
Date uploaded in London – 21 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

பத்ராசலம் என்னுமிடத்தில் அமைந்துள்ள சீதா ராமசந்திர சுவாமி கோவில் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற ராமர் கோவில்களில் ஒன்றாகும்
எங்கே இருக்கிறது?
தெலுங்கானா மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து 325 கி.மீ. தொலைவில் இருக்கிறது அசலம் என்றால் மலை ; பத்ர என்பது முனிவர் அல்லது பக்தரின் பெயர் . இதனால் இந்த இடத்திற்கு பத்ர + அசலம் = பத்ராசலம் என்று பெயர் .
மூன்று முக்கிய விஷயங்கள்
கோவிலிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் ராமர் தங்கிய இடம் பர்ணசாலை இருக்கிறது. இலங்கைக்குப் போகும் முன்னரும் வரும்போதும் ராமர் இங்கே தங்கியதாக ஐதீகம் (செவி வழிச் செய்தி)
இந்த வட்டாரத்திலுள்ள அபய ஆஞ்சனேய சுவாமி கோவிலும் பார்க்கவேண்டிய கோவில் .
மூன்றாவது இங்கிருந்து கோதாவரி நதி படகு சர்வீஸைப் பயன்படுத்தி பல புனித மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குப் போகலாம்.
தோற்றம்
கோவிலின் வரலாறு குறைந்த பட்சம் 400 ஆண்டுகள். இந்தக் கோவில் 1620-ம் ஆண்டில் அவதரித்த ராமதாஸ் சுவாமிகள் மூலம் உலகப் புகழடைந்தது சுமார் 68 ஆண்டுகள் வாழ்ந்த அவருடைய இயற்பெயர் கஞ்சர்ல கோபண்ணா.; அரசாங்க அதிகாரி .
தமிழ் நாட்டில் புகழ்பெற்ற மாணிக்க வாசக சுவாமிகள் அரசாங்க பணத்தை எடுத்து கோவில் கட்டியது போல இவரும் அரசாங்க வரிப்பணத்தை எடுத்து கோவில் கட்டினார். கோல்கொண்டா சுல்தானுக்கு கோபம் வந்தது. அவரை 12 ஆண்டுகளுக்கு சிறையில் அடைத்தான் .ராமர் மீது தெலுங்கு மொழியில் துதிபாடி அவர் வாழ்க்கையைக் கழித்தபோது ஒரு அற்புதம் நடந்தது . அன்று இரவில் இருவர் சென்று கோல்கொண்டா சுல்தானிடம் கோபண்ணா எடுத்த அரசாங்க பணத்தை திருப்பிக்கொடுக்கச் சொல்லி அனுப்பினார் என்று முழு வரிப்பணத்தையும் திருப்பிக்கொடுத்தனர் . இது கோபன்னாவுக்கே தெரியாது. மறுநாள் திடீரென்று சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆனார். அப்போதுதான் முதல் நாள் சுல்தானிடம் பணம் கொடுத்தவர்கள் ராமனும் லெட்சுமணனும் என்று அவருக்குப் புரிந்தது;. அன்று முதல் அவர் பக்த ராமதாசு என்று அழைக்கப்பட்டார்.

ராம பிரானே காட்டில் 14 ஆண்டுகள் இருந்து கஷ்டப்பட்டபோது தன்னுடைய 12 ஆண்டு சிறைவாசம் துச்சம் என்று எண்ணி கவி மழை பொழிந்தார். தெலுங்கு மொழியில் கவி மழை பொழிந்த அன்னமாச்சார்யா, க்ஷேத்ரய்யா, தியாகய்யா ஆகியோர் வரிசையில் பக்த ராமதாசுவும் சேர்ந்தார் .
ராம தாஸ் என்ற பெயர் இந்து மதத்தில் மிகவும் பிரபலமானது. பஞ்சாபில் உதித்த ராமதாஸ், சிவாஜிக்கு குருவான ராம்தாஸ் என்று பலர் உள்ளதால் இவரை பத்ராசலம் ராமதாசு என்று அழைப்பர். அங்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலை எழுப்பினார். கோவிலின் தோற்றம் பற்றிப் பல கதைகள் உண்டு தம்மக்கா என்பவர் கண்டுபிடித்த சிலை இந்தக் கோவில் கட்டக் காரணம் என்றும் பத்ரன் என்பவர் வேண்டுகோளுக்கு இணங்க ராமரே வந்ததால் எழுப்ப பட்ட கோவில் என்றும் ராம்தாசுவினால் கட்டப்பட்ட கோவில் என்றும் சொல்லுவார்கள். எல்லாக் காரணங்களும் ஒன்று சேரவே எழுந்த கோவில் என்றாலும் பொருந்தும்.

மூன்று பெரிய விழாக்கள்
தெலுங்கு மொழியில் கீர்த்தனைகள் இயற்றிய வாக்கேயக்காரர்களில் ஒருவர் என்பதால் ராமதாசு பெயரில் ஒரு விழா, எல்லாப் பெருமாள் கோவில்களிலும் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழா, ராமநவமி விழா ஆகிய மூன்று நாட்களிலும் லட்ச்சக்கணக்கான மக்கள் திரண்டுவரும் கோவில் இது. கோவிலில் சீதையையும் ராமரையும் லெட்சுமணரையும் ஒருங்கே தரிசிக்கலாம் கோவில் பற்றிய முழு விவரங்களையும் கொண்ட வெப்சைட்டும் நிறைய யூ ட்யூப் காட்சிகளும் உள்ளன. கண்டு களியுங்கள்.
xxxx
அபய ஆஞ்சனேய சுவாமி கோவில் Abhaya Anjaneya Temple, Bhadrachalam
இது 1998ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. நல்ல அழகான சிலைகள் உள்ளன. சிமெண்டினால் செய்யப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசியபின்னர் அவை மரத்திலான சிற்பங்கள் போல காட்சி தருகின்றன.
xxxx
பர்ணசாலா
32 கிமீ தொலைவில் உள்ள பர்ணசாலையிலும் ராமர் கோவில் உள்ளது இது இயற்கை எழில் மிக்க காட்டுப்பகுதி; அருகில் கொத்தக்கூடம் நீர்வீழ்ச்சசி உளது . ராமர் பல ஆயிரம் மைல் நடந்து செல்லுகையில் தங்கும் பொருட்டு ஆங்காங்கே குடிசைகளை / பர்ணசாலைகளை நிறுவினார். பர்ண என்றால் ஓலை/ இலை; . சாலை என்றால் இருப்பிடம்/ தங்குமிடம்
பாட சாலை = படிக்கும் இடம்
https://bhadradritemple.telangana.gov.in/
ஆங்கிலத்தில் பெயர்கள்
Kancharla Gopanna, popularly known as Bhakta Ramadasu or Bhadrachala Ramadasu
நூறுக்கும் மேலான தெலுங்கு கீர்த்தனைகளை இயற்றிய ராம்தாசுவின் முக்கியக் கீர்த்தனைப் பட்டியலை கோவில் வெப்சைட் தருகிறது . பெரும்பாலான கர்நாடக இசை நிகழ்சசிகளில் இதைக் கேட்கலாம் தியாகையா (தியாகராஜ சுவாமிகள் ) போலவே சொந்த அனுபவத்தில் மனம் உருகிப் பாடியதால் அவை காலத்தால் அழியாத கருவூலமாகிவிட்டது.

கோவில் வெப்சைட்டுக்குப் போனால் இவைகளை கேட்கும் இணைப்பு கிடைக்கும். கேட்டு மகிழுங்கள்.
கீர்த்தனைகள் பட்டியல்
1.Idhigo Bhadradri Gowthami adigo chudandi
2 Tarakamantramu korina dorikenu
3 Paluke Bangaramayena Kodandapani
4 Ye Teeruga nanu dayachuchedavo inavamsothama
5 Paahi Ramaprabho paahi Ramaprabho
6 Ramachandrulu naa pai
7 Nanu brovamani cheppave Sitamma thalli
8 Ikshvaku kulatilaka ikanaina palukave
9 Thakkuvemi manaku Ramundokkadundu varaku
10 Ramachandrayya Janaka rajajamanoharaya
11 Charanamule nammithi ni divya charanamule nammithi
12 Bhajare srinamam he manasa
13 Paahimam Sriramayante palukavithivi
14 Ramajogi mandukonare pamarulara
15 Diname sudinamu Sitaramuni smarane pavanamu
16 Seetha Ramaswamy ne chesina neramulemi
17 Etu pothivo Rama etu pothivo
18 Emira Rama na valla neramemira Rama
19 Deena dayalo deena dayapara
20 Garuda gamana rara nanu ni karunanelukora
21 Hari Hari Rama nannaramara chudaku
22 Sreerama neenama emi ruchira
23 Nee sankalpambetuvantido
24 Sreerama naamam maruvam maruvam siddam evanaku
25 Entho mahanubhavudavu nivu ento chakkani devudavu
26 Rama daiva sikamani sura rajamanojwala pumani
27 Bhajare manasaramam bhajare jagadabhi Raamam
28 Kaliyuga Vykuntamu Bhadrachala nilayam
29 Jai jai Sitaram jai jai sri Raghuram
30 Parama pavana naama Pattabhi Rama
–subham—
Tags- பர்ணசாலா , அபய ஆஞ்சனேய சுவாமி கோவில், பக்த ராமதாசு, பத்ராசலம் , ராமர் கோவில்: ஆந்திர மாநில, புகழ்பெற்ற , 108 கோவில்கள்; PART- 11, கீர்த்தனைகள் பட்டியல்