WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.475
Date uploaded in London – —25 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (52)
ராமாயணத்தில் சாபங்கள் (52) மித்திர தேவன் ஊர்வசிக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது, “ஊர்வசி சாபம்’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமர், லக்ஷ்மணனுக்கு நிமியின் சாபம் பற்றி விளக்கியதைத் தொடர்ந்து ஊர்வசி பெற்ற சாபத்தைப் பற்றியும் கூறலானார்.
மித்திரன் என்னும் ஒரு தேவன் வருணனது தோழன் ஆவான். அவன் க்ஷீர சமுத்திரத்தில் இருந்து கொண்டு வருணனது அதிகாரத்தைச் செலுத்தி வந்தான்.
அதே சமயத்தில் அப்ஸர ஸ்த்ரீகளில் முதன்மையானவளானா ஊர்வசி தன் தோழிகளுடன் வருணாலயத்தில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த வருணனுக்கு ஆசை உண்டாயிற்று. அவளைத் தன்னுடம் சம்போகத்திற்கு வருணன் அழைத்தான்.
ஆனால் ஊர்வசி, “நான் மித்திரனால் வரிக்கப்பட்டு ஏற்றுக் கொண்டவளாகி விட்டேன்” என்றாள்.
வருணன் உடனே, “தெய்வ சிருஷ்டியாகிய இந்த வீர்யத்தை இதோ இந்த கும்பத்தில் வைக்கிறேன். நீ சம்மதிக்கவில்லை. ஆகவே இப்படி ஸ்கலிதமாக்கி விட்டு எனது ஆசையைத் தீர்த்துக் கொண்டவனாக ஆகிறேன்” என்றான்.
ஊர்வசி அதற்குச் சம்மதித்தாள். வருணன் கும்பத்தில் தன் வீர்யத்தை வைத்தான்.
பின்னர் ஊர்வசி மித்திரனிடம் சென்று சேர்ந்தாள்.
மித்திரன் நடந்ததைத் தெரிது கொண்டு ஊர்வசியைப் பார்த்துக் இப்படிக் கூறினார்:
மயா நிமிந்த்ரிததா பூர்வம் கஸ்மாத்த்வம்வஸர்ஜிதா|
பதிமன்யம் வ்ருதவதீ தஸ்மாத் த்வம் துஷ்டசாரிணீ ||
பூர்வம் – முதலில்
மயா – என்னால்
நிமிந்த்ரிததா – வரிக்கப்பட்டு சம்மதித்திருந்த
த்வம் – நீ
கஸ்மாத் – எதனால்
அவஸர்ஜிதா – உதறித் தள்ளிவிட்டு
அன்யம் – மற்றொருவனை
பதி – கணவனாக
வ்ருதவதீ – மனமொப்பிக் கொண்டவள் ஆகின்றாயோ
தஸ்மாத் – அதனால்
த்வம் – நீ
துஷ்டசாரிணீ – கற்பழிந்தவளாக ஆகிறாய்
அனேன துஷ்க்ருதேன த்வம் மத்க்ரோதகலுஷீக்ருதா |
மனுஷ்ய லோகமாஸ்தாய கஞ்சித்காலம் நிவத்ஸ்யஸி |\
அனேன – இந்த
துஷ்க்ருதேன – குற்றத்தினால்
மத்க்ரோதகலுஷீக்ருதா – எனது கோபத்திற்கு உள்ளாயினை
த்வம் – நீ
மனுஷ்ய லோகம் – மனுஷ்யலோகத்தில்
ஆஸ்தாய – இருந்து கொண்டு
கஞ்சித் – சில
காலம் – காலம்
நிவத்ஸ்யஸி – வசிக்கக் கடவாய்
புதஸ்ய புத்ரோ ராஜர்ஷி: காஷிராஜ: புரூரவா: |
தமத்ய கச்ச துர்புத்தே ஸ தே பர்தா பவிஷ்யதி ||
துர்புத்தே – மதி கெட்ட மாதே
புரூரவா: – புரூரவஸ் என்னும்
ராஜர்ஷி: – ராஜரிஷி
புதஸ்ய – புதனது
புத்ர: – புத்திரன்
காஷிராஜ: – காசிராஜனாக விளங்கிக் கொண்டிருக்கிறான்
அத்ய – இப்போது
தம் – அவனிடம்
கச்ச – போய்ச் சேர்
ஸ: – அவன்
தே – உனக்கு
பர்தா – கணவனாக
பவிஷ்யதி – ஆவான்.
உத்தர காண்டம், ஐம்பத்திஆறாவது ஸர்க்கம், ஸ்லோகம் 22,23,24
இப்படியாக ஊர்வசி மித்திரதேவனிடம் பெற்ற சாபத்தை ஶ்ரீ ராமர் லக்ஷ்மணனுக்கு எடுத்துக் கூறினார்.
**