WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.472
Date uploaded in London – —24 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (51)
ராமாயணத்தில் சாபங்கள் (51) ராஜரிஷி நிமி மஹரிஷி வசிஷ்டருக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்து ஐந்தாவது ஸர்க்கமாக அமைவது, “நிமியும் வசிஷ்டரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்வது’ என்ற ஸர்க்கம். இதே ஸர்க்கத்தில் தொடர்ச்சியாக ராஜரிஷி நிமி மஹரிஷி வசிஷ்டருக்குக் கொடுத்த சாபமும் இடம் பெறுகிறது.
தூங்கி எழுந்திருந்த நிமி வசிஷ்டர் இட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். கோபத்தால் மெய்மறந்தவரானார்.
உடனே பிரம்மபுத்திரரான வசிஷ்டருக்கு இப்படி சாபமிட்டார்:
அஜானத: ஷயானஸ்ய க்ரோதேன கலுஷிக்ருத: |
முக்தவான்மயி சாபாக்னிம் யமதண்ட மிவாபரம் |\
அஜானத: – உடம்பு தெரியாமல்
ஷயானஸ்ய – துயிலுமளவில்
க்ரோதேன் – கோபத்தினால்
கலுஷிக்ருத: – அபசாரத்துக்குள்ளாகி
மயி – என்னுடைய
யமதண்டம் – யமதண்டத்தை
இவ – போன்றதும்
அபரம் – முடிவானதுமான
சாபாக்னிம் – சாபத் தீயை
முக்தவான் – விடுத்தீர்
தஸ்மாத்தவாபி ப்ரமஹ்மருஷே சேதனேன வினாக்ருத: |
தேஹ: சுருசிரப்ரக்யோ பவிஷ்யதி ந சம்ஷய: |\
ப்ரஹ்மருஷே – ஓ பிரம்ம ரிஷியே
தஸ்மாத் – ஆகையால்
தவ – உம்முடைய
சுருசிரப்ரக்ய: – தேஜோமயமாய் விளங்கும்
தேஹ: அபி – உடலும்
சேதனேன – உயிரை
வினாக்ருத: – விட்டு நீங்கியதாய்
பவிஷ்யதி – ஆகக் கடவது
ந சம்ஷய: – இதில் சந்தேகமில்லை.
உத்தரகாண்டம், 55வது ஸர்க்கம், ஸ்லோக எண்கள் 19 & 20
இப்படியாக வசிஷ்டர் நிமிக்கு சாபம் இட,, நிமியும் பதிலுக்கு உடனே வசிஷ்டருக்கு சாபமிட்டார்.
இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டதால் உடல்களை நீத்து வாயு வடிவம் கொண்டவர்களாய் ஆனார்கள்.
வாயு வடிவத்தில் இருந்த வசிஷ்டர் தன் தந்தையான பிரம்மதேவரை அணுகி அவரிடம் தான் வேறொரு சரீரத்தில் உயிர் புகுமாறு அனுக்ரஹம் செய்ய வேண்டுமென வேண்டினார்.
பிரம்மதேவர் உடனே வசிஷ்டரை மித்திரன் வருணன் என்னும் தேவர்களால் ஏற்பட்ட வீரியத்தில் பிரவேசிக்குமாறு அருளினார்..
**