Date uploaded in London – 7 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part1
வங்காளி நாடகத்திற்குப் புனிதத்தையும் புத்துயிரையும் ஊட்டியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் . அவர் கல்கத்தாவில் பல நாடகங்களுக்குச் சென்றதை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளிப் பத்திரிகைகள் கண்டித்தன; குறைகூறின. பரமஹம்சரின் நெருங்கிய பக்த்ர்களும் விலகிச் சென்றனர் . இது பற்றி ஒரு அருமையான கட்டுரையை அமெரிக்காவிலுள்ள ராமகிருஷ்ண மிஷனின் சுவாமிகள் Swami Chetanananda Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. 2008ம்- ஆண்டில் பிரபுத்த பாரத பத்திரிக்கைக்கு எழுதிய ஆங்கில கட்டுரையின் சுருக்கத்த்தை தமிழில் தருகிறேன் .
ஞானிகளின் ஞானத் தீ பாவாத்மாக்களின் பாவங்களை சுட்டுப் பொசுக்கிவிடும் ; அந்தப் பாவிகள் புடமிட்ட பொன் போல பிரகாசித்து வெளியே வந்துவிடுவார்கள் ஞானமே உருவானவர்கள், பாரதி போல கருணை உள்ளம் படைத்தவர்கள் ஆகையால் பண்டிதாஹா சமதரசினாஹ என்ற கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கிற்கிணங்க அவர்கள் எல்லார்க்கும் பொதுவானவர்கள்
வள்ளலார் பாடுகிறார்…..
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. –திரு அருட்பா
xxxxx
பகவத் கீதை 5 -18
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः॥१८॥
வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|
ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||
கல்வியும் பணிவுமுள்ள பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர்கள் / அறிஞர்கள் சமமான பார்வையுடையோர்.ஆவர் — பகவத் கீதை 5 -18
xxxxx
பாரதி பாடுகிறார்…..
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
௧)
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான். (பகைவ)
௨)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)
௩)
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)
௪)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
௫)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)
௬)
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)
xxxx
இனி சுவாமிகளின் கட்டுரையைக் காண்போம்
Sri Ramakrishna: Patron Saint of the Bengali Stage
By Swami Chetanananda
Swami Chetanananda is the Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. He has written, edited, and translated many important books on Ramakrishna, Vivekananda, and Vedanta. This article was first published in the April, 2008 issue of Prabuddha Bharata.
வங்காளி மொழியில் நாடகங்களை இயற்றியும் மேடை ஏற்றியும் புகழ்பெற்றவர் கிரிஷ் சந்திர கோஷ் Girishchandra Ghosh, அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண (ரா.கி.ப) பரமஹம்சரின் சீடர் அவரைப் பல நாடகங்களுக்கு அழைத்த்துச் சென்றதன் மூலம் வங்காளி நாடகத்தின் புரவலராக patron (ரா.கி.ப) வைக் கருதினார்கள்.அவருடைய உபதேசங்களை கிரிஷ் சந்திரர் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு (வேசிகள் பேட்டை) பகுதிகளில் பரப்பினார்.
பிரபல ஆன்மீக எழுத்தாளர் Christopher Isherwood கிறிஸ்தோபர் இஷர்வுட் இதுபற்றிச் சொல்கிறார் :
அந்தக் காலத்தில் வங்காளி நாடகங்களில் நடித்த பெண்களை வேசிகள் என்று கருதினார்கள் இங்கிலாந்திலும் அப்படித்தான்; 19 ஆம் நூற்றா ண்டுவரை இந்தக் கருத்து நிலவியது
கிரிஷ் பற்றியும் அவர் சொல்கிறார்,
கிரிஷ் ராமகிருஷ்ணர் தொடர்பினால் இன்று கல்கத்தா நாடகத் திரையரங்குகளில் திரைக்குப் பின்னர் ரா.கி. படம் தொங்குகிறது . அவரை வணங்கிவிட்டே நடிகர் நடிகையர் மேடைக்கு வருகிறார்கள் . இந்த வினோதம் இப்போது நடக்கிறது. இப்படியாக வங்காளி நாடகத்தின் தந்தை ஆகிவிட்டார் ரா.கி.
இப்போது யாராவது சினிமா, நாடகம் ஆபரா பார்க்கச் சென்றால் அது அவமானத்துடன் பார்க்கப்படும் விஷயம் அல்ல. அவைகளுக்குப் போகாதவர்களை மக்கள் ஏசுவார்கள்; அவன் சரியான பட்டிக்காட்டான், பத்தாம் பசலி, பழைய பஞ்சாங்கம் , நாகரீகம் இல்லாதவன் என்று ஏசுவார்கள் ஆனால் ரா.கி. வாழ்ந்த காலத்தில் பழைய சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த வங்காளிகளும் , முற்போக்கு பிரம்ம சமாஜத்தினரும் நாடகக் கொட்டகைகள் என்பவை விபச்சாரிகள், குடிகாரர்கள் , கூத்தாடிகள், சூதாடிகளின் கூடாரம் என்று கருதி அந்தப் பக்கமே போகாமல் இருந்தனர். அவைகளை பாவங்களின் உற்பத்தித் தொழிற்சாலை என்றும் எண்ணினர் அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு– கல்கத்தா ஸ்டார் தியேட்டருக்கு– ஞான ஒளி வீசும், அவதார புருஷரான ராமகிருஷ்ணர் 1884ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சென்றது கல்கத்தா முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. கிரிஷின் அழைப்பின்பேரில் அவருடைய நாடகத்தைக் காணவே ரா.கி.சென்றார் நாடகத்தின் பெயர் சைதன்யர் லீலை . கல்வி கற்ற மற்றும் பழமை விரும்பிகள் அதை மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதினர்.
பிரம்மா சமாஜத்தினர் முதல் போர்க்கொடியைத் தூக்கினார்கள் .ஹேமேந்திரதாஸ் குப்தா எழுதினார்- கேசவ சந்திர சென் 1884 ஜனவரி 8 ஆம் தே தி இறந்த பின்னர், பிரம்ம சமாஜத்தினர்ரா.கி.இடம் செல்வதை நிறுத்திவிட்டனர். விஜய கிருஷ்ண கோ சுவாமி ரா.கி.க்கு நெருக்கம் .ஆனால் சிவநாத சாத்திரி அங்கே போவதை நிறுத்திவிட்டார் .நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டதற்கு, “நான் எப்படி அவரிடம் போக முடியும்? இப்போது அவர் கேடுகெட்ட நாடகக் கூத்தாடிகளுடன் சேர்ந்துவிட்டார் ; நான் இனிமேல் தட்சிணேஸ்வருக்குப் போகமாட்டேன்” .என்றார் சாஸ்திரி.
xxxxx
ஒரு நாள் ராமகிருஷ்ணர், இந்துமத கொடையாளி அஸ்வினி தத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தார்
அவர் கேட்டார்
உங்களுக்கு கிரிஷ் கோஷைத் தெரியுமா?
ரா.கி.- எந்த கிரிஷ் கோஷ்? தியேட்டர் தொழில் கிரிஷா?
ஆமாம்; அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் அவர் புகழை அறிவேன். நல்ல மனிதர்
எல்லோரும் சொல்கிறார்கள்; அவர் ஒரு குடிகாரராம்.
ராகி – குடிக்கட்டும், – குடிக்கட்டும், எத்தனை நாள் குடிப்பார்?
வைஷ்ணவரான ராமச்சந்திர தத்தாவும் ரா.கி. நாடகம் பார்க்கச் சென்றதை விரும்பவில்லை
கிரிஷ் இது பற்றி எழுதினார் – “மாஸ்டர் (ராமகிருஷ்ணர்) எங்கு சென்றாலும் ராமச்சந்திரா அவருடன் போவார். ஆனால் மாஸ்டர் நாடகம் பார்க்க வந்தபோது அவரைக் காணவில்லை . அவருக்கு உணவு அனுப்பியபோது அதையும் பாவ பூமியிலிருந்து வந்த உணவு என்று சொல்லி மறுத்துவிட்டார்”.
xxxx
மஹேந்திரநாத குப்தா (M ) எழுதிய காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா GOSPEL OF SRI RAMAKRISHNA வில் இது பற்றி எழுதுகிறார் –
சைதன்ய லீலை என்ற நாடகத்துக்குப் போக ரா.கி. ஆயத்தமானார். அவரை வண்டியில் அழைத்துச் செல்ல மஹேந்திர முகர்ஜியை ஏற்பாடு செய்தார்கள் எங்கே உட்கார்ந்து பார்ப்பது என்று விவாதித்தார்கள்; ஒரு ரூபாய் காலரி சீட்டில் உட்கார்ந்தால்தான் நன்றாகப் பார்க்க முடியும் என்றனர் உடனே ராம் சொன்னார்- அவருக்கு ஒரு விசேஷ இ டம் ஏற்பாடு செய்கிறேன் உடனே மாஸ்டர் (ரா.கி) சிரித்தார்.அருகிலிருந்த வேறு சிலர் அடடா! அங்கே விபச்சாரிகள் அல்லவா நடிக்கிறார்கள் அவர்கள் நிம்மி, நித்தி ?? வேஷம் போ டுவார்கள்
மாஸ்டர் அவர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்னார் :-
அவர்கள் எல்லோரையும் ஆனந்தமயனான தேவி சொரூபமாகவே நான் காண்பேன்
அவர்களில் ஒருவர் சைதன்யராகவே நடிக்கலாமே ! பொம்மையில் பழம் செய்தாலும் அதைப் பார்க்கும்போது நிஜமான பழம் ஞாபகத்திற்கு வராதா?
தொடரும் ——–Tags- மூன்று விபசாரி, புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part1