முகலிங்கம் கோவில் – Part 19 (Post No.13,509)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,509

Date uploaded in London – 4 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

(முக்கிய படங்கள் விக்கி பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி உரித்தாகுக.)

முகலிங்கம் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19

எங்கே  இருக்கிறது ?

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் அருகில் இருக்கிறது. ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து சுமார் 48 கி.மீ. தொலைவு. விசாகப்பட்டிணத்திலிருந்து 170 கிமீ. அறு நூறு ஆண்டுகளுக்கு கொடி கட்டிப்பறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது . தொல்பொருட்த் துறையின் பாதுகாப்பில் உள்ள சின்னம்.

இது வம்சதாரை என்னும் ஆற்றின்கரையில் அமைந்த சிவன் கோவில். இந்த வட்டாரம் வர்லேஆற்றுச் சிறப்பு வாய்ந்த இடம்.

என்ன சிறப்புகள் ?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  கீழைச் சாளுக்கிய  வம்ச அரசர்களின் தலை நகராக இருந்தது . முகலிங்கேஸ்வர்,  அநியங்க

பீமலிங்கேஸ்வரர் , சோமேஸ்வர் என்ற மூன்று லிங்கங்களை இந்த வளாகத்தில் காணலாம் சோமேஸ்வர் கோவில் ஊருக்கு வெளியே யுள்ளது.

கோவில் எட்டாம் நூற்றாண்டில் கங்க வம்ச அரசர்களால் கட்டப்பட்டது. இங்கு நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் பல நூறு ஆண்டுகளின் வரலாற்றை அறிய முடிகிறது. கோவில் கலிங்க பாணியில் (ORISSA) நிறுவப்பட்டுள்ளது.

தொல்பொருட்துறை சின்னம் ஆனாலும் இப்போதும் வழிபாட்டில் உள்ளது. சிவராத்ரி போன்ற உற்சவ காலங்களில் பல்லாயிரம் பக்தர்கள் குவிகிறார்கள் .

இங்குள்ள நிறைய  சிற்பங்கள் ஒப்பற்றவை; வேறு எங்கும் காண முடியாதவை. மும்மூர்த்திகள் சிற்பம் அவைகளில் ஒன்று

கங்க வம்சத்து அரசர்கள் தங்களை உத்கல த்ரிகலிங்க  தேசத்து மன்னர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்த இடத்தின் பழைய பெயர் கலிங்க நகரம். இந்த இடத்தில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. சோமேஸ்வர் கோவில் ஊருக்கு வெளியே யுள்ளது.

முகலிங்கம் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. இது பஞ்சாயதன வகைக்கோவில் ; அதாவது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணநாதன், மஹேஸ்வர ஆகிய ஐவர் உருவங்களும் இருக்கும். கோபுரம் ஆமலக  வடிவில் இருக்கும்.

சுவாமியின் திருநாமம் முகலிங்கேஸ்வர்; பழைய பெயர் மதுகேஸ்வரா என்பதைக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.

அருகிலுள்ள ஒரிஸ்ஸா (Odisha, Orissa) மாநிலத்தின்- கலிங்க தேசத்தின்– தாக்கத்தைக் காணலாம் . இது கலிங்க- குப்த வம்ச கலைகளின் கலப்பு என்பது வரலாற்று நிபுணர்களின் துணிபு .

ஒரு மன்னன் சிம்மசனத்தில் அமர்ந்து எதிரியை அவமானப் படுத்தும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.. காமரணவ என்ற மன்னன் 941-978க்குள் கோவிலைக் கட்டினான் என்று ஒரு கல்வெட்டு கூறும்.

லிங்கம் என்ன கல்லினால் ஆனது என்பது தெரியவில்லை. ஆனால் பால்வண்ண லிங்கம்..

கோவில் சுவர்களில் இராமாயண, மஹாபாரதக் காட்சிகளை சிற்பங்களாகச் செதுக்கியுள்ளனர். இவை தவிர சிற்பங்களிலேயே, பூ, கொடி , செடிகளும் உள .

ஒரு அதிசயம் என்னவென்றால் பார்வதிக்கோ அம்மனுக்கோ சிலை இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது!

ஊருக்கு வெளியே சோமேஸ்வரர் கோவில் இருக்கிறது இது த்ரிரத்ன பாணியில் கட்டப்பட்டிருக்கிறது;  இந்தக் கோவிலின் சிறப்பு ஆதி சங்கரர் ஸ்தாபித்த அறு வகைச் சமயங்களில் சைவ, வைஷ்ணவ, சாக்த, காணாபத்ய சிற்பங்கள் இருப்பதாகும் . செளர , கெளமார சிற்பங்கள் குறைவு.

பிரம்மா, நரசிம்மர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் , மகிஷாசுர மர்த்தனி சிலைகள் கண்ணைக்கவரும் வகையில் உள்ளன.

இந்த வட்டாரத்தில் நிறைய சிவன் கோவில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவைகளை பல ராமன் அமைத்ததாகவும் நம்புகின்றனர். மஹாபாரத யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்ன பலராமன் அந்தக்காலத்தில் நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்தது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது

. அருகிலேயே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மஹேந்திர கிரி இருக்கிறது. அங்கு மலை மேல் ஐந்து சிவலிங்க கோவில்கள் உள்ளன. இவைகளை பஞ்ச பாண்டவர்கள் வழிபடடதாகக் கூறுகின்றனர். 13 ஆண்டுக்கால வனவாச காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் செல்லாத இடம் எதுவும் இந்தியாவில் இல்லை. இதே போல ராமனும் 14 ஆண்டுக்கால வனவாசத்தில் இந்தியா முழுதுமுள்ள  தலங்களை தரிசித்தார் . அவருக்குப் பின்னர் ஆதி சங்கரர் நாடு முழுதும் வல ம் வந்து மடங்களை நிறுவியதை நாம் அறிவோம்; சென்ற இடமெல்லாம் அவர் ஸ்ரீ சக்கரம், மஹா மேரு  , ஸ்படிக லிங்கங்களை நிறுவியத்தையும் நாம் கோவில் வரலாறுகள் மூலம் அறிவதால் மக்கள் நம்பிக்கை — செவி வழி செய்திகள் –உண்மையே.

—SUBHAM—

TAGS- முகலிங்கம் கோவில், ஆந்திர மாநிலத்தின், 108 புகழ்பெற்ற, கோவில்கள் PART-19

Leave a comment

Leave a comment