
Date uploaded in London – 10 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21
ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு என்பன எல்லாம் சிறுவர் கதை புஸ்தகங்களிலும், புராணங்களில் வரும் பூகோள வருணனைகளிலும் படித்த விஷயமாகும். இவைகள் அனைத்தும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். ஏழு, மூன்று ஆகிய இரண்டும் இந்து மத சமய நூல்களில் அடிக்கடி வரும் எண்களாகும் . ஹரப்பன்- சிந்துவெளி நாகரீகத்திலும் இந்த இரண்டு எண்கள் உடைய முத்திரைகள்தான் அதிகம் கிடைத்துள்ளன. ஏனெனில் அது இந்து நாகாரீகம் புழங்கிய இடம். ஆனால் இந்த சொற்களை ஆன்மீக கருத்துக்களை விளக்கவே திருமூலர் பயன்படுத்துகிறார்.
ஏழு வகை மேகங்கள் மற்றும் காற்று மண்டலத்திலுள்ள அடுக்குகள் ஆகியன பற்றி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் மேலை நாடுகள் அறியும்.திருமூலரோ 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் சொல்லிவிட்டார். அதற்கு முன்னரே ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் பாடிவிட்டனர்
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழுந்
தேகங்கள் ஏழுஞ் சிவபாற் கரன்ஏழுந்
தாகங்கள் ஏழுடன் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே.
எழுவகை மேகங்களும், எழுவகைத் தீவுகளும், எழுவகை யுடல்களும், சிவ ஞாயிறு ஏழும், ஏழுநாவினையுடைய தீயும், சாந்தியாகிய எழுவகை அடக்கங்களும் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கும்.
********
எழுவகை மேகங்கள் ஆவன: ‘சம்வர்த்த மாவர்த்தம் புட்கலாவர்த்தஞ், சங்காரித்தந் துரோணம் காளமுகி, நீலவருணமேழ் மேகப் பெயரே’ (பிங்கலம் – 71.) என்பனவாம்.
எழுவகைத் தீவுகளான: நாவலந் தீவு, சாகத்தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சன்மலித்தீவு, கோமேதகத் தீவு, புட்கரத் தீவு என்பனவாம்.
ஏழுவகை யுடல்கள்: நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலின, நிலைத்திணையன, மக்கள், தேவர் என்பனவாம்.
சிவஞாயிறு ஏழு. செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு, மனம், இறுப்பு (புத்தி) என்னும் அறிதற்கருவி ஏழுமாகும். சிவபாற்சுரன் சிவசூரியன். எழுவகையடக்கம் மேற்கூறிய பொறிகள் ஐந்து, மனம், இறுப்பு ஆகிய ஏழும் அடங்குதல். இறுப்பு: புத்தி.
தேகங்கள் ஏழு – எழுவகைத் தோற்றங்கள்.
சிவபாற்கரன் ஏழும் – சிவசூரியன் என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும் புத்தியம் ஆக ஏழு.
தாகங்கள் ஏழு – எழுநா. அக்கினி
சாந்திகள் ஏழு – ஐம் பொறிகளையும் மனம், புத்தி இவைகளையும் அடக்கி இருக்கும் நிலை.
The clouds seven, the sea-girt continents seven,
The bodies seven, the Siva-Suns seven,
The appetites seven, the alleviations (Santis) seven,
All these contained are,
At the Feet of (Dancing) Nandi.
xxxx
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே. 2866
7 கடல், 8 மலை முதலானவற்றுக்கு இடையே இருக்கும் நிலம் ஆலயம்.
Reach the Holy Temple of Sahasrathala
Seven the circling Seas, eight the Mountain ranges
In the depths of Space is Fire, Rain and Wind
And the Land expansive;
Visioning it, if you dwell in it
That verily a Holy Temple is ganges
xxxxx
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.410
மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் குண்டத்தில் நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.
xxxxx
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.-409
பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.
423: The Fire Spreads*
The earth on which we tread
The snow-clad mountains eight.
The seven seas whose ebbing tides roar,
Over all these and else
The Fire that resides in Muladhara spreads;
And the spreading conflagration turned
Earth and sky seem alike;
–This the truth, imagination none.
xxxxx
2016ம் ஆண்டில் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி
Following is from my old article published in 2016
நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது, பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல் பாடி இருக்கிறார்:–
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பொருள்:-
“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.
ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும், வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”
இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்
காளிதாசர் தரும் அற்புதச் செய்தி
காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.
முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே – நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.
ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும் சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான். அங்கே இயங்கும் காற்று பரவாஹ.
இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–
ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா
விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச
(ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.)
*******
ஏழுவகை மழைகள்:-
சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம்- நீர் மழை
புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)
துரோணம் – மண் மழை
காளமுகி- கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
ஏழு மலைகள்
இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்
ஏழு கடல்கள்
உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு
உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.
To be continued……………………………………………………..
—–subham—-
வானிலை இயல், புவியியல், திருமந்திர, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21, ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு









