மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – 4 (Last Part) Post.13,531

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,531

Date uploaded in London – 10 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 4

பொது மகளிர் நாடக மேடைகளில் நடிக்கக்கூடாது என்று பல பத்திரிகைகள் எழுதிய பொழுது,  சில வங்காளி  மொழிப் பத்திரிகைகள் வேசிகள் நடிப்பதை ஆதரித்து எழுதின  ஒரு பத்திரிகை அத்தோடு  நிற்காமல், ராம கிருஷ்ண பரமஹம்சர் பெயரில் ஐந்து நாட்களுக்கு விழாவை ஏற்பாடு செய்து , ஒரு நாடகத்தின் அத்தனை வசூல் பணத்தையும் விழாவுக்கே அர்ப்பணிக்கப்  போவதாகவும் அறிவித்தது. உடனே மேலும் பல பத்திரிக்கைகளும் அமைப்புகளும்  இதே போல செய்தன.

குருநாதரின் (ரா.கி) அருள், கல்கத்தா நாடக உலகிலும் சிவப்பு விளக்கு பகுதிகளிலும் வியத்தகு புனித அலைகளை உண்டாக்கியது. .

விபச்சாரி தகனத்துக்கு பணம் கொடுங்கள் !

ஒரு முறை கல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு பிரபல வேசி இறந்து விட்டாள் ; சடலத்தை தகனம் செய்யக் காசு இல்லை; உடனே முக்கியப் புள்ளிகள் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று 26,000 ரூபாய் தாருங்கள் என்று கேட்டனர்; உடனே அங்கிருந்த சாமியார் வழக்கறிஞரை அழைத்து அவள்  ஏதேனும் உயில் எழுதிவைத்திருக்கிறாளா என்று கண்டு பிடிக்க வேண்டினார். என்ன ஆச்சர்யம்! அந்த வேசி, தனது சொத்து, சுகம் அத்தனையையும் ராமகிருஷ்ண மடத்துக்கு எழுதி வைத்திருந்தாள். உடனே சாமியாரும் தேவையான பணத்தை தகனக்கிரியைக்கு அளித்தார். இறந்துபோன விபச்சாரியின் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கிடைத்தன; அவளுடைய உயிலின் படி அத்தனையும் மடத்தின் அக்கவுண்டில் சேர்க்கப்பட்ன; அது மட்டுமல்ல அந்த வேசி வீட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் படமும்  குருநாதர் பற்றிய சில புஸ்தகங்களும் இருந்தன. பல வேசிகள் பிழைப்புக்காக தொழில் நடத்துகின்றனர் அவர்கள் உடல் அளவில் வேசிகள்; உள்ளத்தில் உத்தமர்கள்.

(ராகி. சொன்ன எதிரெதிர் வீட்டு வேசி- யோகி கதை எல்லோருக்கும் நினைவு இருக்கும் ; ஆகையால் இங்கு எழுதாமல் விடுகிறேன்)

இதெல்லாம் ஒரு புனிதரின் அருள் வீச்சில் நடந்த அற்புதங்கள் .

xxxx

பினோதினி சுய சரிதை

(சைதன்ய லீலை என்ற புனித நாடகத்தில் கதாநாயகியாக நடித்த புகழ்மிகு நடிகை பினோதினி (வினோதினி), ஒரு வேசி குடும்பத்தில் பிறந்தவள்).

இது பற்றி வங்காளத்தின் புகழ்மிகு நடிகை பினோதினி (வினோதினி) தனது சுய சரிதையில் எழுதினாள் –“:உலகமே என்னை ஈனப்பிறவி என்றாலும் எனக்கு கவலை இல்லை புண்ய புருஷரான ராமகிருஷ்ணர் என்னை ஆசீர்வதித்துவிட்டார். ஹரி குரு , குரு ஹரி என்ற அவரது அமிர்த மயமான உபதேச மொழி என் காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டே இருக்கிறது  என்னை துயரங்கள் வந்து தாக்கி அமுக்கும்போது குருநாதரின் கருணை முகம் என்

உள்ளத்தில் உதிக்கிறது “சொல், சொல்! ஹரியே குரு ; குருவே ஹரி” என்ற வசனங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எத்தனை முறை நான் நடித்த சைதன்ய லீலை நாடகத்தைப் பார்க்க குரு நாதர் வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் BOX SEAT ஆசனத்தில் அமர்ந்து பார்த்தபோது அவரைக் கவனித்தேன்; அவர்  ஆனந்த பரவசத்தில் மிதந்தததைக் கண்டேன்.”

இது பற்றி பிரபல வங்காளி நடிகர் அம்ரித்லால் பாசு சொன்னார்- “நடிகை பினோதினி சைதன்ய  மகாபிரபு வேஷத்தில் நடித்ததும் அதை ராமகிருஷ்ணர் பார்த்து ஆனந்தம் அடைந்ததும்,  அவப்பெயர் தாங்கிய வங்காளி நாடக மேடையை வைகுண்டமாகவே மாற்றிவிட்டது ; அவர் ஒரு அவதார புருஷர். நாம் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள்.”

அதைப் பார்த்தவர்களும், அது நடந்த பூமியும் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டது; இப்போது சைதன்ய லீலையை எல்லோரும் தெய்வீக நாகடகமாகவே பார்க்கின்றனர்.

நடிகர் அபரேஷ் முகோபாத்யாய எழுதினார் :– நாடகம் துவங்கிய காலத்தில், அதில் நடிப்பவர்கள் ஈனப்பிறவிகள் ; பறையர்கள் என்றெல்லாம் கருதினர். அது மாறிவிட்டது.

நாடகங்களை எழுதும் கிரிஷ் சொன்னார் :-சமுதாயத்தில் கீழே விழுந்துவிட்ட வேசி மகளுக்கு யாராவது ஆதரவு தருவார்களா? அனுதாபம் காட்டுவார்களா? ஆனால் காமினி காஞ்சனத்தை (பெண்ணும் பொன்னும் ) அடியோடு துறந்த புனிதர், தனது கைகளால் பினோதினியின் தலையைத் தொட்டு ஞான ஒளி பெறுவாயாகுக என்று சொல்லிவிட்டார்.

வெறும் சினிமாக்காரிகள் படங்களை மட்டுமே தாஙகிய நாட்ய மந்திர் பத்திரிக்கை  ஸ்ரீ ராமகிருஷ்ணரின் படத்தை அட்டையில் போட்டு,  உலகமே நாடக மேடை; நாம் எல்லோரும் நடிகர்கள்; நம்முடைய கதாபாத்திரத்தை சரியாகச் செய்யாத போது பெரிய டைரக்டர் வந்து சரிசெய்கிறார் என்று புகழ் மாலை சூட்டியது .

அவர்கள் குறிப்பிடும் அந்தத் பெரிய டைரக்டர் வங்காளத்தில் தொலைதூர கிராம த்தில் பிறந்தவர்; கல்வி அறிவு பெறாதவர்; கல்கத்தா அருகிலுள்ள தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் பூஜாரி வேலை செய்த்தவர். கருணையே உருவான அந்த அவதார புருஷர் அசுத்தங்கள் நிறைந்த நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார். அத்தனை அழுக்குகளும் அசுத்தங்களும் அவரது அருள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது!

வசந்த குமார் கோஷ் நாட்ய மந்திர் பத்திரிகையில் எழுதுகிறார் – “பினோதினி அவரது நடிப்பின் மூலம், நாடக மேடையில் உயிர்த்  துடிப்பைக் கொண்டுவந்தார். அதை பார்த்த பகவான் ராம கிருஷ்ணர் அத்தனை நடிகைகளுக்கும் வேசிகளுக்கும் ஆசீர்வாதத்தைத் அருளி புத்துயிரைத் தந்துவிட்டார் ..

இதெல்லாம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முந்தைய கதை; இன்றோ உலகம் அடியோடு மாறிவிட்டது; நடிகர் நடிகையருக்கு பெரும் புகழ் சேருகிறது; ஒவ்வொரு உயர் குடும்பப் பெண்ணும் கூட நடிக்கப்போகிறார்; அந்தக் குடும்பமோ  அதைக் காட்டிப் பெருமைப்படுகிறது.

இந்து மத நூல்களில் சிவ பெருமானே நடிகர்; எல்லா நாடக, நடன மேடைகளிலும் நடராஜர் படமோ உருவமோ இருக்கும்; அவரை வணங்கியே எல்லோரும் நிகழ்ச்சியைத் துவங்குவர்

சைதன்ய லீலை நாடகத்தை எழுதிய கிரிஷ் சந்திரகோஷ் கூறுகிறார்- யாராவது ஒரு பிரமுகர் வருவதை அறிந்ததால் நடிகர், நடிகையர் முழு உற்சாகத்துடன் திறமையைக் காட்டுவார்கள்; அவதார புருஷரான, முற்றும் துறந்த முனிவரான ராமகிருஷ்ணரே வந்து விட்டால் கேட்கவா வேண்டும்? ஒருவேளை நாடகக்  கொட்டகையின் அவப்பெயரை அகற்றவே இந்த அவதாரமோ!

அம்ரித்லால் பாசுவும் சைதன்ய லீலையில் நடித்தார்; ஆனால் அவருக்கு ராமகிருஷ்னர் அருகில் வர பயம்; தான் ஒரு பாவாத்மா; அவர் அருகே செல்லக்கூடாது என்று நினைத்து ஒதுங்கி விடுவார். இதை அறிந்த கிரீஷ் அவரை குருநாதரிடம் அழைத்துச் சென்று  ஆசீர்வாதம் வாங்கித் தந்தார். அப்போது முதல் அவரது வாழ்க்கை அடியோடு மாறியது.

ஒவ்வொரு நாளும் நாடகம் முடித்தவுடன் எல்லோரும் கிரீஷ் அறையில் சந்த்தித்து கதை அளப்பார்கள்.

ஒருநாள் தாராசுந்தரி என்ற நடிகை சொன்னாள் – நம்மைப் போன்றவர்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது; அத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்.

உடனே கிரீஷ் குறுக்கிட்டு, தாரா அப்படி சொல்லாதே; உன் அத்தை பினோதினியைப் பார்; எப்படி மாறிவிட்டாள்

உடனே அபினாஷ் குறுக்கிட்டு- ஆமாம் இப்போது அவள் கோபாலனின் பரம பக்தை என்றார்.

xxxx

கடைசியாக பினோதினி கேட்கும் கேள்வி???

“நான் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு ஏழையாகப் பிறந்தேன்; என் அம்மா ஒரு விபச்சாரி; ஆகையால் நானும் அதே தொழிலில் இறங்கினேன் இதை இழி தொழில் என்று மக்கள் ஏசுவது எனக்குத் தெரியும் . இறைவன் எனக்கு நடிக்கும் திறமையைக் கொடுத்திருந்தான்; அதைப்  பயன்படுத்தி நாடக மேடை ஏறினேன்  என் குலத் தொழிலை விட்டு, நான் நடிகையானது தவறா?

அதில் சைதன்யர் வேஷம் தரித்து நாடகம் பார்க்க வந்தோரை ஆன்மீக வளையத்துக்குள் கொண்டு வந்தேனே ; அது தவறா ? இந்தக் கேள்விக்கு வாசகர்களே பதில் சொல்லட்டும்.

இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான பினோதினிகள் சிவப்பு விளக்கு பேட்டைகளில் வாடி, வதங்கி, சித்திரவதையில் சிக்கியுளார்கள்; வெறுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் கேட்பாறற்றும் துடித்துக் கொண்டிருக்கும் அவர்களைக் கரையேற்ற என்ன வழி ???

xxxx

Sri Ramakrishna: Patron Saint of the Bengali Stage

By Swami Chetanananda எழுதிய கட்டுரையின் சுருக்கம் ; தமிழில் தந்தவர்- லண்டன் சுவாமிநாதன் )

Swami Chetanananda is the Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. He has written, edited, and translated many important books on Ramakrishna, Vivekananda, and Vedanta. This article was first published in the April, 2008 issue of Prabuddha Bharata.

—subham—

புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 4 , மூன்று , விபச்சாரிகள், வேசி, பொது மகளிர், பினோதினி, விநோதினி

Leave a comment

Leave a comment