திராக்ஷாராம சிவன் கோவில்- Part 18 (Post.13,505)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,505

Date uploaded in London – 3 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திரா க்ஷாராம சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்-18

எங்கே இருக்கிறதுஎப்படிப் போகலாம் ?

ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் புகழ்பெற்ற திராக்ஷாராம சிவன் கோவில்  இருக்கிறது.

காகிநாடாவிலிருந்து 30 கி.மீ.; ராஜமகேந்திரவரத்திலிருந்து 50 கி.மீ  தொலைவில் இருக்கிறது.

சிறப்புகள் என்ன ?

ஐந்து அராம சிவஸ்தலங்களில் ஒன்று;

18 சக்திக் கேந்திரங்களில் ஒன்று;

தொல்பொருட் துறையினால் பாதுகாக்கப்பட்டச் சின்னம்;

வரலாற்றை அறிய உதவும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ள இடம்;

12 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள 1200 ஆண்டுப் பழமை உடைய கோவில்..

பெரிய கோபுரமும் அரிய சிற்பங்களும் அலங்கரிக்கின்றன.

சோழ – சாளுக்கிய கட்டிடக்கலைகளின் இருப்பிடம்.

மிக உயரமான சிவலிங்கம் அமைந்த இடம்.

சுவாமியின் பெயர் என்ன ?

பீமேஷ்வர் என்று சிவ பெருமானையும் , மாணிக்யாம்பிகா என்று அம்மனையும் வழிபடுகின்றனர்.  மன்னர் பீமன் கட்டிய கோவிலாதலால்  பீம லிங்கம் என்ற பெயர் பெற்றது .

2 கதைகள்

தாராகாசுரன் என்பவன் சிவனை வேண்டி வரம் பெற்றபின்னர் அட்டூழியங்களைச் செய்வதற்கு முனைந்தான்; தேவர்களின் வேண்டுகோளின்படி முருகப்பெருமானை சிவன் அனுப்பி அவனை வதம் செய்தார். அப்போது அவனுடைய தொண்டையில் (மாலையில்) இருந்த சிவலிங்கத்தின் ஐந்து பகுதிகள் விழுந்த இடங்கள் 5 தலங்களாக உருவாயின.

இதே போல இன்னும் ஒரு கதை தக்ஷப் பிரஜாபதியின் கதை. அவன் நடத்திய யாகத்துக்கு சிவ பெருமானுக்கு இன்விடேஷன்/ அழைப்பிதழ்  அனுப்பாதாதால் சிவனின் மனைவியும் தக்ஷனின் மகளுமான தாக்ஷாஷயினிக்கு கோபம் மூண்டது. அப்பாவிடமே நேரில் சென்று சாடுவோம் என்று போன மகளையும் அவன் அவமத்திதான் அவள் தீயில் விழுந்து உயிர்த் தியாகம் செய்தாள். சிவன் இதை அறிந்து ருத்ர தாண்டவம் ஆடினார். வீர பத்திரனைப் படைத்து தக்ஷனுக்கு முடிவு கட்டினார் . தீயில் விழுந்த மனைவியின் உடலைக் கையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடினார். அப்போது அம்பிகையின் உடல் பாகங்கள் எங்கெங்கெங்கு விழுந்தனவோ அந்த இடங்கள் எல்லாம் புனிதத் தலங்காளாயின ;சிலர்  51 தலங்கள்  என்பார்கள்; சிலர் 108 என்பர் . ஆந்திரத்தில் அப்படி 18 இடங்கள் இருக்கின்றன. தேவியின் இடது கன்னம் விழுந்த இடம் திராக்ஷாராமம் ஆகும்.

கோவிலின் அமைப்பு

ஐந்து அராம ஸ்தலங்களில் உள்ள சிவலிங்கங்கள் மிகவும் உயரமானவை கோவில் தூண்கள் முழுவதிலும் சிவனின் லீலைகளைக் காட்டும் சிற்பங்களைக் காணலாம் பிரகார சுவர்களிலும் இந்து சமயப் புராணக் காட்சிகள், கடவுளர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய சந்நிதி. ஆனால் தேவியின் சந்நிதி தெற்கு நோக்கி இருக்கிறது. இந்த க்ஷேத்திரத்தை தட்சிண காசி என்றும் சொல்வார்கள்.

மேற்குத்திசையில் உள்ள கோபுரம்  ஏழுநிலை கோபுரம். கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களின் தூண்களும் சிற்பம் நிறைந்தவை.  அவை சாளுக்கியர் கால சிற்பங்கள் .

கோவிலைப்  பற்றிய குறிப்பிட தக்க விஷயம் ஒரே கல்லிலான மாதிரிக் கோவில் சிற்பம் இருப்பதாகும். அந்தக் கால சிற்பிகள் இது போல ஒரு மாதிரியை MODEL TEMPLE  சிறிய அளவில் செய்துவிட்டு பின்னர் அதையே பிரம்மாண்ட வடிவில் எழுப்பினர் என்பது தெரிகிறது. இது போன்ற சின்ன பொம்மைக் கோவிலை வேறு எங்கும் காண முடியாது.

ஆந்திரப்பிரதேசத்தில் நிறைய கல்வெட்டுகள் , நல்ல நிலையில் காணப்படும் இடம் இந்தக் கோவில். 500 ஆண்டு வரலாற்றை அறிய இவை உதவுகின்றன. சுவர் எங்கும் கல்வெட்டுகள்; இவை சாதவாகன, சாளுக்கியர், காகத்தீயர் வம்ச மன்னர்கள் பற்றியவை.

விழாக்கள்

மஹா சிவராத்திரி , பீஷ்ம ஏகாதசியில் சுவாமி கல்யாண உற்சவம், டிசம்பரில் ஜெயந்தி விழா, கார்த்திகை மாத திங்கட்கிழமை/ சோமவார, பூஜைகள், நாராத்ரி விழா,

ADDRESS

LORD BHIMESWARA SWAMI TEMPLE, DRAKSHARAMA

Executive Officer
Sri Bhimeswara Swamy Temple,
Draksharama,
Ramachandrapuram(M),
East Godavari District
Pin- 533 262
Phone no: 08857- 252488

கோவிலுக்குள் இரண்டு பழைய கிணற்றுத் தீர்த்தங்கள் ருத்ர கங்கா, சிவ கங்கா என்ற பெயர்களில் இருக்கின்றன.அவற்றின் தீர்த்தம் மருத்துவ குணங்களை உடையது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பல வம்ச அரசர்கள் எழுப்பிய சிற்பங்களின் காட்சிக் கூடமாகக் கோவில் திகழ்கிறது .

இந்த இடத்தை தக்ஷ தபோவனம் என்றும் அழைப்பதால் அது மருவி திராக்ஷாராம ஆனதாகவும் ஒரு கருத்து உண்டு.

Also Read my Previous 7 books

–சுபம்–

திராக்ஷாராம,  சிவன் கோவில்,  ஆந்திர மாநில,  புகழ்பெற்ற 108 கோவில்கள், PART-18

Leave a comment

Leave a comment