மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3 (Post No.13,527)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,527

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3

முதலில் ராமகிருஷ்ணரின் (மாஸ்டர்) நாடகக் கொட்டகை தொடர்பினை வெறுத்த ராமசந்திர தத்தாவும்  மாஸ்டரின்/ குரு நாதரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆழந்த பொருள் உள்ளதது என்பதை உணரத்  தொடங்கினார். வழிதவறிப்போன ஆத்மாக்களைக் கரையேற்றும் சக்தி அவருக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டார். குரு நாதர் சமாதிக்குப் பின்னர், 1890 முதல் அவர் தியேட்டர்களில் குருநாதரின் சேவை குறித்து உரையாற்றத் தொடங்கினார் அவரே கட்டுரை எழுதி, அதில் நாடகங்கள் நல்ல கொள்கைகளைப் பரப்பும் ஒரு கருவி; அவைகள் மூலம் சமுதாயத்தைச் சீர்திருத்தலாம் என்று எழுதினார். கிரிஷ் சந்திர கோஷின் சைதன்ய லீலா, புத்த சரித , பிரபாஸ் யக்ஞ ஆகிய நாடகங்களை எடுத்துக்காட்டாக அளித்தார் .இத்தகைய நாடகங்கள் மக்களைத் தட்டி எழுப்பி உயர்த்திவிடும் என்றும் எழுதினார்.

வேசிப் பெண்களை நடிகர்களாக ஏற்பது ஏன் என்றும் நியாயப்படுத்தினார் ஆண்களை பெண் வேடத்தில் நடிக்கவைத்தால் அது இயற்கையாக இராது; குடும்பப் பெண்கள், நடிக்க  வரவும் மறுக்கிறார்கள்  ஆகையால் நடிக்க வரும் விபச்சாரிகளை வெறுக்காதீர்கள் என்கிறார். மேலும் அத்தனை பெரும் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல;  வாழ்க்கையை நடத்துவதற்கான பொருளை வேண்டி,  பணக்காரர்களின் வைப்பாட்டிகளாக மட்டுமே உள்ளனர் என்றார்.

இப்படியெல்லாம் அவர் நியாயப்படுத்தியபோதும் , வேசிகள் நடிக்கும் நாடகங்கள் இளைஞர்களைக் கெடுத்துவிடும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

களத்தில் குதித்தார் சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் எதையும் விட்டுக்கொடுக்காத பிடிவாதக்காரராக வாழக்கையைத் துவக்கினார். ஆனால் குரு நாதரைச் (ரா.கி) சந்தித்த பின்னர் அவரது  வாழ்க்கை அடியோடு மாறியது

1896ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பிரான்சிஸ் லெக்கார்ட் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் சொல்கிறார் :

எனக்கு 20 வயதாக இருக்கும்போது நான் கருணையற்ற, அனுதாபமில்லாத , வெறியனாக இருந்தேன் (On 6 July 1896 he wrote to Francis Leggett about his transformation: ‘) கல்கத்தாவில்  நாடகக் கொட்டகை இருக்கும் பிளாட்பாரத்தில் நடக்காமல் எதிர் பிளாட்பாரத்தில்தான் நடந்தேன் 33 வயதானபோது விபச்சாரி வீட்டில் கூட அவர்களைக் குறைகூறாமல் வசிக்கும் பக்குவத்தை அடைந்தேன் இது நான் அடிமட்டத்துக்குப்  போய்விட்டேன் என்பததைக் காட்டுகிறதா ? அல்லது இறைவனின் அன்புமயமான உலகத்தில் காலடி எடுத்துவைத்துவிட்டேன் என்பததைக் காட்டுகிறதா ?

xxxx

Vivekananda wrote to Swami Ramakrishnananda from Switzerland on 23 August 1896:

சுவிட்சர்லாந்திலிருந்து 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட்-23ம் தேதி சுவாமி ராமகிருஷ்ணாநந்தாவுக்கு, சுவாமி விவேகானந்தர்  ஒரு கடிதம் எழுதினார்:

” இன்று எனக்கு ராம்தயாள் பாபுவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது . தட்சிணேஸ்வரத்தில் நடந்த ராமகிருஷ்ணர் நினைவு தினக்கூட்டத்துக்குப் பல பொதுமகள்கள்/ வேசிகள் வருவதை அறிந்தேன்; எனக்குப் போகவே பிடிக்கவில்லை. மேலும் அவர் எழுதினார்; இனிமேல் ஆண்களுக்கு ஒரு நாளையும் பெண்களுக்கு வேறு ஒரு நாளையும் ஒதுக்க வேண்டும் என்று

இது பற்றிய என் கருத்து இதோ :

1.தட்சிணேஸ்வரம் போன்ற புனித இடங்களுக்கு வேசிகள் வரக்கூடாது என்றால் அவர்கள் வேறு எங்குதான் போவார்கள்? கடவுள் அவதாரம் எடுப்பது புண்ணிய ஆத்மாக்களுக்காக  அல்ல. பாவாத்மாக்களை கரை ஏற்றத்தான் அவதாரங்கள் வருகின்றன .

2.நரகத்தின் வாசல்களான் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆண் , பெண் முதலிய லோகாயத இடங்களில் மட்டும் நிற்கட்டும்.; அப்படிப்பட்ட வேறுபாடுகள் புண்ய  தலங்களில்  இருந்தால் அவைகளுக்கும் நரகத்துக்கும் என்ன வேறு[பாடு உளது ?

3. நாம் இருக்கும் இடம் ஜகன்மாதாவின் பிரம்மாண்ட நிலப்பரப்பு.  பாவிகளுக்கும் மஹான்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அங்கே சம உரிமை உண்டு  அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடி இறைவனின் திவ்ய கீதத்தை இசைக்கட்டும் அவர்களின் பாவங்கள் அடித்துச் செல்லப்படட்டும் அதுவே மிகப்பெரிய பலன்.

4.புனிதத் தலத்தில் ஒரு நாளைக்குக்கூட கெடுதிகளைத் தடுக்க முடியாவிட்டால் அது நமது குறையே அன்றி தீயோருடையது அன்று.  .பிரமாண்டமான ஆன்மீகப் பேரலைகளை எழுப்புவோம். அது அனைவரையும் ஆன்மீக வெள்ளத்தில் அடித்துச் செல்லட்டும்.

5.ஒரு புனித இடத்திலும் அவன் ஏழை , இவன் பணக்காரன் இவள் வேசி, அவன் கீழ்ஜாதி , இது பட்டிக்காடுகள்  என்று நினைப்பார்களானால் அத்தைகய கனவான்கள் (Gentlemen) அந்த இடத்திற்கு வராமலிருப்பதே நல்லது; ஜாதியையும் ஆணா பெண்ணா என்று பார்ப்பவர்களையும் கடவுள் விரும்புவாரா?  நூற்றுக்கணக்கான வேசிகள் நமது கூட்டங்களுக்கு வந்து குருநாதரின் சிலையின் கீழ் தலைகளை வைத்துப் புனிதம் அடைய நான் ஆண்டவனைப் பிரார் த்திப்பேன்.  ஒரு கனவான் வரவில்லை என்றாலும் கவலை இல்லை; குடிகாரர்களும் திருடர்களும் வேசிகளும் வரட்டும்; கடவுளின் வாசல்கள் அவர்களுக்காக திறந்தே இருக்கும்  ஊசியின் காது வழியாக ஒட்டகமே  கூடச் சென்றுவிடும்; ஆனால் ஒரு பணக்காரரான கடவுளின் சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பது கடினமே. உங்கள் மனத்தில் இனிமேல் எந்த கொடூரமான எண்ணத்துக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள்.

XXXXX

விவேகானந்தாவுக்கு  சகோதரி நிவேதிதா எதிர்ப்பு

இப்படிப்பட்ட வேசி எதிர்ப்பு, சகிப்பற்ற தன்மை  வங்காளத்தில் மட்டும் இருந்ததாக நினைத்துவிடக்கூடாது . மேலை நாடுகளிலும் உண்டு

1900ம் ஆண்டில் விவேகானந்தர் பாரிஸ் நகருக்கு வந்தார். புகழ்பெற்ற ஆபரா பாடகர் opera singer Emma Calvé singing Carmen; எம்மா கால்வே பாடும் கார்மென் ஐட்டத்ததைக் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்கு அமெரிக்காவிலேயே மேடம் கால்வேயைத் தெரியும். அவர் சுவாமிஜியின் பல சொற்பொழிவுகளைக் கேட்டவர் .

இதுபற்றி தி டெடிகேடட் பத்திரிக்கையில் லீசல் ரேமண்ட் எழுதுகிறார்  Lizelle Reymond tells it in The Dedicated:

கால்வேக்கும் சுவாமிஜிக்கும் நடந்த உரையாடல்

சுவாமிஜி – நான் உங்கள் புகழ்பெற்ற பாட்டைக் கேட்கவேண்டும்

கால்வே — அது என்ன !!!

சுவாமிஜி – அதுதான் கால் மென் !

கால்வே – வெட்கம் கன்னத்தில் பிதுங்க சொன்னார் – மன்னிக்க வேண்டும் சுவாமிஜி; இதை நான் செய்வது மேடைக்காக. (உள்ள பூர்வமாக அல்ல)

இப்படி உரை யாடல் நிகழும்போது அருகிலிருந்த நிவேதிதா குறுக்கிட்டார்

இப்படி ஆபராவுக்கு போக வேண்டும் என்று சொன்னவுடன் நிவேதிதா குதித்து எழுந்தார்;

ஐய்யயோ , அங்கெல்லாம் சுவாமிஜி போகக்கூடாது. எல்லோரும் உங்களைத் திட்டித் தீர்த்துவிடுவார்கள்

ஆச்சர்யக்குறி முகத்தில் உதிக்க சுவாமிஜி சிஸ்ட்டர் நிவேதிதாவை ஒரு பார்வை பார்த்தார் ; பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்த்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் லெக்கார்ட் என்பவருடன் ஆப்பரா கச்சேரிக்குப் போனதோடு நில்லாமல் , இடை  வேளையில் நடிகையின் உடை மாற்ற அறைக்கும் சென்றார்; அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. கார்மென் என்பவள் கெட்ட பெண் அல்ல. அவள் உண்மையே சொல்கிறாள் .ஆத்மாவின் வெளிப்பாடு; எல்லோருக்கும் அவளுக்காக பிரார்த்தனை செய்த பின்னரும் அவள் சொல்கிறாள்- ஜகன்மாதாவே என் பிரார்த்தனையைக் கேளாதே ; நான் என் ஆசையுடன் இறப்பேனாகுக என்று. அவள் உயர் வம்ஸ பெண்மணி என்று சுவாமிஜி விளக்கினார்

( இதை எழுதும்போது மஹாத்மா காந்தி நிர்வாணமாக  கன்னிப்பெண்கள் இடையே பல இரவுகளில் படுத்து பிரம்மச்சர்ய சோதனை செய்ததும் அதை நேருஜி கிண்டல் செய்ததும் நினைவுக்கு வருகிறது; ஆயினும் காந்திஜியின் அரசியலைச் சாடியவர்களும் கூட, அவரது ஒழுக்கத்தைப்பற்றிக் குறை கூறியதே இல்லை.)

ஆன்மீகத்தின் உச்ச நிலையை எய்தியவர்களுக்கு அழகிகளும் கிழவிகளும் ஒன்றே.

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”– பாரதியார்

TO BE CONTINUED…………………………..

TAGS –மூன்று விபசாரிகள் , புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3

Leave a comment

Leave a comment