விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14  (Post.13,404)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,404

Date uploaded in London – 3 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14  (Post.13,404)

க்ஷோபன — நாம எண் 374

படைப்பு நடந்த காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது.

ப்ரக்ருதிம் புருஷம் சைவ பிரவிஸ்யாத்மேச்சயா  ஹரிஹி

க்ஷோபயாமாச பகவான் சர்க்க காலே வ்யயாவ்ய செள

இதை 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த மாபெரும் பிரபஞ்ச  வெடிப்புடன் ஒப்பிடலாம் .

பிக் பேங் (BIG BANG ) என்பதை விளக்கும் விஞ்ஞானிகள் அது ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க முடியவில்லை

xxx 

இன்னும் ஒரு அற்புத விளக்கம்

ஸனாத் – நாம எண்   896

அநாதியான கால ரூபியாக இருப்பவர்

இது நீண்ட காலத்தைக் குறிக்கும் என்கிறார் சங்கரர். இதுவும் இறைவனின் ஒரு அம்சம்

விஷ்ணு புராணம் 1-2-15 சொல்கிறது –

பரஸ்ய ப்ரஹ்மனோ ரூபம் புருஷஹ பிரதமம் த்விஜ

வ்யக்தா வ்யக்தே ததைவான்யே  ரூபே கால்சத்ததா பரம்

பொருள்

ஓ முனிபுங்கவர்களே !பரம்பொருளின் முதல் வடிவம் புருஷன்.; ஏனைய அனைத்தும் அதிலிருந்து உண்டானவையே . காலம் என்பதும் அதன் ஒரு வடிவமே

இதில் பெரிய அதிசயம் என்னவென்றால் 2000  ஆண்டுகளுக்கு முந்தைய விஷ்ணு புராணம் காலம் பற்றிப் பேசுவதாகும் . உலகில் எந்த சமய இலக்கியமும் மிகப் பெரிய எண்ணான யுகம் – 4,32,0000 ஆண்டுகள் — பற்றிப் பேசுவதில்லை ; இந்து மதமோ சஹஸ்ர கோடி யுகங்கள் பற்றிப் பேசுகிறது. மேலை உலகில் காலம் பற்றி விளக்கிய ஐன்ஸ்டைன் , காலம் என்பது நாலாவது பரிமாணம் என்று சொல்லி நீள , அகல, உயரத்துடன் காலத்தையும் சேர்த்தே பேச முடியும்; அதைப்பிரிக்க முடியாது என்கிறார் எங்கே இருக்கிறீர்கள் என்பதை எப்போது இருக்கிறீர்கள் என்று சேர்த்தே சொல்லமுடியம் என்றார் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமதம் சொல்லிவிட்டது. அதி உயத்தில் ஆகாசத்தில் மிதக்கும்  ஸ்பேஸ் ஸ்டேஷன் SPACE STATION பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; அங்கு இரவு பகல் என்பதே கிடையாது ; நம்முடைய நாள், கிழமை, தேதி ஆகியவையும் செல்லாது. ஏனெனில் பூமியை ஒரே நாளில் பலமுறை வலம் வந்து விடுவார்கள் அவர்கள் கிழமை பற்றி என்ன சொல் முடியும் ?

சந்திரனில் ஒருவர் வீடு கட்டி வசித்தால் நம்முடைய காலண்டர்கள், பஞ்சாங்கங்களால்  அவருக்குப் பயன் இல்லை; அவர் இருக்கும் இடத்தைச் சேர்த்துச் சொன்னால்தான் நாம் அவரை அறிந்து கொள்ளமுடியும். காலம் என்பது பிரிக்க முடியாத நாலாவது பரிமாணம்

xxxx

காலஹ —  நாம எண் 418

எல்லாவற்றையும் எண்ணுகிறவர் ; காலஹ கலயதா-மஹம் – கீதை 10-30

அதாவது எல்லாவற்றையும் அளந்து அதற்கு வரையறை நிர்ணயிப்பர்.

நானே காலம் என்றும் கிருஷ்ணன் சொல்கிறார்

ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்

ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம் —பகவத் கீதை 10-30

 பொருள் : அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்..

 அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார்.

காலம் பற்றி சிந்திப்பதும் அதை சங்கரர் போன்றோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விளக்குவதும் அறிவியல் முன்னேற்றத்தைக் காட்டுகிறது .

xxxxx

கேசவஹ — இந்த நாமம்  இரு முறை வருகிறது- எண் 23 மற்றும் 648

நல்ல அழகிய கேஸம் / தலை முடியுள்ளவர் என்பது எல்லோரும் அறிந்த விளக்கம்;  சங்கரர் வேறு ஒரு அற்புத விளக்கத்தையும் தருகிறார் .

க -என்னும் பிரம்மனும், அ -என்னும் விஷ்ணுவும் ஈச என்னும் ருத்ரனும் எவருக்கு வசமாகியவர்களோ அவர்தான் கேசவர்.

அல்லது கேசி என்னும் அரக்கியைக் கொன்றதால் கேசவர்..

648–க்கு சங்கரர் சொல்லும் விளக்கம்-

சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்கு உரியவர்

கேஸ சம்ஜ்னிதா ஸூர்யாதி ஸங்க்ராந்தா அம்ஸவஸ் தத்வ த்தயா கேஸவ .

மஹாபாரதம் சாந்தி பர்வம் 341-46 சொல்வதாவது,

அம்ஹாவோ ஏ ப்ராகாஸந்தே சா  மாமா தே கேச சம்ஜ்நீ னிதாஹா

சர்வஞாஹா  கேஸவம் தஸ்மான் மாம் ஆஹுர் த்விஜசத்தமாஹா—

, பொருள்

என்னுடைய ஒளிவீசும் அங்கமெல்லாம் கேசம் எனப்படும். இதை அறிந்த புனிதர்கள் என்னை கேஸவ என்று அழைக்கிறார்கள்.

மஹா பாரதம், அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சம் மற்றும் வேதத்திலிருந்து சங்கரர் மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார் . கூகுள் இன்டெர்னட் GOOGLE or INTERNET வசதிகள் இல்லாத காலத்தே ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேற்பட்ட மஹாபாரதம் முதலியவற்றிலிருந்தும்  எட்டு லட்சம் ஸ்லோகங்களுக்கு  மேற்பட்ட 18 புராணங்களிலிருந்தும்  சங்கரர்  எடுத்துக்காட்டுவது அபார ஞாபக சக்தியைக் காட்டுகிறது .

(நான் இங்கு எல்லா ஸ்லோககங்களையும் தரவில்லை)

–sunbham–

tags- விஷ்ணு சஹஸ்ரநாம , அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-14 

Leave a comment

Leave a comment