ராமாயணத்தில் சாபங்கள் (54) யயாதி யதுவுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,481)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.481

Date uploaded in London – 27 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (54) 

ராமாயணத்தில் சாபங்கள் (54) யயாதி யதுவுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில்  ஐம்பத்தொன்பதாவது ஸர்க்கமாக அமைவது, “பூருவின் ராஜ்யாபிஷேகம்’  என்ற ஸர்க்கம்.

 சுக்ராச்சாரியாரின் சாபத்தால் முதுமையை அடைந்த யயாதி யதுவை அழைத்து, “நீ எனது முதுமையை வாங்கிக் கொள். நான் இன்பத்தைச் சில காலம் அனுபவித்து விட்டு மீண்டும் உன்னிடமிருந்து முதுமையைப் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.

 ஆனால் யதுவோ, “ உமக்கு அருமை புத்திரனாகிய பூருவே இந்தக் கிழத்தனைத்தை வாங்கிக் கொள்ளட்டும்” என்று மறுமொழி புகன்றான்.

 உடனே யயாதி  பூருவிடம் , “இந்தக் கிழத்தனத்தை நீ வாங்கிக் கொள்” என்றார்.

 உடனே பூரு, “ நான்தன்யன் ஆனேன். அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்” என்றான்.

 தனது யௌவனத்தை அடைந்த யயாதி அநேக ஆயிரம் வருஷம் வரை பூமியைப் பரிபாலித்தார். ஆயிரக் கணக்கில் யாகங்களைச் செய்தார்.. பின்னர் ஒரு நாள் பூருவை அழைத்து, “மகனே! இந்தக் யௌவனத்தை மாற்றி விடு. கிழத்தனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடு. உன்னால் மிகவும் திருப்தி அடைகிறேன். உன்னை அரசனாக அபிஷேகம் செய்கிறேன்” என்றார்.

 பின்னர் தேவயானியின் மகனான யதுவைப் பார்த்துக் கூறினார் இப்படி:

 ராக்ஷஸஸ்த்வம் மயா ஜாத: க்ஷத்ரரூபோ துராஸத: |

ப்ரதிஹம்ஸி மமாஞாம் யத்ப்ரஜார்தே விபலோ பவ ||

த்வம் – நீ

துராஸத: – துஸ்ஸஹமான

ராக்ஷஸ: – பேய்

மயா – என்னால்

க்ஷத்ர ரூப: – க்ஷத்திரியனாய்

ஜாத: – பிறந்தாய்

மம – எனது

ஆஞாம் – ஆக்ஞையை

ப்ரதிஹம்ஸி – அலட்சியம் செய்தாய்

யத் – ஆகையால்

ப்ரஜார்தே – சந்ததி விஷயத்தில்

விபல: – சூன்னியனாக

பவ – ஆகக் கடவாய்

பிதரம் குருபூதம் மாம் யஸ்மாத்த்வம்பவமன்யஸே |

ராக்ஷஸான்யாதுதாநாம்ஸ்த்வம் ஜனயிஷ்யஸி தாருணான் |\

த்வம் – நீ

குருபூதம் – குருவும்

பிதரம் – தந்தையுமான

மாம் – என்னை

அவமன்யதே – இகழ்ந்தனை

யஸ்மாத் – ஆகவே

த்வம் – நீ

தாருணான் – மிகக் கொடியவர்களும்

யாதுதானான் – பேய் போன்றவர்களுமான

ராக்ஷஸான் – ராக்ஷஸர்களைப்

ஜனயிஷ்யஸி – பெறுவாய்

ந து ஸோமகுலோத்பன்னே வம்ஷே ஸ்தாஸ்யதி துர்மதே |

வம்ஷோபி பவதஸ்துல்யோ துர்வினீதோ பவிஷ்யதி ||

துர்மதே – துஷ்டனாகிய உனது

வம்ஷ அபி – வம்சமோ என்றால்

பவத: து – உனக்கே

துல்ய – நிகரானதாய்

துர்வினீத: – பொல்லாததாய்

பவிஷ்யஸி – ஆகும்

ஸோமகுலோபன்னே – சந்திர குலத் தொடர்ச்சியாகிய

வம்ஷே – வமிசத்தில்

ந ஸ்தாஸ்யதி – இராது

உத்தர காண்டம் 59-வது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 14,15,16 

இப்படியாக யயாதி யதுவிற்கு சாபத்தைத் தந்தார். 

பின்னர் பூருவிற்கு பட்டாபிஷேகம் செய்வித்து

ராஜ்ய பரிபாலனத்தைச் செய்யச் சொல்லிவிட்டு வானப்ரஸ்தாஸ்ரமத்தை மேற்கொண்டார். 

வெகுகாலம் கடந்த பின்னர் தன் ஆயுள் முடிவை அறிந்து கொண்டு அவர் தேவலோகத்தை அடைந்தார். 

**

Leave a comment

Leave a comment