WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,534
Date uploaded in London – 11 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –28 (Post.13,534)
பிள்ளைகள் பெற ஒரு மந்திரம் ;பாவவங்களை அகற்றுவது எப்படி?
தேவகி நந்தனஹ – நாம எண் – 989- பிள்ளைகள் பெற ஒரு மந்திரம்
தேவகியின் புதல்வர் .
முதலில் மஹாபாரதம் சொல்வதைக் காண்போம் :
ஜ்யோதீம்ஷி ஸுக்ராணி ச யானி லோகே த்ரயோ லோகா
லோகபாலாஸ் த்ரயீ ச
த்ரயோக் நஸ்ய சாஹூ தயஸ்ச பஞ்ச ஸ ர்வே தேவா தேவகி புத்ர ஏவ
தேவகியின் மகனான கிருஷ்ணன் யார் என்றால்,
இந்த வானத்தில் ஒளி வீசும் எல்லா கிரகங்களும், நட்சத்திரங்களும், அதே போலவே மூவுலகங்களிலும் அதைக்காக்கும் தேவர்களும் , மூன்று வேதங்களும் அந்தணர்களின் முத்தீயும், , அவர்கள் அளிக்கும் ஐந்து ஆகுதிகளும் ஸர்வ தேவர்களும் ஒட்டு மொத்தமாக வந்தவர்தான் (கிருஷ்ணர் ) . அனுசாசன பர்வம் 263-31
என் கருத்து
எல்லா துதிகளிலும் , பஜனைப்பாடல்களிலும் கிருஷ்ணரின் தாயாரான தேவகியும் வளர்ப்புத் தாயான யசோதாவுமே முக்கிய இடம் பெறுகிறார்கள் அதற்கடுத்த நிலையில்தான் வாசுதேவன் வருகிறார். இதுதான் இந்து மதத்தின் சிறப்பு. உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் தாயைப் புகழ்வது மிகவும் அரிதே .கிறிஸ்தவத்திலும்கூட வர்ஜின் மேரியைப் புகழ்வது பைபிளில் இல்லை. உருவ வழிபாட்டுக்காக கத்தோலிக்க மதம் மட்டுமே அவளை முன் வைக்கிறது . மனு ஸ்ம்ருதியும் ஒரு தாய் ஆயிரம் தந்தைகளுக்கு சமம் என்று பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டது . மேலும் இரண்டு ஸ்லோகங்களில் எந்த வீட்டிலாவது பெண்களை அழ விட்டால் அந்தக் குடும்பம் வேறோடு சாயும் என்றும் சகோதரர்கள் அவர்களுடைய சகோதரிகளுக்கு துணிமணிகளையும் நகைநட்டுகளையும் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்சசியாக வைக்க வேண்டும் என்றும் மனு சொல்கிறார்.
2500 ஆண்டுகளுக்கு மனு, பெண்களைப் போற்றியதற்குச் சமமான விஷயத்தை உலகில் வேறு இந்தப் பண்பாட்டிலும் காண முடியாது.
புத்திரப் பேறு வேண்டுவோர் சொல்லவேண்டிய மந்திரம் ,
ஓ தேவகி நந்தனஹ ஸ்ரேஷ்டேதி சக்திஹி
தேவகி ஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்யதே
தேஹி மே தனயம் க்ருஷ்ண
த்வாமஹம் ஸரணம் கதஹ
xxxx
க்ருஷ்ண ஹ — நாம எண் 57-
கரிய நிறம் படைத்தவர் அல்லது ஸச்சிதானந்த வடிவினர்.
ஸச்சிதானந்த ரூபாய க்ருஷ்ணாயாக்லிஷ்ட காரிணே
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸா க்ஷி ணே — சங்கரர்.
நீலோபி நீரந்த்ர தமஹ ப்ரதீபஹ– லீலாசுகர்
மஹாபாரத உத்யோக பர்வம் சொல்வதாவது :
க்ருஷிர் பூவாசகஹ சப்தோ நஸ் ச நிவ்ருத்தி வாசகஹ
விஷ்ணுஸ் தத் பாவ யோக சக் மோ பவதி சாஸ்வதஹ
பொருள்
க்ர் –என்றால் சத் – அதாவது இருத்தல்/ வாழ்தல் ;
ந -என்றால்ஆனந்தம் ; விஷ்ணு என்பதில் இரண்டுமுள ; ஆனந்தமாக இருத்தல். ஆகையால்தான் விஷ்ணுவை க்ருஷ்ண என்கிறோம் .
xxxx
க்ருஷ்ண ஹ — நாம எண் 550–
இரண்டாவது முறை கிருஷ்ண நாமம் வருகிறது. இங்கு சங்கரர் தரும் பொருள் :
கிருஷ்ணர் எனப் பெயர்கொண்ட வியாசர்.
விஷ்ணு புராணம் சொல்கிறது 3-4-5
க்ருஷ்ணத் வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
கோஹ்யன்யஹ புண்டரீகாக்ஷஆன் மஹாபாரத க்ருத் பவேத் .
பட்ட பாஸ்கரர் தரும் அர்த்தம் — கார்முகில் போன்ற கருத்த நிறமுள்ளவர்
என் கருத்து
விஷ்ணு சஹஸ்ர நாம ஆரம்பத்திலும் இதைக் காண்கிறோம்
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே .
இன்னுமொரு ஸ்லோகம் வியாசரின் நான்கு தலை முறைகளை சொல்கிறது
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்
வசிஷ்டர் -சக்தி- வியாசர் – சுகர் ஆகிய 4 தலை முறைகள்
உலகிலேயே அதிகமாக எழுதியவர்/ தொகுத்தவர் வியாசர்தான்; ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மஹாபாரதம் , எட்டு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட 18 புராணங்கள் ஆகியவற்றை நமக்குப் பாதுகாத்துக் கொடுத்ததால் அவரை இந்து மதத்தின் குருவாக எண்ணி ஒவ்வொரு வியாச பெளர்ணமி தினத்திலும் எல்லா ஆச்சார்யார்களும் அவரை கடவுளாக எண்ணி பூஜிக்கின்றனர்
வியாசர் இல்லாவிடில் நமக்கு பகவத் கீதையோ சஹஸ்ரமநாமமோ கிடைத்திராது.
xxxxx
பாபங்களைத் தீர்க்க சுறுக்கு வழி
மனிதர்கள் மீது பெருங்கருணை கொண்ட ஆதி சங்கரர், அவர்களை பாவக் கடலிலிருந்து மீட்க எண்ணற்ற எளிய ஸ்லோகஙக்ளை இயற்றினார். அதே சமயத்தில் நாட்டின் நான்கு மூலைகளிலும் மடங்களை நிறுவி பழைய சம்பிரதாயங்களைத் தொடர்ந்து செய்துவரவும் வழி செய்தார். இன்றும் காஞ்சி, சிருங்கேரி மடங்களில் அவைகளைக் காண்கிறோம்.
பாபநாசனஹ – நாம எண் 992–
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்ப்பவர்..
விருத்த சாதாபா என்னும் நூல் செப்புவதாவது –
பக்ஷோ பவாஸத்யாத் பாபம் புருஷஸ்ய ப்ரணச்யதி
ப்ராணாயாம சதேன இவை தத் பாபம் நஸ்யதே ந்ருணாம்
ப்ராணாயாம சஹஸ்ரேன யத்யத் பாபம் நஸ்யதே ந்ருணாம்
க்ஷண மாத்ரேன தத் பாபம் ஹரேர் த்யானாத் ப்ரணச்யதி
திருப்பாவையில் ஆண்டாள் பாடியதையும் நினைவு கூறலாம் ,
வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுத்தருவான் நிறவும் தீயினில் தூசாகும்.
பொருள்
ஒருவர் செய்த பாவங்கள் எல்லாம் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தால் அழிகின்றன;
நூறு முறை ப்ராணாயாமம் செய்தாலும் அதே பலன் கிடைக்கும் ;
ஆயிரம் பிராணயாமம் செய்தால் அழியும் பாவங்களை ஹரியை சிறிது நேரம் தியானம் செய்தாலும் அடையலாம்
—சுபம் —
Tags- பிள்ளை பெறும் மந்திரம், பாவம் போக்கும் மந்திரம், ஹரி நாமம், கிருஷ்ண , பகுதி 28, விஷ்ணு ஸஹஸ்ரநாம, ரகசியங்கள்