WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.500
Date uploaded in London – —2 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (60)
ராமாயணத்தில் சாபங்கள் (60) சுக்ராசாரியர் தண்டக வனம் அழியுமாறு சபித்தது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் எண்பத்தோராவது ஸர்க்கமாக அமையும் தண்டமஹாராஜனின் சாபம் என்ற ஸர்க்கத்தில் சுக்ராசாரியர் தண்டனுக்குக் கொடுத்த சாபத்தைப் பார்த்தோம்..
தண்டமஹாராஜனுக்கு சாபத்தைக் கொடுத்த சுக்ராசாரியர் அடுத்து தண்டகவனம் அழியுமாறு சாபத்தையும் கொடுத்தார்.
ஸமந்தாத்யோஜனசதம் விஷயம் சாஸ்ய துர்மதே: |
தக்ஷயதே பாம்ஸுவர்ஷேண மஹதா பாகஷாஸன: ||
பாகஷாஸன: – இந்திரன்
அஸ்ய – இந்த
துர்மதே: – துஷ்டனுடைய
விஷயம் – தேசத்தை
ஸமந்தாத் – எல்லாப் பக்கங்களிலும்
யோஜனசதம் ச – நூறு யோஜனை வரைக்கும்
பாம்ஸுவர்ஷேண – மண்மாரியால்
தக்ஷயதே – அழித்து விடுவான்
சர்வசத்த்வானி யானீஹ ஸ்தாவராணி சராணி ச |
மஹதா பாம்ஸுவர்ஷேண விலயம் சர்வதோகமன் |\
இஹ – இவ்விடத்தில்
சர்வசத்த்வானி – சகல ஜீவன்களும்
சராணி – சரங்களும்
ஸ்தாவராணி ச – அசரங்களும்
யானி – எவைகளோ அவைகள்
மஹதா – கொடிய
பாம்ஸுவர்ஷேண – மண்மாரியால்
சர்வத: – முற்றிலும்
விலயம் – நாசத்தை
அகமன் – பெறும்
தண்டஸ்ய விஷயோ யாவத்த்காவத்சர்வசமுச்சயம் |
பாம்ஸுவர்ஷமிவாலக்ஷ்யம் சப்தராத்ரம் பவிஷ்யதி ||
தண்டஸ்ய – தண்டனது
விஷய: – தேசம்
யாவது – எவ்வளவோ
தாவத் – அவ்வளவும்
பாம்ஸுவர்ஷ – மண்மாரி
ஆலக்ஷ்யம் – பிரத்யக்ஷமாய்
சர்வசமுச்சயம் இவ – முழு விரோதியென
சப்த ராத்ரம் – ஏழு ராத்திரிகள்
பவிஷ்யதி – பொழியும்
இத்யுக்த்வா க்ரோததாம்ராக்ஷஸ்ததாஸ்ரமநிவாஸினம் |
ஜனம் ஜனபதாந்தேஷு ஸ்தீயதாமிதி சாப்ரவீத் |\
க்ரோததாம்ராக்ஷ – கோபத்தால் சிவந்த கண்களையுற்றவராக இருந்த அவர் (சுக்ராசாரியார்)
இதி உக்த்வா – இப்படிச் சபித்து விட்டு
ததாஸ்ரம நிவாஸிதம் – அந்த ஆசிரமத்தில் குடியிருந்த
ஜனம் ச – ஜனங்களையும் பார்த்து
ஜனபதாந்தேஷு – தேசத்திற்கு வெளிப்பிரதேசங்களில்
ஸ்தீயதாம் – குடியேற வேண்டியது
இதி – என்று
அப்ரவீத் – விதித்தருளினார்
உத்தரகாண்டம், எண்பத்தோராவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 8 முதல் 11 முடிய.
இப்படி சபித்த சுக்ராசாரியார் அங்கு வசித்த அனைவரும் வெளிப் பிரதேசங்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்று விதித்தருளினார்.
உடனே அங்கிருந்த ஜனங்கள் அங்கிருந்து வெளியேறினர்.
தானும் அங்கிருந்து வெளியேறி வேறிடத்தில் அவர் வசிக்கலானார்.
விந்தியாசலமலைக்கு மத்தியில் இருக்கும் தண்டனது தேசம் சபிக்கப்பட்டு அழிந்தது. அன்று தொட்டு இது தண்டகாரண்யம் என்ற பெயரால் அழைக்கப்படலாயிற்று.
இங்கு தபஸ்விகள் வாசம் செய்த காரணத்தால் இதற்கு ஜனஸ்தானம் என்ற பெயரும் உண்டு.
இப்படி விரிவாக அகஸ்தியர் ராமருக்கு தண்டகாரண்யம் பற்றி முழுவதுமாகக் கூறியருளினார்.
***
அடுத்த அத்தியாயத்துடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.