மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2 (Post No.13,399)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.399

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2

ச. நாகராஜன்

லேடரல் திங்கிங் (பக்கவாட்டு சிந்தனை)

பக்கவாட்டுச் சிந்தனை எனப்படும் லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா உத்தியைக் கண்டுபிடித்து அதை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தார் இவர்.

1967-ம் ஆண்டு தனது முதல் நூலான ’தி யூஸ் ஆஃப் லேடரல் திங்கிங்’ என்ற நூலை அவர் வெளியிட்டார். சிறிது காலத்திலேயே பிரபலமான அவரது புதிய சிந்தனா முறையால் சைமன்ஸ், நோகியா. ஷெல் உள்ளிட்ட பன்னாட்டு உலக நிறுவனங்கள் அவரை அழைத்து இதில் பயிற்சியைத் தருமாறு வேண்டின.. 

பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

இங்கிலாந்து, ஜப்பான், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இவர் அழைக்கப்பட்டார். 1982-ல் பிபிசியில் ஒளிபரப்பான இவரது நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

எதையும் புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பது இவரது கொள்கை.

லேடர்ல் திங்கிங் பற்றிய இவரது நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயிற்று. 46க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது, 85க்கும் மேற்பட்ட இவரது நூல்கள், முன்னேறத் துடிக்கும் அனைவரும் நாடும் நூல்களாக அமைந்தன.

மனித குலத்தின் சிந்தனா போக்கை உருவாக்கிய 250 பேரில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

திட்டத்தின் கருவிகள்

லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா முறைக்கு சிந்திக்கும் வழிமுறைக்கான கருவிகள் பல உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:-

உங்களின் எண்ணத்தால்திட்டத்தால்முடிவால் ஏற்படப் போகும் குறுகிய கால நீண்ட கால விளைவுகள் என்ன?

உங்கள் எண்ணத்தின் அல்லது திட்டத்தின் நல்ல விளைவுகள்தீய விளைவுகள் அல்லது சுவையான நிகழ்வுகள் எதாக இருக்கும்?

இந்த திட்டத்தின்  எல்லை எதுஇதை அமுல்படுத்த வசதியாக இருக்கும் சின்ன சின்ன அம்சங்களும் கால அளவும் என்ன?

இந்த திட்டத்தால், செயலால், முடிவால் என்னென்ன நேரலாம்முழுவதும் அலசிப் பாருங்கள்

இந்தத் திட்டத்தின் நோக்கம்குறிக்கோள் என்னஇது ஏன் முக்கியமாக இருக்கிறது?

இதை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள்திட்டங்கள்விருப்பத் தேர்வுகள் உண்டா?

இதைப் பற்றிய மற்றவர்களின் கருத்துபார்வை என்னஇதை எப்படி அவர்கள் ஏற்கக் கூடிய விதத்தில் விளக்க முடியும்?

இதில் உள்ள மிக மிக முக்கியமான மதிப்புள்ள விஷயங்கள் யாவை?

இதை செயலாக்குவதில் முதலில் செய்ய வேண்டியவை, அடுத்து செய்யவேண்டியவை என்ற பட்டியல் ரெடியா?

இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, , இதன் விளைவுசெய்யப்படும் முறைசெயல் திட்டம் ஆகியவை தயாராக இருக்கிறதா?

இப்படி முதலில் பக்கவாட்டுச் சிந்தனை கருவிகள் எனப்படும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை தயார் செய்யுங்கள். பிரச்சினை சுமுகமாக முடியும்!

புதிய குறியீட்டு மொழி உருவாக்கம்

2000-ம் ஆண்டில் இப்போதுள்ள மொழிகள் ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லும் விதத்தில் வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஆகவே குறியூட்டு வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியைத் தான் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘தி எட்வர்ட் டி போனோ கோட் புக்’ என்ற இவரது புதிய புத்தகம் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது என்ன குறியீட்டு மொழி?

எடுத்துக்காட்டாக டி போனாவின் 6/2 என்பதைச் சொன்னால் அது, “நீ எனது கருத்தின் பார்வையை எனக்குக் கொடு. நான் உனது கருத்தின் பார்வையை உனக்குக் கொடுக்கிறேன்” என்று பொருளாகும்இப்படி ஒரு புதிய மொழியை அவர் உருவாக்கினார்.

தனது வாழ்நாளில் ‘கவுன்ஸில் ஆஃப் யங் எண்டர்பிரை யூரோப்’ என்ற நிறுவனத்தை நிறுவி பதினைந்து லட்சம் இளைஞர்களுக்கு ஐரோப்பா, இஸ்ரேல், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய தொழிலை ஆரம்பிக்க இவர் ஊக்குவித்தார்.

புதிய சிந்தனா முறையால் உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சச்சரவுகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது இவரது ஆக்கபூர்வமான எண்ணமாக இருந்தது.

புதிய சிந்தனா முறைக்கான உலக மையத்தை (தி வோர்ல்ட் செண்டர் ஃபார் நியூ திங்கிங்) இவர் மால்டாவில் நிறுவினார்.

குடும்பம்

டி போனோ 1971-ல் ஜோஸபைன் ஹால் ஒய்ட் என்பவரை மணந்தார். இரு மகன்கள் பிறந்தனர். பின்னால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அவர் மறைந்த பிறகு அவரது உயிலில் இன்னும் ஒரு மகனின் பெயரும் ஒரு மகளின் பெயரும் சொத்துக்கு வாரிசுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

மறைவு

டி போனோ தனது 88-ம் வயதில் 2021 ஜூன் 9-ம் நாளன்று இயற்கை எய்தினார். மால்டாவில் மெடினா என்ற இடத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

டி போனோவின் அறிவுரைகள்

பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்க்கவும் ஏராளமான அறிவுரைகளை டி போனோ வழங்கியுள்ளார்.

அவரது கூற்றுகளில் சில:

படைப்பாற்றல் சிந்தனை என்பது ஒரு திறமை அல்ல, அது வளர்க்கப்படக்கூடிய ஒரு சாமர்த்தியம் தான்!

படைப்பாற்றல் என்பது சம்பிரதாயமான வழிகளை உடைத்து வித்தியாசமான வழியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது தான்!

மனம் எதைப் பார்க்கத் தயாராக இருக்கிறதோ அதைத் தான் பார்க்கும்!

நுண்ணறிவு என்பது பிறப்புடன் வருவது. சிந்திப்பது என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை!

புதிய சிந்தனா முறையை மேற்கொள்வோமா – டி போனோவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து விட்டு!

***

Leave a comment

Leave a comment