திரு மந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்– ஆராய்ச்சிக் கட்டுரை- 33 (Post No.13,417)
Date uploaded in London – 7 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திரு மந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்– ஆராய்ச்சிக் கட்டுரை –33
ரிக் வேதத்தில் ஆண் – பெண் புணர்ச்சி பற்றிய துதியைப் பார்த்தவுடன் வெள்ளைத் தோல் அறிஞர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு .ஆனால் அதைப் பாராட்டுவதா அல்லது திட்டுவதா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ரிக் வேதம் என்ற ஆராய்ச்சியில் அதுகள் எழுதிய எல்லா நூல்களிலும் அந்த துதி இடம்பெறும். துவக்கத்தில் தமிழ் வேதமாகிய திருக்குறளில் காமத்துப் பாலைப் படித்த வெள்ளைத் தோல்களுக்கும் ஒரே கிளுகிளுப்பு . ஆனால் அந்தப் பகுதியைக் கிறிஸ்தவத் தமிழர்கள் மொழிபெயர்க்கவில்லை. அது பற்றி விமர்சிக்கவும் இல்லை. அத்தனை தூ ய் ய் ய் ய் மை மை மை மை !!!!!!!!!!!!
உண்மையில் இந்துக்களைப் பொறுத்த மட்டில் செக்ஸ் / பாலியல் விஷயங்கள் , புணர்ச்சி பற்றிப் பேசுவதை அபசாரம் , அசிங்கம் என்று கருதவில்லை. உலகில் இலக்கணம் முதல் மூலிகை மருத்துவம் வரை, வான சாஸ்திரம் முதல் சோதிடம் வரையுள்ள விஷயங்களில் எவ்வளவு அக்கறை செலுத்தினார்களோ அவ்வளவு கவனத்தை செக்ஸ் விஷயத்திலும் காட்டினார்கள். இதனால்தான் உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம் காமசூத்திரம் வாத்ஸ்யாயன மகரிஷியால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் தான் பெண்கள் கல்விக்கான முதல் சிலபஸ் வெளியிடப்பட்டது. அதில் பெண்கள் கற்க வேண்டிய 64 கலைகள் பட்டியல் உள்ளது. அதைப் படித்தால் வியப்பாக இருக்கும்; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துப் பெண்களுக்கு இவ்வளவு தெரிய வேண்டுமா? இவ்வளவு எதிர் பார்ப்பா என்று வியப்போம். ஆனால் தர்ம, அர்த்த, காம மோக்ஷ = அறம், பொருள், இன்பம், வீடு — என்ற நான்கு கோட்பாடுகளில் அறத்துக்கும் மோட்சத்துக்கு இடையில் காமத்தையும் பணத்தையும் வைத்து சான்ட் விச் SANDWICH செய்து சாப்பிடக் கொடுத்தார்கள் அதாவது பொருள் தேடுவதற்கும் காமத்தை நாடுவதற்கும் இரு புறமும் வரம்பு கட்டிவிட்டார்கள் ; அதாவது எல்லைக்கோடு போட்டுவிட்டார்கள்; இந்த நோக்கில் தமிழில் வரும் செக்ஸ் பாடல்களை நோக்க வேண்டும் 3000 பாடலில் திருமூலர் சொன்னதைப் படித்துவிட்டு அதில் ஒரு புணர்ச்சிப் பாடலை மட்டும் பார்த்து எவனாவத்து கிளுகிளுப்பு அடைந்தால் அவன் அறிவிலி/ முட்டாள் என்று கண்டுபிடித்து விடலாம்.
ரிக் வேதப் பாடலையும் இதே நோக்கில் காண வேண்டும் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் — அதாவது 10,000 க்கும் மேலான மந்திரங்களைக் கொண்ட ரிக் வேதத்தில் ஒன்று இப்படி உள்ளது.
சங்க இலக்கியத்தில் அக நானூற்றில் மட்டுமே 2 திருமணப் பாடல்கள் உள்ளன.; அதில் ஒரு பாடல் முதிலிரவு பற்றியது . அதை ஊன்றிப் படித்தால் செக்ஸ் வருணனை புரியும்.
ஆசாரக் கோவை என்னும் நூலில் எந்த நாளில் மனைவியிடம் கட்டாயம் படுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது . அது பதினெண் கணக்கு நூல்களில் ஒன்று.
xxxx
இதோ திரு மந்திர செக்ஸ் பாடல்; தலைப்பு – கருஉற்பத்தி
455: The Tattvas Remained in the Forehead of the Foetus
The penis pierced; the vagina opened,
And together they rushed in
The Tattvas in groups of Five–
The Elements Five,
The tanmatras Five,
The sense organs Five gross,
And the Five Subtle,
And cognizing organs four–Mind, Intellect, Will and Egoity
And in the Centre of Forehead they all lay, concealed
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
பொருள்
வாழ்க்கைத் துணைவராங் காதலர் அன்புற்று இன்புறும் வாயிலாம் மகப்பெறுதற் பொருட்டுக் கூடிய கூட்டத்து இலிங்கமாகிய உருவுடம்புக்கு வாயிலாம் வித்துப் புகுந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் பொருட்டுக் கருவழியாகிய யோனி விரிந்தது. நுண்ணுடலில் தங்கியிருந்த ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் நுண்மை ஐந்தும் அறிதற் கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து ஆகப் பத்தினுடன் கூடிய மழையாகப் பொழியும் நீர்முதலாகச் சொல்லப்படும் பூதங்கள் ஐந்தும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும் கூடின. புருவ நடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடையறாது நிகழ்வதாயிற்று. அறிதற் கருவி; செவி, மெய், கண், நாக்கு, மூக்கு. செய்தற் கருவி; வாய், கால், கை, எருவாய், கருவாய், கரணம்; எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு. அறிவு நிகழ்தற்கு நிலைக்களம் புருவநடுவும் உச்சியும் என்ப.
xxxxx
My Marginal Note in Griffith Rig Veda Book
எங்கெங்கெல்லாம் செக்சி பாடல்கள், மந்திரங்கள் வந்ததோ அ ங்கெங்கெல்லாம் கிரிப்பித் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை.
வில்சன் போன்றோர் லத்தீன் மொழியில் கொடுத்தனர்
I wrote on 16-12-1996
“In the Veda , the igniting of a fire is compared to sexual intercourse. According to Kausika Sutra (35-8), one should recite the Atharva Veda hymn 6-11 in the rite performed for the conception of a so”n.
தீப்பெட்டி, தீக்குச்சி இவையெல்லாம் கண்டு பிடிப்பதற்கு முன், வேத கால யாகங்களுக்கு அரணிக் கட்டையைப் பயன்படுத்துவார்கள் . கீழேயுள்ள கட்டையைப் பெண் என்றும், மேலேயுள்ள குச்சி வடிவிலுள்ள கட்டையை ஆண் என்றும் கருதி மத்து கடைவது போல கடைவார்கள் அப்போது எழும் தீப்பொறி குழியைச் சுற்றியுள்ள தேங்காய் நாரில் பற்றிக்கொள்ளும். அந்தத் தீயை புனித யாகங்களுக்குப் பயன்படுத்துவார்கள் . இப்படிக் கடைவதை வேத மந்திரம் ஆண் பெண் புணர்ச்சிக்கு ஒப்பிடுகிறது.
See RV for Sexy Poems
1-179
3-29-2
2-10-3
10-79-16,17
Peepal tree- Male, Sami Tree- Woman
Araṇi literally means ‘that which is turned round’.
The fire in which Vedic sacrifices are performed, should be generated by attrition. The two pieces of wood is used for this purpose are called ‘araṇis.’
- ‘Adharāraṇi,’ – The lower piece is rectangular in shape and has an indentation called ‘devayoni,’ the origin of the god of fire. It should be of the aśvattha (Ficus religiosa) which is softer, the size being 16 aṅgulas long, 12 aṅgulas wide and 4 aṅgulas in height.
- ‘Uttarāraṇi’ – The upper piece is in the form of a drill, which is inserted into the indentation of the adharāraṇi. It should be made from the wood of the śamī tree (Prosopis specigera) which is hard.
Fire is generated by vigorous churning while chanting of appropriate ṛks.[1] The lower araṇi is sometimes figuratively called the ‘mother,’ the upper araṇi the father and agni the fire, as the offspring.
XXXXXX
இதோ ரிக் வேத செக்ஸ் பாடல் 10-61- 5 to 8
Membrum suum virile, quod vrotentum fuerat, mas ille retraxit. Rursus illud quod in juvenem filiam sublatum fuerat, non aggressurus, ad se rerahit.
परथिष्ट यस्य वीरकर्ममिष्णदनुष्ठितं नु नर्योपौहत
पुनस्तदा वर्हति यत कनाया दुहितुरानुभ्र्तमनर्वा ||
Quum jam in medio connessu, semiperfecto opere, amorem in puellam pater impleverat, ambo discedentes seminis paulum in terrae superficiem sacrorum sede effusum emiserunt.
मध्या यत कर्त्वमभवदभीके कामं कर्ण्वाणेपितरि युवत्याम |
मनानग रेतो जहतुर्वियन्ता सानौनिषिक्तं सुक्र्तस्य योनौ ||
Quum pater suam nilam adiverat, cum eā congressus suum semen supra viram effudit. Tum Dii benigni precem (brahma) progenuerunt, et Vastoshpatim, legum sacrarum custodem, formaverunt.
पिता यत सवां दुहितरमधिष्कन कष्मया रेतःसंजग्मानो नि षिञ्चत |
सवाध्यो.अजनयन बरह्म देवावास्तोष पतिं वरतपां निरतक्षन ||
Ille tauro similis spumam in certamine jactavit, tunc discedens pusillaximis huc profectus est. Quasi dextro pede claudus processit, “inutiles fuerunt illi mei complexus,” ita locutus.
स ईं वर्षा न फेनमस्यदाजौ समदा परैदपदभ्रचेताः |
सरत पदा न दक्षिणा पराव्रं न ता नुमे पर्शन्यो जग्र्भ्रे ||
xxxx
Rig Veda 10.110.5 “Spacious doors remain wide open like beautiful wives for their husbands. O divine doors, great and all-impellers, be easy of access to the gods.”
Nirukta 8.10 ”Having spaciousness, make yourself wide open as exceedingly beautiful wives do their thighs for their husbands in sexual intercourse. The thighs are the most beautiful parts (of the body)…”
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை, மற்றும்
எலந்தைப்பழம் எலந்தைப்பழம் உனக்குத்தான் என்ற திரைப்படப் பாடல்களைப் போல இரு பொருள்படும் வேத மந்திரங்கள் இவை.
XXXXXX
இதோ அகநானூற்று செக்ஸ் பாடல் First Night Scene
I removed her dress saying; please let your thigh get some wind so that sweating will be dried. Her naked body shined like a sword removed from its cover. She bends her head in shame hiding her naked-body with her long hairs-from her head.
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
………………………….
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, 10
………………………….
”உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 20
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற” என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
. —விற்றூற்று மூதெயினனார் பாடல் 136
xxxx
எந்தெந்த நாளில் மனைவியுடன் படுத்து செக்சில் ஈடுபட்டால், பிறக்கப்போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா அலியா என்று கட்டுபிடிக்கலாம் என்பதை திருமூலர் சொன்னார். அதை முன்னரே இந்த பிளாக்கில் கொடுத்துவிட்டேன். அதே போலமுனிசாமி முதலியார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய
மூலிகை மர்ம நூலில் இந்துக்கள் கண்டுபிடித்த மூன்று நான்கு வயாக்ரா VIAGRA மாத்திரைகளையும் கொடுத்தேன். மருத்துவ / மூலிகை நூலில் கூட அவர்கள் வயாக்ரா பற்றி எழுதத் தவறவில்லை!
XXXX
பாரதியார் எழுதிய செக்ஸி பாடல்
| கண்ணன் பாட்டு கண்ணம்மா — என் காதலி யோகம் |
இது அதர்வ வேத மந்திரத்தின் தாக்கம் ஆழத்து மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம்
Atharva Veda 14.2.71 ”O bride, I am Amah and you are Saa I am Saman and you are Rik and I am sun and you earth. Let both of us unite together and procreate progeny.”
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
………………………….
வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு; 2
வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!
3
……………………………………………… 4
ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!
5
………………………………….
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
………………………..
—subham—
Tags- திரு மந்திரத்தில், அப்பட்டமான, செக்ஸ் பாடல்,ஆராய்ச்சிக் கட்டுரை -33, பாரதியார், ரிக் வேதம், காமசூத்திரம், அகநானூறு, Tirumular