WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,473
Date uploaded in London – 24 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ருத்ர – நாம எண் 114-
துக்கத்தையும் துக்கத்தின் காரணத்தையும் ஓட்டுகிறவர்;
ருர் துக்கம் துக்க ஹேதும் வா வித்ரா வயதி ஸ ப்ரபுஹு — லிங்க புராணம் .
தனது திவ்ய ரூபத்தாலும், லீலைகளாலும் பக்தர்கள் நெஞ்சுருகிக் கண்ணீர் விடும்படி செய்பவர் .
xxxx
சிவஹ – நாம எண் 600–
தம்முடைய நாமத்தை நினைத்தமாத்திரத்தில் பாவத்தைப் போக்குபவர்.
நாம ஸ்ம்ருதி மாத்ரேண பாவலன் சிவஹ — என்கிறார் சங்கரர்.
போகத்தை விரும்புவோருக்கும் மோக்ஷத்தை விரும்புவோருக்கும் யாவருக்கும் அவரவர் அதிகாரத்துக்குரிய நன்மைகளை செய்பவர் என்பது இன்னும் ஒரு உரையாசிரியர் கருத்து.
என் கருத்து
பொதுவான அர்த்தம் — சிவன் என்றால் மங்களத்தை அருள்பவர். சிவனுடைய பல பெயர்கள் புரந்தரன், பரமேஸ்வரன் முதலியன வி.ச.வில் இருப்பது அதன் பழமையைக் காட்டுகிறது .
மேலும் சிவ என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னர்களின் பெயர்களில் இருப்பதை இலங்கை, சாதகர்ணி, பல்லவ மன்னர்கள் பட்டியல்கள் காட்டுகின்றன. .
xxxx
ஸ்ரீர் விஜய — இது பல சுருதியில் வரும் சொல்
.வி.ச.வைப் பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று ஒவ்வொருவராகச் சொல்லும் போ து சஞ்சயன் சொல்கிறார் :
யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தரஹ
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் – த்ருவா Srir Vijayaநீதிர் மதிர் மம
பொருள்
எங்கு யோகத்திற்கு ஈஸ்வரனான கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ அங்கு மங்களமும் வெற்றியும் பெருமையும் நிச்சயமான நீதியும் உள்ளது என்பது என் கொள்கை .
என் கருத்து
தென் கிழக்காசியாவில் இப்போதுள்ள எட்டு நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மதமும் புத்த மதமும் கொடி கட்டிப்பறந்தது . அதில் சுமத்ரா தீவிலிருந்து (இப்போது இந்தோனேஷியாவின் பகுதி) 400 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த ஸ்ரீ விஜயப் பேரரசு தென் கிழக்காசியா முழுதும் செல்வாக்கு பெற்று விளங்கியது. அவர்களுடைய கடல் படையும் கடல் வாணிகமும் ஒப்பற்றதாகத் திகழ்ந்தது அதன் வெற்றிக்கு இந்த வி.ச சொல்லும் காரணமாக இருக்கலாம் .
xxxxx
சூர்யா சந்திர வம்சங்கள்
சூர்யஹ – நாம எண் 883–
சூரியன் , சந்திரன் குறித்த நிறைய சொற்கள் வி.ச.வில் உள்ளன. புராணங்களில சூரிய சந்திர வம்ச மன்னர் களின் பட்டியல் 140 க்கும் மேலான மன்னர் பெயர்களுடன் உள்ளன. சோழர்கள் தங்களை சூரிய குல மன்னர்கள் என்று சொல்லி சிபி- புறா கதையை எல்லா இடங்களிலும் குறிப்பிடுகின்றனர். புறநானூற்றுப் பாடல் முதல் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் வரைச் சோழர்கள் இதை பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றனர்.
பாண்டியர் வம்ச கல்வெட்டுகள் அகஸ்தியர் முதலியோரை வம்ச முன்னோர்களாகச் சொல்லிப் பெருமைப்படுகின்றன. இந்திய இலக்கியங்களிலேயே முதல் குறிப்பு 2200 ஆண்டுகளுக்கு முந்தைய காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் கிடைக்கிறது. ஆக சங்க காலத்துக்கு முன்னரே அகத்தியர்- பாண்டியர் தொடர்பைக் காண்கிறோம் ; பிற்காலக் கல்வெட்டுகளிலும் இது வருகிறது .
xxxx
சிசிரஹ –நாம எண் 913–
மூவகைத் தாபங்களால் கஷ்டப்படுவோருக்கு குளிர்ந்த இடமாகத் திகழ்பவர் .
மூவகைத் தாபங்கள் — பொருள் ரீதியில், மன ரீதியில் , ஆன்மீக வழியில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகும்.
சிசிர என்றால் பனி குளிர்.
என் கருத்து
ரோமானிய தத்துவ வித்தகரின் பெயர் சிசிரோ . மார்கஸ் துலியஸ் சிசிரோ Cicero (106–43 BCE) 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் அரசியலிலும் ஈடுபட்டார். அவர் நிறைய நூல்களை எழுதினார் அவற்றில் சுமார் 12 புஸ்தகங்கள் நமக்கு கிடைத்துள்ளன . சிசிர ருது என்று நாம் பஞ்சாங்கத்தில் படிக்கிறோம். ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கும் , விஷ்ணுவின் பெயருக்கும் ரோமானிய தத்துவ ஞானிக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும் .
xxxx
சூரசேனஹ – நாம எண் 704–
ஹனுமான் முதலிய சூரர்களை சேனனையில் கொண்டவர்
என் கருத்து
வீர, தீர, சூர என்ற சொற்களைத் தமிழர்களும் பயன்படுத்துகின்றனர்
சூரசேன வம்சம் இந்தியாவின் பழங்கால வம்சங்களில் ஒன்று. புத்தர் காலத்திலேயே வட இந்தியா 16 மஹா ஜனபதங்களைப் பிரிந்திருந்தன.. அந்த 16 நாடுகளில் ஒன்று சூரசேன நாடு.. யமுனை நதியின் கரைதியில் அமர்ந்த மதுராதான் அதன் தலை நகர். வட மதுரைக் கண்ணனையும் தொழுனை/ யமுனா நதி கோபியர் லீலைகளையும் சங்க இலக்கியம் பாடியிருக்கிறது. இதனால் சூர சேனாரின் பழமையும் சிறப்பும் தெரிகிறது . கிரேக்கர்களும் இந்த மதுராவையும் ‘சூர சோனோய் ‘ யையும் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியன் சூரசேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்டு மீனாட்சி தேவியைப் பெற்றெடுத்ததாக பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
xxxxx
அபு— நாம எண் 437-
பிறப்பிலி; பிறப்பற்றவர்
என் கருத்து
அத்புத மலை என்பது ராஜஸ்தானில் இருக்கிறது. தற்போது அதை அபு என்கிறார்கள்.
அபு என்று கொண்டால் , அங்குள்ள தேவி கோவில்களும் கலையழகு மிக்க சமணர் கோவில்களும் நினைவுக்கு வரும் .
புராண காலத்திலிருந்து சிறப்பு பெற்ற புனிதத்தலம் இது.
xxxx
மானதஹ — நாமம் எண் — 748
தம்முடைய மாயையால் எல்லார்க்கும் அனாத்ம வஸ்துக்களில் அபிமானத்தைக் கொடுப்பவர். அல்லது
பக்தர்களுக்குக் கெளரம் அளிப்பவர். பக்தி இல்லாத வர்களின் கர்வத்தைக் கண்டிப்பவர்.
என் கருத்து
சிசிரோ போன்ற வெளிநாட்டுப் பிரமுகர்களின் பெயர் போல மற்றோரு வெளிநாட்டினர் பெயர். மனித்தோ Manetho . அவர் எகிப்தியர்.; அவருடைய எகிப்திய, பாபிலோனிய வரலாறுகள் மன்னர்களின் வரிசைக்கிரமம் பற்றி அறிய உதவுகிறது.
xxxx
சமிதிஞ்சிய –நாம எண் 362 —
யுத்தங்களில் ஜெயிப்பவர் ; எல்லா யுத்தங்களிலும் ஜெயிப்பவர் பகவானே.
ஓ பிரம்மஹ தேவேப்யோ விஜிக்யே தஸ்யஹ பிராம்மநோ விஜயே தேவா அமஹீ யந்த.
பிரம்மம் தேவர்களுக்காக ஜெயித்தது . அந்த வெற்றியில் தேவர்கள் பெருமிதம் எய்தினர்.
என் கருத்து
ஆங்கிலத்தில் கமிட்டி என்று சொல்வதன் உச்சரிப்பு சமிதி – ரிக்வேதத்தில் உள்ள சொல். அங்கு இதன் பொருள் அசெம்பிளி; அதாவது மக்கள் சபை; அதே போல சபை என்ற சொல்லும் ரிக் வேதத்தில் உள்ளது. இந்தியா முழுதும் சபையும் சமிதியும் இன்றுமுளது.
xxxx
புரந்தரஹ — நாம எண் 335–
அசுரர்களின் புரங்களைப் பிளந்தவர்
என் கருத்து
இது விஷ்ணுவுக்கு உள்ளதைப் போல சிவனுக்கும் இந்திரனுக்கும் பொருந்தும். வேதத்தில் கோட்டையைப் பிளந்த இந்திரனுக்கே இந்த அடை மொழி கொடுக்கப்பட்டது. ஆரிய- திராவிட வாதம் பேசிய மூன்று அயோக்கியர்கள் சிந்து- சமவெளி நாகரீகத்ததை ஆரிய இந்திரன் அழித்ததாக புரளி கிளப்பினர். ஆனால் சிந்து- சரஸ்வதி மக்கள் சிவனை வணங்கினர் என்றும் அவர் வேறு, வேதத்தில் உள்ள ருத்ரன் வேறு என்றும் கதை கட்டி இந்துமதத்தில் குழப்பத்தை உண்டாக்கினர். ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகள் அவர்களுடைய பொய்மை வாதத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டது.
xxxx
மனுஹூ –நாம எண் 51,
ஸ்வயம்புவ- நாம எண் 37-
51–க்கு சங்கரர் தரும் வியாக்கியானம்- எல்லாவற்றையும் நினைப்பவர் அல்லது மந்திர வடிவினர்.
அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை (கேனோபநிஷத், பிருஹதாரண்யக உபநிஷத்)
37–க்குப் பொருள் – தாகவே உண்டாகியவர் .
ரிக் வேதத்தில் மனு என்ற பெயர் பல இடங்களில் வருகிறது . பல மனுக்களில் மனு ஸ்ம்ருதி நூலை இயற்றிய மனுவும் ஒருவர்
யுக புருஷர்களாகிய மனுக்கள் வேறாக இருக்கலாம். அதே பெயரைப் பிற்காலத்தில் அவர்கள் பயன்படுத்தியுமிருக்கலாம் . இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
—சுபம்—
tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 23