
Post No. 13,543
Date uploaded in London – 14 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

எங்கே உள்ளது ?
ஆலம்பூர் அருகிலுள்ளது. கர்நூலிலிருந்து சுமார் 25.கிமீ
இது அமைந்துள்ள மாவட்டம்- ஜோகுலாம்பா மாவட்டம்,
(சங்கமேஸ்வர் என்ற பெயரில் மூன்று கோவில்களுக்கு மேல் உள்ளன. இவை ஆந்திரத்திலும் தெலுங்கானா மாநிலத்திலும் உள்ளன ஆந்திரத்திற்கு வெளியே கர்நாடகத்திலும் உண்டு. ஆகையால் இதை கூடல சங்கமேஸ்வர் என்றும் அழைப்பார்கள்) .
என்ன சிறப்பு ?
1500 ஆண்டு வரலாறு உடைய இடம் இது.
இது ஒரு சிவன் கோவில். சங்கமம் என்றால் கூடும் இடம்; நதிகள் சந்தித்து கலக்கும் இடம்; அருகில் குடவெளி கிராமத்தில் துங்க பத்திரா நதியும் கிருஷ்ணா நதியும் இணைகின்றன ; (தமிழ்நாட்டிலும் இவ்வாறு நதிகள் கூடும் இடத்தை நாம் முக்கூடல் என்று அழைக்கிறோம்).
இறைவன் பெயர்- சங்கமேஸ்வரர்’
அதிசய சிற்பங்கள்
.jpg)
கோவிலின் வெளிப்புறச் சுவரின் முன் பக்கம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளன. மன்மதன் , யமன், ஆகியோரை சிவபெருமான் கொல்வதை அழகாகச் செதுக்கியுள்ளனர் (பாதாமி குகைகளில் காணப்படுவது போன்றது) .கோவிலின் நான்கு மூலைகளிலும் முதலை சிற்பங்கள் உள்ளன. ஒரு மூலையில் முதலை வாய்க்குள் ஒரு மனித உருவம் காணப்படுகிறது. ( ஒருவேளை சுந்தரமூர்த்தி நாயனார் , முதலை விழுங்கிய பிராமணப் பையனைக் காப்பாற்றிய கதையாக இருக்கலாம். அவர் காலப் பயணம் செய்து, பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த சிறுவனை மீட்டு வந்து ஐன்ஸ்டைன் கொள்கை தவறு என்று நிரூபித்தார்; இதே போல நம்மாழ்வாரும் செய்தது பாகவத புராணத்தில் உள்ளது.)
நுழைவாயிலுக்கு நேர் எதிரே நந்தி மண்டபமும் த்வஜ ஸ்தம்பமும் உள்ளன நந்தி மண்டபத்திற்கு அருகில் கல்வெட்டுகளுடன் கூடிய தூண் உள்ளது.
முக்கிய நுழைவாயிலின் வலது பக்கத்தில் வெங்கடேஸ்வரரின் சிறிய சன்னதி உள்ளது. . இறைவன் தனது துணைவிகளான ஸ்ரீதேவி & பூதேவி மற்றும் அவரது பாதங்களுக்குக் கீழே கருடன் ஆகியோரால் சூழப்பட்டுள்ளார். வினோத ஹனுமான் உருவம் உள்ளது. அனுமனின் வால் முனையில் திரிசூலம் உள்ளது.
தசாவதாரத்தின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீசைலம் நீர்மின்சாரத் திட்டத்தின் காரணமாக கோவில் இடமாற்றம் செய்யப்பட்டது. இது தொல்பொருள் துறையின் கீழ் இருக்கிறது. அதிலிருந்தே இதன் வரலாற்றுச் சிறப்பினை அறியலாம்.
இந்த கோவில் முதலாம் புலிகேசியால் (540 முதல் 566 CE வரை) கட்டப்பட்டது. அருகிலுள்ள கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகள் சங்கமேஸ்வரர் கோவிலைக் குறிக்கும் லிங்கத்துடன் கூடிய மகாதேவயாதனம் அல்லது பிரதான கோவிலைக் குறிப்பிடுகின்றன. வட இந்திய பாணியில் கட்டப்பட்ட கோவில் இது .
சாளுக்கியர் கோவில்களில் காணப்படும் பெரிய நாகராஜாவின் சிற்பம் கூரையில் உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் விஷ்ணு, குமாரசாமி மற்றும் தம்பதிகளின் நல்ல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. சிற்பங்கள் மற்றும் சிலைகள் சிதிலமடைந்துள்ளன.
ஆலம்பூர் துவங்கி பாபநாசி வரை ஓரே கோவில்கள் மயம் . சங்கமேஸ்வர் இடத்திலேயே 5 கோவில்கள் இருந்தன. துங்க பத்திரா நதிக்கரையில் பஞ்ச லிங்கம் என்னுமிடத்திலுருந்து ஆலம் பூர் வரை 22 கோவில்களும் 64 தீர்த்தக்கட்டங்களும் — புனித நதி படித்துறைகள் — இருக்கின்றன
ஆலம்பூரில் ஆதிகாலத்தில் பிரம்மபுரி யூனிவர்சிட்டி இருந்தது. அங்குள்ள கல்வெட்டுகள் தெலுங்கு மொழியின் பிரபல அறிஞர்களின் பெயர்களை நமக்குத் தெரிவிக்கின்றன. 12-ஆம் நூற்றாண்டில் தெலுங்கு கவிஞர் பல்குற்கி சோமநாத இந்த இடத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆலம்பூரில் ஒரு மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பிராமி எழுத்து கல்வெட்டு, தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள் சிற்பங்கள் முதலியன கால வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் அறிஞர்களும் பக்தர்களும் வரும் இடமாக ஆலம்பூர் திகழ்கிறது. வரலாற்றில் ஆர்வம் உடையோர் இந்த இடங்களையெல்லாம் பார்க்க கர்னூலில் தங்கி சில நாட்களை செலவிடுவது அவசியம்.
—subham—
சங்கமேஸ்வரர் கோவில் (தெலுங்கானா) ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 24