
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.546
Date uploaded in London – —15 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எங்களது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1998)

With Kamaraj and Bhaktavatsalam

With Sathya Sai Baba

With Rajaji
திரு வெ.சந்தானம் அவர்களின் லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனா’ நாவல் மொழிபெயர்ப்பு
ச.நாகராஜன்
எமது தந்தையார் திரு வெ.சந்தானம் அவர்கள் நெடுங்காலம் தமிழ் பத்திரிகை உலகில் சேவை செய்தவர். ஆன்மீகம் வளர அவர் செய்த அளப்பரும் சேவையை தமிழ் உலகம் நன்கு அறியும்; குறிப்பாக தினமணி வாசகர்கள் நன்கு அறிவர்.
அவர் இலக்கிய உலகில் ஆற்றிய சேவையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. நூற்றுக் கணக்கான கட்டுரைகளும், கீர்த்தனைகளும் அவர் படைத்தார்.
முதலில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் அன்னா கரினினா நாவலை அவரே தமிழில் மொழி பெயர்த்தார்.
‘அன்னா கரீனா’ நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 1947-ம் வருடம் மார்ச் 22-ம் தேதி முதல் பதிப்பாக தமிழ்ச் சுடர் நிலையம் சார்பாக வெளியிடப்பட்டது.
அதற்கு தமிழ்ச் சுடர் நிலையம் உரிமையாளர் திரு அ.கி, கோபாலன் பதிப்புரை வழங்கினார்.
திரு ரா.ஶ்ரீ. தேசிகன் அவர்கள் அதற்கு ஒரு அருமையான முகவுரையை வழங்கினார்.
முன்னுரையை எனது தந்தையார் அவர்கள் வழங்கினார்.
பதிப்புரையையும், முகவுரையையும் புத்தகத்தில் உள்ள படியே இங்கு வழங்குகிறோம்.
அவர் நினைவைப் போற்றுகிறோம்.








.webp)

JAI HIND; VANDE MATARAM
—–subham—-
tags— லியோ டால்ஸ்டாய் , ‘அன்னா கரீனா’ , வெ.சந்தானம் மொழிபெயர்ப்பு ,
santhanam nagarajan
/ August 15, 2024arumai nagarajan