Date uploaded in London – 25 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
தமிழ் இலக்கியத்தில் வர்ணங்கள் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு; தஞ்சையில் நடந்த உலகத்த தமிழ் மகாநாட்டில் சங்க இலக்கியத்தில் வர்ணங்கள் , சங்க இலக்கியத்தில் எண்கள் என்று இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தேன்.
சம்ஸ்க்ருதத்தில் நிறைய கலர் குறிப்புகள் உண்டு. விஷ்ணுவை வர்ணிப்பதானால் மஞ்சள் துண்டு நீலவர்ணன் என்றும் பலராமனை வர்ணிப்பதானால் நீலத் துண்டு வெள்ளைக்காரன் என்றும் வருணிப்பார்கள். சிவனை வருணிக்கும்போது நீல கண்டன் என்பார்கள். இதை எல்லாம் விட வியப்பான விஷயம் இந்துக்கள் ஒவ்வொரு திசைக்கும் வர்ணம் கற்பித்தார்கள்; அதை பெளத்தர்கள் திருடினார்கள்; அது எப்படியோ தென் அமெரிக்காவிலுள்ள மாயன் / மாயா நாகரீகம் வரை சென்று விட்டது. இவற்றைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முன்னர் தந்தேன்
சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று இந்துக்கள் சொன்னது வானவில்லில் உள்ள 7 வர்ணங்கள் என்பதெல்லாம், இப்பொழுது பள் ளிச் சிறுவர்களுக்கு முப்பட்டைக் கண்ணாடி வழியே சூரிய ஓளியை நுழையவிட்டு , “பாருங்கள் ஒளிக்கற்றையில் 7 வர்ணங்கள்”- என்று சொல்கிறார்கள். இதை இந்து மத வேதங்கள் என்றோ சொல்லிவிட்டன.
இப்பொழுது திரு மூலர் எழுதிய திருமந்திரத்திலுள்ள கலர்க் குறிப்புகளைக் காண்போம் :
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
2193 Lord is the Cow-Herd (Pasupati); Jiva the Cow (Pasu)
Many the color of cows,
But one the color of milk;
And of peerless hue
Is Lord, the cowherd;
When the cowherd
Who tends the cows
His guiding staff shows,
The cows will not their Master leave.
xxxxx
பாரதியுடன் ஒப்பிடலாம்
வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!
-பாரதி
xxxxx
ராமகிருஷ்ண பரமஹம்சர்
மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள் ஒன்று சிவப்பாயும் , மற் றொன்று நீலமாயும் வேறொன்று கரு ப்பாயும் இருந்த போதிலும் அவைகளுக்குள் இருக்கும் பஞ்சு ஒன்றுதான் . அது போலத்தான் மனிதனும்; ஒருவன் பார்வைக்கு அழகாயிருக்கிறான் ; இன்னொருவன் கருப்பாயிருக்கிறான் .இன்னொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான் ; என்றாலும் ஈஸ்வரன் அவர்கள் எல்லோருக்குள்ளும் வாசம் செய்கிறான்
XXXX
பக்ஷணங்களின்/ கொழுக்கட்டை மேல் கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும் . அவைகளின் உள்ளே வைக்கப்படும் பூரணம்/ பண்டங்கள் வேறு வேறு விதமானவையாக இருக்கும். உள்ளேயிருக்கும் பொருட்களுக்கு ஏற்ப நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கும். அது போல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே பொருளால் ஆக்கப்பட்டஇருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்— ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
xxxx
கடவுளும் கலர்க் கண்ணாடியும்
குழந்தைகளுக்கு திருவிழாக் காலங்களில் விற்கும் கலர் கண்ணாடிகளை வாங்கித் தருகிறோம்.அவை வழியாகப் பொருட்களை பார்க்கும் குழந்தைகள் ஆனந்தமடைகின்றன. இது போல ஒவ்வொரு இறைவனையும் ஒரு வண்ணக் கண்ணாடி மூலம் பார்த்து அப்படியே வருணிக்கின்றனர். அவனோ இவைக க்கு எல்லாம் அப்பாற்பட்டவன்
1520. செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே. 7
1520: Lord is Soul’s Redeemer
He is the Red One (Destroyer)
The Dark One (Preserver)
The White One (Creator)
The Green One (Redeemer)
They who know Him thus, free of doubt
Of a certain shall seek Him;
Remember this;
His are the sinewy arms
That skinned the dark massive elephant
And donned it for a vesture;
Do therefore, seek Him and adore Him.
Xxxx
ராமகிருஷ்ண பரமஹம்சரும் பச்சோந்தி பற்றிய ஒரு கதை சொல்கிறார்
பரமஹம்சர் சொன்ன ‘பச்சோந்தி’க் கதை
விவேகாநந்தர் சொன்ன தவளைக் கதையை ‘பாம்பின் வாய் தேரை போல’ – என்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். இதோ ராமகிருஷ்ண பரமஹம்சர் இது தொடர்பாக கூறும் பச்சோந்தி கதையைக் கேளுங்கள்:
“இரண்டு பேரிடையே பச்சோந்தியின் நிறம் பற்றிக் காரசார வாக்குவாதம் நடந்தது. ஒருவன் பனைமரத்தின் மீதிருந்த பச்சோந்தியின் நிறம் சிவப்பு என்றான். மற்றவனோ, இல்லை பச்சோந்தியின் நிறம் நீலம் என்றான். இருவரும் மரத்தடியிலேயே வசிக்கும் ஒருவனிடம் சென்று சந்தேகத்தைத் தெளிய கேள்வி கேட்டனர். முதலாமவன் ‘’பச்சோந்தி சிவப்பு நிறம் உடைய பிராணிதானே’’ என்று கேட்டவுடன் ‘’ஆமாம், சிவப்புதான்’’ என்றான். இரண்டாமவன் அதை மறுத்து ‘’இல்லை நீல நிறம்தானே’’ என்றவுடன் ‘’ஆமாம், நீல நிறம்தான்’’ என்றான். ஓந்தியானது அடிக்கடி நிறம் மாறும் என்பது அவனுக்குத் தெரியும். சச்சிதானந்த ஸ்வரூபியான இறைவனும் அநேகம் உருவமுடையவன். ஒரே உருவத்தை மட்டும் கண்டவர்கள் இறைவன் அந்த உருவம் உடையவன் என்பர். இறைவன் உடைய பல்வேறு உருவங்களையும் கண்டவனுக்கே அவை எல்லாம் ஒரே ஈஸ்வரனுடைய பல வடிவங்கள் என்பது தெரியும். கடவுள் உருவம் உடையவன், உருவமே இல்லாதவன். அவனுடைய அத்தனை உருவங்களையும் பார்க்க இயலாது”.
xxxx
யானையும் ஆறு அந்தகர்களும் என்ற கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. இந்தக் கதையை புத்த மதம், சமண மதம், சூஃபி முஸ்லீம்கள், ஆங்கிலக் கவிஞன் ஆகியோர் பயன்படுத்தினர். ஆனால் இது திருமூலர் பாடிய திருமந்திரத்தில் இருந்து பல இடங்களுக்குப் பரவியது பலருக்கும் தெரியாது.
திருமூலர் பாடுகிறார்:
முதலொன்றாமான் ஆனை முதுகுடன் வாலும்
இதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே
அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே (திருமந்திரம்– 1507)
பொருள்: உறுப்பு, உறுப்பைத் தாங்கி இருக்கும் யானை முதல் ஒன்றாகும். அந்த யானையின் மலை போன்ற முதுகையும் துடைப்பம் போன்ற வாலையும், தண்டு போலும் உறுதியான தந்தத்தையும், முறம் போன்ற காதையும், உலக்கை போன்ற துதிக்கையையும், உரல் போன்ற காலினையும் கண்ணில்லாத அந்தகர் பலர் ஒவ்வொரு உறுப்பினையும் மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை என்பது மலையே, துடைப்பமே, தண்டே, முறமே, உலக்கையே, உரலே என்று கூறி அவர்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். இது போலத்தான் ஆறு சமயத்தவர்களும் தத்தம் சமயமே பெரிதென்று கூறி வாதிடுதல்.
ஒவ்வொரு உறுப்பை மட்டும் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு அந்தகனும்
மலை போன்ற முதுகு
முறம் போன்ற காது
துடைப்பம் போன்ற வால்
உரல் போன்ற கால்
உலக்கை போன்ற துதிக்கை
தண்டு போன்ற கொம்பு/தந்தம்
என்றனர். இவைகளை கையால் தடவி உணர்ந்த கண் பார்வையற்றோர் அந்தந்த உறுப்பு போன்றதே முழு யானையும் என்று நினைத்தனர்.
அரைகுறை உண்மை முழு சித்திரத்தைக் காட்டாது. வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. உண்மை என்பது மிகப் பெரியது. நாம் காண்பதெல்லாம் ஒரு சிறு பகுதியே. இதையே கடவுளுக்கும், சமயங்களுக்கும் பலர் உதாரணமாக, உவமையாகப் பயன்படுத்தினர்.
இதையே ஆங்கிலப் புலவன் ஜான் காட்ப்ரி சாக்ஸும் பாடி வைத்தான்:-
English poet John Godfrey Saxe (1816-1887) composed the following poem about this story:
It was six men of Indostan, to learning much inclined,
who went to see the elephant (Though all of them were blind),
that each by observation, might satisfy his mind.
The first approached the elephant, and, happening to fall,
against his broad and sturdy side, at once began to bawl:
‘God bless me! but the elephant, is nothing but a wall!’
The second feeling of the tusk, cried: ‘Ho! what have we here,
so very round and smooth and sharp? To me tis mighty clear,
this wonder of an elephant, is very like a spear!’
The third approached the animal, and, happening to take,
the squirming trunk within his hands, ‘I see,’ quoth he,
the elephant is very like a snake!’
The fourth reached out his eager hand, and felt about the knee:
‘What most this wondrous beast is like, is mighty plain,’ quoth he;
‘Tis clear enough the elephant is very like a tree.’
The fifth, who chanced to touch the ear, Said; ‘E’en the blindest man
can tell what this resembles most; Deny the fact who can,
This marvel of an elephant, is very like a fan!’
The sixth no sooner had begun, about the beast to grope,
than, seizing on the swinging tail, that fell within his scope,
‘I see,’ quothe he, ‘the elephant is very like a rope!’
And so these men of Indostan, disputed loud and long,
each in his own opinion, exceeding stiff and strong,
Though each was partly in the right, and all were in the wrong!
So, oft in theologic wars, the disputants, I ween,
tread on in utter ignorance, of what each other mean,
and prate about the elephant, not one of them has seen!
xxxxx
ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர்; ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்று ட்ரினிட்டி கல்லூரியில் பணியாற்றினார். கிறிஸ்தவ மத போதகராக மாறியும் கடும் தலைவலி காரணமாக அந்தப் பணியை ஆற்ற முடியவில்லை. ஆனால் இவர் எழுதிய பச்சோந்தி என்னும் கவிதை மிகவும் கருத்தாழம் மிக்கது. அந்தக் கவிதையை அவர் கிரேக்க மொழியில் இருந்து மொழி பெயர்த்தார். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்டின் சமயக் கவிதைகள் தொகுப்பில் வெளியாகியுள்ளன.
ஆங்கிலக் கவிதையை மதுரை பண்டிதர் கோபால கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்து 1915ம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டார்.
தமிழில் ஜேம்ஸ் மெர்ரிக் கவிதை
தேச சஞ்சாரம் செய்பவர் இருவர்
சரசமாகச் சல்லாபிக்கையில்
ஓரொரு சமயம் ஓரொரு செய்தியைப்
பற்றிப் பேசினர் ; மற்றவற்றிடைப் பச்
சோந்தியின் இயல்பையும் உருவையும் குறித்து
சற்று நேரம் சம்பாஷித்தனர் —
இதனினும் விநோதமானச் செந்தெ துவும் என்றென் றுமே
சூரியன் ஒளிபடும் பாரிடந் தன்னிலே
இருந்ததில்லை என்பது திண்ணம்
பல்லியின் நீண்ட மெல்லிய உடலும்
மச்சத் தலையும் கட்செவி நாக்கும்
இதற்கிருக்கின்றன இதனதுபாதமோ
முக்கவர் முன்நகம் ஆகி கொண்டது
எத்துனை நீள வால் இதன் பின்னம் புறம்
அன்றியும் இதன் நிறம் ஆ ஆ இதைப் போல்
நேர்த்தியான நீல நிறத்தினை
யாரே பார்த்துளர் என்றனன் ஒருவன்
அத்துடன் நிறுத்தும் அதன் நிறம் பச்சையே
சின்னாழி க்கைக்குமுன் திறந்த வாயுடன் அது
கதிரவன் ஒளியில் காய்ந்து கொண்டிருக்கையில்
எனதில் விழிகளால் யான் அதைப்பார்த்தேன்
அநாசமாய் அது தன் உடம்பைக்
கிடத்தி நீட்டிப் படுத்திருக்குங்கால்
அதனை நோக்கினேன் அஃ தப்பொழுது
காற்றை உண்ணக் கண்டேன் என்று
மற்றவன் விரைவில் மறுமொழி அளித்தனன்
அளித்தலும் முன்னவன் ஐயா யானும்
நும்மைப்போலவே நோக்கியுள்ளேனானால்
அதன் நிறம் நீலமே ஆம் என உறுதியாக்
கூறத்துணிவேன் குளிர்ச்சியாயுள்ள
நிழலிலே அது நீட்டிக்கிடக்கையில்
சாவகாசமா அதை பார்த்தேன்
என்றனன் ; என்றலும் பின்னவன் ஐயா
பச்சையே அன்னது பச்சையே அன்னது
நிச்சயமாக நிகழ்த்துவேன் என்றனன்
முன்னவன் கோபமூ ண்டவனாகி
ஐயா, பச்சையா ? அழகிது ! யான் இரு
கண்ணுமிலான் எண்ணிணீர் கொல்லோ
என்னலும் அவனைப் பின்னவன் நோக்கி
இந்தப்படியே இந்தச் சமயமும்
உம்முடைய விழிகள் உதவிடுமாயின்
அவை பயன் அற்றவாகவே இருக்க
ஆதலின் கண்ணில்லாமையால்
அதிக நஷ்டம் ஆய்விடா” தென்றனன் .
இவ்வாறு இருவரும் இயைந்து வராமையால்
வாக்குவாதம் வரவர முற்றி
அடிபிடி சண்டையாந் தறுவாயில்
அதிர்ஷ்டவசமா ஆங்கே மூன்றாம்
மனிதன் ஒருவன் வந்தனன், அவனிடம்
வாத விஷயம் ஈதெனக்கூறி
அதன் நிறம் பச்சை அல்லது நீலம் என்
றவன் அறிந்திருப்பாயின் தங்கட்
கியம்புமா றவனை இரந்தனர் இருவரும்
அப்பொழுது மனிதன் “ஐயன்மீரே !
சச்சரவொழிமின் , இச்செந்தூவினுடைய
நிறம் பச்சையுமிலை , நீலமுமில்லை
ஏனெனில் நேற்றிரா இப்பிராணியைப் பிடித்த
தோர் விளக்கொளி முன் உற்றுப்பார்த்தேன்
நன்றாய் அதனை நான் கவனித்தேன்
அது கன்னங்கரேல் ஆகவேஇருந்தது
வெறித்துப் பார்ப்பதன் விவரம் யாதோ?
ஐயன்மீர் ! நான் ஆராய்வதை நம்ப
இசையீராயின் , இன்னும் அச்செந்து
என் கைவசம் இருப்பதால் அதனை
எடுத்துக்காட்ட என்னால் ஆம் ” எனச்
சாற்றினன். சாற்றலும் “தயை செய்து ஐயா!
அவ்வாறே செய்யும் . அதன் நிறம் நீலமே
ஆம் என்பதற்குஎன் ஆருயிர் பந்தயம்
என்ன ஒருவன் இயம்பினன்..
iஇதை நீர் பார்க்குங்கால் அது பச்சை நிறத்தது
தான் நீரே சாற்றுவீர்; சத்தியம் “
என மொழிந்திட்டான் இரண்டாம் பிரயாணி.
அப்பொழுது மனிதன் அவர்களை நோக்கி
ஆனால் சரி நும் ஐயம் தீர
வெளியில் எடுத்து விடுகிறேன் அதனை
உங்கள் கண்முன் உய்த்திடும் போதது
கருமையாயிருக்கக் காணீரேல் அதைத்
தின்றே விடுகிறேன் என்றே மொழிந்தனன்
மொழிந்ததும் , அவர்கண் முன்னே அதனை
எடுத்து விட்டனன். என்ன ஆச்சரியம்!
வெண்ணிறத்துடன் அது வெளியில் வந்தது.
இருவரும் திடுக்கிட்டேங்கினர் . அப்போது
மனிதனும் மிக அவமான முற்றனனே.
((உடனே அப்பச்சோந்தி முதல் முதல்
பேசுந்திறனைப் பெற்றதாகி))
அடியில் வருமாறு அறையலு ற்றதுவே
நேச மக்காள் ! நீங்கள் அனைவரும்
பொய்யும் புகன்றிலீர் ; மெய்யும் புகன்றிலீர்;
இனிமேல் நீவீர் எப்போதாயினும்
பார்த்திடும் ஒன்றைப் பற்றிப் பேசுழி
மற்றையோரும் உற்று நும் போலவே
காண்கிறார் என்பதைக் கருத்தினில் இருத்தும்
அன்றியும் யாவராயினும் உங்கள்
கட்புலனிலும் தங்கள் கட்புலன்களையே
மாண்பின தாக்கொளக் காண் பீராயின்
அதன் பொருட் ததிசயம் அடையாதீர் ” என.
********
The Chameleon
by James Merrick
Two travelers of such a cast,
As o’er Arabia’s wilds they passed,
And on their way in friendly chat,
Now talked of this, and then of that,
Discoursed awhile, ‘mongst other matter,
Of the chameleon’s form and nature.
” A stranger animal, ” cries one,
” Sure never lived beneath the sun.
A lizard’s body, lean and long,
A fish’s head, a serpent’s tongue,
Its foot with triple claw disjoined;
And what a length of tail behind!
How slow its pace; and then its hue —
Who ever saw so fine a blue? “
” Hold, there, ” the other quick replies,
” ‘Tis green , — I saw it with these eyes,
As late with open mouth it lay,
And warmed it in the sunny ray:
Stretched at its ease, the beast I viewed
And saw it eat the air for food. “
” I’ve seen it, sir, as well as you,
And must again affirm it blue;
At leisure I the beast surveyed,
Extended in the cooling shade. “
” ‘Tis green, ’tis green, sir, I assure ye! “
” Green! ” cries the other in a fury —
” Why, sir! — d’ye think I’ve lost my eyes? “
” ‘Twere no great loss, ” the friend replies,
” For, if they always serve you thus,
You’ll find them of but little use. “
So high at last the contest rose,
From words they almost came to blows:
When luckily came by a third —
To him the question they referred,
And begged he’d tell ‘mdash, if he knew,
Whether the thing was green or blue.
” Sirs, ” cries the umpire, ” cease your pother!
The creature’s neither one or t’other.
I caught the animal last night,
And viewed it o’er by candlelight:
I marked it well — ‘t was black as jet —
You stare — but, sirs, I’ve got it yet,
And can produce it. ” ” Pray, sir, do
I’ll lay my life the thing is blue. “
” And I’ll be sworn, that when you’ve seen
The reptile, you’ll pronounce him green. “
” Well, then, at once to ease the doubt, “
Replies the man, ” I’ll turn him out:
And when before your eyes I’ve set him,
If you don’t find him black, I’ll eat him. “
He said: then full before their sight
Produced the beast, and lo! — ’twas white.
Both stared, the man looked wondrous wise —
” My children, ” the chameleon cries,
(Then first the creature found a tongue),
” You all are right, and all are wrong:
When next you talk of what you view,
Think others see as well as you:
Nor wonder, if you find that none
Prefers your eyesight to his own. “
Xxxx
TO BE CONTINUED………………………….
TAGS-James Merrick, John Godfrey Saxe, பாரதி, திருமூலர், பரமஹம்சர், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை எண்- 40, பசுக்கள், நிறம், பூனைகள் வர்ணம், பச்சோந்தி, வாக்குவாதம்