ராமாயணத்தில் சாபங்கள்  (59) சுக்ராசாரியர் தண்ட ராஜனைச் சபித்தது! (Post.13,497)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.497

Date uploaded in London – 1 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (59) 

ராமாயணத்தில் சாபங்கள் (59சுக்ராசாரியர் தண்ட ராஜனைச் சபித்தது!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் எண்பத்தோராவது ஸர்க்கம் ‘தண்டமஹாராஜனின் சாபம்’ என்ற ஸர்க்கம்.

இந்த ஸர்க்கத்தில் தண்டகவனத்தில் ஏன் யாருமே இல்லை என்ற ஶ்ரீ ராமரின் கேள்விக்கு அகஸ்திய முனிவர் பதில் கூறுகிறார்.

தண்டன் பெற்ற சாபத்தைப் பற்றி அகஸ்திய முனிவர் ராமருக்கு விளக்கலானார்.

முன்னொரு காலத்தில் தண்டன் சுக்ராசாரியரது ஆசிரமத்தில் உலாவினான்.

அப்போது சுக்ராசார்யரின் புதல்வியான மிக்க அழகுடைய அரஜையைக் கண்டான். காமவசப்பட்டு அவளை ஸம்போகம் செய்யப் போவதாகக் கூறினான்.

உடனே அரஜை, “நான் சுக்ராசாரியாரது மூத்த புதல்வி. என் பெயர் அரஜை. என் தந்தையை அணுகி நேர்வழியை அணுக வேண்டும். இல்லையேல் கொடிய துன்பத்திற்கு ஆளாவாய்” என்றாள்.

ஆனால் காமவசப்பட்ட தண்டன் அவளை வலுக்கட்டாயமாக கற்பழித்தான்.

பின்னர் அவன் மதுமந்தம் என்கின்ற நகருக்குச் சென்று சேர்ந்தான்.

அரஜை அழுது கொண்டே தந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

தந்தையான சுக்ராசாரியர் வந்தவுடன் நடந்ததைக் கூற அவர் மிகுந்த கோபம் கொண்டார்.

பின்னர் தன் சீடர்களைப் பார்த்து கோபாவேசத்துடன் கீழ்க்கண்ட சொற்களை மொழிந்தார்:

பச்யத்வம் விபரீதஸ்ய தண்டஸ்யாவிஜிதாத்மன: |

விபர்தி கோரசங்காஷாம் க்ரூரத்தாமக்னிஷிகாமிவ |\

அவிஜிதாத்மன: – மனப்போக்கை அடக்காது

விபரீதஸ்ய – அதர்மத் தொழிலில் துணிந்து விட்ட

தண்டஸ்ய – தண்டனுக்கு

க்ரூரத்தாம் – மஹா கடுமையான கொழுந்து விட்டெரியும்

அக்னிஷிகாம் – அக்னி ஜ்வாலையை

இவ – போன்ற

கோரசங்காஷாம் – பயங்கரமான

விபர்தி – ஆபத்தை

பச்யத்வம் – இதோ பாருங்கள்

க்ஷமோஸ்ய துர்மதே: ப்ராப்த: ஸானுகஸ்ய துராத்மன: |

ய: ப்ரதீப்தாம் ஹுதாஷஸ்ய ஷிகாம் வி ஸ்ப்ருஷ்டுமிச்சதி |\

ய: – எவன்

ஹுதாஷஸ்ய – அக்னியினது

ப்ரதீப்தாம் – கொழுந்து விட்டெரியும்

ஷிகாம் – ஜ்வாலையை

ஸ்பருஷ்டும் – கையால் தீண்ட

இச்சதி வை – துணிந்து விட்டானோ

துர்மதே – அப்படிப்பட்ட மூடனும்

துராத்மன: – துஷ்டனும்

ஸானுகஸ்ய – பரிவார ஜனங்களுடனும் இருப்பவனுமான

அஸ்ய – அவனுக்கு

க்ஷய: – நாசம்

ப்ராப்த: – வந்து விட்டது

யஸ்மாத்ஸ க்ருதவான் பாபமீத்ருஷம் கோரஸம்ஹிதம் |

தஸ்மாத்ப்ராப்ஸ்யதி துர்மேதா: பலம் பாபஸ்ய கர்மண: |\

ஸ: – அந்த

துர்மேதா: – மூடன்

மீத்ருஷம் – இப்படிப்பட்ட

கோரஸம்ஹிதம் – அசஹ்யமான

பாபம் – பாபச் செயலை

க்ருதவான்  – செய்து விட்டான்

யஸ்மாத் தஸ்மாத் – என்கின்றபடியால்

பாபஸ்ய  – பாவ

கர்மண: – செயலின்

பலம் – பயனை

ப்ராப்ஸ்யதி: – இதோ அடையப் போகிறான்

சப்தராத்ரேண ராஜாசௌ சப்ருத்யபலவாஹன: |

பாபகர்மசமாசாரோ வதம் ப்ராப்ஸ்யதி துர்மதி: ||

அசௌ – இந்த

துர்மதி: – மூடனும்

பாபகர்மசமாசார: – பாவத் தொழிலைப் புரிந்துவிட்டவனுமான

ராஜா – மன்னன்

சப்ருத்யபலவாஹன: – மிருத்யர்கள், சைன்யங்கள் இவைகளோடும் வாஹனங்களோடும் கூடியவனாய்

சப்தராத்ரேண – ஏழு தினங்களுக்குள்

வதம் – மரணத்தை

ப்ராப்யதி – அடைவான்

இப்படி சாபத்தைக் கொடுத்த சுக்ராசாரியர் மேலும் கூறினார்:

“இந்திரன் இந்த துஷ்டனுடைய தேசத்தை எல்லாப் பக்கங்களிலும் நூறு யோஜனை வரைக்கும் பிரம்மாண்டமான மண்மாரியால் அழித்து விடுவான்.

இவ்விடத்தில் ஸகல ஜீவன்களும், சரங்களும், அசரங்களும், எவைகளோ அவைகள் கொடிய மண்மாரியால் முற்றிலும் நாசத்தைப் பெறும்.

தண்டனது தேசம் எவ்வளவோ அவ்வளவும் மண்மாரி பிரத்யக்ஷமாய் முழு விரோதி என ஏழு ராத்திரி பொழியும்.” என்றார்.

பின்னர் நடந்ததை அடுத்துக் காணலாம். 

***

Leave a comment

Leave a comment