யதாத்ரி நரசிம்மர் கோவில் – Part 21 (Post No.13,516)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,516

Date uploaded in London – 6 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

யதாத்ரி நரசிம்மர் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 21

ஆந்திரத்தில் தெலுங்கானாவிலும் புகழ்பெற்ற ஐந்து நரசிம்மர் கோவில்களில் ஒன்று யதாத்ரி நரசிம்மர் கோவில்.

எங்கே இருக்கிறது?

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 65 கி.மீ தொலைவில் இருக்கிறது  கோவிலின் பெயர் லட்சுமி நரசிம்ம சுவாமி.

ஊரின் வேறு பெயர்- யதாத்ரிகுட்ட .

பெரும்பாலான நரசிம்மர் போல இவரும் குன்றின் மீது அமர்ந்து தரிசனம் செய்கிறார்.

சிறப்புகள் என்ன ?

இந்தக் கோவிலை தெலுங்கானாவின் திருப்பதி என்று அழைக்கிறார்கள். மாநிலப் பிரிவினைக்குப்  பின்னர் புகழ்பெற்ற திருப்பதி  பாலாஜி கோவில் ஆந்திராவுக்குள் போய்விட்டது ஆகவே தெலுங்கானா  அரசு கோடிக்கணக்கான  ரூபாயை நன்கொடையாக கொடுத்து  இதை உருவாக்கியது .

திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளன ; யதாகிரியில்  ஒன்பது குன்றுகள் இருக்கின்றன .

இங்கு விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மவ  அவதாரம் ஐந்து கோலங்களில் உள்ளன . அவையாவன :

ஜ்வாலா  நரசிம்மர்

கண்டபேருண்ட நரசிம்மர்

யோகானந்த நரசிம்மர்

உக்ர நரசிம்மர் 

லக்ஷ்மி நரசிம்மர்

இந்தக் கோவிலை அண்மையில் புதுப்பித்துள்ளார்கள்

தல வரலாறு என்ன சொல்கிறது ?

ரிஷ்ய ச்ருங்க முனிவரின் மகன் யதா தவம் செய்தவுடன் நரசிம்மர் ஐந்து உருவங்களில் காட்சி தந்தார். அதே ஐந்து முகங்களுடன் குன்றின் மீது எல்லோருக்கும் தரிசனம் தரவேண்டும் என்று அவர் வேண்டியதை பெருமாளும் ஏற்றார் .

இது ஒரு குடைவரைக் கோவில். ஒரு பெரிய குகையில் நரசிம்மர் காட்சி தருகிறார்.

ஜ்வாலா நரசிம்மர் ஒரு பாம்பின் வடிவத்திலும், யோக நரசிம்மர் ஒரு தியான புருஷன் வடிவிலும் தரிசனம் தருகின்றனர். முக்கிய சந்நிதியில் லக்ஷ்மி நரசிம்மர் வெள்ளி கவசத்துடன் காட்சி அளிக்கிறார்

வலதுபுறம் அனுமார் கோவில் இருக்கிறது. அங்கே மலைப்   பாறையில் பெரிய பிளவு இருக்கிறது

அங்குதான் கண்ட பேருண்ட நரசிம்மர் தோன்றியதாக ஐதீகம்

(கண்ட பேருண்ட என்பது ஒரு புராண கால பறவை. அதற்கு ஓருடல் ; இரு தலை; இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகளிலும், நாணயங்களிலும் அரசாங்க சின்னங்களிலும் காணலாம். இரண்டு கால்களால் இரண்டு யானைகளைத் தூக்கும் சக்தி வாய்ந்த இந்தப் பறவையை விஜய நகர மன்னர்கள் நாணயங்களிலும் சின்னங்களிலும் பொறித்தனர்.மைசூர் மஹாராஜா சின்னங்களில் இப்போதும் பயன்படுகிறது )

புதிய கோவில்

பழைய  கோவில் இருந்த இடத்தில் மிகப் பெரிய புதிய கோவில் ஒன்றை 2022-ல் கட்டி முடித்தார்கள். ஏழு கோபுரங்கள், பல மண்டபங்கள், கல்யாண மண்டபம், 12 ஆழ்வார்கள் உள்ள தூண்கள் ஆகியன நிறுவப்பட்டன.

தென் கலை சம்பிரதாயக் கோவில் இது

ஸ்தபதிகள் கோவில் கட்டுவதற்கு மூன்றுவித கற்களில் சிலைகளைச்  செய்வார்கள் .

கிருஷ்ண சிலா அல்லது புருஷ சிலா கற்களில் ஆண் தெய்வங்களையும், ஸ்த்ரீ சிலா கற்களில் தேவி, அம்மன் சிலைகளையும் வடிப்பார்கள். நபும்சக (அலி) பாறைகளை தரைகளில் பாவுவார்கள். அதே முறை இங்கே பின்பற்றப்பட்டுள்ளது காகதீய வம்சத்தினர் கருங்கற் பாறைகளையும் பயன்படுத்தினர்; இதில் சிறு துளைகள் இருப்பதால் தயிர், பால் அபிஷேகத்தின் போது கற்கள் இருகி  வலுப்படும் என்பது சிற்பிகள் கண்ட உண்மை.

நேரில் பார்க்கப் போக முடியாவிட்டால் யூ டியூபில் காணுங்கள்.

–SUBHAM—

TAGS- யதாத்ரி நரசிம்மர் கோவில், ஆந்திர மாநிலத்தின், 108 புகழ்பெற்ற கோவில்கள், PART- 21

 READ LONDON SWAMINATHAN’S BOOKS ON TEMPLES

************************************

Leave a comment

Leave a comment