பாலம்பேட் சிவன் கோவில்- Part 22 (Post No.13,528)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,528

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பாலம்பேட் சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22

(படங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன.)

பாலம்பேட் சிவன் கோவில்  எங்கே இருக்கிறது ?

தெலுங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் கிராமத்திலுள்ள சிவன் கோவிலைராமப்பா  கோவில் என்றும் ருத்ரேஸ்வரா கோவில் என்றும் அழைக்கிறார்கள் .Ramappa Temple, also known as the Rudreshwara temple, வாரங்கல் நகரிலிருந்து சுமார் 70. கி.மீ.; ஹைதராபாத்திலிருந்து 210 கி.மீ

சிறப்புகள் என்ன ?

இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யுடைய கோவில்; காகதீய வம் சத்தினர் ஆண்டபோது இதைக் கட்டினார்கள்.

கோவிலில் உள்ள மூர்த்தியின் பெயர் ராமலிகேஸ்வரர்.

கணபதி தேவா (1199- 1262) என்ற மன்னனின்  படைத்த தளப தி ராஸர்லா ருத்ர ரெட்டி என்பவர், ராமப்பா ஏரிக்கரையில் எழுப்பியதால் ருத்ரேஸ்வர கோவில் எனப்படுகிறது  ராமப்பா என்பவர்  தலைமைச் சிற்பி.

இந்த வளாகத்தில் மூன்று கோவில்கள் இருப்பது சிறப்பு அம்சமாகும்  மார்க்கோ போலோ என்ற இத்தாலிய யாத்ரீகன் இதைப்  புகழ்ந்து எழுதியுள்ளான்.

சிற்பியின் பெயர் தாங்கிய கோவில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு

இதிலுள்ள கலை அம்ஸங்கள்  காரணமாக இதை யுனெஸ்கோ பண்பாட்டுத் தலங்களில் ஒன்றாக அறிவித்துள்ளனர் .

கோவிலின் அமைப்பு

சிவப்பு நிறக்கற்காளாலும் கருங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது முக்கிய சந்நிதிக்கு இரு புறங்களிலும் இரண்டு சிறிய கோவில்கள் இருக்கின்றன.

காண்போரைக் கவரும் கலையம்சங்கள் நிறைந்த கோவில். செங்கற்களால்  கோவில் விமானத்தை எழுப்பியுள்ளனர். இது பிரமிட் போல நிற்கிறது; இந்தவகைச் செங்கற்கள் தண்ணீரில் மிதக்கவல்லவை. அதில் துளைகள் அதிகம் அதைக் கொண்டு கோபுரம் எழுப்பியது ஒரு அதிசயம்.

சுவர்கள் தோறும் தூண்கள் தோறும், கூரைகள் தோறும் சிற்பங்களைக் காணலாம்  சிற்பி ராமப்பா , இந்தக் கோவிலை எழுப்புவதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டது ; அதைப்  பார்க்கும்போது கோவிலை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி புரியும்..

ஆறு அடி உயர நட்சத்திர வடிவ மேடையில்  சந்நிதி அமைந்துள்ளது ; கர்ப்ப  கிரகம் , அந்தராள , அர்த்த மண்டப, ரங்க மண்டப, நந்தி மண்பட , சாசன மண்டபங்களைக் கொண்டது.

இந்தக் கோவிலில்  உள்ள நாட்டிய பாணிகளைக் கொண்டு புதிய போஸ்களையும் உருவாக்கினர் ; அவை பழைய நாட்டிய புஸ்தகங்களில் கண்ட அபிநயனயங்கள்.

நந்தியின் அழகு நந்தியின் அழகு குறிப்பிடத்தக்கது. ஏராளமான ஆபரணங்களுடன் நந்தி நிமிர்ந்து நிற்கிறது. இன்னுமொரு குறிப்பிடத்தக்க  விஷயம் 800 ஆண்டுகளுக்குப் பின்னரும் கோவிலின் கருங்கல் தூண்கள் நேற்று பாலிஷ் போட்ட மாதிரி பளபளப்பதாகும்.  ஒரே மண்டபத்தில் 32 தூண்களைக் காணலாம்.மண்டபத்தின் மேல் கூரையில் மூலைகளை  இணைக்கும் பிராக்கெட்டுகளை BRACKETS அனைவரையம் கவரும்  வண்ணம் அமைத்துள்ளார் சிற்பி ராமப்பா ; இதை வேறு எங்கும் காண முடியாது. அவைகளில் 12 அழகிகளை வெவ்வேறு போஸ்-களில்  பார்த்து ரசிக்கலாம். கல்லிலே கவி பாடி இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது ..

ஒரு நாகினி உருவம் மிகவும் அழகாக இருந்ததால் ஹைதராபாத் நிஜாம் அதிகாரி அதை அகற்றி தன் வீட்டிற்கு அலங்கார பொருளாக நிறுவினார் மக்களின் எதிர்ப்புக்குப் பின்னர் அது கோவிலுக்கு மீண்டும் வந்தது. இதே போல கோவில் நகைகளையும் நிஜாம் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். புகார்கள் வலுக்கவே நிஜாம் அதைத் திருப்பித் தந்தார். அவைகளில் எத்தனை உண்மையானவை எத்தனை இமிடேஷன் என்பதை சிவபெருமான் மட்டுமே அறிவார்.

இதே போல மதுரை மீனாட்சி அம்மனின் நீலக்கல் நகைகளை மதுரை வெள்ளைக்கார அதிகாரிகள் விக்டோரியா மகாராணிக்கு அனுப்பி, இமிடேஷன் நகைகளை  மீனாட்சி கோவிலில் வைத்துள்ளனர் . இது பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.

பிரதான கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கம்  அழகான யோனி பீடத்தில் நிற்கிறது. இரு புறமும் நிற்கும் துணைக் கோவில்களில் சிவ தாண்டவ உருவம் குறிப்பிட்டது தக்கது.

மஹாசிவராத்திரி உற்சவத்தின் போது மூன்று நாட்களுக்குப் பல்லாயிரம் பக்தர்கள் வருகிறார்கள். அப்போது ஏராளமான கடைகளும் வந்து விடும்.

மண்டபங்களில் உள்ள மதனிகா, நாயிகா, நாகினி பெண்களின் உருவ ங்கள்  தற்கால ‘பேஷன்’களைத் தோற்கடித்துவிடும். ‘ஹை ஹீல்ஸ்’ அணிந்த பெண்கள் எம்ப்ராயடரி பூ வேலைப்பாடுகளுள்ள உடைகளை அணிந்து நிற்கின்றனர்.

Black polished pillars in the mandapa still retain the lustre even after eight centuries of harsh interaction of nature and humans. The sculptures of voluptuous nayikas Nagini and Madanika are just a perfect demonstration of feminine aesthetics in stone. Sculptures of woman with high-heels, wearing cloth with lace embroidery will certainly envy our modern fashion icons.

கோவிலில் உள்ள ரங்க மண்டபம் என்பது நாட்டியங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம். ஆகையால் அங்கே வித விதமான நடன அழகிகள் செதுக்கப்பட்டுள்ளன நடன  கணபதி, , காதல் அன்பைக் காட்டும் கணவன் மனைவி உருவம், ரதி- மன்மதன் சிலை கிருஷ்ண லீலைகள் , இந்து மதத்தின் நான்கு குறிக்கோளை விளக்குகின்றன. அதாவது கோவில் என்பது தர்மஅர்த்தகாமமோக்ஷத்தை விளக்கும் இடங்கள்.

சாசன மண்டபத்தில் கோவில் பற்றிய சாசனம்/ கல்வெட்டு — 13ம் நூறாண்டு சம்ஸ்க்ருத கல்வெட்டு –இருக்கிறது .

Sanskrit inscription in the Mandapa.

–SUBHAM–

பாலம்பேட் சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22

Leave a comment

Leave a comment