாமீதி யத்யுக்த்வா கைகேயீ த்வயா ||

தர்மக்ஞ – தர்மத்தின் வழியை உணர்ந்தவரே

ச புத்ராம் – ‘புத்திரனுள்ள

த்வாம் – உன்னை

த்யஜாமி – தள்ளி வைக்கின்றேன்’

இதி – என்று

த்வயா – தேவரீரால்

கைகேயீ – கைகேயி தேவியார்

உக்தா – சபிக்கப்பட்டாளோ

யத் – அக்காரணத்தால்

கைகேய்யா: -கைகேயி தேவியிடமும்

பரதஸ்ய ச – பரதனிடமும்

ப்ரஸாதம் –  மனச்சாந்தியை

குரு – கொண்டருள்வீராக

ச சாப: கைகேயீம் கோர: சபுத்ராம் ந ஸ்ப்ருஷேத்ப்ரபோ |

ப்ரபோ -பிரபுவே

ச: – அந்த

கோர: – பயங்கரமான

சாப: – சாபமானது

சபுத்ராம் – புத்திரனுள்ள

கைகேயீம் – கைகேயீயை

ஸ்ப்ருஷேத் ச – பற்ற வேண்டாம்

யுத்த காண்டம், ஸர்க்கம் 122,, ஸ்லோகங்கள் 25, 26

தசரதரை நோக்கி ராமர் இவ்வாறு அந்த சாபம் அவர்களைப் பற்ற வேண்டாம் என்று கூறுகிறார். அவர் தசரதரின் கூற்றை சாபம் என்று இங்கு கூறுகிறார்.

ஆகவே தசரதர் கூறியதை சாபம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

உடனே தசரதர், “ததா இதி” அப்படியே ஆகட்டும் என்று தனது முந்தைய கூற்றை விலக்கிக் கொள்கிறார். சாபம் விலகி விடுகிறது!

***

More (Manu Mystery) Secrets from Vishnu Sahasranama -Part 20 (Last Part) -Post No.13,302

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,302

Date uploaded in London – 3 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Manu is god and god is Manu! Strange indeed. Vishnu Sahasrama (VS) calls God as Manu!

Manu Smriti is criticised by Anti Hindu gangs, because of forty objectionable Anti- Shudra slokas/couplets out of  2685 slokas.  But we know they are interpolated couplets in the big book. My research shows it’s date is closer to Vedic period. It talks about running Sarasvati River . Foreign scholars also date it around 1250 BCE. Wikipedia says

 Philologists Jones and Karl Wilhelm Friedrich Schlegel, in the 18th century, dated Manusmriti to around 1250 BCE and 1000 BCE respectively,

If one reads the entire book one would find out amazing things ( I have read it and written 60 articles in Tamil and English). He was one of the greatest thinkers of Vedic Age. Manu smriti is the oldest law book in the world; older than Hammurabi’s law.

The name Manu itself is a mystery. Hindus attribute each Manvantara  an incredible huge number of years. ( I wrote about it ten years ago in this blog)

Manava is the surname for all those born in the clan of Manu;following names are found in the Rig Veda:

Saaryaata Maanava RV 10-92

Cakshu Maanava 9-52, 9-106-4

Naabaanedishta Maanava- 10-59, 10-61-62

Manu AApasa – 9-5, 9-106-7

Manu Vaivasvata – 8-5, 8-27-31

Manu Samvrana 9-49, 9-101-10

Manyu Tapasa – 10-67, 10-83,84

Manyu Vaisstha 9-29, 9-97-10

Maanya Maitravaruna – 8-67

14 Manus!

Hindus believe that the seventh Manu is ruling the universe now.That is why Hindus who do religious ceremonies, say In Vaivaswata manvantare–  (at the time of Vaivaswata Manu) — in the Sankalpa.

So far the periods of six Manus

Swayambhuva

Svarocisha

Uttama

Tamasa

Raivata

Chaksusha

are over according to the Puranas!

Now we are in the period of Seventh Manu Vaivasvatha.

With this in the background, we have to look at the Manus in the VS.

xxxx

Swayambhuh- Word No. 37 in the VS

Aadi Shankara says,

One who exists by Himself, uncaused by another. Says Manu 1-7 Sa eva swayamudbabhau- He manifested Himself. He is so called because He existed before everything  and over everything. He is the supreme.

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।
सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ ७ ॥

yo’sāvatīndriyagrāhyaḥ sūkṣmo’vyaktaḥ sanātanaḥ |
sarvabhūtamayo’cintyaḥ sa eva svayamudbabhau || 7 ||

He,—who is apprehended beyond the senses, who is subtle, unmanifest and eternal, absorbed in all created things and inconceivable,—appeared by himself. (7)

xxxx

Manuh — Word No. 51 in the VS

He who thinks. The Brhadaaranyaka Upanishad 3-7-23 says,

Naanyo’tosti mantaa- There in no thinker other than He. Or He is called Manu, because He manifests in the form of Mantra and of Manu (Patriarch).

xxxx

Aadi Shankara quotes in two more places.

Bhuur- buvah- svastaruh- Word No. 967 in the VS

The three Vyaahrutis- Bhuuh- bhuvah- svah- are said to be the essence of the Veda.

Manu says,

Agnau prastaa’hutih samyag aadityam upatisthate

Aadityaad jaayate vrstir vrster annam tatah prajaah

Meaning

The oblations put in the fire reach the sun. from the sun comes the rain; from rain food grows. From food beings are born . or Bhuuh, Bhuvah,Svah stand for the three worlds  and constitute the tree of Samsaara. It is the Lord who has manifested as that tree.

xxxx

Naaraayanah – Word No. 245 in the VS

He is called Naaraayana also because He is the residence (ayana) of all beingsat the time of dissolution.

Says Manu 1-10

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।
ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥

āpo nārā iti proktā āpo vai narasūnavaḥ |
tā yadasyāyanaṃ pūrvaṃ tena nārāyaṇaḥ smṛtaḥ
 || 1-10 ||

Water is called ‘nara,’—water being the offspring of nara; since water was the first thing created by (or, the original residence of) that being, he is, on that account, described as ‘nārāyaṇa.’—(1-10) Manu Smrti.

—subham—

Tags- Manu, in Vishnu Sahasranama, Swayambhu

எப்போது டாக்டரிடம் போகவேண்டும்? (Post No.13,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,301

Date uploaded in London – 3 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா அல்லது உடல் நலம் குன்றியிருக்கிறாரா  என்பதை எப்படி அறிவது? இதை நாமே அறிந்துகொள்ள  நமது உடல் சில அடையாளங்களை, அறிகுறிகளைக் காட்டுகிறது. அதைப் புரிந்துகொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

உடலை  ஒரு நோய் தாக்கும் வரை பலருக்கும் மருத்துவ விஷயங்களில் ஆர்வம் இருப்பதில்லை. நோய் என்று டாக்டர் அறிவித்துவிட்டாலோ உலகிலுள்ள அத்தனை மருத்துவக் கட்டுரைகளையும் புஸ்தகங்களையும் ஊன்றிப் படிப்பது வழக்கமாகிவிடுகிறது . எந்த மூலிகை என்ன பலன் தரும் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவ்வாறு  கடைசி நேரம் வரை காத்திராமல், எப்போது டாக்டரிடம் போக வேண்டும் என்பதை முதலில் அறிவோம் .

உடலின் எடை  

ஒருவரின் எடை திடீரென்று கூடினாலோ குறைந்தாலோ நல்லதல்ல. திடீரென்று காரணமில்லாமல் குறைந்தால் பெரிய நோயின் அறிகுறி ஆகும்; உடனே டாக்டரை கலந்தாலோசிப்பது அவசியம். நாமாக உடற்பயிற்சி செய்து குறைந்தால் கவலைப்படத் தேவை இல்லை. அதே போல காரணமில்லாமல் உடல் எடை கூடினால் உணவு பற்றி நமக்கு ஆலோசனை கூறும் (Dietician ) டயடீசியனை பார்க்க வேண்டும் . அவர் முதலில் நீங்கள் காலை முதல் இரவு  வரை என்னென்ன  சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு எழுதிக்கொண்டு, என்ன மாறுதல் செய்யவேண்டும் என்று கூறுவார்.

வாய் ஆரோக்கியம்

ஒருவருக்கு வாயில் புண் வந்தாலோ (Ulcer)

வாய் வெந்து போனது போல இருந்தாலோ அது நல்ல அறிகுறி அல்ல. ஏதோ ஓரிரு நாள் இப்படி இருந்தால் டாக்டரிடம் ஓடிவிடாதீர்கள். அடிக்கடி இப்படி வந்தாலோ, தொடர்ந்து இந்த நிலை இருந்தாலோ மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஈறுகளிலிருந்து (Gums ) ரத்தம் கசிந்தாலோ கடுமையான பல்வலி இருந்தாலோ,  

பல் கூசுவது நீடித்தாலோ நல்ல அறிகுறி அல்ல.

கண் சொல்லும் செய்திகள்

காதல் பார்வை, வெறுப்புப் பார்வை, கோபப் பார்வை என்பதையெல்லாம் பரத நாட்டியத்தில் காட்டுவார்கள் ; அது எல்லாம் நடிப்பு.. உண்மையான ஆரோக்கியத்தையும் , ஆரோக்கியம் இல்லாத நிலையையும் கூட கண்கள் காட்டிவிடும்  கண் சிவத்தல், கண் அரித்தல் இவைகள் நீடித்தால் கண்களைக் கசக்காமல் டாக்டரிடம் செல்லுங்கள் ; அதே போல கண்ணின் சாதாரண வெள்ளை நிறம் மஞ்சளாக  மாறினாலும் காமாலையாக இருக்கலாம்.

கால், கணுக்கால்  வீக்கம்

வயதானவர்களுக்கு காலின் நிலை மாறிக்கொண்டே வரும். சிலருக்கு காலிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காலில் அடிபட்டதே தெரியாமல் இருக்கலாம்; அதாவது இரத்தம் கசியும் காயம் ஏற்பட்டும் கூட, வலி அல்லது உணர்ச்சியே இல்லாமல் இருக்கலாம். உடனே டாக்டரிடம் சென்றால் அவர் தக்க ஆலோசனை சொல்லுவார் . உங்களைக் கண்களை மூடும்படி சொல்லிவிட்டு ஒரு குச்சியை ஓவ்வொரு இடமாகத் தொட்டு, உங்களுக்கு உணர்ச்சி தெரிந்தால் ஆமாம் என்று சொல்லுங்கள் என்பார். இதன் மூலம் அவர் உங்கள் காலின் ஆரோக்கியத்தை அறிவார்.

எதையும் தாங்கும் இருதயம்

உங்களுக்கு சம வயது உள்ளவர்களுடன் நீங்கள் நடந்து போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம்; அப்போது உங்களுக்கு மூச்சு விடுவது கஷ்டமாக இருந்தாலோ, மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கினாலோ இருதயம் பலவீனம் அடைந்து விட்டது என்ற அறிகுறியைத் தெரிவிக்கிறது. அதே போல பஸ்  அல்லது ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடும்போது இருதயத்தில் / மார்பில் வலி ஏற்பட்டாலும் ரத்தத்தில் ‘கொலஸ்ட்ரால்’ (Cholesterol )

என்னும் கொழுப்புச் சத்து கூடிவிட்டதா என்று மருத்துவரிடம் கேட்பது  நல்லது

தோலின் நிறம்

வழக்கமான நிறம் இல்லாமல் தோலின் நிறம் மஞ்சளாக மாறினால் மருத்துவரைக் கலந்து ஆலோசியுங்கள் .

மல ஜல மாற்றம்

தினமும் காலைக் கடன் செய்து முடிப்பது ஆரயோக்கியமான வாழ்வினைக் காட்டும். மலச்சிக்கல் (Constipation) இருந்தாலோ ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில் காலைக் கடன்களைச்  செய்வது வழக்கமாவிவிட்டாலோ,  வயிற்றின் நலம், ஜீரண சக்தி சரியில்லை என்று பொருள். வயிற்று எரிச்சல், பொருமல், வாயு வெளியேற்றம் போனறவை தொடர்ம்ந்து இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள். ஒரு கல்யாணச் சாப்பாடு, விருந்துச் சாப்பாட்டுக்குப் பின்னர் வரும் தொல்லை எல்லாம் ஒரு வேளை பட்டினி கிடந்தாலே தீர்ந்துவிடும் அப்படி இல்லாமல் தொடர்ந்து பிரச்சனை இருந்தால் அது நோயின் அறிகுறி . மலத்தில் ரத்தக் கறை , அல்லது கருப்பான மலம், வெளுப்பான மலம் இவை இருந்தாலும் நோயின் அறிகுறிகள்தான். (கர்ப்பிணிப் பெண்களுக்குக்  கொடுக்கப்படும் அயன்/ இரும்புச் சத்து மாத்திரைகளால் நிறம் மாறும்; மலச்சிக்கல்  வரும்.)  அதைக் கண்டு அஞ்ச வேண்டாம்

சிறுநீர் போகும்போது எரிச்சல் இல்லாமல் வெளுப்பு நிறமாக இருந்தால் ஆரோக்கியம் என்று பொருள்; மஞ்சள் நிறம் நல்லதல்ல. ஆனால் எரிச்சலோ வலியோ, ரத்தக் கறையோ (Blood Stain) தென்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

இருமலும் தடுமனும்

மழைக் காலம் வந்தாலோ , வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் இருமல் வந்தாலோ மற்றவர்களுக்கும் பரவுவது இயற்கையே. குளிர் வீசும் மேலை நாடுகளில், மூடப்பட்ட, காற்றோட்டமில்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது . மேலை நாடுகளில் ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே பெற்றோர்களை அழைத்து பையனையோ பெண்ணையோ வீட்டுக்கு கூட்டிப்போய்விடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள் ; நாலைந்து நாட்களில் இருமல் குறையாமல், அதிகரித்துக்கொண்டே வந்தால் டாக்டரை அணுக வேண்டும் சிலவகை இருமல் ஒரு மாதம் கூட நீடிக்கிறது. ஆனால் அதிகரித்தால் காச நோய் எனப்படும் டி.பி.யா  (TB/Tuberculosis)

என்று பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது ..

அதிகரித்துக்கொண்டே வரும் இருமல், மாலைநேரத்தில் காய்ச்சல், இரவு  நேரத்தில் வியர்த்தல் ஆகிய மூன்றும் இருந்தால் காச நோயா (க்ஷய ரோகம் அல்லது டி .பி.) என்று  சோதித்துக்கொள்ளுங்கள்.

மன நலம்

ஒருவர் தினமும் ஆறு 6 மணி முதல் ஒன்பது மணி நேரம் வரை உறங்க வேண்டும். அப்படி உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு யோஜனை செய்து கொண்டிருப்பது நல்லதல்ல. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, கவலைப்படுவது, வழக்கமாக செய்து வந்த வேலைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, மற்றவர்கள் பேசும்போது அவர்கள் தனைப் பற் றித்தான் ‘கிசுகிசு’ பேசுகிறார்கள் என்று சந்தேகப்படுவது, எதற்காக நாம் வாழ வேண்டும் என்று நினைப்பது ஆகியவை மன நோயின் அறிகுறிகள்; சில துக்க நிகழ்வுகளால் அல்லது தோல்விகளால், பொருள் இழப்புக்களால்  இவை யாருக்கும் வாழ்க்கையில் ஓரிரு முறை வரத்தான் செய்யும். இப்படிப்பட்ட நிலை வாரக் கணக்கில்மாதக் கணக்கில் நீடித்தால் மருத்துவர்கள் உங்களுக்கு தக்க ஆலோசனை வழங்குவார்.

ஜனன உறுப்புகள் (Genital Organs)

சிறுநீர் , மலம் ஆகியன கழிக்கும் உறுப்புகளில் கடுமையான புண்கள் இருந்தால் வெட்கப்படாமல் டாக்டரைக்  கலந்தாலோசியுங்கள் . பாலியல் நோய் (STD, VD)  என்று டாக்டர்கள் சொன்னாலும் கவலைப்படத் தேவையில்லை ; எல்லாவற்றையும் குணப்படுத்த மருந்துகள் இருக்கின்றன செக்ஸ் விஷயங்ககளில் ஈடுபடும்போது வலி ஏற்பட்டாலும் கலந்துபேசுவது நல்லது .

பெண்களுக்கு எச்சரிக்கை

பெண்கள் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தாய்ப்பால் கொடுக்கும் உறுப்புகளில் ஏற்ப்படும் மாற்றம் ஆகும். குளிக்கும் போது அந்த உறுப்புகளை அமுக்கி ஏதேனும் (உள்ளுக்குள்)கட்டி இருந்து அது சில வாரங்ககளுக்கு நீடித்தால் மருத்துவர்களிடம் வெட்கப்படாமல் சொல்ல வேண்டும்.

இந்த உறுப்புகளில் வரும் கட்டி, சாதாரணமாக வரும் கட்டியாகவோ புற்றுநோய் (Breast Cancer) கட்டியாகவோ இருக்கலாம். டாக்டரும் கூட சாம்பிள் எடுத்து பரிசோதனக்கு அனுப்பி முடிவு வந்த வுடன்தான் அது புற்றுநோயா என்று சொல்ல முடியும்; ஆரம்ப காலத்திலேயே  கண்டறிந்தால் உயிருக்கு ஆபத்து இல்லை.

இதே போல மாதவிலக்கில் வரும் மாற்றங்களையும் டாக்டரிடம் சொல்ல வேண்டும் ; 28 நாட்களுக்கு ஒருமுறை வரவேண்டியது முன் பின் தள்ளிப்போகலாம். அதே போல மாதவிலக்கு நீடிப்பது எட்டு நாள் வரை கூட இருக்கலாம் . அடிக்கடி மாறிக்கொண்டே வந்தால் மட்டும் டாக்டர்களிடம் சொல்லுங்கள்

ஆரோக்கிய வாழ்வு என்பது பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கிறது. டாக்டர்களிடம் வெட்கப்படாமல் சரியான தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

– சுபம்-Tags- நோய் அறிகுறிகள், டாக்டரிடம், ஆலோசனை, உடல் உறுப்புகள்

ஆசாரக்கோவை  நூல் சொல்லும் பயன்படும் ஆரோக்கிய குறிப்புகள் (Post No.13,300)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,300

Date uploaded in London – 3 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆசாரக்கோவை என்ற நூல்   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இது சம்ஸ்க்ருதத்தில் உள்ள செய்யுட்களை தமிழில் வழங்குகிறது. நூறு செய்யுட்கள் இதில் அடக்கம். நல்லோரின்  நடத்தை முறைகள் ஆசாரம் எனப்படும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட நூல் என்பதால் சில விஷயங்கள் இன்று பொருத்தமில்லாமலோ அல்லது பின்பற்ற முடியாமலோ இருக்கலாம். ஆயினும் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,  மக்கள் எவ்வாறு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

உணவு உண்ணுதல் பற்றிய விதிமுறைகளை மேலை நாட்டினர் கூட இன்றும் பின்பற்றுகின்றனர்  நம் நாட்டில் மந்திரம் சொல்லி உண்ணுவது போல மேலை நாட்டினர்  அங்கு வந்த அன்றைய கதாநாயகனுக்கு வாழ்த்து கூறி சியர்ஸ் Cheers என்று சொல்லி கிளாஸ்களை உயர்த்திவிட்டு சாப்பிடுகிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆயின் இறைவனுக்கு நன்றி சொல்லி உண்ணு கிறர்கள் . இந்தியாவில் உண்ணும் உணவை அமைர்ஹாம் என்று மந்திரம் சொல்லி உண்ணுவர் . முடிவில் அன்ன தாதா சுகி பவ என்று வாழ்த்துவர்- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.

பாடல்18 : உண்ணும் முறை

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து

உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார்

உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெடுத்துக்

கொண்டார் அரக்கர் குறித்து.

குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து,  (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

பாடல் 19 : உண்ணுவதற்கு முன்னர் கை , கால் கழுவு

காலில்நீர் நீங்காமை உண்டிடுக; பள்ளியும்

ஈரம் புலராமை ஏறற்க என்பதே

பேரறி வாளர் துணிவு.

பொருள் :

கால் கழுவி, நீர் உலர்வதற்கு முன்னரே (உடனே) சாப்பிட அமந்துவிடவேண்டும்; ஈரம் காய்ந்த பின்னரே படுக்கவேண்டும், என்பது சிறந்த அறிவு உடையவர் முடிவு.

பாடல் 20 : உண்ணும் போது  பேசாமல் உண்ண வேண்டும்

உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து,

தூங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும்,

பிறிதுயாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு,

உண்க உகாஅமை நன்கு!

பொருள் :

உணவு உண்ணும் பொழுது கிழக்குத் திசை பார்த்து அமர்ந்து, தூங்காமல், அசைந்தாடாமல், நன்றாக அமர்ந்து, வேறு எங்கும் பார்க்காமல், பேசாமல், உணவை வணங்கி, சிந்தாமல் நன்றாக மென்று உண்ண வேண்டும்.

பாடல் 21 : பறவைகளுக்கு முதலில் உணவிடு 

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை

இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்

ஒழுக்கம் பிழையா தவர்.

பொருள் :

என்றும் ஒழுக்கம் தவறாதவர்கள் அதிதி என்ற விருந்தினர்  வீட்டிலுள்ள வயதானவர்கள், பசு, பறவைகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவு கொடுத்த பின்னரே தாங்கள் உண்பார்கள்.

பறவைகளுக்கு முதலில் உணவிடுதற்கு  அறிவியல்  காரணங்கள் உள்ளன . சமைத்த உணவில் ஏதேனும் விஷப்பொருள் விழுந்திருந்தாலும் சிறிய உடல் படைத்த பறவைகள் உடனே இறந்து விடும்; இது பிறருக்கு எச்க்காரிகையாக அமையும் 

பாடல் 22 : வாயிற்படிக்கு நேராக உண்ணு

ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல

முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்

முகட்டு வழிகட்டிற் பாடு.

பொருள் :

முன்சொன்ன கிழக்கு முகமாக அமர்ந்து உண்ணமுடியவில்லை என்றால் மற்ற திசைகளை நோக்கியும் உண்ணலாம். வாயிற்படிக்கு நேராக இருந்து உண்ணுதல் நல்லது என்று புகழ்ந்தார்கள்; வாயிற்படிக்கு நேராக கட்டிலிட்டுப் படுத்தல் நல்லதல்ல என்று இகழ்ந்தார்கள் அறம் அறிந்தவர்கள்.

இந்தக் காலத்தில் இது பொருந்துமா என்று தெரியவில்லை; நாம் சாப்பிடும்போது மற்றவர்களையும் அழைப்பது போல வாசலுக்கு நேராக அமர்ந்து உணவு உண்டனர் போலும். இப்போது வீடுகள் பல்வேறு திசைகளை நோக்கிக் கட்டப்படுவதால் கிழக்கு திசை என்பதும் பொருந்தாது. அந்தக்காலத்தில் காலையிலோ மாலையிலோ சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையும்படி வீடுகளையும் கோவில்களையும் கட்டினர்

பாடல் 23 : படுத்துக் கொண்டு  உண்ணாதே

கிடந்துண்ணார்; நின்றுண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;

சிறந்து மிகவுண்ணார்; கட்டின்மேல் உண்ணார்;

இறந்தொன்றும் தின்னற்க நின்று.

பொருள் :

படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் திறந்த வெளியிலும் உண்ணக்கூடாது. ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் கூடாது. கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது. நெறி இல்லாமல் அளவு கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு திண்ணல் ஆகாது.

பாடல் 24 : உண்ணும் போது நெருக்கம் வேண்டாம்

முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்

என்பெறினும் ஆன்ற வலமிரார், தம்மிற்

பெரியார்தம் பாலிருந்தக் கால்.

பொருள் :

பெரியவர்களுடன் சமபந்தியாக இருந்து உண்ணும் பொழுது, அவர்கள் உண்ணத் தொடங்குமுன் தாம் உண்ணார், அவர்கள் உண்டு எழுவதற்கு முன்னால் தாம் எழமாட்டார்; அவர்களுடன் மிக நெருங்(க்)கி அமர்ந்துண்ணார்; அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்து உண்ணுதலும் ஆகாது.

பாடல் 25 : முதலில் இனிப்பு!

கைப்பன வெல்லாம் கடை, தலை தித்திப்ப,

மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்

துய்க்க, முறைவகையால் ஊண்.

பொருள் :

கசப்பான உணவை கடைசியிலும் இனிப்பான  உணவை முதலிலும் மற்ற சுவைகளை இடையிலும் கிரமமாக (முறைப்படி) உண்ணவேண்டும்.

மேலை நாடுகளில் கடைசியில்தான் இனிப்பு பரிமாறப்படும்; அதை டெஸெர்ட் dessert என்பர் . முதலில் இனிப்பு சாப்பிவிட்டால் நாம் உண்ணும் சோறு போன் ற்வற்றைக் குறைத்து உண்போம்; வயிறு பெருக்காது ; தொந்தி விழாது

பாடல் 40 : உண்ணும் பொழுது திட்டாதே

உயர்ந்ததின் மேலிரார், உள்ளழிவு செய்யார்,

இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்

இளங்கிளைகள் உண்ணு மிடத்து.

பொருள் :

சிறுவர்கள் உண்ணுமிடத்தில் பெரியவர்கள் உயர்ந்த இடத்தின் மேல் இருத்தல் கூடாது. சிறுவர்கள் செய்யக்கூடாத குற்றங்கள் செய்திருந்தாலும் உண்ணும் பொழுது அவர்கள் மனம் நோகும்படி எதுவும் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது.

என் கருத்து

இந்தப் பாடலை சிறிது அலசுவோம் ; பந்தி வஞ்சனை கூடாது . சாப்பிடும் இடத்தில் அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே மரியாதைதான். ; சிறியோர் பெரியோர் என்ற வேறுபாடும் இல்லை. அந்த இடத்தில் சுடு சொற்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் என்ன தவறு செய்திருந்தாலும் சாப்பிடும்போது அ வர்களிடம் சொன்னால் மனம் மிக நோவதுடன், கோபத்தில்  சபிக்கவும் செய்வார்கள்   நந்த வம்ச அரசன் ஒருவன், சாணக்கியனை சாப்பிடும் மண்டபத்தில் அவமதித்து வெளியேற்றியதால் நந்த வம்சத்தை சாணக்கியன் அடியோடு ஒழித்து மகத சாம்ராஜ்யத்தை நிறுவியதை சம்ஸ்க்ருத நாடகங்களில் காண்கிறோம்.

To be contined———————————–

tags–உணவு, உண்ணும் முறை, ஆரோக்கியம் , ஆசாரக் கோவை , பாடல்கள்

ராமாயணத்தில் சாபங்கள் (19) கோசலை சாபத்திற்கு நிகர் வார்த்தை கூறியது! (Post.13,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.299

Date uploaded in London – 3 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (19) 

ராமாயணத்தில் சாபங்கள் (19) கோசலை ராமனைப் பிரிய முடியாமல் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

ச.நாகராஜன் 

இது வரை வால்மீகி ராமாயணத்தில் உள்ள 61 சாபங்களில் பால காண்டத்தில் உள்ள 18 சாபங்களின் விவரங்களைப் பார்த்தோம்.

அடுத்து அயோத்யா காண்டத்தில் உள்ள 5 சாபங்கள் பற்றி இனி பார்க்கலாம்.

 கைகேயி தான் பெற்ற இரு வரத்தால் ராமனைக் காட்டிற்கு அனுப்பவும் பரதனுக்கு முடி சூட்டவும் தசரதனிடம் கோர அவரும் வரம் கொடுத்ததைக் காக்க வேண்டிய கட்டாயத்தினால் அப்படியே வரம் ஈந்தார். தன் உயிரையும் விட்டார்.

ராமர் காட்டிற்குப் புறப்படத் தயாராகி அன்னை கோசலையிடம் விடை பெற அவரது இருப்பிடத்திற்கு வந்தார் – லக்ஷ்மணனுடன்.

அயோத்யா காண்டம் இந்த உருக்கமான நிகழ்ச்சியை, ‘தந்தையின் சொல்லை ரக்ஷிக்க பிரதிக்ஞை செய்வது’ என்ற 21-ம் ஸர்க்கத்தில் விவரிக்கிறது.

ராமனைக் காட்டுக்கு அனுப்ப கோசலை உடன்படவில்லை.

லக்ஷ்மணனோ, ‘தகாது சொன்ன தசரதனைக் கொல்லலாமே’ என்று சொல்லி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

கோசலை ராமனை நோக்கி, “நீ கடுந்துயரத்தால் மனம் நொந்து பரிதவிக்கும் என்னை விட்டு காட்டிற்குப் போய் விடுவேன் என்றால் நான் இந்த இடத்திலேயே இப்படியே உட்கார்ந்த வண்ணமே பட்டினி இருந்து என் உயிரை  மாய்த்துக் கொள்ளும் விரதத்தை அனுஷ்டிப்பேன். பிழைத்திருக்க மாட்டேன். இது நிச்சயம்” என்கிறாள்.

அடுத்து அவள் கூறுகிறாள்:

ததஸ்தம் ப்ராப்யஸ்யஸே புத்ர நிரயம் லோகவிஸ்ருதம் |

ப்ரஹ்மஹத்யாமிவாதர்மாத்ஸமுத்ரஸ்மரிதாம் பதி: ||

–    அயோத்யா காண்டம், 21-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 28

புத்ர – குழந்தாய்

தத: ஸ்வம் – அப்படியாகில் நீ

சரிதாம் பதி: – நதிகளின் கணவனாகிய

ஸமுத்ர: – ஸமுத்திர ராஜன்

அதர்மாத் – ஈன்ற மாதாவுக்கு மன வருத்தத்தை உண்டாக்குகிறதால் விளையும் அதர்மத்திற்கு பாத்திரமாய் விட்டான் என்னும் காரணத்தால் ப்ரஹ்மஹத்தி தோஷம் எவ்வளவோ அவ்வளவை அடைந்தது எப்படியோ அப்படியே மூவுலகத்தார்களுக்குத் தெரிகின்றதாகிய நரகத்தை நீ அடைவாய்”

இங்கு கோசலை ஶ்ரீ ராமருக்கு சாபத்தைத் தரவில்லை. ஆனால் தன் துயரமுற்ற மனம் எப்படி வாடுகின்றது என்பதை எடுத்துக் கூறுகிறாள்.

சாபத்தைத் தராமல் அப்படி ஒரு வருத்தம் அடையத்தக்க நடந்த ஒரு நிகழ்ச்சியை அவள் ராமருக்குச் சுட்டிக் காட்டுகிறாள்.

உடனே ராமர், “தந்தை சொன்ன வாக்கை மீறும் அதிகாரம் தனக்கு இல்லை என்பதையும் தான் காட்டிற்குப் போக சித்தமாகி விட்டதையும் தெரிவிக்கிறார்.

விதியின் வசத்தால் இப்படி நேர்ந்து விட்டது என்பதை ஶ்ரீ ராமர் சுட்டிக் காட்டுகிறார்.

தாயையும் லக்ஷ்மணனையும் அவர் தக்க வார்த்தைகளைக் கூறி சமாதானப்படுத்துகிறார்.**

More (Nature ) Secrets from Vishnu Sahasranama -Part 19 (Post No.13,298)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,298

Date uploaded in London – 2 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

The names of sea and lakes are attributed to Lord Vishnu in the Vishnu Sahasranama (VS). We don’t see such things in other religions. Let us look at some examples

Jagatah Setuh — Word No. 288 in the  Vishnu Sahasranama (VS)

One who is the aid to go across the ocean of Samsaara  or one who like a  Setu or bund preserves the social order. Says Brhadaaranya Upanishad 4-4-22-

Esa setur vidharana  esaam lokaanaam asambhedaaya-

He is verily the Setu, the bund, that saves the worlds from the chaos of intermingling.

My comments

The word Setu gives us two or three important points.it means a bridge like Rama Setu or a dam like Grand Anicut in Tamil Nadu . Hindus were great dam builders’ for example one Girnar inscription gives us the history of 400 year old lake. After the heavy rains there was a big breach and then the engineers repaired it. Amazing thing about the inscription is that it gives 400 year history of the lake and its bunds.

Second thing is about the importance of water storage for drinking and irrigation. That is where we hear about the Grand Anicut in Tamil Nadu bult by Karikaal Chozaa 2000 years ago.

The word Samsaaraa Sagara in the interpretation shows Hindus were great sea farers. Because family life with birth and death is compared to Saagaara/sea and crossing is referred to it. This is also proved by images of boat in on Sathavahana coins , Harappan symbols, and Vedic reference to big ships and seas.

xxxx

Apaamnidhih- Word No. 323 in the VS-

The word means collective source of water or the ocean. in the Bhagavad Gita we read about ocean in many places. Sloka 10-24 says,

Sarasaam asmi saagarah- among all pools of water I am ocean/Samudra. The Lord is called by that name because the ocean is one of His manifestations.

There is another sloka which describe the mighty ocean:

आपूर्यमाणमचलप्रतिष्ठं
समुद्रमापप्रविशन्ति यद्वत् |
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे
 शान्तिमाप्नोति  कामकामी || 70||

āpūryamāṇam achala-pratiṣhṭhaṁ
samudram āpaḥ praviśhanti yadvat
tadvat kāmā yaṁ praviśhanti sarve
sa śhāntim āpnoti na kāma-kāmī

BG 2.70: Just as the ocean remains undisturbed by the incessant flow of waters from rivers merging into it, likewise the sage who is unmoved despite the flow of desirable objects all around him attains peace, and not the person who strives to satisfy desires.

This is a beautiful description of ocean āpūryamāṇam—filled from all sides; achala-pratiṣhṭham—undisturbed; samudram—ocean;

My comments

All words regarding water sources, water rituals, water hymns, holy baths and river worship found in the Vedic Literature explodes Max Muller gang’s Aryan Invasion Theory. Had they been migrants from colder regions of Central Asia or Europe, they would not talk about holy bath and water rituals. Till this day Brahmins are doing sun worship with water thrice a day ( I do it in London)

For instance, Eskimos living in North Pole has over 100 words for ice, where as Hindus living in Hindustan has over 100 words for water. This shows Hindus are sons of the soil.

xxxx

Ratnagarbhah – Word No. 473 in the VS-

This is one of the names of Lord Vishnu.

The ocean is called Ratnagarbhah because gems are found in its depths. As Lord has taken the form of the ocean, He is called by this name.

Pearls and corals are described throughout ancient Sanskrit and Tamil literature.

xxxx

Ambonidhih- Word No.517 in the VS-

One in whom the Ambas or all beings from Devas down Asuras dwell. The Sruti says,

Taani vaa etaani catvaary ambhamsi devaahaa manusyaahaapitaro suraahaa- Devas, Men, Pitrs, Asuraas – these are the four Ambhas

xxxx

Naaraayanah- Word No.245 in the VS-

Water is called Naaraa. Lord resides (Ayana) in water and so he is called Naaraayana.

There are so many words in the VS like Srutisaagara where water is referred to.

In short Water is God for Hindus and so they originated in Tropical areas and not temperate or icy Siberia. All Aryan migration theories can be dust binned with the research on water terms. Sine the white skinned foreigners were neither Hindu followers nor they seen anything a Hindu does throughout his life. From birth to death Hindus use water in all their ceremonies and rituals.

–subham—

Tags – Water terms, of Lord Vishnu, ocean, Vishnu Sahasranama, research article No.19

இரும்பைத் தங்கம் ஆக்கலாம்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-19 (Post.13,297)

Queen in Bank of England Gold storage.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,297

Date uploaded in London – 2 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இரும்பு, ஈயம், தாமிரம், பாதரசம் போன்ற உலோகங்களை தங்கம் ஆக்கலாம் என்று இந்து மத யோகிகளும், சித்தர்களும் ஞானிகளும் பாடியுள்ளனர் . இந்தக் கலைக்கு ரசவாதம் என்று பெயர் பரிசனவேதி அல்லது ‘ரசமணி’யால் விலை குறைந்த உலோகங்களைத் தொட்டால் அவை தங்கம் ஆகிவிடும் என்பது அவர்கள் கூற்று. ஆயினும் விஞ்ஞானிகள் இதை நம்புவதில்லை. புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் கூட இப்படி ஒரு ரசமணி உண்டு என்று நம்பி தீவிர ஆராய்ச்சிகளை செய்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்து மத சித்தர்களும் கவிஞர்களும் இது பற்றிப் பாடிய போதும் இந்த ரசவாத வித்தையை உவமையாகவே பயன்படுத்தியுள்ளார்கள். நேரில் தங்கமாக மாற்றி யாருக்கும் கொடுத்ததாக பாடவில்லை. மராத்தி மஹான் ஞானேஸ்வர் போன்றோரும் இந்த பரிசனவேதி பற்றிப்  பாடியுள்ளனர்.

பரிசனவேதியை ஆங்கிலத்தில் ‘பிலாசபர்’ஸ் ஸ்டோன்’ என்பர் .

philosopher’s stone stone or substance thought by alchemists to be capable of transmuting base metals into gold.

திருமந்திரத்தில் இது பற்றிப் பல பாடல்கள் கிடைக்கின்றன. ஆயினும் அப்படித் தங்கம் செய்து யாருக்கும் கொடுக்கவில்லை. ஆன்மீக விஷயங்களை விளக்கவே அதை உவமையாக பயன்படுத்தியுள்ளார். இருந்தபோதிலும் இது இருந்ததாகவே இயம்புகிறார். .இதை ஆங்கிலத்தில் ALCHEMY என்று சொல்வார்கள்.

தாயுமானவர்  பாடல் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்:

தாயுமானவர் பாடல் இதோ:–

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்;

வேறொருவர் காணாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

இரசவாதம் –

சம்ஸ்க்ருதத்தில் யோகரத்ன மாலா  என்று நூலை இயற்றிய நாகார்ஜுனர் ஏராளமான அதிசய விஷயங்கள், வித்தைகள் பாற்றி எழுதியுள்ளார் அவர் ரசவாதம் மூலம் தங்கத்தை உண்டாக்கி ஏழைகளுக்கு கொடுத்ததாக அவருக்குப்பின் வந்தவர்கள் அவரது புகழை எடுத்துரைத்துள்ளார்கள் .

போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவர் ஒரு சீனர்; .ஒருவேளை அவர் , நாகார்ஜுனாவிடம்  பாடம் கற்றிருக்கலாம் அல்லது அவரது நூல்களைப் பயின்றிருக்கலாம். ஏனெனில் நாகார்ஜுனா எழுதி நூல்கள் அனைத்தும்  நாளந்தா பல்கலைக்கழக நூலகத்துக்கு  முஸ்லீம்கள்  வைத்த  தீயில் அழிந்துவிட்டன; . நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு அவர் துணைவேந்தராக இருந்தார். நல்ல வேளையாக அங்கு படிக்க வந்த  சீன அறிஞர்கள் அவரது நூல்களை எல்லாம் மொழிபெயர்த்து சீனாவுக்கு எடுத்துச் சென்றனர். இப்பொழுது நாகார்ஜுனாவின் புஸ்தகம் எல்லாம் சீன மொழியிலிருந்து  மொழிபெயர்த்து நாம் அறிந்து வருகிறோம்.

இரும்பு , ஈயம் போன்ற  விலை குறைந்த மூலகங்களை வெள்ளி, தங்கமாக மாற்றும் வித்தை (Alchemy) ரசவாதம் எனப்படும் . அவர் இது போன்ற அதிசய விஷயம் பற்றி மட்டும் பேசாமல் அடிப்படை ரசாயன (வேதியியல்) விஷயங்களையும் எழுதியுள்ளதால்  அவர் பெரிய ரசாயன நிபுணர் என்றும் தெரிகிறது. அவர்தான் உலக வேதியியலின் தந்தை.

சித்தர்களைப் பற்றி இன்று பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காரணங்களில் ஒன்று இந்த இரசவாதம். ஆகும்.

இனி திருமூலர் சொன்ன ரசவாத – பரிசன வேதி பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்

வரிசை தருவான் வகையாகு மாபோல்

குருபரி சித்த குவலய மெல்லாம்

திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

2054 By His Alchemic Touch Jiva Becomes Siva

All that the alchemist touches

Turns into gold;

Even, unto it,

The Jivas blessed by Guru

Siva become,

Freed from Malas Triple.

xxxx

திருமூலர் இப்பாடலில் குருவின் மகிமையைப் பற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்குகின்றார்.

பரிசனவேதி என்ற மூலிகை மருந்து ஒன்றுளது. அது பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.

இன்னுமொரு விளக்கம்

இரும்பு, ஈயம், தாமிரம் முதலிய உலோகங்களை பொன்னாக்கும்  மருந்து பரிசனவேதி எனப்படும்.  பண்டையோர் இதனைக் குளிகை என்றனர். அக் குளிகை பொருள்கள் மீது  பட்டஉடனே  அவை தங்கம் ஆ கிவிடும். அதுபோல் மெய்க்குரவனாகிய சிவகுரு தொட்ட இடமெல்லாம் மும்மலம் அகன்று சிவகதி எய்திச் சிவனாகிச் சிவனடிக்கீழிருப்பர்.

xxxxxx

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்

மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்

குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்

மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.  திருமந்திரம் 2051

2051 He Takes Them to the Bourne

 From Which They Return Not

The black iron, transmuted into gold,

To black iron returns not;

Even unto it,

He who once the Guru’s grace received

Does not to birth return.

xxxx

ரசவாத வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.

xxxx

இதில் தாமிரத்தைத்  தங்கமாக்கும் விஷயம் பற்றிப் பாடுகிறார்.

செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்

செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்

செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்

செம்பு பொன்னான திருவம்பலவே.

Chant “Sivaya Nama;”

Copper turns into gold;

The Chit Para there exists,

Turns copper into gold

Chant “Srim” and “Krim;”

Copper turns into gold;

The Holy Temple alchemises

Copper into gold.

xxxx

பொன்னைச் சிவமாகவும் செம்பைச்

சீவனாகவும் களிம்பேறும் தனமையை

மலங்கள் பற்றும் நிலையாகவும்

சிலர் உருவகப்படுத்துவர்.  

பாம்பாட்டி சித்தர்

“ செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம் “

என்று பாடியிருக்கிறார்

——————————————————–

அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் ‘திருவகுப்பு ‘ என்னும் தொகுப்பு நூலும் உண்டு. இந்நூலில்

‘சித்துவகுப்பு’ என்னும் பாடல் இருக்கிறது.

அதில் ரசவாத வித்தையை விவரித்திருக்கின்றார்.

ஆனால் அப்பாடலில் மறைபொருளாக விளங்குவது, ‘ஞானரசவாதம்’தான்.

——————————————————–

 வள்ளலார் சொன்னார்:

 “இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.

ஆனால் ஒன்றே ஒன்று. பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும்.”.

xxxx

திருமந்திரத்தில் பரிசன வேதி பாடல்கள்  – 688, 883, 887, 1983, 2013, 2016,

xxxxx

More Tirumanthiram Hymns on Alchemy, Transmutation of base Metals

ஆங்கிலத்தில் திருமந்திர ரசவாதப் பாடல்கள்

902: The Dance Transforms Jiva Into Siva

The Dance in Letters Two

It is the Dance joyous;

It is the Dance of dissolution;

It is the Dance that leads to bliss;

It is the Dance that is Siva Linga

It is the alchemy that transforms

The coppery Jiva into golden Siva.

xxxx

906: Chant Sivaya Nama in Silence

This mantra is golden;

Chant it not loud,

Just say it;

Your body glows red,

If you take it in slow,

As you breath in,

Your body becomes gold;

And in time,

Shall you behold the Golden Feet of Lord.

xxxx

952: Lord is in “Aum” Beyond Adharas

Where Adharas end,

“Aum” is;

There shall you see Lord

Who of Himself reveals;

He is Blemishless,

He is Light Divine,

He is Whole Truth,

He is the Alchemic pill,

XXXXXX

293: Learning Leads to Renunciation

Men of Learning abandon the fettering, worldly ways;

The firm of mind flourish high on coiling snake-like Kundalini

Night and day, unremitting, praise the Lord,

And so your body, as on herbs alchemised, with glow of youth will be.

xxxx

2709: Sivayanama is Alchemic

In slighting terms they speak of our Lord ;

With thoughts centering on the Light

And hearts melting in love

Let them chant His name;

With the alchemic pill of Sivaya Nama

He will turn thy body gold.

xxxx

tags- இரும்பைத் தங்கம் ஆக்கலாம் , திருமந்திர ஆராய்ச்சிக்கு கட்டுரை19 , திருமூலர் , திருமந்திரம், பரிசன வேதி , இரும்பு, தாமிரம், செம்பு, தங்கம்,alchemy, philosopher’s stone, Titumular, Tirumanthiram

 ராமாயணத்தில் சாபங்கள் (18) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்! (Post.13,296)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.296

Date uploaded in London – 2 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (18)

 ராமாயணத்தில் சாபங்கள் (18) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்!

ச.நாகராஜன்

சதானந்தர் அடுத்து ஶ்ரீ ராமருக்கு விஸ்வாமித்திரரின் கோரமான தவத்தைப் பற்றிச் சொல்லலானார்.

 கைகளை உயரத் தூக்கிக் கொண்டு கற்று ஒன்றையே புஜிப்பவராகி, கோடையில் நாற்புறமும் அக்கின் ஜ்வாலைகள் தாக்க,  மழைகாலத்தில்  மூட்டமில்லா வெளியில் நின்று, குளிர் காலத்தில் ஜலத்தினுள் மூழ்கியவராய், இரவும் பகலுமாக அநேக ஆயிர வருடங்கள் தவம் புரியலானார் விஸ்வாமித்திரர்.

இந்த தவத்தைக் கண்ட தேவேந்திரனுக்கு திகில் உண்டாயிற்று,

அவன் ரம்பையை அழைத்தான்.

 “இப்போது விஸ்வாமித்திரருக்கு சிற்றின்பங்களில் மோகத்தால் உண்டாகும் மனத்தடுமாற்றத்தை நீ ஏற்படுத்து” என்றான்.

 “தேவர்களின் தலைவனே! என் மீது அவர் தனது கோபத்தைக் காட்டி விடுவார்” என்று ரம்பா உடல் நடுநடுங்க பதில் கூறினாள்.

 உடனே இந்திரன், ‘வசந்த காலத்தில் மன்மதனுடன் குயில் உருவம் கொண்டு நானும் உனது பக்கத்தில் இருந்து காப்பாற்றுகிறேன்” என்றான்.

 விஸ்வாமித்திரர் அருகே குயில் வந்து கூவ, ரம்பை ஒப்புயர்வற்ற அழகிய காம விகாரத்தை உண்டு பண்ணும் மேனியுடன் அவர் முன் வந்து ஆசை காட்டி மோஹித்தாள்.

 குயிலின் கூவல், ரம்பையின் மோஹிக்கும் உருவம் – ஆகியவற்றைக் கண்ட விஸ்வாமித்திரர் ஆபத்தைக் கண்டு கொண்டார்.

இந்திரனுடைய காரியத்தை ஞான திருஷ்டியால் அறிந்தார்.

 உடனே ரம்பையைப் பார்த்து சபித்தார்.

யன்மாம் லோபயஸே ரம்பே காமக்ரோதஜயைஷிணம் |

தச வர்ஷ சஹஸ்ராணி ஷைலீ ஸ்தாஸ்யஸி துர்பகே ||

ரம்பே – ரம்பையே!

காமக்ரோத ஜயைஷிணம் – காமத்தையும் குரோதத்தையும் அடக்கி வெல்ல முயற்சி செய்யும்

மாம் – என்னை

லோபயஸே – நீ ஆசை காட்டி துர்மார்க்கத்தில் இழுக்க வந்திருக்கிறாய்.

யத் – ஆகவே இந்த காரணத்தினால்

துர்பகே – அசட்டை செய்து தள்ளிவிடப்பட்ட துஷ்டையே!

தசவர்ஷ சஹஸ்ராணி – பதினாயிரம் வருட காலம்

ஷைலீ – கல் உருவமாய்

ஸ்தாஸ்யஸி – நீ இருக்கக் கடவாய்

ப்ராஹ்மண: சுமஹாதேஜாஸ்தபோபலமன்வித: |

உத்தரிண்யதி ரம்பே த்வாம் மத்க்ரோதகலுஷீக்ருதாம் ||

ரம்பே – ரம்பையே

தபோபல சமன்வித: – தவ வலிமையால் உண்டாகிய

சுமஹாதேஜா: – பிரசித்தி பெற்ற மஹா தேஜோவானாகிய

ப்ராஹ்மண: – பிரம்மதேவரின் புதல்வர் (வசிஷ்டரானவர்)

மத்க்ரோதகலுஷீக்ருதாம் – என் கோபத்தால் உண்டாகிய கெடுதி அடைந்த

த்வாம் – உன்னை

உத்தரிண்யதி – ஆபத்திலிருந்து விடுவிப்பார்

 (பால காண்டம் 64-வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 11 & 12)

இந்த சாபத்தால் உடனேயே ரம்பை கல்லுருவாக ஆகி விட்டாள்.

அவருடைய சாபத்தைக் கேட்ட மன்மதனை ஆவாஹனம் செய்து கொண்டிருந்த இந்திரனும் அந்தர்தானம் ஆயினன்.

தனது கோபம் கொள்ளும் குணத்தை எண்ணி வருத்தமடைந்த விஸ்வாமித்திரர் இனி நான் கோபமே கொள்ளாமல் இருப்பேனாகுக. மூச்சுக்காற்றையும் விடாமல் இருப்பேன் ஆகுக.” என்று உறுதி பூண்டு ஆயிர வருஷ காலம் இந்த விதமான தீக்ஷையுடன் இருந்தார்.

 இப்படியாக ரம்பை மீதான சாபம் விஸ்வாமித்திரரால் கொடுக்கப்பட்ட வரலாற்றை சதானந்தர் ஶ்ரீ ராமருக்கு எடுத்துரைத்தார்.

பால காண்டம் 64-வது ஸர்க்கத்தில் விரிவாக இந்த வரலாற்றைக் காணலாம்.

  இத்துடன் பால காண்டத்தில் வரும் சாபங்கள் முடிவடைகிறது.

 வால்மீகி ராமாயணத்தில் உள்ள 61 சாபங்களில் 18 சாபங்கள் பால காண்டத்தில் இடம் பெறுகிறது

*********

More (Medicine and Nature ) Secrets from Vishnu Sahasranama -Part 18 (Post No.13,295)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,295

Date uploaded in London – 1 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

IN THE 17TH PART THAT WAS PUBLISHED ON 20TH MAY WE SAW “More (Truth , Om ) Secrets from Vishnu Sahasranama”.

Let us look at Medical terms and Nature descriptions in the Vishnu Sahasranama (VS).

Bhesajam – Word No.578 in the VS

The simple meaning is Medicine.

Aadi Sankara in his commentary says,

The medicine for the disease of Samsaara.

There are three interesting points.

1.Bhesajam is also in the Rudram, part of Yajur Veda in praise of Lord Siva.

2.Go is described as Medicine for the disease of Birth and Death. Only Hindus described this as a disease.

3.The thought of a disease and a cure for it has crept even in Vedic scripture means Hindus are very health-conscious people. That is why they named their medical science Ayur VEDA. Note the word VEDA. No where in the world we see the words medicine and doctor in the religious scriptures.

But the debatable point is whether they meant only Bhava Roga/ disease of birth and death or real disease as well. My research shows that they meant both.

In the Appar Thevaram hymns in Tamil he used the words Oh Siva You are the one who cures incurable diseases. The word Medicine is also in the hymn. Above all the deity’s name it self is Vaidhyanathan, in English Mr Chief Doctor. It was sung in front of Siva in Vaitheeswaran Koil in Tamil Nadu exactly 1400 years ago. It is true that prayer to Siva cures us Bhava Roga. But t is also true that He cures our physical diseases. Till this day the devotees who visit this temple take Marunthu Urundai/ medicinal tablet from the temple. Those who have diseases visit their temple for curing their diseases. In the same way we see people visiting many temples in Tamil Nadu and Kerala to cure their mental sickness.

xxxx

Ausadham -Word No.578 in the VS

One who is the medicine for the great disease of Samsaara.

This term is related to Ausadhi/herbs. This shows Hindus used herbs for curing diseases. So they mean real physical sickness. But one can take it as a medicine  for both Bhava Roga (birth and death cycle) and real Roga (like blood pressure, heart diseases, diabetes etc)

This is proved from the real life stories of Tamil saints Sundarar, Kannapan and many others whose eye diseases were cured by Lord Siva. To cut it short we have ample evidence in the stories of Hindu saints where their physical illnesses were cured by prayer to God. In Kerala we have the famous hymn Naraayaneeyam which cured arthritis of Narayana Bhattathiri and his Guru. The same hymns was used by famous religious speaker Anatharama Dikshitar to cue his sickness. There are hundreds of such stories.

xxxx

Vaidyah – Word No.164 in the VS

One who knows all Vidyaas or branches of knowledge.

The term also means Doctor, medicine man. We have an equivalent erm Bhisak in Yajur Veda(Rudram-Chamakam).

Ref.

Appar’s Thevaram Hymn

பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு

                           இலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும்

                                    மருந்தும் ஆகித்

தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள்

                    தீ எழத் திண் சிலை கைக் கொண்ட

போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற

                                நாள் போக்கினேனே!.

xxxx

NATURE IN THE VISHNU SAHASRANAMA

It is amazing to see how Hindus used Nature to worship God. When the looked at the highest Himalayan Peaks, they were inspired to sing about the highest thinks in life in the form of Vedic hymns and Upanishads. In the VS, we come across birds like Garuda, Suparna, Hamsa, animals like lion, boar, plants like Soma , banyan, peepul, fig etc.

Forests and Seas are also worshipped by the Hindus. Their names are given to God Vishnu.

All the major Upanishads came from the Himalayan region. All the mythologies came from Naimisaranyam Forest in the mountain.

Mountain

Mahidharah – Word No.369 in the VS

One who props up the earth in the form of mountain.  Vishnu purana says,

Vanaani vishnur girayo disas ca – Forests,  mountains , quarters all these are Vishnu Himself

xxxx

Loka saarangah Word No.783in the VS

(saaranga has a lot of meanings like bow, any quareped, bee etc

In the VS, it is used for a honeybee.

One who like the saaranga grasps the essence of the world. It is no surprise to see a bee here, because Hindu saints use Bhramari ( a female bee) in their hymns. They want to be Bhramari circling the flowers at the feet of God.

But water and water sources like seas are used more in the VS.

Let us look at them

To be continued…………………….

Tags: Doctor, Medicine, Vaidhya, Bhesajam, Honeybee, Vishnu Sahasranama, Bhramari, , Nature