விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –24 (Post No.13,482)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,482

Date uploaded in London – 27 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச.)

துஸ் ஸ்வப்ன நாசனஹ — நாம எண் 926–

என்று விஷ்ணுவைப் போற்றும் வரி உள்ளது .

பொருள்

கெட்ட கனவுகளை ஒழிப்பவர் அல்லது கெட்ட கனவுகளில் முன் அறிவிப்பாக வரும் கெடுதல்களைத் தடுப்பவர்.

என் கருத்து

இந்துக்கள் மிக உயர்ந்த உள்ளவியல் / மன இயல் நிபுணர்கள் . மேலை நாடுகளின் பெரிய மன இயல்  நிபுணர்களாகக் கருதப்படும் யங்,  பிராய்ட் Sigmund Freud (Froid) and Jung (Yung) ஆகியோரை விட நமது ரிஷி முனிவர்கள் அரிய விஷ்யங்களைச் சொல்லுகின்றனர்

1.கனவு காணாமல் யாரும் தூங்க முடியாது;

2.பிராணிகளும் தூங்கும்போது கனவுகள் காண்கின்றன.

3. கனவுகள் குழம்பிப்போன, குளறுபடியான, அவியல் அல்ல; அவற்றில் உண்மைச் செய்திகளும் வரும்.

4. தினசரி பிரார்த்தனை மூலம் நல்ல கனவுகளை உண்டாக்கலாம்.

உலகின் பல பகுதிகளில் வசிக்கும் லட்சக் கணக்கான பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் கடைசி மந்திரம் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்று வேண்டும் மந்திரம் ஆகும்

அத்யா நோ தேவ ஸவிதஹ  ப்ரஜாவித் சாவீஹி செளபகம்

பராதுஷ்னிய ஹும் ஸு வ

விச்வானி தேவ ஸவிதர் துரிதானி பரா ஸு வ

யத் பத்ரம் தன்ம ஆஸுவ

இதில் கெட்ட கனவுகளை விலக்க வேண்டும் என்று மூன்று முறை வேண்டுவதிலிருந்து தினமும் கனவுகள் வருவதை முதல் முதலில் பிரார்த்தனையில் சேர்த்தவர்கள் இந்துக்களே; ஆயிரக் கணக்கன ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல  கனவுகள் வர வேண்டும் என்று வேண்டியவர்கள் இந்துக்களே .

கனவுகள் பற்றி மேலை நாட்டு “நிபுணர்கள்” சொல்லுவது உண்மையல்ல என்பதை எல்லா புராணக்கதைகளும் , பெரிய புராணமும், ஆழ்வார்கள் சரிதமும் நன்றாக விளக்குகின்றன ; சொல்லப்போனால் கனவுகள் இல்லாத  புராணமே இல்லை. பெரியோர்களின் வாழ்வில் பல செய்திகள் கனவு மூலம் வந்ததை படிக்கலாம். வெளிநாட்டில் அண்மைக்காலத்தில் இதைக் கொஞ்சம்  கொஞ்சமாக ஒப்புக்கொண்டு வருகின்றனர் .

மதுரை ஆதீன கர்த்தராக இருந்த யாழ்ப்பாணனப் பேரறிஞர் இறந்தவர்களுடன் பேசும் முறை பற்றி  எழுதிய புஸ்தகத்தில், கனவில் வந்த எச்சரிக்கை உண்மையானதைக் காட்டியிருக்கிறார். சுவாமி சிவானந்தர், விவேகாநந்தர் ஆகியோர் கனவுகள் பற்றி எழுதியதையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன் .

மேலை நாட்டு “நிபுணர்கள்”  அண்மைக்காலத்தில் எழுதிய கட்டுரைகளில்தான் கனவு பற்றியே பேசுகின்றனர் Sigmund

Freud (Froid) and Jung (Yung)  போன்றோர் “கனவுகள் என்பன நிறைவேறாத ஆசைகள் என்றும்குழம்பிப்போனகுளறு படியான அவியல் காட்சிகள்” என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். கனவுகளில் தீர்வுகளோ, வரப்போகும் நிகழ்ச்சிகளோ, சகுன எச்சரிக்கைகளோ வரும் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை .

நம்முடைய மன்னர்கள் கதைகளிலோ, பெரிய கோவில்களைக்  கட்டும் உத்தரவுகள் கனவில் கண்டாதாகச் சொல்லுகின்றன .

சங்கத் தமிழ்ப் புலவர்களோ 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விலங்குகள் கனவு காண்பது பற்றிப் பாடியுள்ளனர்..

வைதீக இந்துக்கள் இரவு படுப்பதற்கு முன்னர், கெட்ட கனவுகளைத் தடுக்க கீழ்கண்ட மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டுத் தூங்குகின்றனர்

அச்யுதம்  கேசவம் விஷ்ணும் ஹரீம் ஸத்யம் ஜனார் த்தனம்

ஹம்சம் நாராயணம் கிருஷ்ணம் ஜபேத் துஷ்ஸ்வப்ன  சாந்தயே

திருமூலரும் தனது திருமந்திரப் பாடல்களில் கனவு காண்பது பற்றிச் சொல்கிறார்

கெளதம புத்தர் மாயாதேவியை திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் ஒரு யானை துதிக்கையில் தாமரையுடன் வலம் வைத்து அவளது கர்ப்பப்பையில்

நுழைவதைக் கனவில் கண்டார்; பின்னர் புத்தரைப் பெற்றாள் . சமண மத தீர்த்தங்கராரான மகாவீரரின் தாயும் கனவில் 16 மங்களச் சின்னங்களைக் கண்டவுடன் உலகம் போற்றும் மஹாவீரரைப் பெற்றேடுத்தாள்

யஜுர்வேத  துதியான  ருத்ரம்- சமகத்தில்,  நல்ல தூக்கம் வரவேண்டும் என்றும் மறுநாள் காலை நன்னாளாக  அமைய வேண்டும் என்றும் வேண்டுகின்றார்கள்.

sugam  kSa Cha me – Grant me happy, healthy life ஸு கம் சமே;

எனக்கு சுகத்தினை அருள்வாயாக

shayanam  kSa Cha me – grant me good sleep சயனம் சமே;

எனக்கு நல்ல தூக்கத்தினை அருள்வாயாக

sUshaa – kSa Cha me – (grant me good mornings ஸூ ஷா சமே;

இன்றைய காலைப் பொழுதை  நன்றாக அருளுக

sudinam kSa Cha me – grant me good day ஸு தினம் சமே;

இன்றைய நாள் முழுதும் எனக்கு நன்றாக அமைத்துத் தருவாயாக

–நமகம் , மூன்றாவது அணுவாகம் , யஜூர் வேதம்

உலகில் வேறு எவரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அளவுக்கு  நல்ல தூக்கம்நல்ல காலைப்பொழுது நல்ல நாள், பற்றி சிந்தித்தும் இல்லை வேண்டியதும் இல்லை. காமலாய்க் கண் படைத்த வெள்ளைக்காரன் கூட யஜூர் வேதம் கிமு 1000 ஆண்டு என்று முத்திரை குத்தியுள்ளான். ஆக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதகுலத்தின் நலன் பற்றி அக்கறையுள்ளவன் ஹிந்து.

மேற்கூறிய மந்திரத்தில் உள்ள சுகம், சயனம், தினம் போன்ற சொற்களை இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஸ்லீப் Sleep என்ற ஆங்கிலச் சொல் Somnambulism / Sleep Walking என்பன எல்லாம் ஸ்வப்ன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்ததே!

xxxx

Dream in Tirumular’s Tamil Tirumanthiram (9th Century CE)

திருமூலர் எழுதிய திரு மந்திரத்தின் எட்டாவது தந்திரத்தில் மனிதனின் விழிப்பு நிலை பற்றி விளக்குகையில் கனவு நிலை பற்றியும் கூறுகிறார்.

xxxx

2018–ல் எழுதிய ஒரு பெர்சனல் விஷயம் :–

கடவுள் கனவில் வந்தாராம்! ஒரே நகைப்புகிண்டல்!

சின்ன வயஸில் எங்கள் வீட்டுக்கு ஒரு மாஜிஸ்டிரேட் வருவார். அவர் எப்போது பார்த்தாலும் பகவத் கீதை பற்றிப் பேசுவார். ஒரு நாள் கிருஷ்ணர்  எந்த ஆங்கிளில் Angle (கோணத்தில்) ரதம் செலுத்தினார், அர்ஜுனன் எந்த ஆங்கிளில் angle அம்பு விட்டார் என்று மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தேன் விடையே கிடைக்கவில்லை. இரவில் கண்ணனே தோன்றி இந்த Angle ஆங்கிள் என்று காட்டினார் என்று சொல்லி நடித்தும் காட்டினார். 

அவர் வீட்டை விட்டு வெளியே போனதுதான் தாமதம், நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் கூடி கேலியும் கிண்டலுமாகப் பேசி சரியான பைத்தியம் இது; கிருஷ்ணன்தான் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிரியாய் சிரித்தோம். 

ஆனால் பிற்காலத்தில் கணித மேதை ராமானுஜனுக்கு,  நாமகிரித் தாயார் கணித ரகசியங்களை கனவில் வெளியிட்டதை ராமானுஜமே கூறியதைப் படித்த பின்னர்பிரபல வேதியியல் விஞ்ஞானிக்கு பென்ஸீன் ரிங் Benzene Ring  என்னும் ஆர்கானிக் பார்முலா கனவில் வந்ததை அவரே கூறியதைப் படித்த பின்னர் இறைவன் என்பவன் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிப்பவன்” என்பது விளங்கியது.

Picture of Benzene Ring that came in the dream of a scientist.

-சுபம், சுபம்-

கனவு பற்றிய முந்தைய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

வேத,உபநிஷத்துகளில் கனவுகள்

Article No. 2047,

Written by London swaminathan, Date : 6  August  2015

xxxx

எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்

Article No. 2072, Written by London swaminathan, Date : 15  August  2015

Xxxx

விநோதக் கனவுகள்; கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்

Article No. 2042, Written by London swaminathan, Date : 4  August  2015

Xxxxx

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுனப் பயணம் (பிப்ரவரி 4, 2015) – (எஸ். நாகராஜன் எழுதியது)

வித்தியாசமான விஞ்ஞானி யங் (எஸ். நாகராஜன் எழுதியது)

xxxx

TEN “INAUSPICIOUS DREAMS”; DREAMS IN VEDAS AND UPANISHADS!

Research Article No.2025, Written by London swaminathan

Date : 28  July 2014

–subham—

 tags- 

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –24 ,கனவு, சொப்பனம், பலிக்கும், உண்மையா, சிக்மண்ட் பிராய் ட் , கார்ல் யங் 

Leave a comment

Leave a comment