
Date uploaded in London – 4 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -3
தெலுங்கானா மாநிலத்தில் பாசர என்னும் இடத்தில் ஞான சரஸ்வதி கோவில் இருக்கிறது . கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் நிஜாமாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது., தமிழ்நாட்டின் கூத்தனுர் சரஸ்வதி கோவில் போல இதுவும் புகழ்பெற்றது
ஏனைய சாஸ்வதி கோவில்களைப் போலவே அக்ஷர அப்யாசம் / வித்யாரம்பம் சடங்கிற்காக பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். பள்ளிப் படிப்பு துவங்குவதற்கு முன்னர் அக்ஷர அப்யாசம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு கடவுளின் பெயரைச் சொல்லிக் கொடுத்து , தானியம் நிரம்பிய தட்டில் கைவிரல்களால் இறைவன் திருநாமத்தை எழுதச் சொல்வது அக்ஷர = எழுத்து, அப்பியாசம்= பயிற்சி எனப்படும். இப்போது கேரளம், ஆந்திரம் , கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பரவலாக நடக்கும் இந்தப் பயிற்சி 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்தது.

வேத வியாசர், மஹா பாரத போருக்குப் பின்னர், தெற்கு நோக்கி யாத்திரை வந்த போது கோதாவரிக் கரையில் இந்த ஆலயத்தை நிறுவியதாக ஐதீகம். அவர் தவம் இருந்த குகை குமாரசலத்தில் இப்போதும் இருக்கிறது. அவர் தவம் செய்த போது கனவில் பிறந்த கட்டளைப்படி தினமும் மூன்று பிடி மணலைக் கொ ண்டுவந்ததாகம் அவை பின்னர் துர்கா லெட்சுமி சரஸ்வதி என்று உருப்பெற்றதாகவும் சொல்லுவார்கள். அவர் வாசம் செய்த இடம் என்பதால் தெலுங்கில் வாசரா என்று அழைக்கப்பட்டது. அது மருவி இன்று பாசர என்று அழைக்கப்படுகிது.
இங்கு 8 திசைகளில் எட்டுப் புனித கிணறுகள் இருக்கின்றன முஸ்லீ ம் மன்னர்கள் ஆண்ட காலத்தில் சிலையை தகர்க்க பல முயற்சிகள் நடந்தன . ஆனால் பக்தர்கள் சிலைகளை பாதுகாத்தனர்.
அதிகாலையில் கோவில் திறக்கப்படுகிறது மஹா சிவராத்திரியின் பொழுது 15 நாட்களுக்கு விழா நடக்கும்.; நவராத்ரி காலத்தில் பெரிய விழா நடக்கும். சரஸ்வதி கோவில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது சரஸ்வதி அருகில் லெட்சுமியும் அருகிலுள்ள கட்டிடத்தில் காளி சிலையும் உள்ளன.
அக்ஷர அப்யாசம் (வித்யாரம்பம்) நேரம் – காலை 7-30 முதல்
Basara Temple Aksharabhyasam Timings General Aksharabhyasam: Morning- 7:30 AM to 12:30 PM Evening- 2 PM to 6 PM The ticket cost in general Pooja is Rs. 100 per kid and parents. If other than these, then you need to pay Rs. 100 for each person.






XXX
பார்க்கவேண்டிய இடங்கள்-
ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில்
ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவில்
வியாச மகரிஷி குகை
வேதவதி கல்
கோதாவரி நதி
கோதாவரி நாத்திக கரையில் உள்ள சிவன் கோவில்
xxx
கோவில் திருவிழாக்கள்
வியாச பெளர்ணமி
நவராத்ரி/ தசரா
வசந்த பஞ்சமி
மஹா சிவராத்திரி
XXX
தங்கும் வசதிகள்
திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்
இது தவிர ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை உடைய பல விடுதிகள் உள்ளன.
எப்படிப் போவது?
ஹைதராபாத்திலிருந்து 210 கிலோமீட்டர்
பாசர ரயில் நிலையம் உள்ளது
மேலும் விஜயவாடா, ஹைதராபாத், வாரங்கல் , நிஜாமாபாத்திலிருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன.
தொடர்பு முகவரி
Contact :
Executive Officer
Sri Gnana Saraswathi Devasthanam,
Basara – Village: Mudhole – Mandal. Adilabad.
Pin – 504101, Telangana State, India.
Temple Phone Number:
(91) 08752 – 243503
Executive Officer (Office):
(91) 08752 – 243550
–SUBHAM—
Tags- .தெலுங்கானா, ஞான சரஸ்வதி கோவில், அக்ஷர அப்யாசம், வித்யாரம்பம், பாச