
ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -1 (Post No.13,398)
Date uploaded in London – 1 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Tirupati Temple with Modi and Andhra CM Jagan Mohan Reddy
கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 108 முக்கியக் கோவில்கள் பற்றி நான் எழுதிய நான்கு புஸ்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆந்திரம் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 108 முக்கிய கோவில்கள் பற்றி எழுதவும் ஆசை பிறந்தது . ஆந்திரம் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவிலும் காளஹஸ்தி, ஸ்ரீசைலம் சிவன் கோவில்களும்தான். இவை தமிழ் நாட்டின் எல்லையை ஒட்டியவை. ஆனால் வட கோடி வரை எவ்வளவோ ஸ்தலங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வற்றைத் தமிழர்கள் அறியார் .
நான் மந்த்ராலயம் வரை சென்று வந்தேன். அதைத் தாண்டி மஹாராஷ்டிரம், பக்கத்து மாநிலமான கர்நாடகக் கோவில்களையும் தரிசித்து வந்தேன். இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களையும் தரிசிக்க நூறு முறையாவது பிறக்க வேண்டும். இதுவரை நான், தென் குமரி முதல் வட இமய ரிஷிகேஷ் -ஹரித்வார் வரை சென்றதே பெரும் பாக்கியம். இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு (2023) இலங்கையிலுள்ள கதிர்காமம், திருகோணமலை முதலிய தலங்களையும் தரிசிக்கும் பெரும்பேறும் பெற்றேன் . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லி ஆந்திர- தெலிங்கனா மாநில பயணத்தைத் தொடர்வோம் .
தெலுங்கானா அல்லது தெலிங்கனா என்பது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (சங்கராசார்யார் 1894-1994) சொன்ன சுவையான விஷயத்தை முதலில் காண்போம் இதன் உண்மையான பெயர் த்ரி லிங்க தேசம். அது மருவி தெலுங்கானா ஆனது. இந்த தேசத்து பிராமணர்கள் வடக்கில் சென்றவுடன் அவர்கள் தில்லான், தில்லோன் என்று அழைக்கப்பட்டனர். பிரபல அரசியல் வாதிகள்,கிரிக்கெட் வீரர்களின் பெயர்களில் இதைக் காணலாம். த்ரிலிங்க தலங்கள் ஸ்ரீசைலம், காளேஸ்வரம் , திராஷாராமம் ஆகிய சிவன் கோவில்கள் ஆகும்.

Telangana CM Revanth Reddy with wife Geetha (Cong.Party)
ஆந்திரத்தின் புகழோ ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது ரிக்வேதத்தின் ஐதரேய பிராமணத்தில் ஆந்திரம் குறிப்பிடப்படுகிறது. தமிழில் மிகப்பழைய நூல்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வேங்கட மலையை தமிழ் நாட்டின் வட எல்லையாக குறிப்பிடுகின்றன. மெளரிய மன்னர்களும் தெற்குப் பகுதியை ஆந்திர என்று சுட்டிக் காட்டுகின்றனர் .
வடவேங்கடம் (TIRUPATI) தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து–(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:
****
நெடியோன் குன்றமும் (TIRUPATI-TIRUMALAI) தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு– –சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2
****
இப்போது ஆந்திர மாநிலத்தை ஆந்திரம்- தெலுங்கானா ( 2014) என்று பிரித்தவுடன் எந்த க்ஷேத்திரம் /தலம் எந்த மாநிலம் என்ற குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் பழைய தல யாத்திரை நூல்களில் எல்லா இடங்களும் ஆந்திர மாநிலம் என்றே குறிப்பிடப்படும்.
கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா புண்ய நதிகள் பாயும் புண்ய பிரதேசம் இது. கரை தோறும் புனிதக் கோவில்கள் எழும்பியுள்ளன.
கப்பலோட்டிய சாதவாகன மன்னர்கள் மூலம் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து சமயம் பரவ வித்திட்ட புண்ய பூமி இது. அவர்கள் உதவியுடன்தான் தமிழ் மன்னர்கள் இமயத்தில் கொடி நாட்டினர் என்பதை சிலப்பதிகாரம் நமக்குச் சொல்கிறது.
XXXX

Modi Ji in Tirupati Balaji temple
ஆந்திர மாநில ஸ்தலங்கள்
சங்கமேசுவரம், யாகந்தி கோவில், கபில தீர்த்தம், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோவில், திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், ராமகிரி வாலீசுவரர் கோயில்,பீமாவரம் சிவன் கோவில்
புங்கனூர் சிவன் கோயில், சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில், பஞ்சாராம ஸ்தலங்கள், லேபட்சி, வீரபத்திரன் கோவில் ஆகியன ஆந்திர பகுதியில் உள்ள முக்கிய சிவன் கோவில்கள் ஆகும்.
திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவில்.
திருச்சானூர் பத்மாவதி கோவில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில்
பஞ்சாராம ஸ்தலங்கள்–அமராராமம் , குமராராமம், திராஷாராமம், சோமாராமம், ஷிராராமம்
ஆந்திரத்தில் விஜயவாடா அருகில் குன்றிலுள்ள கனக துர்கா கோவில் மிகவும் பிரசித்தமானது
அஹோபிலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது இரண்டு மூன்று நாட்கள் தங்கினால் நவ நரசிம்மர்களையும் ஏழு கோவில்களில் தரிசிக்கலாம்
மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சமாதி உள்ளது; அருகில் நிறைய கோவில்களும் இருக்கின்றன
ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலை அண்மையில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது
xxxx

Congress partty CM Revantha Reddy with his wife Geetha in Yadagiri Narasimha Swami Temple
தெலங்கானா மாநில ஸ்தலங்கள்
யதுகிரிக்கோட்டை லெட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆலம்பூர் நவப்பிரம்ம கோவில்கள் அம்மாபள்ளி ராமச்சந்திர சுவாமி கோவில், வார்கல் சரஸ்வதி கோவில், பனகல் சாயா சோமேஸ்வரர் கோவில், ஸ்ரீ லலிதா சோமேஸ்வரர் கோவில், நாகுனுர் கோட்டை-கோவில், ஆகியன தெலுங்கானாவில் முக்கியமானவை.
மேல் விவரம்
பத்ராசலம் பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்,
ஐதராபாத் -செகந்திராபாத் இரட்டை நகரத்தில் சங்கி கோவில்,
பிர்லா மந்திர் – வெங்கடேசுவரரின் (திருமால்) பளிங்குக்கல்லாலான திருக்கோயில்.உச்சயினி மகாகாளிகோவில் முக்கியமானவை
பீச்சுப்பள்ளி – (அனுமார் கொவில்) மெகபூப்நகர் மாவட்டத்தில் கிருட்டிணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க தொன்மையான அனுமான் ஆலயம்.
ஆலம்பூர் – மெகபூப்நகர் மாவட்டதில் துங்கபத்ரா- கிருட்டிணா நதிகள் இணையுமிடத்தில் தட்சிண காசி என்று கொண்டாடப்படும், பரமேசுவரர் மற்றும் சோகுலாம்பா தெய்வங்கள் கோவில் கொண்ட தலம்.
வாரங்கல் பத்ரகாளி (ரௌதிர தேவி) கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபம்
வாரங்கல்- ராமப்பா கோவில்
பாசரா -கலைமகள் /சரஸ்வதி கோவில்
அனந்தகிரி காடு – அனந்தபத்மநாபர் கோவில்
மேதக்: அழகான தேவாலயம் மற்றும் கோட்டை
பத்ராசலம்: கோதாவரிக்கரையில் அமைந்த புகழ்பெற்ற இராமர் கோவில். பக்த ராமதாசர் வழிபட்ட கோவில்.
யாதகிரிகுட்டா: திருமகள், நரசிங்கமர் (லட்சுமி நரசிம்மர்) சிறு குன்று. திருப்பதிக்கு ஒப்பான புகழ் மிக்க தெலங்காணா கோயில்.
காளேசுவரம்: ஆந்திர-மராட்டிய மாநிலங்கள் எல்லையில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மிக சிறப்புற்ற காளேசுவர முக்தீசுவர சுவாமி எனப்படும் சிவன் கோயில்; இக்கோவிலின் கருவறை மையத்தில் சிவனுக்கு (காளேசுவரர்) ஒரு லிங்கமும், எமனுக்கு (முக்தீசுவரர்) மற்றொரு லிங்கமுமாக இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன
நாகுனுர் கோட்டை: கரீம் நகர் பட்டணத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள . கோட்டைக்குள் பல பாழடைந்த கோவில்களின் சிதிலங்கள் காணப்படுகின்றன.ஒரு சிவன் கோவிலின் தூண்களும், தாழ்வாரங்களும் மிக மிக கவர்ச்சிகரமாக உள்ளன. உட்புற பகுதிகளில் உள்ள மேல்மாடங்கள் இசைக்கலைஞர்கள் மிருதங்கம் மற்றும் இதர இசைக்கருவிகளில் இசைப்பதுப் போலவும், ஒயிலான நிலைகளில் பெண்கள் நாட்டியமாடுவதுப் போலவும் வடிவமைத்திருக்கும் சிற்பங்கள் கண்ணுக்குப் பெரும் விருந்து


Former Vice President Vankaiah Naidu with his wife at Balaji temple, Tirupati

Map of Telangana

வேமுலவாடா – கரீம் நகர் பட்டணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள இந்த ஊரில் சாளுக்கிய மன்னர்களால் CE 750–975 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர் சுவாமி கோவிலுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக வருவாய் உள்ள கோவில் நகரங்களில் ஒன்று. இந்த கோவிலின் வளாகத்தினுள் இராமன், இலக்குவணன், இலட்சுமி, கணபதி, பத்மனாபர் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்களுண்டு. மற்றோரு இடமான திரு பீமேசுவரரின் திருக்கோவில் மிகச் சிறப்புற்றது.
உமா மகேசுவரம் – மெகபூப் நகர் மாவட்டத்தில் மிக அடர்ந்த நல்லமலை காடுகளுக்கிடையே ஒரு உயர்ந்த மலைக்குன்றின்மேல் அமைந்துள்ள சிவபெருமானின் தலம். மல்லிகார்சுன சுவாமி (சிவன்) பிரமராம்பா அம்பாளின் திருக்கோயில் உள்ளது. கருவறைக்கு அருகில் பாபநாசனம் என்ற இடத்தில் ஊறும் கிணறு இருக்கிறது
ஒவ்வொரு தலத்தையும் விரிவாகக் காண்போம்
TO BE CONTINUED……………………………………….
Tags- தெலுங்கானா ,ஆந்திரம், கோவில்கள் ,திருப்பதி ஸ்ரீசைலம், அஹோபிலம், பத்ராசலம், காளஹஸ்தி, த்ரி லிங்க , கிருஷ்ணா , கோதாவரி, துங்கபத்ரா