விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் –29

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,544

Date uploaded in London – 14 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் எல்லா கடவுளரின் பெயர்களும் வருவது ஒரு அதிசயமாகும் ; ஆகையால் இதனை ஒருமுறை படித்தால்- பாராயணம் செய்தால்-இந்து மதத்தின் முக்கியக் கடவுள் பெயர்கள் எல்லோரையும் நினைத்து வழிபட்ட பலன் கிடைக்கும் .

இதைப் பாராயணம் செய்யும் பலருக்கு சிவன், கந்தன், கணேசன், சாஸ்தா/ஐயப்பன், துர்கா, லெட்சுமி மற்றும் விஷ்ணுவின் அவதாரங்கள், வேதத்தில் சொல்லப்படும் கடவுளர்கள் பெயர்கள் வருவது தெரியாது. இதோ அந்தப் பட்டியல்

நாமத்தின் எண்கள் அடுத்தடுத்து இருக்கின்றன:

ஜ்யோதிர் கணேஸ்வரஹ – 327-கணபதியின் பெயர்

(இது தவிர கபில, சுமுக ஆகிய நாமங்களும் வருகின்றன; அவைகளும் பிள்ளையார் பெயர்களே)

கபில- 898- பிள்ளையார் பெயர்

ஸ்கந்தஹ – 327- முருகன் பெயர்

சிவஹ- 27- சிவன்

சிவஹ- 600- சிவன்

( இரண்டு இடங்களில் சிவ பெருமான் பெயர் வருவதோடு சம்பு , ஈஸ்வரன், மஹாதேவ , பரமேச்வர, ஈசானன் என்ற பெயர்களும் இருப்பதால் சிவன் பெயர்கள்தான் அதிகம் என்பது என் கணிப்பு )

ஆதித்யஹ- 39- சூரிய பகவான் Dhata- Word No.43- Brahma

விஸ்வ கர்ம – 50- சுவர்க்கத்தின் சிற்பி

த்வஷ்டா- 52- வேதத்தில் வரும் கடவுள்

ருத்ரன் -114- வேதத்தில் சிவபெருமானுக்கு கொடுக்கப்பட்ட பெயர்)

தமிழிலும் சிவன் என்ற சொல் சங்க காலத்துக்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னரே காணப்படுகிறது ; அதற்கு முன்னர் வேறு பெயர்களால் மட்டுமே சிவபெருமான் அழைக்கப்பட்டார் )

கவி – 132- சுக்ராச்சார்யார்  , வேத கால கவிஞர் உஷனஸ்

யம – 162- மரணத்திற்கான வேத கால கடவுள்

சாஸ்தா- 206- தரம சாஸ்தா — ஐயப்பன்

அஜ ஹ- 204- பிரம்மா, விஷ்ணு, சிவன் – மூவருக்கும் உள்ள நாமம்

பவனஹ – 291- வேத கால காற்றுக் கடவுள்

பரமேஸ்வரஹ-377- சிவா பெருமானின் பெயர்

லட்சுமி – 943– லெட்சுமி தேவி Ravih – Word No.881- sun

சூர்யஹ- 883- சூரியன்

சவிதா- 884- சூரியன்

துர்கா- 779- துர்கா தேவி

பிரஹ்மனே – 881– பிரம்மா

பிரஹ்மா-663- பிரம்மா

விஷ்ணுஹு — 663- வேதத்தில் வரும் பெருமாள் பெயர்

குஹ்யஹ – 542- கந்தன், குகன்

வருணஹ – 553- வேத கால வருணன் – தொல்காப்பியத்திலும் உண்டு

வாருண – 554- வசிஷ்டர் அல்லது அகஸ்தியர்

பிரஜாபதி- 69- பிரம்மா அல்லது வேதத்தில் வரும் பிரஜாபதி.

இவை தவிர கடவுளைப் போற்றும் பொதுவான போற்றிகளும் உள்ளன அவைகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை

xxx

வ்ருஷ கபிஹி — நாம எண் 101-

இந்த வேத கால தெய்வத்துக்கு  வெள்ளைக்காரர்கள் மனம் போன போக்கில் வியாக்கியானம் செய்துள்ளனர். சங்கரர் தரும் பொருள்:

தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர்.

எல்லா விருப்பங்களையும் அளிப்பதால் தர்மம் – வ்ருஷ — எனப்படும்.

காத் = நீரிலிருந்து பூமியை, அபாத் = காப்பாற்றியதால் , வராகம் =கபி  எனப்பட்டது இது மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் 352-24 உள்ளது என்கிறார் சங்கரர்.

இந்தப் பெயரையும் வேறு எங்கும் காண முடியாது; ஆகையால் வி.ச. மிகப்பழைய தோத்திரம் ஆகும்.

xxxx

சிபிவிஷ்டஹ — நாம எண் 273-

வேத கால தெய்வப்பெயர்- ஒளிக்கிரணங்களில்  ஊடுருவி  நிற்பவர்.

இந்தப் பெயரை தற்காலத்தில் மனிதர்களின் பெயர்களில் காண்பது அபூர்வமே; வி.ச. எவ்வளவு பழமையான துதி என்பதை அறிய இது உதவுகிறது . யாகப் பசுக்களில்  யாக ரூபியாக உதவுபவர்

XXXX

மார்கோ –நாம எண் 365-

நானே வழி – இதை பைபிளில் ஏசு கூட எடுத்தாள்கிறார்.

XXXX

இந்திர – வேதங்களில் அதிக துதிகளில் பாடப்படுபவர் இந்த்ர ; ஆனால் இது ஒரே ஒருவரின் பெயர் அல்ல என்பதை காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் (1894-1994) தெளிவுபடுத்தியுள்ளார். இன்றுவரை இமயம் முதல் குமரி வரையிலும் இலங்கை மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் குழந்தைகளுக்கு இந்திர  நாமம் சூட்டப்படுகிறது . வி.ச.விலேயே மகேந்திரன், உபேந்திரன், கபிந்திரன் முதலிய சொற்கள் உள்ளன

xxx

வி.ச.வில் வர்ணங்கள்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச.) உள்ள கலர் பற்றிய நாமங்கள் மாக்ஸ்முல்லர்கால்டுவெல்  கும்பல்களின் முகத்திரையைக் கிழித்து எறிகிறது  . ஆரியர்கள்= வெள்ளை திராவிடர்கள்கருப்பு என்று அவர்கள் எழுதியதை கருப்பு அழகி திரெளபதிகறுப்புக் கடவுள் கிருஷ்ணன் கருப்பு வேத வியாசர் முதலியோர் பொய் என்று காட்டிவிட்டனர். அது தவிர இறைவன் எல்லா வர்ணங்களிலும் வருவான் என்று காட்டும் மேலும் பல சொற்கள் வி.ச.வில் வருகின்றன  இந்துக்கள் மீசை தாடி உள்ள கடவுளையும் (சிவன்)முழுக்க ஷேவ் செய்த கடவுள் களையும்  (விஷ்ணு) மொட்டையடித்த கடவுள் களையும்  (தண்டாயுதபாணி) வணக்க்குகின்றனர்.சிவா பெருமானையே ஆரிய ருத்ரன்திராவிட சிவன் என்று பிரித்து சூழ்சசி செய்தனர். சிவன் என்ற சொல்லே தமிழில் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆறாம் நூற் றா ண்டு முதலே சிவாய நமஹ உள்ளது. ஆனால் சங்கத் தமிழர்கள் ருத்ரனையும் சிவனையும் வேறு சொற்களால் சங்க காலத்தில் வணங்கினர் . வெள்ளைக்காரன் கட்டுக்கதை கட்டுபவன் என்பது தெளிவாகிறது. தொல்காப்பியத்திலேயே கலர்/ வர்ணம் உள்ள கடவுளரைக் காண்கிறோம்.

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் துதி பாடியோர் வர்ணத்தினால் பேதம்  கற்பிக்கவில்லை. எல்லோரும் ஒருவரே என்று முடிக்கின்றனர்.

ஹவிர் ஹரிஹி–  நாம எண் 359–

சங்கரர் வியாக்கியானப்படி நீல மேக வர்ணன் (கிருஷ்ணன் / விஷ்ணு).

ரோஹிதஹ —  நாம எண் 364–

நினைத்த மாத்திரத்தில் விரும்பும் வர்ணத்தை எடுப்பவன் – கொம்புள்ள சிவப்பு மீனாக பிரளய  காலத்தில் வந்து உலகை காப்பாற்றியவன்  ருத்ர என்பதிலிருந்தே ஆங்கில ரெட் /சிவப்பு வந்தது

கோபம் என்பதை சிவப்பு என்று வருணிப்பதை இந்து மத துதிகளில் காணலாம் 

கிருஷ்ண —  நாம எண் 57–

கிருஷ்ணன் நிறம் காக்கா கருப்பு அதனால் அவனை கருப்பன் (கிருஷ்ண) என்றழைத்தனர்

சுவர்ண வர்ண –   நாம எண் 737 மற்றும் 800-

தங்க நிறத்தவன் .

கடவுளுக்கு ஒரே நிறம் என்பதல்ல; அவன் நிறமே இல்லாதா படிகம் போன்றவன்.

கபிலஹ — நாம எண் – 898–

கடலுக்கு அடியில் பொங்கும் தீயின் நிறத்தவன்; நீர்த்த சிவப்பு நிறம் –என்பது சங்கர வியாக்கியானம்– சாம்பல் வர்ணம் கலந்த கருப்பன் ; பிள்ளையாருக்கு/ யானைக்கு இப்படி ஒரு பெயர்.

புறநானூற்றில் — சங்க காலத்தில் அதிகம் புகழந்த புலவரின் பெயர் கபிலன்; அந்தப் பார்ப்பான் சங்க இலக்கியத்தில் அதிக செய்யுட்களைப் பாடியதால் மட்டும் அதிக புலவர்கள பாராட்டவில்லை. புலன் அழுக்கற்ற அந்தணாளன் – என்று சொல்லி மாசு மருவற்ற அந்தணன் என்கின்றனர். உலகத்தில் முதல் முதலில்  ஜாதி வெறியை உடைத்து பாரியின் மகளான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் தன் மகளாக ஏற்று கல்யாணம் கட்டிக்கொடுத்த பிராஹ்மணன். வங்காளத்தில் கபிலர் விழா மிகப்பெரிய விழா. அது சகரர் புராணக்கதையை ஒட்டிய விழா. புராண, இதிஹாஸ காலத்திலிருந்து நிறைய  பேர் இந்தப் புனித நாமத்தை சூட்டி இருந்தனர்.

ஆதித்யஹ — நாம எண் 39–

சூரிய ஒளி வட்டத்தில் தங்க நிறத்தில் ஜொலிப்பவன்

திருமந்திரத்தில் பல  வர்ணங்களில் இறைவனையும், ஐந்து பூதங்களையும் வருணிக்கின்றனர். அது பற்றிய கட்டுரை தனியாக உள்ளது . அதையும் படிக்கவும் .—subham—

Tags- கடவுளரின்,  பெயர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் , சிவன்,  வர்ணங்கள் , பகுதி 29

Leave a comment

Leave a comment