
Date uploaded in London – 2 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Amarnatha Cave in Kashmir; Ice Lingam is appaeraing every year.
LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES (Nearly on the same line)
75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்
79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்
79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்
79.0669° E KEDARNATH கேதார்நாத் சிவன் கோவில்
81.3119° E MOUNT KAILASH கயிலாயம்
XXX
திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 31
இந்தக்கட்டுரை 1990-ம் ஆண்டுகளில் லண்டனிலிருந்து வெளியான மேகம் பத்திரிகையில் என்னால் எழுதப்பட்டது. அந்த மாதப் பத்திரிகையில் எழுதிய 40 கட்டுரைகளை தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற தலைப்பில் நாகப்பா பதிப்பகம், சென்னை மூலம் 2009 டிசம்பரில் வெளியிட்டேன். அண்மையில் புஸ்தக .கோ .இன் மூலம் மீண்டும் வெளியானது. அதில் திருமூலரும் தீர்க்க ரேகையும் என்ற கட்டுரையும் ப்ஞ்சை எரிக்கும் லென்ஸ் பற்றி திருமுலர் என்ற கட்டுரையும் திருமந்திரம் பற்றியது . 1990ம் ஆண்டு கட்டுரை இதோ :
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.- 2701
xxx
“இடைபிங் கலையிம வானோ டிலங்கை,
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,
படர்வொன்றி யென்றும் பரமாம்பரமே“- 2708
நாம் வாழும் பூமியை , புவியியல் அறிஞர்கள், கற்பனைக் கோடுகளால் பிரிப்பார்கள். பூமியை 360 பாகைகளாகப் பிரிக்கும் நெடுங்கோடுகளை தீர்க்க ரேகை LONGITUDE என்றும் படுக்கைவாட்டில் பிரிக்கும் 180 கோடுகளை அட்ச ரேகை LATITUDE என்றும் பிரிப்பார்கள்.
தீர்க்க ரேகையை 180 கிழக்குக் கோடுகளாகவும் 180 மேற்குக் கோடுகளாகவும் பிரித்து லண்டன் அருகிலுள்ள கிரீனிச்சில் பூஜ்ய டிகிரியில் துவங்குவதாகச் சொல்லுவார்கள் இதே போல படுக்கைக்கோடுகளை 90 வட கோடுகளாகவும் ,90 தென் கோடுகளாகவும் பிரிக்கிறார்கள். பூமியின் நடுவில் செல்லும் கோட்டை பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு (Equator) என்று அழைக்கிறோம்.
இவைகளில் அட்ச ரேகைகளை முதல் முதலில் எகிப்திய வான நூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். கி.பி 150-ல் வாழ்ந்தவர் அவர். ஆனால் தீர்க்க ரேகைகளை 18-ஆவது நூற்றாண்டில்தான் காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருமூலர் இவற்றை அறிந்திருக்கிறார்.
அவர் இரண்டு திருமந்திர பாடல்களில் மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருப்பதாகப் பாடுகிறார்.
திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் அவர் எழுதிய திருமந்திர பாடல்களை மொழியியல் ரீதியில் ஆராய்ந்தால் ஏழாவது அல்லது எட்டாவது நூற்றாண்டு( CE ) என்றுதான் காலம் கற்பிக்கமுடியும்.. அப்போது இந்தியாவின் வரைபடம் கிடையாது. ஆயினும் மேரு, தில்லை, இலங்கை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை அவர் ஞானக் கண்களால் கண்டிருக்கிறார். ஒருவேளை அந்தக் காலத்தில் ஒலைச் சுவடி அல்லது மரவுரியில் தேசப் படம் இருந்ததோ என்றும் என்ன வேண்டியிருக்கிறது .
திருமந்திரப் பாடல் 2708க்கு சுவாச சாஸ்திர விளக்கமும் உண்டு. அதாவது, மேரு, தில்லை, இலங்கை ஆகிய மூன்றும் மூக்கில் சுவாசம் ஓடும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் என்றும் விளக்குவர் .ஆனால் அவர் இந்தப்பாடலை இரு பொருள் தொனிக்கப் பாடியிருக்கிறார் என்பது மற்றோர் திருமந்திரப் பாடலால் தெரிகிறது. அந்தப் பாடலில் இந்த மூன்று சொற்களையும் நிலவியல் ரீதியிலேயே பாடியிருக்கிறார். அடுத்த பாடலில் காவிரி, கன்யாகுமரி, தென் திசை, ஏழு மலைகள் , ஒன்பது தீர்த்தங்கள் பற்றிப்பாடுகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்துப் பாடி தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்திய பெருமையும் திருமூலரையே சாரும்.
Chidambaram= Thillai Temple
இந்திய வரை படத்தை விரித்து வைத்துக் கொண்டு ஒரு நூலையோ குச்சியையோ வைத்து மேரு,சிதம்பரம், இலங்கையை இணைத்தால் அவை, ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காணலாம். இதோ இந்த உண்மையயை விளக்கும் பாடல்கள்
“இடைபிங் கலையிம வானோ டிலங்கை,
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,
படர்வொன்றி யென்றும் பரமாம்பரமே“
இந்தப் பாட்டில் இடகலை/ இடது நாசி, பிங்கலை/வலது நாசி என்பன இமயத்திற்கும் இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நாடு நாசி தில்லைக்கு ஒப்பாகும். (நாசி= மூக்கு; இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்துதான் NOSE நோஸ் என்ற ஆங்கிலச் சொல்பிறந்தது)
2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.
இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற சுவாசம் பற்றிய சொற்களுக்கு இமயம், , இலங்கை சிதம்பரம் என்ற மூன்று இடங்களின் பெயர்களை பயன்பட்டுயத்தியது ஏன் என்று யோசித்தால் எனது விளக்கம் நன்றாகப் புரியும்.
மேரு= இமய மலை = புனித மலை
தமிழ் நாட்டில் இந்த தீர்க்கரேகைக் கோடு LONGITUDE தொடும் இடத்தில் மிகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது
இலங்கையில் இந்தக் கோடு தொடும் இடத்தில் மிகப் பழமையான முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது
இமயத்தில் இந்தக்கோடு செல்லும் இடங்களில் கயிலாயம், அமர்நாத் பனிலிங்கம் உள்பட பல சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன.
LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES
75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்
79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்
79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்
81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

(கொழும்பு, நீர்க்கொழும்புக்கு மேல் புத்தளம் உள்ளதைக் கவனிக்கவும். அதன் அருகில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது)
XXX
தற்போதைய விளக்கம் 2-7-2024
என்சைக்ளோபீடியா அல்லது பல வெப்சைட்டுகளில் பார்த்தால் டாலமி வரைந்தார், அதற்கு முன் கிரேக்கர்கள் சொன்னார் என்றெல்லாம் படிப்பீர்கள். அவை இன்றைய மேப்/ வரை படம் அல்ல. இந்த இடத்திற்கு அடுத்தார் போல இந்தப் பிரதேசம் அல்லது தேசம் இருக்கும் என்ற குத்து மதிப்பான விவரம்தான். நாம் இன்று பார்க்கும் வரைபடத்தின் மூலம் 1600-ம் ஆண்டு முதல் கிடைக்கிறது ; அதாவது 400 ஆண்டுகளுக்கு முன். திருமூலரோ அதற்கும் முன்னால் வாழ்ந்தார்.
இமயம் எங்கே இருக்கிறது, குமரி எங்கே இருக்கிறது என்பதெல்லாம் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. அதற்கு முந்தைய புராணங்களோ உலகத்தையே ஏழு கண்டங்களாகப் பிரித்திருக்கிறது . அதை இன்றும் பிராமணர்கள் பூஜைக்கு முந்திய சங்கல்பத்தில் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல புராணம் என்பதற்கான பஞ்ச இலக்கணங்களில் ஒன்று வரலாறு இன்னொன்று புவியியல். உலகத்திலேயே இவைகளை சமயப் புத்தகத்தில் சேர்த்தது இந்து மதம் மட்டுமே. உலகில் வேறு எந்த மதப் புஸ்தகத்திலும் வரலாற்றையும் பூகோளத்தையும் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை. இந்து மத்தில் எல்லா புராணங்களிலும் இவை இருக்கும். அந்தக் காலத்திலேயே நாம் வரலாறு , புவியியல் அறிவு பற்றி சிந்தித்ததை இது காட்டுகிறது
கங்கை கோதாவரி காவிரி பற்றி ஒரே பாடலில் அப்பர் பாடுகிறார். இடையே உள்ள தூரம் 700 காதம் என்று கல்வெட்டு கணக்கைக் கூட சொல்கிறது !
XXXX
பழைய உரை (எனது விளக்கத்திலிருந்து மாறுபட்டது)
2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.
2747: Siva’s Spheres of Dance Within
The central spinal column that is Meru
The Nadis, Ida (Left) and Pingala (Right),
The Jiva’s delta-shaped Muladhara
The Sushumna Cavity that is unto Tillai Forest
Where the cool (southerly) breeze from Mount Malaya wafts
All these alike are Siva’s Spheres of Dance.
(ப. இ.) அண்டத்தின் நடுவாகப் பொன்மலையாகிய மேரு விளங்குகின்றது. இதுபோல் பிண்டமாகிய உடம்பகத்து நடுநாடி விளங்குகின்றது. நடுநாடியினைச் சுழுமுனை என்ப. மேருவினை நிலத்தின் நடுக்கோடு என்ப. நடுக்கோட்டின் வடபாலும் தென்பாலுமுள்ள கோடுகளை வழிக்கோடுகள் என்ப. அதுபோல் உடம்பகத்து இடப்பால் நாடி வலப்பால் நாடி என்பன உள்ளன. இடப்பால் நாடி இடைகலை எனவும் வலப்பால் நாடி பிங்கலை எனவும் கூறப்படும். சொல்லப்படும் இவ் வான வெளியில் நடுக்கோட்டின் நிலையினை இலங்கை எனக் கூறுப. இவ் விலங்கைக் கோட்டுடன் தில்லைத் திருச்சிற்றம்பலக்கோடும் பொருந்தியிருக்கின்றது. தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும். இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும். இம் முறை சிறப்பு முறையாகும். பொதுமுறையான் நோக்கும் வழி இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவின்கண் உள்ளது தில்லை. இவ் விரண்டற்கும் இடைப்பட்டது சிவபூமியாகும். திருத்தொண்டர் புராணத்துள் ‘மாதவஞ் செய் தென்றிசையின்’ மாண்புரைக்குங்கால் பெரும்பற்றப் புலியூர், திருஆரூர், திருக்காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் முதலிய சிவ வழிபாட்டிடங்கள் பல என அருளியதூஉங் காண்க.
(அ. சி.) மேரு நடுநாடி – அண்டத்துள் நடுரேகையும் (Equator), பிண்டத்துள் சுழுமுனையும். அண்டத்துள் இதன் வட அயன வரை
களும் பிண்டத்துள் இடைகலை பிங்கலை நாடிகளுமாகும். இலங்கைக் குறியுறும் – இலங்கையில் மேருவின் குறியைப் பார்க்கலாம். (இதனால் மேருமலை திருமூலர் காலத்திலேயே அழிவெய்திவிட்டது என்பது போதருகின்றது.) மேரு – சுமேரு – குமேரு – என மூன்றாம். மேரு – பூமத்தியரேகையும் – பூமியின் அச்சரேகையும் கூடும் இடம்; அதுதான் இலங்கை. சுமேரு -வடதுருவம் (N. pole). குமேரு – தென்துருவம் (S. pole). தில்லைவனம் – மலயம் இவை பூமியின் நடுநாடி (Axis) யில் இருக்கின்றன என்பதை இம் மந்திரம் குறிக்கின்றது.
XXXX
“இடைபிங் கலையிம வானோ டிலங்கை, நடுநின்ற மேரு
நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம், படர்வொன்றி யென்றும்
பரமாம்பரமே
2754: Pervasive Dance in the Mystic Centers
Idakalai,* Pingalai,*
The delta-shaped Muladhara
The Central spinal column Meru,
Where (Kundalini) Sakti is
The Sushumna cavity within
That is unto the Tillai Forest
-In all these the Primal One pervaded,
He that is Paraparam.
அடுத்த பாட்டிலேயே திருமூலர் உண்மையான புவி இயல் பற்றிச் சொல்வதைக் கவனிக்கவும்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34
2755: South the Holy Land
At the Land’s End is KanyaKumari;
And then the Kaveri
And other holy waters
The nine “theerthas” comprise;
And the seven sacred hills too;
In that land are born the Veda-Agamas;
Thus blessed,
The South is the Holy Land indeed.
—SUBHAM—
TAGS-திருமூலர், தீர்க்கரேகை, ஒரே கோட்டில் , சிவன் கோவில்கள், மேரு, இலங்கை, சிதம்பரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 31